இலக்கிய சிற்பி மீரா

இலக்கிய சிற்பி மீரா, சாகித்ய அகாதெமி, விலை 50ரூ. சாகித்திய அகாதெமியின் சார்பில் வெளிவரும் ‘இந்திய இலக்கிய சிற்பிகள்’ வரிசையில் கவிஞர் மீரா குறித்து எழுதப்பட்ட நூல். ‘மீரா கவிதைகள்’ (மரபு கவிதை), ‘கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்’ (வசன கவிதை), ‘ஊசிகள்’ (அங்கத கவிதை), ‘மூன்றும் ஆறும்’ (கவியரங்க கவிதை), ‘குக்கூ’ (குறுங்கவிதை), ‘வா இந்தப்பக்கம்’ (கட்டுரை) என்பன என்றென்றும் அவரது பெயர் சொல்லும் முத்திரை நூல்கள். கல்லூரி பேராசிரியர், முதல்வர், போராளி, இதழாசிரியர், கவிஞர், கட்டுரை ஆசிரியர், பதிப்பாளர் என்றாற்போல் […]

Read more

சொன்னால் நம்ப மாட்டீர்கள்

சொன்னால் நம்ப மாட்டீர்கள், சின்ன அண்ணாமலை, சந்தியா பதிப்பகம், விலை 160ரூ. பத்து வயதில் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு பள்ளி இறுதி வகுப்பில் இடை நீக்கம் செய்யப்பட்டவர், 42ம் ஆண்டு நடந்த ஆகஸ்டு புரட்சியில் கைதானபோது, திருவாடனை சிறையை உடைத்து ஊர் மக்களால் விடுதலையானவர், சின்ன அண்ணாமலை. அவர் வாழ்வில் நடந்த பல்வேறு சம்பவங்களைச் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் இந்த நூலில் கூறியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 16/12/2015   —- ஜெயகாந்தன் உரைகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 60ரூ. ஈரோட்டில் ஜெயகாந்தன் ஆற்றிய […]

Read more

கசக்கும் கல்வியும் கற்கண்டாகும்

கசக்கும் கல்வியும் கற்கண்டாகும், கவிஞர் பிரியசகி மற்றும் அருட்பணி, ஜோசப் பெஜயராஜ், அரும்பு பப்ளிகேஷன்ஸ் மற்றும் நிறைவகம், விலை 270ரூ. வகுப்பறையில் பாடம் பயிலும் மாணவர்களில் 5-ல் ஒருவருக்கு டிஸ்லெக்சியா எனப்படும் கற்றல் குறைபாடு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த குறைபாட்டை கண்டறிந்து, அந்த குழந்தைகளை முன்னேற்றுவதில்தான் இன்றைய சமூகம் தவறிழைக்கிறது. அந்த வகையில் கற்றல் குறைபாடுள்ள மாணவர்களை இனங்கண்டு, அவர்களை கையாள்வது எப்படி? அவர்களுக்கு கசப்பாய் தெரியும் கல்வியை, கற்கண்டு போல இனிமையாக்குவது எப்படி? என பாடம் நடத்துகிறது இந்த நூல். […]

Read more

காற்றில் மிதந்து வருகிறார் கண்ணதாசன்

காற்றில் மிதந்து வருகிறார் கண்ணதாசன், புல்லாங்குழல் வெளியீடு, விலை 150ரூ. பாமர மக்களுக்கு பாட்டு வழியாக மருத்துவம் பார்த்தவர் கவியரசு கண்ணதாசன். அவர் எம். எஸ். விசுவநாதன், டி.எம். சவுந்தராஜன், பி. சுசீலா, இளையராஜா ஆகியோருடன் இணைந்து பாடல் உருவாக்கிய விதம் குறித்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நூல். பாடலில் எளிமை, கவிதையில் இனிமை, சொற்களை நெய்யும் நேர்த்தியில் எழுத்தின் வன்மை குறித்து விவரித்து அதிகமான படங்களுடன் தொகுத்தளித்திருக்கிறார் கவிபாஸ்கர். நன்றி: தினத்தந்தி, 16/12/2015   —-   அருணகிரிநாதர் அருளிய கந்தர் அந்தாதியில் […]

Read more

கடவுள் தொடங்கிய இடம்

கடவுள் தொடங்கிய இடம், முத்துலிங்கம், விகடன் பிரசுரம், விலை 155ரூ. உலக அகதிகளின் எண்ணிக்கை முதல் முறையாக 5 கோடியை எட்டியிருக்கிறது. நாட்டை விட்டு துரத்தப்பட்டவர்கள் அகதிகள். அவர்களுக்கு இன்னொரு நாடு சுலபத்தில் கிடைப்பதில்லை. சிலர் பாதி வழியில் பிடிபட்டு திருப்பி அனுப்பப்படுவார்கள். சிலர் சிறையில் அடைக்கப்படுவார்கள். சிலர் காடுகளிலோ, கடலிலோ, பனியிலோ, ஆற்றிலோ அகப்பட்டு இறந்துவிடுவார்கள். இந்த நூல் அகதிகள் அலைவதை சொல்கிறது. சரித்திரம் நிலைப்பது புனைவுகளின் மூலம்தான். அகதிகள் பயணத்தை பதிவு செய்யும் இந்த புதினம் ஒரு வரலாற்றை உலகத் தரத்தோடு […]

