தீராநதி நேர்காணல்கள்

தீராநதி நேர்காணல்கள், குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக். 216, விலை 200ரூ. தீராநதியில் வெளியான ஜெயகாந்தன், சுஜாதா, ஐராவதம் மகாதேவன், வைரமுத்து, பாலுமகேந்திரா, மாலதி மைத்ரி, உள்ளிட்ட 15 ஆளுமைகளின் நேர்காணல்களைத் தொகுத்து குமுதம் பு(து)த்தகம் நூலாக வெளியிட்டுள்ளது. பல்துறை அறிஞர்களின் துறைசார்ந்த கருத்துக்கள், அரிய தகவல்கள் என்று புதிய உலகிற்குள் நம்மை பயணிக்க வைக்கும் நூல். கலைஞனுக்கும் சமூகத்திற்குமான ஒரு உறவை ஜெயகாந்தன் நேர்காணல் நமக்கு காட்டுகிறது. தமிழின் தொன்மையை ஐராவதம் மகாதேவன் உயர்த்திப்பிடிக்கிறார். பெண், பெண்மை, […]

Read more

எம்.ஜி.ஆருடன் எனக்கிருந்த தொடர்பு

எம்.ஜி.ஆருடன் எனக்கிருந்த தொடர்பு, ம.பொ.சிவஞானம், பூங்கொடி பதிப்பகம், சென்னை 4, பக். 160, விலை 60ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-426-6.html செங்கோல் வார இதழில் ம.பொ.சிவஞானம் நானறிந்த கலைஞர்கள் என்ற தலைப்பில் எழுதிய தொடரின் நூல்வடிவம் இது. எம்.ஆர்.ராதா, என்.எஸ். கிருஷ்ணன், கே.ஆர். ராமசாமி போன்ற கலைஞர்களைப் பற்றிக் குறைவாகவும் மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். பற்றிய தகவல்கள் அதிகமாகவும் எழுதப்பட்டிருக்கின்றன. ஒரு நடிகர் என்ற முறையிலும் ஓர் அரசியல்வாதி என்ற முறையிலும், நல்ல மனிதர் என்கிற […]

Read more

வளம் தரும் வான்மீகியின் பாலகாண்டம், உரையும் ஆக்கமும்

வளம் தரும் வான்மீகியின் பாலகாண்டம், உரையும் ஆக்கமும், புலவர் ஆ. காளத்தி, கிள்ளை நிலையம், 16/383, ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், சென்னை 600024, பக். 294, விலை 190ரூ. வான்மீகி இயற்றியுள்ள ராமாயணத்தின் பாலகாண்ட தமிழ் மொழிபெயர்ப்பான இந்த நூல் எளிமையான தமிழில் எல்லோருக்கும் புரியும்படியாக வெளிவந்துள்ளது. பால காண்டத்தில் உள்ள எழுபத்து ஏழு சருக்கங்களில் சில சுலோகங்களை அழகிய முறையில் காளத்தி மொழி பெயர்த்துள்ளார். மூல நூலுக்கு ஊறு செய்யாது மொழி பெயர்த்திருப்பது பாராட்டுக்குரியது. இதைப் பாராட்டும் ஸ்ரீ வரத யதிராஜ ஜீயர் […]

Read more

மனமே நலமா

மனமே நலமா?, வள்ளுவர் பண்ணை, 10/31, இரண்டாவது மெயின் ரோடு, சி.ஐ.டி. நகர், சென்னை 35, விலை 80ரூ. மனநோய் பற்றிய முழு விவரங்களும் அடங்கிய புத்தகம். மன நோய்கள் எத்தனை வகைப்படும்? மனநோய் வராமல் தடுப்பதற்கு என்ன வழி?மனநோய்க்கான சிகிச்சை முறைகள் என்ன? என்பதற்கான விடைகளைக் கூறுகிறார், மனநல மருத்துவர் டாக்டர் சிவ. நம்பி. உடலும், மனமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல. இரண்டு பக்கங்களும் சீராக இருந்தால்தான் அந்த நாணயம் செல்லும். ஏதாவது ஒரு பக்கம் கெட்டுப்போயிருந்தாலும் அது செல்லாக் […]

Read more

வெள்ளந்தி மனிதர்கள்

வெள்ளந்தி மனிதர்கள், ஆ. அறிவழகன், செம்மூதாய் பதிப்பகம், 17, தாகூர் தெரு, எம்.எம்.டி.ஏ.நகர், சிட்லபாக்கம், சென்னை 64, விலை 50ரூ. சூதுவாது இல்லாத விவரங்கள் தெரியாது வாழ்ந்து வரும் மனிதர்களை மனதில் கொண்டு எழுதப்பட்ட 8 சிறுகதைகள்.   —-   ஸ்ரீ அதிசங்கரர், பருத்தியூர் டாக்டர் கே. சந்தானராமன், பூங்கொடி பதிப்பகம், 14, சித்திரைக் குளம் மேற்குத்தெரு, மைலாப்பூர், சென்னை 4, விலை 30ரூ. ஸ்ரீ ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாற்றையும், தொண்டுகளையும் கூறும் சில நூல்.   —-   இந்திய விஞ்ஞானிகள், […]

