ஆயிரம் ஆண்டு ரகசியம்

ஆயிரம் ஆண்டு ரகசியம், அமுதன், தந்தி பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. தமிழகத்தை ஆண்ட மாமன்னர்களில் வீரத்திலும், ஆட்சி நிர்வாகத்திலும், ஆன்மிகத்திலும் சிகரம் தொட்டவர் ராஜராஜசோழன். வானளாவிய தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டி வான்புகழ் பெற்றவர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ராஜராஜசோழன் நிகழ்த்திய அற்புத நிகழ்வுகளை அரிய செய்திகளை நாம் அறியும் வகையில் ஆயிரம் ஆண்டு அதிசயம் என்ற தலைப்பில் ஆசிரியர் அமுதன் அழகுபட விவரித்துள்ளார். இன்றைய பொறியியல் திறனுடன் போட்டி போடக்கூடிய அளவுக்குக் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவிலின் தொழில்நுட்பம், நாட்டியக் கலையில் […]

Read more

கரிசக் காடு

கரிசக் காடு, எஸ்.எஸ். போத்தையா, தொகுப்பும் பதிப்பும்- பா. செயப்பிரகாசம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, பக். 188, விலை 140ரூ. கரிசல் மண்ணின் நாட்டுப்புறங்களில் மக்களின் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் சொலவடைகள், நம்பிக்கைகள், யுக்திக் கணக்குகள் எல்லாவற்றையும் சேகரித்துத் தொகுப்பதையே தனது வாழ்நாள் பணியாகக் கொண்டிருந்தவர் எஸ்.எஸ். போத்தையா. ஆசிரியராகப் பணிபுரிந்து வந்த அவருக்குத் தலைமையாசிரியர் பதவி உயர்வுடன் இடமாற்றமும் கிடைத்தபோது, தனது நாட்டுப்புற இயல் சேகரிப்புப் பணிக்கு இடமாற்றம் தடையாக இருக்கும் என்பதால், பதவி உயர்வை வேண்டாம் […]

Read more

ஸந்தேக நிவாரணீ (பாகம் 7)

ஸந்தேக நிவாரணீ (பாகம் 7), நன்னிலம் வை. ராஜகோபால கனபாடிகள், வைதிகஸ்ரீ, சென்னை, பக். 232, விலை 150ரூ. ஆன்மிகத்தில் நாட்டமுடையவர்களுக்கு மனத்தில் எழும் ஐயங்களைப் போக்கும் விதமாக, சென்னையில் ஆங்காங்கே நடைபெறும் கூட்டங்களில் அன்பர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார் நூலாசிரியர் வை. ராஜகோபால கனபாடிகள். ஆறு பாகங்களில் 500 கேள்விகளுக்கு விடையளித்துள்ள அவர், இந்த ஏழாவது பாகத்தில் 157 சந்தேகங்களுக்கு விடையளித்துள்ளார். தெய்வ வழிபாடு, பூஜை, ஹோமம், விளக்கேற்றுதல், மந்திரம், ஜபம், பாராயணம், வாஸ்து, மங்கல நிகழ்ச்சிகள், கனவு, ஜோதிடம், பஞ்சாங்கம், பரிகாரங்களில், […]

Read more

இது நிகழாதிருந்திருக்கலாம்

இது நிகழாதிருந்திருக்கலாம், ஜி.ஜே. தமிழ்ச்செல்வி, தாரணி பதிப்பகம், சென்னை, பக். 88, விலை 80ரூ. ஒரு கவிதைப் பிரசவிப்பில் காதலுக்கும் காமத்திற்கும் வித்தியாசம் பார்க்க முடியாது. இரண்டும் ஒன்றாகக் கலந்த ஒரு உயிர்ப்பு. முதல் காதலாகட்டும், முதல் முத்தமாகட்டும், முதல் ஸ்பரிசமாகட்டும் காமத்திற்கான முகவுரையாகவே உணரப்படுகின்றன. எந்த ஒரு முதல் காதலும் உடல் சம்பந்தப்பட்ட கவர்ச்சியாகவே நகர்கின்றன. தமிழ்ச்செல்வியின் ஒவ்வொரு கவிதைகளிலும் அவர் விட்டுச் செல்லும் காதலின் அடையாளம் நம்மை புது உலகிற்குள் பயணப்பட வைக்கின்றன. ஒரு பெண்ணின் காதல் வலிகளாகவே கவிதைகள் அனைத்தும் […]

Read more

இந்தியாவில் முஸ்லிம் ஆட்சி

இந்தியாவில் முஸ்லிம் ஆட்சி, சையித் இப்ராஹீம், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், சென்னை, பக். 336, விலை 190ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-209-4.html முஸ்லிம்கள் இந்தியாவில் குடியேறி, இந்துக் கலாச்சாரத்துடன் ஒன்றாகக் கலந்து சகோதரத்துவத்துடன் அவர்கள் ஆட்சி செய்தது வரையான ஒரு நீண்ட வரலாற்றைக் கூறும் நூல். ஆங்கிலயர்கள் தங்களுக்கு முன்னர் இந்தியாவில் ஆட்சி செய்த முஸ்லிம்களின் வரலாற்றைத் திரித்து எபதிதப்பான அபிப்ராய பேதங்களை உருவாக்கிவிட்டுச் சென்றனர். இதனால் இந்து முஸ்லிம் ஒற்றுமை குலைந்தது. அந்த சூழ்ச்சியைக் கண்டறிந்து உண்மையை விளக்கி, […]

