கதைகள் வழி கொன்றை வேந்தன்

கதைகள் வழி கொன்றை வேந்தன், பேராசிரியர் ஏ. சோதி, நன்மொழிப் பதிப்பகம், புதுச்சேரி, பக். 80, விலை 50ரூ. ஔவையாரின் கொன்றை வேந்தன் என்ற நீதி நூலின் வழி நின்று 16 கதைகளை உருவாக்கியுள்ளார் ஆசிரியர். கதைகள் வழியாக அறிவுரைகளைச் சொன்னால் சிறுவர், சிறுமியர் மனங்களில் கதையும் கருத்தும் பதியும். அவர்கள் நல்வழியில் நடக்கத் தூண்டுதலாக அமையும் என்ற நூலாசிரியரின் எண்ணம் ஈடேறியுள்ளது. கொன்றை வேந்தனில் வரும் அறிவுரைகளையே கதைகளுக்குத் தலைப்பாக வழங்கியிருப்பது சிறப்பு. நன்றி: குமுதம், 30/4/2014.   —- குறையொன்றுமில்லை, கவிஞர் […]

Read more

காலத்தின் திரைச்சீலை

காலத்தின் திரைச்சீலை, டிராட்ஸ்கி மருது, தொகுப்பு-அ. வெண்ணிலா, அகநி வெளியீடு, வந்தவாசி, பக். 280, விலை 300ரூ. தமிழ் ஓவிய மரபில் நெடுவழிப்பாதை ஒன்றை உருவாக்கி அதில் பயணித்துக் கொண்டிருக்கும் ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் ஆளுமையைத் தொகுத்துத் தரும் நூல். விவாதங்களுக்கு அப்பாற்பட்டு, நாற்பதாண்டுகளுக்கும் மேலாக, அழுத்தமான தன்னுடைய கோடுகளின் மூலம் தமிழ்க் கலை உலகை அடையாளப்படுத்துவதில் முன் நிற்கும் மருதுவின் வாழ்க்கைப் பதிவுகள், ஒரு ஆவணப் பதிவாக மட்டுமாகிவிடாமல், உயிரோட்டத்துடனான செயலாகவும் ஆக்கியதில் அ.வெண்ணிலாவின் பங்கு அதிகம். கட்டுரைகளை வாசிக்கும்போது கண்முன் வந்து […]

Read more

பொன்மொழிகளும் புண் மொழிகளும்

பொன்மொழிகளும் புண் மொழிகளும், வெண்ணிற ஆடை மூர்த்தி, குமுதம் புதுத்தகம், சென்னை, பக். 88, விலை 75ரூ. வெண்ணிற ஆடை மூர்த்தி, தான் பார்த்த, படித்த, கேட்ட தகவல்களை தொகுத்து, குமுதம் புதுத்தகம் வாயிலாக நூலாக உருவாக்கியிருக்கிறார். இந்தியா, அமெரிக்கா, டச், ஸ்விஸ், இங்கிலாந்து உள்ளிட்ட சுமார் 48 உலக நாடுகளின் பொன்மொழிகள் இதில் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு புதுசெய்தியை நமக்கு உணர்த்துவதாக உள்ளது. பழமரத்தை நட்டவன், அநேகமாக அதன் பழங்களை நசுக்க வாய்ப்பு இருக்காது. இது டச் பொன்மொழி. இதுபோன்ற பயனுள்ள பொன்மொழிகள் […]

Read more

பாரம்பரிய அறிவியல்

பாரம்பரிய அறிவியல், ஜெ. ஜெயகிருஷ்ணன், புதிய வாழ்வியல் பதிப்பகம், சென்னை, பக். 80, விலை 80ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-202-2.html நம் உடல் உறுப்புகள் செயல்படும் முறை பற்றியும், அவற்றை பராமரிக்கும் முறை பற்றியும் சித்தர்கள் வழிநின்று நமக்கு உணர்த்துகிறார் இந்நூலாசிரியர். முடி கொட்டுவதைத் தடுப்பதில் இருந்து, மன அழுத்தத்தைப் போக்கும் பாத பூஜை வரை நம் பாரம்பரிய அறிவியலைப் பின்பற்றினால் பல நோய்களை வராமல் தடுக்க முடியும். நோய் வந்தாலும் அதை முற்றவிடாமல் காக்க முடியும் என்பதை விளக்கிச் […]

Read more

தமிழ் நாட்டில் கொத்தடிமைகள்

தமிழ் நாட்டில் கொத்தடிமைகள், திருமலை. செல்வகோமதி, சோக்கோ அறக்கட்டளை, பக். 16+320, விலை 150ரூ. தமிழகத்தில் கொத்தடிமைகள் என்று நூலுக்குத் தலைப்பு அமைந்திருப்பினும், உலக அளவில் பல நாடுகளிலும் உள்ள கொத்தடிமைகள் பற்றி விரிவாக இதில் எழுதப்பட்டுள்ளது. இந்தியாவில் பல லட்சம் மக்கள் கொத்தடிமைகளாக உள்ளனர் என்று ஆதாரங்களுடன் எழுதியுள்ளனர். செங்கல் சூளைகள், அரிசி ஆலைகள், கல்குவாரிகள் முதலிய இடங்களில் கொத்தடிமைகளைக் காண முடிகிறது. கொத்தடிமைகள் இல்லாமல் இருக்க சட்டங்கள் இயற்றப்பட்டும், அடிமை வாழ்க்கை தொடர்கதையாகவே உள்ளது. 1997 முதல் இன்று வரை அச்சமூட்டும் […]

