மஹாபாரதம் ஒரு கண்ணோட்டம்

மஹாபாரதம் ஒரு கண்ணோட்டம், டி.ஆர்.குப்புசாமி, ஆர்என்ஆர் பிரிண்டர்ஸ், 19, தாண்டவராயன் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 5, விலை 350ரூ. இந்தியாவின் இருபெரும் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தில் கூறப்பட்ட கருத்துக்களை திரட்டி எடுத்து எளிதாக தந்துள்ளார் ஆசிரியர். மிக எளிய நடையில் அமைந்திருப்பதால் அனைவரும் படித்து பயன்பெறலாம். பெரும்பாலானவர்கள் அறிந்திராத நுண்ணிய செய்திகள் பல நூலில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.   —-   வள்ளுவம் அல்லது வாழ்க்கையே வழிபாடு, பேராசிரியர் அர. வெங்கடாசலம், ஏ19, வாஸ்வனி வெல்லா விஸ்டா, கிராபைட் இந்தியா ஜங்ஷன், பெங்களூரு-48, விலை 85ரூ. […]

Read more

பணம் பணம் பணம்

பணம் பணம் பணம், வேங்கடம், விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 160, விலை 75ரூ. To buy this Tamil book online –www.nhm.in/shop/100-00-0000-834-2.html எங்கு பார்த்தாலும் பணம்… பணம்… பணம்… என்று பணத்தை அடிப்படையாகக் கொண்டு அனைத்தும் இயங்கி வருகின்றன. ஆனால், பணத்தைப் பெறுவதற்கு ஒவ்வொருவரும் படும் பாடு சொல்லித் தெரியவேண்டியதில்லை. பணம் இல்லாமல் மனிதன் மகிழ்ச்சியாக, நிம்மதியாக, பதற்றமற்று வாழ்க்கையைத் தள்ள முடியுமா? முடியும் என்கிறார் நூலாசிரியர். உலகில் உள்ள பொருள்கள் அனைத்தும் பொதுவாக இருந்து, எல்லோருக்கும் எல்லாம் சொந்தம் […]

Read more

அதிநவீன அர்ஜுன் முதன்மைப் போர் ஊர்தி

அதிநவீன அர்ஜுன் முதன்மைப் போர் ஊர்தி, ச. பொன்ராஜ், போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், ஆவடி, சென்னை 600054, பக். 34+230. நம் நாட்டின் பாதுகாப்பு தளவாட உற்பத்தி பணிகள் பற்றி, பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்நூல் எழுதப் பெற்றுள்ளது. அர்ஜுன் போர் ஊர்தி பற்றியும், அதன் வடிவமைப்பு முறைகள் பற்றியும், சாதாரணமானவர்களும், மாணவர்களும் அறிந்து கொள்ளும் வகையில், நூலாசிரியர் விளக்கியுள்ளார். தரம் மிக்க தாளில், வண்ணப்படங்கள் சிறப்புடன் அச்சிடப் பெற்றுள்ளன. மாணாக்கர்கள் பாதுகாப்பு துறைப் பணிகளில் ஈடுபட, இந்நூல் […]

Read more

சைவ சமயக் கலைக் களஞ்சியம்

சைவ சமயக் கலைக் களஞ்சியம், தொகுதி 1, சைவ-சமய-தமிழகம், முனைவர் ஆர். செல்வக்கணபதி, தெய்வ சேக்கிழார் மனித வள மேம்பாட்டு அறக்கட்டளை, பக். 895, விலை – 10 தொகுதிகளும் சேர்த்து 15000ரூ. சைவ சமயம், தமிழகம் என்பதாக அமைந்துள்ள கலைக் களஞ்சியத்தின் மூலம் தொகுதி, சைவ சமய வழிபாடு தமிழகத்தில் எவ்வாறு நிலை பெற்றுள்ளது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. மிகப் பெரிய தரவுகளைத் தருகிற இக்கலைக் களஞ்சியம், நுண்ணிய நோக்கோடு அவற்றை ஒருங்கமைக்கவும் செய்கிறது. கலைக்களஞ்சியம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கு வரைமுறை […]

Read more

ஒழிவில் ஒடுக்கம் எனும் சைவ சித்தாந்த ஞானம்

ஒழிவில் ஒடுக்கம் எனும் சைவ சித்தாந்த ஞானம், டாக்டர் ஆர். சிவசக்தி வேலன், நர்மதா பதிப்பகம், 10, நானாதெரு, தி.நகர், சென்னை 17, பக். 216, விலை 80ரூ. திருவருட் பிரகாச வள்ளல் ராமலிங்க அடிகளால், 1851ல் பதிப்பித்து வெளியிடப்பட்ட இந்நூலை இயற்றியவர் 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்ரீகண்ணுடைய வள்ளல் ஆவார். தமிழ்க் குரிசில் சீகாழிச் சம்பந்தனை (பக். 31) தெய்வமாக வழிபட்டு இயற்றப்பட்ட, ஒழிவில் ஒடுக்கம் விரித்த நூற்கெல்லாம் விதை (32) எனலாம். வடலூர் வள்ளலார் பதிப்பித்த பின், வேதாந்த அடிப்படையில் விளக்கவுரை […]

