போட்டித் தேர்வுகளில் வெல்வது எப்படி

போட்டித் தேர்வுகளில் வெல்வது எப்படி?, ஸ்ரீநிவாஸ் பிரபு, விகடன் பிரசுரம், சென்னை, விலை 125ரூ.   To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-861-3.html அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் அனைத்து வேலை வாய்ப்புகளுக்கும், போட்டித் தேர்வு முறையே பெரும்பாலும் பின்பற்றப்படுகிறது. இதில் வெற்றி பெறுபவர்களே உரிய பணிகளுக்குத் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பதால் போட்டியாளர்கள் இத்தேர்வு குறித்த விவரங்களை முழுமையாக அறிந்து கொள்வது முக்கியம். இந்நூலாசிரியர் பல்வேறு இதழ்களில் கதை, கட்டுரைகளை எழுதும் எழுத்தாற்றல் உள்ளவர் என்பதால், இத்தேர்வு குறித்த பல விவரங்களை […]

Read more

தகவல் சுரங்கம்

தகவல் சுரங்கம் (இரு நூல்கள்), லக்ஷ்மிவேல், ராஜாத்தி பதிப்பகம், சென்னை, விலை தலா 40ரூ. நாட்டில் அதிகரித்து வரும் வீட்டு வாடகையை பார்க்கும்போது, சொந்தமாக ஒரு குடிசை வீடு கட்ட கையளவு நிலமாவது வாங்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோருடைய மனதிலும் எழுவது இயற்கை. அதற்காக பல வருடம் கஷ்டப்பட்டு குருவி சேர்த்தாற்போல் பணத்தை சேர்த்து ஒரு இடத்தை வாங்கிய பின், அதில் வில்லங்கம் முளைத்தால், பெரும் ஏமாற்றமாகிவிடும். எனவே நிலம் வாங்குவது, விற்பது குறித்த முழுமையான விபரங்களை அறிவது மிக முக்கியம். குறிப்பாக […]

Read more

உடையும் இந்தியா

உடையும் இந்தியா, ஆரிய திராவிடப் புரட்டும் அந்நியத் தலையீடுகளும், ராஜிவ் மல்ஹோத்ரா, அரவிந்தன் நீலகண்டன், கிழக்கு பதிப்பகம், சென்னை 14, பக். 768, விலை 425ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/978-81-8493-310-9.html இந்திய ஒருமைப்பாட்டை சீர்குலைக்க சர்வதேச அளவில் பல்வேறு சதிகள் நடந்தாலும், அதில் மூன்று சதிகள் மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றன. ஒன்று இஸ்லாமிய தீவிரவாதம், இரண்டு மாவோயிஸ்ட் தீவிரவாதம், மூன்று மனிதஉரிமைப் போராட்டம் என்ற போர்வையில் தலித் இன மக்களைத் தனியாக பிரிக்க முற்படும் பிரிவினைவாதம். இதில் முதல் […]

Read more

திருப்பாவை அமுதம்

திருப்பாவை அமுதம், தாடா. ஸுப்ரமண்யம், தாடா. ஸுப்ரமண்யம், கைத்தறி நகர், நிலையூர், மதுரை 625005, விலை 230ரூ. தமிழ் மறை எனப் பாராட்டப்படும் நாலாயிர திவ்யப்ரபந்தத்தின் ஒரு பகுதிதான் திருப்பாவை. ஸ்ரீமத் நாராயணனைத் துதித்துப் போற்றும் பாடல்களின் தொகுப்பாகிய திவ்யப்ரபந்தத்தை இயற்றிய 12 ஆழ்வார்களுள், குறிப்பிடத்தக்கவர் பெரியாழ்வார். இவரது பெண் பிள்ளைதான் ஸ்ரீ ஆண்டாள். இவர் ஸ்ரீ நாராயணன் மீது கொண்ட அளவிட முடியாத காதலால், அவனையே தனது கணவனாக மனதில் வரித்து, பக்தி பரவசத்துடன் பாடிய 30 பாடல்களின் தொகுப்பே திருப்பாவை. மாதங்களில் […]

Read more

நம்பிக்கை தரும் நவீன சிகிச்சை முறைகள்

நம்பிக்கை தரும் நவீன சிகிச்சை முறைகள், பா. பிரவீண்குமார், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 95ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-841-0.html முன்பு, தங்களுக்கு வந்த நோய் என்ன என்பதைக்கூட அறியாமல் இறந்தவர்கள் பலர் உண்டு. இன்று, எந்த நோயாக இருந்தாலும் சரி, அதற்குத் தீர்வு உண்டு என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் ஜு.வி.யில் டாக்டர் விடகன் பகுதியில் தொடராக வெளிவந்த மருத்துவக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். உயிருக்கும், உடலுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் […]