Read more

உகரச்சுட்டு

உகரச்சுட்டு, முகிலை இராசபாண்டியன், கோவன் பதிப்பகம், பாலாஜி நகர், புழுதிவாக்கம், சென்னை 91, பக். 112,விலை 80ரூ. தமிழ்மொழியில் அ, இ, உ என மூன்ற சுட்டெழுத்துக்கள் உள்ளன, இந்தியாவில் உள்ள பிற மொழிகளில் அ, இ என்னும் இரண்டு சுட்டெழுத்துக்களே உள்ளன. அ என்னும் சுட்டெழுத்து அவன் அவ்வீடு எனத் தொலைவில் உள்ள பொருளையும் இ என்னும் சுட்டெழுத்து இவன் இவ்வீடு என அருகில் உள்ள பொருளையும் குறிக்கும். உ என்னும் சுட்டெழுத்து தற்காலத்தில் பேசப்படுவதில்லை. உ என்னும் சுட்டெழுத்து தொலைவுக்கும் அருகுக்கும் […]

Read more

திரையுலகப் பிரபலங்கள் 1

திரையுலகப் பிரபலங்கள் 1, ஏஎல். எஸ். வீரய்யா, திருவரசு புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 17, விலை 125ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-816-1.html சுமார் 50 ஆண்டுகள் தமிழ்த் திரையுலகில் அனுபவம் பெற்ற இந்நூலாசிரியர், தமிழகத்தில் பல வெற்றிப் படங்களுக்குத் தயாரிப்பு நிர்வாகியாகப் பணியாற்றியவர். இவர் கவிஞர் கண்ணதாசனின் பாசறையில் உருவானதால், எளிய தமிழ் நடையில் நாடகம் மற்றும் சினிமா துறைகள் குறித்த நூல்களை எழுதும் எழுத்தாளராகவும் பரிணமிக்கிறார். சினிமா துறைக்குப் புதிதாக வருபவர்களுக்கும் […]

Read more

அரவாணியம்

அரவாணியம், விசாலட்சுமி பதிப்பகம், கிழக்குத்தெரு, கடையம், நல்லாப்பாளையம் அஞ்சல் 605701, விழுப்புரம் மாவட்டம், விலை 180ரூ. அலி என்றும் அரவாணி என்றும் திருநங்கை என்றும் அழைக்கப்படுகிறவர்கள் மகாபாரத காலத்திலேயே இருக்கிறார்கள். இதுபற்றி முனைவர் கி. அய்யப்பன், அரவாணியம் ஏன் ஏற்படுகிறது என்று பல ஆண்டுகள் ஆராய்ந்து இந்த நூலை எழுதியுள்ளார்.   —- சித்தர்களின் சொர்க்கபுரி, விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 130ரூ. பொதிகை மலை பக்தி யாத்திரையை அற்புதமாக புத்தகமாக தொகுத்து கொடுத்துள்ளார் முத்தாலங்குறிச்சி காமராசு. தூத்துக்குடி மாவட்டத்தைச் […]

Read more

முத்திரை நினைவுகள்

முத்திரை நினைவுகள், ஜே. எம். சாலி, இலக்கிய வீதி, சென்னை 101, பக்கங்கள் 144, விலை 120ரூ எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஜே.எம். சாலி தனது எழுத்துலக அனுபவங்களை இந்நூலில் எழுதியுள்ளார். 1955இல் கண்ணன் சிறுவர் இதழுக்கு எழுத ஆரம்பித்த அவர், அதற்குப் பின்பு தமிழகத்தின் பிரபல இதழ்கள் எல்லாவற்றிலும் எழுதிவிட்டார் என்பது நம்மை வியக்க வைக்கிறது. பிரபல பத்திகையாளர்களான சாவி, இதயம் பேசுகிறது, மணியன், கல்கி ராஜேந்திரன் உட்பட பல பத்திகையாளர்களுடன் நூலாசிரியருக்கு இருந்த தொடர்புகளைத் தெரிந்து கொள்ள முடிகிறது. ஆனந்தவிகடன், சிங்கப்பூர் தமிழ் […]

Read more

எம்.ஜி.ஆருடன் எனக்கிருந்த தொடர்பு

எம்.ஜி.ஆருடன் எனக்கிருந்த தொடர்பு, ம.பொ. சிவஞானம், பக்கம் 160, பூங்கொடி பதிப்பகம், சென்னை – 4. விலை ரூ. 60 ‘செங்கோல்’ வார இதழில் ம.பொ.சிவஞானம் ‘நானறிந்த கலைஞர்கள்’ என்ற தலைப்பில் எழுதிய தொடரின் நூல்வடிவம் இது. எம்.ஆர். ராதா, என்.எஸ். கிருஷ்ணன், கே.ஆர். ராமசாமி போன்ற கலைஞர்களைப் பற்றிக் குறைவாகவும், மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். பற்றிய தகவல்கள் அதிகமாகவும் எழுதப்பட்டிருக்கின்றன. ஒரு நடிகர் என்ற முறையிலும், ஓர் அரசியல்வாதி என்ற முறையிலும், நல்ல மனிதர் என்கிற முறையிலும் எம்.ஜி.ஆரின் நற்பண்புகளை மிகவும் சுவையாக விவரித்துச் […]

Read more
1 3 4 5 6