Read more

அகிலம் வென்ற அட்டிலா

அகிலம் வென்ற அட்டிலா, ம.லெனின், சிக்ஸ்த் சென்ஸ், சென்னை, பக். 144, விலை 90ரூ. உலகை ஆட்டிப் படைத்த மாவீரர்களின் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு பெயர் அட்டிலா. கி.பி. 395இல் பிறந்த அட்டிலா உலடிகன் சகல வல்லமை பொருந்தியதாகக் கருதப்பட்ட ரோமானியப் பேரரசை தனது படை வல்லமையால் வென்றவன். சமகாலத்தில் உலகம் உணர்ந்த மேலாண்மைக் கொள்கைகளையும், ஆளுமை யுக்திகளையும் அந்தக் காலத்திலேயே தனது உள்ளங்கையில் வைத்திருந்தவன் அட்டிலா. நாடோடியாகத் திரிந்து கொண்டிருந்த தனது ஹுணர் இன மக்களை ஒன்று திரட்டி அவர்களுக்குள் இருந்த […]

Read more

தமிழ் எழுத்து

தமிழ் எழுத்து, மீள்பார்வை+சீர்திருத்தம்=தமிழி 2014, சாரதா பதிப்பகம், சென்னை 101, விலை 80ரூ. தமிழர்கள் காலந்தோறும் வரிவடிவம் குறித்த ஆய்வை மேற்கொண்டு வருகிறார்கள். மொழியைக் கற்றுக்கொள்ள எளிதாக இருக்கும். கற்பிக்கவும் எழுதுவதற்கும் உதவியாக இருக்கும் என்ற எண்ணத்தில் பலப் பல மாற்றங்களைச் செய்துகொண்டே வந்தனர். நவீன காலத்தில் அவை எழுத்துச் சீர்திருத்தம் என்ற பெயரில் பரிந்துரைக்கப்பட்டது. தந்தை பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் இன்றைக்கு நடைமுறைக்கு வந்திருக்கிறது. அதற்காக நாம் எடுத்துக்கொண்ட காலம் அதிகம். அதே வரிசையில் இந்நூல் ஆசிரியர் 247 ஒலிகளையும் வெறும் 24 […]

Read more

தியாகசீலர் கக்கன்

தியாகசீலர் கக்கன், முனைவர் இளசை சுந்தரம், மதுரா வெளியீடு, சென்னை, பக். 240, விலை 100ரூ. எளிய குடும்பத்தின் பிள்ளை கக்கன். 12ஆம் வயதில் பண்ணை வேலைக்குப் போனவர். ஆனால் கல்வியில் ஆர்வம் அதிகம். படித்தார். படிப்படியாக முன்னேறினார். மாவட்ட ஆட்சிக்குழு உறுப்பினர், காங்கிரஸ் தலைவர், அரசியல் சட்ட அமைப்புச் சபை உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், மாநில அமைச்சர் என்று மிகப் பெரிய பதவிகளையெல்லாம் வகித்தவர் என்றாலும் தமக்காக எதையும் சேர்த்து வைக்காதவர். பதவிகளை இழந்து வறுமையில் வாடியபோதும், தம் வாழ்க்கைப் பாதையில் தடம் […]

Read more

உன் மீதமர்ந்த பறவை

உன் மீதமர்ந்த பறவை, பழநிபாரதி, குமரன் பதிப்பகம், சென்னை, பக். 80, விலை 60ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-230-0.html கவிஞனின் ஆழ்மன அனுபவங்கள் சொற்களாக மாறும்போது கவிதைகள் பிறக்கின்றன. அவை அனுபவத்தை தொடர, உணர, பழநிபாதியின் இந்த கவிதைத் தொகுப்பை படிப்போர் உணரலாம். தொடர முடியாத நிழலைத் தொட வைக்கிறார். பார்க்க முடியாத உயிரைப் பார்க்க வைக்கிறார். வாசம் நுகர முடிகிற கவிதையின் ஆழத்திற்குள் செல்ல உவமை, படிமம் என்ற துணையை அனுப்புகிறார். பெண் என்ற கண்ணாடியைப் பார்த்து […]

Read more

காதல் பறவைகள்

காதல் பறவைகள், ரேவதி ரவீந்திரன், வடிவம், திருச்சி, பக். 466. எழுதுவதற்கு ஒரு விஷயம் தேவை என்று தேடிப்போகிறவர்கள் அதிகம். ஆனால் அந்த விஷயமே இந்த நூலாசிரியரைத் தேடிவந்து எழுதச் சொன்னதுபோல், எல்லாவற்றையும் எழுதித் தள்ளியுள்ளார். படிக்க சுவாரஸ்யமாய் எழுதியதால் அத்தனை விஷயங்களுக்கும் உயிர் இருக்கிறது. குற்றாலம் அருவியில் குளித்ததையும், வீட்டுக்குப் பின்புறம் உள்ள குருவிகளையும், கார்த்திகை விரதத்தையும் எழுதியவர். கமல், சிவசங்கரி என்று கனமான பேட்டிகளையும் தந்துள்ளார். ஸ்ரீப்ரியாவை சமையலில் ஆர்வம் உண்டா என்று கேட்பவர், சுஜாதாவிடம் கம்ப்யூட்டர் பற்றியும் கேட்கிறார். தயக்கமில்லாத […]

Read more
1 41 42 43 44 45 57