Read more

வைணவ இலக்கியம்

வைணவ இலக்கியம், கலியன் எதிராசன், வானதி பதிப்பகம், சென்னை 17, பக். 152, விலை 50ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-538-0.html வைணவத்தின்பால் கொண்ட பற்று காரணமாக, இந்நூலாசிரியர் பல்வேறு இடங்களில் நடத்திய சொற்பொழிவின் தொகுப்பே இந்த நூல். பொய்கை ஆழ்வாரின் சிந்தனைகள், திருமாலை, திருப்பாவை, ஆண்டாளும் மீராபாயும் உள்ளிட்ட 13 தலைப்புகளில் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. ஆழ்ந்த கருத்துகள், பொருத்தமான திருவாய்மொழி, திருவந்தாதி பாடல்கள் அதற்கான விளக்கமுடன் அமைந்த கட்டுரைகளில் முழுமையான வைணவ இலக்கியத்தை நம்மால் நுகர முடிகிறது. […]

Read more

ஆனந்த தாண்டவம்

ஆனந்த தாண்டவம், கே. குமரன், கே. ட்ரீம் வேர்ல்டு, சென்னை 83, பக். 132, விலை 250ரூ. 23 வயதே நிறைவடைந்த மாற்றுத்திறனாளியான இந்த நூலாசிரியர் குமரன், தனக்கு இதுவரை ஏற்பட்ட அனுபவங்களையும், தன்னுடைய இப்போதைய நிலைமையையும், இனிமேல் தான் செய்யவிரும்புவதையும் சுயசரிதை நூலாக வெளிக்கொணர்ந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். நூலின் தலைப்புக்கு ஏற்றவாறு உடல்ரீதியாக தான் அனுபவித்து வரும் வலிகைளை புறந்தள்ளிவிட்டு, தனது ஆசைகளையும், விருப்பங்களையும் எளிய தமிழில் பதிவு செய்திருக்கிறார். மூளை, முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டு, கால்கள் செயலிழந்த நூலாசிரியர், ஐந்தாம் வகுப்பு வரை […]

Read more

தமிழர் தளபதிகள்

தமிழர் தளபதிகள், கா. கோவிந்தன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை 17, பக். 112, விலை 70ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-215-4.html மனித குலத்தில் போர் என்பது காலந்தோறும் நடந்துகொண்டே இருக்கிறது. போர்க் கருவிகளும், போர் முறைகளும் மாறியிருக்கிறதே தவிர போர் மறையவில்லை. இந்நூல் போர்ப்படை தளபதிகள் குறித்து சங்க இலக்கிய நூலின் வழி நின்று விவரிக்கிறது. மறைந்திருந்து மரத்துக்கு நீர் வார்க்கும் வேர்கள் போலவே போர்ப்படைத் தளபதிகள் திகழ்ந்தனர் என்பதை சரித்திர நிகழ்வுகளையும், சங்கத் தமிழ் பாடல்களையும், […]

Read more

இந்தியப் புதையல் ஒரு தேடல்

இந்தியப் புதையல் ஒரு தேடல், பால் ப்ரன்டன், தமிழில் புவனா பாலு, கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, பக். 520, விலை 300ரூ. புவியியல் வல்லுநர்கள் நிலங்களை, நாடுகளை, கண்டங்களை ஆராய்ந்தறிந்ததைப்போல, பால் ப்ரண்டன் இந்தியாவின் பாரம்பரியங்கள், அவற்றை நிலைநாட்டிய ஆன்மிகத் தலைவர்களைப் பற்றிய விவரங்களைச் சேகரித்து ஒரு ஆன்மிக வரைபடத்தையே வரைந்து இந்தியாவை உலகிற்குக் காட்டியிருக்கிறார். 1900இல் இந்தியாவில் இரயில், கார், மாட்டு வண்டி பயணங்கள், போலிச்சாமியார்கள், கபட வேடதாரிகள், நல்லோர், உலகிற்கே தெரியாமல் வாழ்ந்த உண்மையான யோகிகள், யோக, தந்திரா ஆசான்கள், மக்களை […]

Read more

உங்கள் ராசிப்படி உங்களுக்கான பரிகாரம் பூஜை விரதம்

உங்கள் ராசிப்படி உங்களுக்கான பரிகாரம் பூஜை விரதம், யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ, குமுதம் பு(து)த்தகம், சென்னை, விலை 75ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-475-7.html பன்னிரண்டு ராசிக்காரர்களுக்கும் கூடுதலான நற்பலன்களைப் பெற ஜோதிட ரீதியாக வழிகாட்டும் நூல். 12 ராசிக்காரர்களும் ஆயுள் முழுவதும் வழிபட வேண்டிய தெய்வங்கள், செல்லவேண்டிய கோயில்கள், சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள், என்னென்ன பூஜைகள், எந்த ராசிக்கு எந்த விரதம், செய்ய வேண்டிய பரிகாரங்கள் ஆகியவற்றை ஜோதிட ரீதியாக கணித்துத் தந்திருக்கிறார் நூலாசிரியர் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ. […]

Read more
1 42 43 44 45 46 57