Read more

நரேந்திர மோடி நேர்மையும் நிர்வாகத் திறமையும்

நரேந்திர மோடி, நேர்மையும் நிர்வாகத் திறமையும், எஸ். சந்திரமௌலி, அல்லயன்ஸ் கம்பெனி, புதிய எண் 64, ராம கிருஷ்ண மடம் சாலை, தபால் பெட்டி எண் 617, மயிலாப்பூர், சென்னை 4, விலை 150ரூ.   To buy this Tamil book online:https://www.nhm.in/shop/100-00-0002-209-2.html இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும்கூட இன்று அதிகம் பேசப்படும் மனிதராகத் திகழ்பவர் குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி. பல்வேறு தடைகளைத் தாண்டி, பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராகியுள்ள இவர், தனது பிரசார வியூகத்தின் மூலம் மோடி அலை என்ற ஒரு புதிய அரசியல் […]

Read more

இந்தியாவில் முஸ்லிம் ஆட்சி (இரு பகுதிகள்)

இந்தியாவில் முஸ்லிம் ஆட்சி (இரு பகுதிகள்), சையித் இப்ராஹிம், எம்.ஏ., எல்.டி., யுனியவர்ஸல் பப்ளிஷர்ஸ், 2, வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை 17, விலை-முதல் பகுதி ரூ. 190, இரண்டாம் பகுதி-ரூ. 225. To buy this Tamil book online:https://www.nhm.in/shop/100-00-0002-209-4.html இந்நூலாசிரியர், கி.பி. 695ல் முஹம்மத் பின் காஸிம் என்பவர் இந்தியாவிற்குப் படையெடுத்து வந்தது முதல், கி.பி. 1859ல் கடைசி மன்னர் பஹதுர்ஷா ஆண்டது வரையிலான அனைத்து முஸ்லிம் மன்னர்களையும், அவர்களது ஆட்சி முறைகளையும் பற்றி இரண்டு நூல்களில் சுருக்கமாகத் தொகுத்துள்ளார். […]

Read more

காவல் புலன் விசாரணை

காவல் புலன் விசாரணை (இரண்டு புத்தகங்கள்), வீ. சித்தண்ணன், ஜெய்வின் பதிப்பகம், 4/391ஏ, இராம் தோட்டம், அண்ணாசாலை, பாலவாக்கம், சென்னை 41, விலை தலா 500ரூ. இந்நூலாசிரியர் காவல்துறை உயர் அதிகாரியாக சுமார் 35 வருடங்களுக்கு மேல் பணியாற்றியவர். தற்போது சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞராகவும் உள்ளார். தனது நீண்ட கால அனுபவத்தைக் கொண்டு காவல்துறைக்கு மிகவும் பயன் தரத்தக்க Police investigation Powers. Tactics and Techniques என்று இவர் ஆங்கிலத்தில் எழுதிய இரண்டு புத்தகங்கள், தற்போது காவல் புலன் விசாரணை என்ற […]

Read more

முக்கிய விண்ணப்பப் படிவங்கள்

முக்கிய விண்ணப்பப் படிவங்கள், வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், புதிய எண் 76, பாரதீஸ்வரர் காலனி, 2வது தெரு, கோடம்பாக்கம், சென்னை 24, விலை 350ரூ. எந்தவொரு தேவைக்கும் அரசை அணுகும்போது, அதற்குரிய விண்ணப்பத்துடன் அணுக வேண்டும். அந்த விண்ணப்பப்படிவங்கள் முறையாக இல்லையென்றாலோ, சரியாகப் பூர்த்தி செய்யவில்லை என்றாலோ, அவை நிராகரிக்கப்பட்டுவிடும். இவ்விஷயத்தில் படித்துப்பட்டம் பெற்றவர்களே திணறும் நிலை உள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு, இப்பிரச்னையை எளிதாக்கும் வகையில், அரசுத் துறைகளில் பொதுமக்கள் பயன்படுத்தும் முக்கிய விண்ணப்பங்களைத் தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார் இந்நூலாசிரியர். பொதுவாக, […]

Read more

நீரோட்டம் பார்ப்பது எப்படி

நீரோட்டம் பார்ப்பது எப்படி?, மு.லக்ஷ்மி, வானதி பதிப்பகம், 13, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 17, விலை 80ரூ. கிராமப்புறங்களில் பெரியவர் ஒருவர், இளம் புளியங்க வட்டையைக் கொண்டு, நிலத்துக்கடியில் நீரோட்டம் இருப்பதை கண்டறிந்து கூறும் வித்தையைக் கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த மரபு வழியைச் சார்ந்த ஒரு பெண்டுலம் மூலம் நீரோட்டம் பார்ப்பது எப்படி என்ற ஆய்வு மற்றும் செய்முறை நூலை, வட்டாட்சியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இந்நூலாசிரியர் இயற்றியுள்ளார். இவர் தனது பணி ஓய்வுக்குப் பின், பல வருடங்கள், இது குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டு, […]

Read more
1 13 14 15 16 17 21