ஆனந்த தாண்டவம்

ஆனந்த தாண்டவம், இந்திரா சவுந்தர்ராஜன், திருமகள் நிலையம், விலை 175ரூ. சோழ மண்டலத்தில் தஞ்சையை தலைநகராகக் கொண்ட சரித்திரச் சிறப்பு வாய்ந்த மகாதேவபுரத்தை கதைக்களனாக கொண்டு படைக்கப்பட்ட பரபரப்பான மர்ம நாவல். ‘ஆனந்த தாண்டவம்’ என்ற உடனேயே எல்லோருக்குள்ளும் சிவபெருமானின் நாட்டிய உருவம்தான் ஞாபகத்திற்கு வரும். ஆனந்தம் ஏற்படப்போய் அவர் ஆடுகிறபடியால் அப்படி ஒரு பெயரா இல்லை, அதைப் பார்ப்பவருக்கு ஆனந்தம் வரும் என்பதால் அப்படி ஒரு பெயரா என்பது விவாதத்துக்குரியது மட்டுமல்ல, பெரும் ஆராய்ச்சிக்கும் உரியது. அதற்கான ஆராய்ச்சிகளும் நடந்தபடியே இருக்கின்றன. குறிப்பாக […]

Read more

போர்களும் தொலைந்து போன மனிதமும்

போர்களும் தொலைந்து போன மனிதமும், தஞ்சை செல்வன், மணிமேகலைப் பிரசுரம், விலை 190ரூ. உலகின் பல நாடுகளில் சுற்றுப்பயணம் செய்த எழுத்தாளர் தஞ்சை செல்வன், தன் பரந்த அனுபவத்தின் காரணமாக 416 பக்கங்கள் கொண்ட இந்த நெடிய நாவலை படைத்துள்ளார். உலகின் பல்வேறு நாடுகளில் நடந்த போர்கள் பற்றியும், தமிழ் ஈழத்தில் நடந்த போர் பற்றியும் பல ஆச்சரியமான உருக்கமான தகவல்களை இந்த நாவலில் பதிவுசெய்துள்ளார். கதாபாத்திரங்கள் உயிரோவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. ஆசிரியரின் அழகான தமிழ்நடை இந்த பெரிய நாவலை விறுவிறுப்புடன் நடத்திச் செல்கிறது. “கடந்த […]

Read more

ஜெபம் பண்ண வேண்டிய விதமாவது

ஜெபம் பண்ண வேண்டிய விதமாவது, வி.செ. இம்மானியேல், விலை 150ரூ. ஜெபம் என்றால் என்ன? ஜெபம் அவசியம்தானா? ஜெபம் என்னவெல்லாம் செய்யும்? யாரை நோக்கி யார் வழியாக ஜெபிக்க வேண்டும் என்பதை எல்லாம் ஜெபிக்க வேண்டும் என்பதை எல்லாம் விளக்கும் நூல். கிறிஸ்தவ மக்களுக்கு சிறந்த வழிகாட்டி. நன்றி: தினத்தந்தி, 9/3/2016.   —- பாரதிதாசன் தமிழ் முழக்கம், பாவேந்தர் பாரதிதாசன், முல்லை பதிப்பகம், விலை 25ரூ. “தமிழுக்கு வாழ்வதே வாழ்வாகும்” என்று பாடும் அளவுக்கு ஆழமாகச் சென்றவர் பாவேந்தர் பாரதிதாசன். அவரது நூல்களிலிருந்து […]

Read more

ஜப்பானில் அருணகிரி

ஜப்பானில் அருணகிரி, அருணகிரி, கலைஞன் பதிப்பகம், விலை 200ரூ. உலகம் சுற்றும் வாலிபன், வாங்க பறக்கலாம், அந்தமானில் அருணகிரி, உலக வலம், ஆல்ப்ஸ் மலையில் அருணகிரி, அலைந்தும் அறிந்ததும் என சுற்றுலா நோக்கில் பயனுள்ள நூல்களை அளித்து இருக்கின்ற நூலாசிரியர் அருணகிரியின் மற்றொரு புதிய பயண நூலிது. அருணகிரியின் பயணங்கள் பெற்ற வெற்றிக்கு காரணம், துல்லியமான திட்டமிடுதல், செல்லும் நாடு குறித்த தகவல்களை திரட்டுவது, முன் சென்று வந்தோர் அனுபவங்களைச் சேமித்து கொள்வது, பார்க்க வேண்டிய ஊர்களையும் இடங்களையும் சரியாகத் தீர்மானிப்பது, இயன்றவரை செலவைச் […]

Read more

கலாங்காதிரு பெண்ணே

கலாங்காதிரு பெண்ணே, விகடன் பிரசுரம், விலை 105ரூ. பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றியும், அதற்கான தீர்வு பற்றியும் கூறுகின்ற புத்தகம் இது. குறிப்பாக “தாய்மை” என்ற பகுதியில் பெண்கள் கர்ப்பம் தரித்தது முதல், குழந்தை பிறப்பது வரை எப்படி கவனமாக இருக்க வேண்டும் என்பது விரிவாக விவரிக்கப்படுகிறது. தற்காலத்தில் ‘சிசேரியன்’ ஆபரேஷன் செய்துகொள்வதை பல பெண்கள் விரும்புகிறார்கள். அந்த ஆபரேஷனை எப்போது செய்துகொள்ளலாம், எப்போது செய்து கொள்ளக் கூடாது என்பது விரிவாக விளக்கப்பட்டுள்ளது. எல்லாப் பெண்களும் படித்துத் தெரிந்த கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைந்துள்ளன. […]