Read more

இந்தியாவில் ஓரினப்பால்

இந்தியாவில் ஓரினப்பால், முனைவர் கி. அய்யப்பன், விசாலாட்சி பதிப்பகம், பக். 128, விலை 100ரூ. ஓரினச் சேர்க்கையை பற்றி விரிவாகவும், விளக்கமாகவும் இந்நூலில் எழுதியிருக்கும் ஆசிரியரின் முயற்சி, மிகத் தெளிவானதுதான். நம்மில் பெரும்பாலானோர் ஓரினச் சேர்க்கை என்ற வார்த்தையை கேட்டாலே, முகம் சுளிப்பது உண்டு. ஓரினச் சேர்க்கையை பல மதங்களும் வன்மையாக கண்டிக்கவே செய்கின்றன. இந்தியாவில் 25 லட்சம் ஓரினச் சேர்க்கையாளர்கள் இருப்பதாக புள்ளி விவரம் கூறுகிறது. இந்தியன் பீனல் கோர்ட் 377ன்படி, ஓரினச் சேர்க்கை என்பது தண்டனைக் குரிய குற்றமாக இருந்தது. ஆனால் […]

Read more

இலக்கியத் திறனாய்வும்

இலக்கியத் திறனாய்வும், படைப்பிலக்கியமும், முனைவர் ந. வெங்கடேசன், குகன் பதிப்பகம், 5, வி.கே.கே. பில்டிங், வடுவூர் 614019, பக். 208, விலை 150ரூ. படைப்பாளிக்கும், திறனாய்வாளனுக்கும் இடையே, ஒரு தொடர்பை ஏற்படுத்துவது படைப்புதான். நூலைப் படைத்தவனைக் காட்டிலும், திறனாய்வாளன் புகழ்பெறும் அளவிற்கு, திறனாய்வு உலகம் வளர்ச்சி பெற்றுள்ளது. இலக்கியம் உணர்வினை வெளிப்படுத்தினால், அதில் அறிவினை செலுத்துவது திறனாய்வு. அறிவுக்கண் கொண்டு இலக்கியத்தை பார்த்து அதன் ஆழ, அகலப் பரிமாணங்களை நுணுக்கமாக வெளிப்படுத்தும் கலைதான் திறனாய்வுகலை. அந்த திறனாய்வு கலை நுட்பங்களை, இந்த நூல் அழகாக […]

Read more

தெருக்கூத்து கலைஞர்கள்

தெருக்கூத்து கலைஞர்கள், கோ. பழனி, சி. முத்துகந்தன், போதிவனம். To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-492-2.html தமிழ் மண்ணில் கூத்து, நாடகம், கதை சொல்லல், ஆட்டங்கள், இசை தொகுப்புகள் என, பல்வேறு நிகழ்த்து கலைகள் உள்ளன. கேரளத்து கதகளி, கர்நாடகத்து யட்சகானம், ஆந்திரத்து வீதிநாடகா ஆகியன போன்று தமிழகத்தில் தனித்தன்மை வாய்ந்த ஒரு முழுமையான அரங்காக தெருக்கூத்து விளங்குகிறது. இந்த கலைகள் அந்தந்த மாநிலத்தவர்களால், அங்கீகரிக்கப்பட்டது போல தெருக்கூத்து தமிழர்களால் அங்கீகரிக்கப்படவில்லை என்ற கசப்பான உண்மையை நாம் அனைவரும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். […]

Read more

தூது நீ சென்று வாராய் தொகுதி 1 – 2

தூது நீ சென்று வாராய் தொகுதி 1 – 2, கே. ஏ. ராமசாமி, சாதுராம் பதிப்பகம், முதல் தொகுதி விலை 300ரூ, இரண்டாம் தொகுதி விலை 230ரூ. ராமபிரானுக்க அனுமனும், பாண்டவர்களுக்கு கண்ணனும் தூது சென்றது வரலாற்றில் சிறப்பானவை. ஒப்புமை கூற இயலாதவை. நவீன அரசியலுக்கும் வழிகாட்டும் வகையில் நுணுக்கங்கள் கொண்டவை. இந்த நாட்டின் பாரம்பரியத்தில் அரசு, ஆளுமை, நிர்வாகம், நிதி என்று எல்லா துறைகளுக்கும் முன்னோடி கருத்துக்கள், இலக்கியத்தில் உள்ளன. தமிழில் தூது, கலம்பகம், பிள்ளைத் தமிழ் போன்றவை, தமிழை உயிரோட்டத்துடன் […]

Read more

பள்ளு இலக்கியத் திரட்டு

பள்ளு இலக்கியத் திரட்டு, தே. ஞானசேகரன், சாகித்திய அகடமி, ரவீந்திர பவன், 35, பெரோஸ்ஷா சாலை, புதுடில்லி 110001, பக். 192, விலை 110ரூ. பிள்ளைக்கவி முதல் பெருங்காப்பியம் ஈறாகக் கூறப்படும் 96 பிரபந்தங்களுள் ஒன்ற பள்ளு இலக்கியம். நெல்லு வகையை எண்ணினாலும் பள்ளு வகையை எண்ண முடியாது எனும் அளவுக்கு, உழவர்களின் பாடல்கள் ஏராளமாக உள்ளன. இந்நூலில் கடவுள் வணக்கம் மூத்த பள்ளிவரல் இப்படியாக பள்ளிகளுள் ஒருவருக்கொருவர் ஏசல் என 48 உறுப்புகள் 14 வகைகளுக்குள் அமைக்கப்பட்டுள்ளது. 19 பள்ளு நூல்களில் இருந்து […]

Read more
1 219 220 221 222 223 240