Read more

இராமலிங்க வள்ளலாரும் செய்குத்தம்பி பாவலரும்

இராமலிங்க வள்ளலாரும் செய்குத்தம்பி பாவலரும், சுஹைனா பதிப்பகம், விலை 100ரூ. இது சிறந்த ஆராய்ச்சி நூல். வடலூரில் வாழ்ந்த சமுதாய சீர்திருத்தவாதியான ராமலிங்க சுவாமிகள் பாடிய பாடல்கள், “திருவருட்பா” என்று அழைக்கப்படுகின்றன. அக்காலத்தில் வாழ்ந்த இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்புலவர் “அப்பாடல்கள் அருட்பா அல்ல, மருட்பா” என்று வாதிட்டார். வள்ளலாரும், ஆறுமுக நாவலரும் மறைந்த பின்னர், ‘அருட்பா, மருட்பாவா?’ என்ற சர்ச்சை மீண்டும் மூண்டது. அப்போது ‘வள்ளலார் பாடியவை அருட்பாதான்’ என்று வாதாடியவர் செய்குத்தம்பி பாவலர். வள்ளலார் பற்றியும், பாவலர் பற்றியும் முழு விவரங்களும் இதில் […]

Read more

வாழ்க்கை ஒப்பந்தம்

வாழ்க்கை ஒப்பந்தம், தந்தை பெரியார், முல்லை பதிப்பகம், விலை 25ரூ. தந்தை பெரியார் 1940-41ஆம் ஆண்டுகளில் 3 திருமணங்களில் நிகழ்த்திய அரிய சொற்பொழிவுகளின் தொகுப்பு நூல். வாழ்க்கை துணை ஒப்பந்தத்திற்கு உறுதிமொழியும் அவசியப்பட்டால் பதிவு ஆதாரமும் தவிர வேறு காரியங்கள் எதற்கு? அதன் மூலம் அறிவு, காலம், பணம், ஊக்கம், சக்தி இவை ஏன் வீணாக வேண்டும்? எனக் கேட்கிறார் தந்தை பெரியார். மேலும் வாழ்க்கை ஒப்பந்தம் பற்றிய அனைத்து கருத்துகளும் மிகத் தெளிவாக தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இளந்தலைமுறையினர் படித்து உணரவேண்டும். நன்றி: […]

Read more

சிறுவர்களிடம் தமிழ் சினிமாவின் தாக்கம்

சிறுவர்களிடம் தமிழ் சினிமாவின் தாக்கம், பெரியநாயகம் ஜேசுதாஸ், மணிமேகலைப் பிரசுரம், விலை 185ரூ. சினிமா ஒரு சக்தி வாய்ந்த ஊடகம். சமூகத்தின் மீது சினிமா தாக்கம் ஏற்படுத்துவதையும், குறிப்பாக (வீதி) சிறுவர்கள் மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் பெரிய நாயகம் ஜேசுதாஸ் எழுதியுள்ளார். சினிமா மூலம் கற்றுக்கொள்கின்ற சாதகமான நிலையையும், கலாச்சார சீரழிவு என்ற பாதகமான நிலையையும் அலசி ஆராய்ந்துள்ளார். நற்பயனளிக்கக் கூடிய கற்றல் சூழ்நிலையைச் சிறுவர்களுக்கு கல்வியாளர்கள் உருவாக்க வேண்டும் என்பதை முடிவாகக் கூறுகிறார். நன்றி: தினத்தந்தி, 16/12/2015   —-   […]

Read more

நட்பை வழிபடுவோம் நாம்

நட்பை வழிபடுவோம் நாம், கற்பக புத்தகாலயம், சென்னை, விலை 45ரூ. நட்பிலே நல்ல நட்பு, போலி நட்பு, தீய நட்பு, கூடா நட்பு என்று பலவகை இருக்கின்றன. இலக்கியங்களும் அதை நமக்கு எடுத்து சொல்கின்றன. அத்தகைய நட்பையெல்லாம் இப்புத்தகத்தின் வாயிலாக விளக்குவதுடன் நல்ல நட்பு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில சான்றுகளை காட்டி அதன் வாயிலாக நட்பின் பெருமை உணர்த்தப்படுகிறது. கபிலர் – பாரியின் நட்பு, கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு, அவ்வையார் – அதியமான் நட்பு ஆகிய சங்க காலச் சான்றோர்களின் […]

Read more

முக்கிய சினிமாக்கள் பற்றிய சுவையான கண்ணோட்டம்

முக்கிய சினிமாக்கள் பற்றிய சுவையான கண்ணோட்டம், மணிமேகலைப் பிரசுரம், விலை 100ரூ. இலங்கையைச் சேர்ந்த கே.எஸ். சிவகுமாரன் பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு இடங்களில் நடந்த உலகப் பட விழாக்களில் பங்கு கொண்டு அங்கு திரையிடப்பட்ட சிறந்த படங்களை பார்த்து ரசித்தவர். அவர் தமது அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் விதத்தில் எழுதியுள்ளா புத்தகம் இது. உலகப் பட விழாக்களில் பாராட்டப்பட்ட சிவகுமார், ராதா நடித்த ‘மறுபக்கம்’, கமல்ஹாசன், ரேவதி நடித்த ‘மகளிர் மட்டும்’, அஜித், தேவையாணி நடித்த ‘காதல் கோட்டை’ ஆகிய தமிழ் படங்கள் […]

Read more
1 2 3 9