Read more

தாயும் ஆனவன்

தாயும் ஆனவன், சுசீலா, ஜீஜீ எண்டர்பிரைசஸ், விலை 120ரூ. சிவாஜிகணேசனும், எம்.ஆர்.ராதாவும் இணைந்து நடித்த “பாகப்பிரிவினை” , “பாவமன்னிப்பு” ஆகிய திரைப்படங்களை யாரும் மறந்திருக்க முடியாது. அதில் வரும் வசனங்கள், ரசிகர்களின் செவிகளில் இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. இந்தப் படங்களுக்கு வசனம் எழுதியவர் சோலைமலை. அவருடைய மகள் சுசீலா சோலைமலைதான் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர். இப்புத்கத்தில் தாயும் ஆனவன், பந்தயம், காரடையான் நோன்பு, ஏய் என்ற நான்கு குறு நாவல்கள் இடம் பெற்றுள்ளன. பெரும்பாலும் உரையாடல்கள் மூலமே கதையை நகர்த்திச் செல்கிறார் சுசீலா. படிக்கும்போது, அவருடைய […]

Read more

பாரதியார் சரித்திரம்

பாரதியார் சரித்திரம், செல்லம்மாள் பாரதி, அழகு பதிப்பகம், விலை 100ரூ. மகாகவி பாரதியாரின் வரலாற்றை பலரும் எழுதியுள்ளனர். இது, பாரதியாரின் மனைவி செல்லம்மாள் பாரதி எழுதிய புத்தகம், எனவே தனிச்சிறப்பு வாய்ந்தது. “பாரதியாரின் பதினாலாம் வயதில் எங்களுக்கு மணவினdை முடிந்தது. அப்போது எனக்கு வயது ஏழு” என்று கூறும் செல்லம்மாள் பாதி, மதம் பிடித்த யானையால் பாரதியார் தாக்கப்பட்ட சம்பவத்தையும், அவர் மறைவையும் படிப்போர் கண்களில் நீர் வரும் விதத்தில் உருக்கமாக எழுதியுள்ளார். பல ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட புத்தகம். நீண்ட இடைவெளிக்குப் பின் […]

Read more

வரலாற்று நாயகர் முகம்மது நபி

வரலாற்று நாயகர் முகம்மது நபி, அ. முகம்மது ஜமால், பஷாரத் பப்ளிஷர்ஸ், விலை 220ரூ. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், உலக மக்கள் அனைவருக்கும் ஓர் அழகிய முன்மாதிரியாக வாழ்ந்து காட்டினார்கள். உலக வரலாற்றில் வேறு எந்தத் தலைவரும் ஆன்மிகம், சமூக சீர்திருத்தம், நீதி மிக்க ஆட்சி ஆகிய மூன்று துறைகளிலும் வெற்றி பெறவில்லை. வாழ்நாளில் 23 ஆண்டுகளில் இந்தச் சாதனையை அவர்கள் நிகழ்த்தி காட்டி இருக்கிறார்கள். இத்தகைய வரலாற்று நாயகர், நபிகளாரின் வாழ்க்கை வரலாற்றை அ. முகம்மது ஜமால், எளிய நடையில் எல்லோருக்கும் புரியும் […]

Read more

புனா ஒப்பந்தம் புதைக்கப்பட்ட உண்மைகள்

புனா ஒப்பந்தம் புதைக்கப்பட்ட உண்மைகள், செங்குயில் பதிப்பகம், விலை 150ரூ. 1932ம் ஆண்டு காந்தியடிகளும் டாக்டர் அம்பேத்கருக்கும் உருவான ஒப்பந்தம், புனா ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிறது. ஒடுக்கப்பட்டவருக்கு தனித்தொகுதி அமைப்பதே, இந்த ஒப்பந்தத்தின் அடிப்படை நோக்கம். இது குறித்து 30 கட்டுரைகளில் முருகு.ராசாங்கம் எளிமையான முறையில், எல்லோருக்கும் புரியும் வகையில் எழுதியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 17/2/2016.   —- ஈழத்தாயைச் சந்தித்த ஈர நினைவுகள், கவிஞர் தஞ்சை க. பத்மா, ஜெய்ஹிந்த் பதிப்பகம், விலை 100ரூ. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மவை […]

Read more

அப்துல்கலாம் பொன்மொழிகள்

அப்துல்கலாம் பொன்மொழிகள், தொகுப்பு ச.குமார், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 75ரூ. தமிழகத்தில் பிறந்து இந்தியனாக வளர்ந்து உலக விஞ்ஞானிகளுள் ஒருவராகத் திகழ்ந்த நமது பாரத நாட்டின் ‘பாரத ரத்னா’ என்ற உயரிய விருது பெற்ற எளிமையான மாமனிதர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் வாழ்க்கைச் சுருக்கத்தையும், அவரின் பொன்மொழிகளையும் தொகுத்து அளித்திருக்கிறார் ச. குமார். அவருடைய பல நூல்களின் சாரத்தை இந்த ஒரே நூலில் அறிய முடிகிறது. மாணவ-மாணவிகள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். நன்றி: தினத்தந்தி, 17/2/2016.   —- […]

Read more
1 99 100 101 102 103 223