மோடி கேள்விகள் பதில்கள்

மோடி கேள்விகள் பதில்கள், குமுதம் வெளியீடு, பக். 64, விலை 65ரூ. பிரதமர் மோடி குமுதம் வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்கு குஜராத் முதல்வராக இருந்தபோது குமுதத்தில் அளித்த பதில்களின் தொகுப்பு இது. மோடியுடன் பேசவேண்டும், கேள்வி கேட்கவேண்டும் என்ற இளைஞர்களின் கனவு இதன் மூலம் நிறைவேறியுள்ளது. குமுதத்தில் வெளிவந்ததை குமுதம் பு(து)த்தகம் நூலாக கொண்டுவந்துள்ளது. மதச்சார்பின்மை, அரசியல் வாழ்வு, உணவுப் பழக்க வழக்கங்கள், நேதாஜி பற்றிய விளக்கம், மகாபாரதம், பெண்கள் பற்றிய மதிப்பீடு, இலவசங்கள் பற்றிய கருத்து, நிர்வாகம், ஆர்.எஸ்.எஸ். பற்றிய விளக்கம், ஜெ.யின் […]

Read more

நள்ளிரவில் கலைஞர் கைது

நள்ளிரவில் கலைஞர் கைது (ஒரு நிருபரின் நேரடி சாட்சியம்), கே.கே. சுரேஷ்குமார், யாழ்கனி பதிப்பகம், பக். 288, விலை 220ரூ. காற்றில் பறந்த சட்டங்கள்! தி.மு.க., தலைவர் கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்ட சம்பவம், அதன் பின்னர் அரங்கேறிய அத்துமீறல்களை இந்த நூல் விரிவாக பதிவு செய்துள்ளது. சமீப காலத்தில் நடந்த இந்த மிக முக்கியமான அரசியல் நிகழ்வை, விறுவிறுப்பாகவும் கோர்வையாகவும் நூலாசிரியர் பதிவு செய்துள்ளார். இதில் விவரிக்கப்படும் ஒவ்வொரு சம்பவத்தின் போதும் நிருபராக நானும் களத்தில் இருந்தேன். அந்த காட்சிகள் என் கண் […]

Read more

சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலரும் தந்தை பெரியாரும்

சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலரும் தந்தை பெரியாரும், முத்து. குணசேகரன், உலகத் தமிழாய்ச்சி நிறுவனம், விலை 105ரூ. 1923-ம் ஆண்டு மே 1-ந் தேதியை மே தினமாக முதன் முதலாகக் கொண்டாடியவர் சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலர். அது முதல்தான் “மே தினம்” கொண்டாடப்படுகிறது. பொது உடமை இயக்க முன்னோடி இவர். திராவிட இயக்கத்தின் முன்னோடி தந்தை பெரியார். பெரியாரும், சிங்காரவேலரும் 1932-ல் “சுயமரியாதை சமதர்ம இயக்கம்” என்ற பேரியக்கத்தை தொடங்கினர். அது பற்றி விரிவாகக் கூறும் சிறந்த நூல். நன்றி: தினத்தந்தி, 04/5/2016. […]

Read more

வேலூர் மாவட்ட வரலாறு

வேலூர் மாவட்ட வரலாறு, வேலூர் மா. குணசேகரன், மணிமேகலைப் பிரசுரம், விலை 100ரூ. இந்நூல் வேலூரின் வரலாற்றைக் கூறம், நல்லதோர் தகவல்களஞ்சியம். வேலூரின் பெருமைகளையும், சிறப்புகளையும் பல கோணங்களில் விவரித்து படிப்போர் மனதைக் கவரும் வகையில் தொகுத்தளித்துள்ளார் நூலாசிரியர் வேலூர் மா. குணசேகரன். இது இணையத்திலும், விக்கிபாடியா போன்ற இணையத் தகவல் களஞ்சியங்களில் இடம் பெறவேண்டும். நன்றி: தினத்தந்தி, 04/5/2016.   —- சுற்றுலாச் செல்ல 12 ஜோதிர் லிங்கங்கள், டாக்டர் கே. என். சரஸ்வதி, கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், விலை 50ரூ. சிவத்தலங்கள் பலவற்றுள் […]

Read more

ஜெயகாந்தனின் பர்ணசாலை

ஜெயகாந்தனின் பர்ணசாலை, நவபாரதி, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலை 100ரூ. சிறுகதை, நாவல் இலக்கிய உலகில் சிகரம் தொட்டவர், ஜெயகாந்தன். நண்பர்களால் அவர் ‘ஜே.கே.’ என்று அன்புடன் அழைக்கப்பட்டார். ஜெயகாந்தனின் கே.கே. நகர் வீட்டு மாடியில் நண்பர்கள் கூடி அடிக்கடி கூடி விவாதிப்பது வழக்கம். அந்த இடத்தை ‘பர்ணசாலை’ என்று அழைத்தனர். ஜெயகாந்தனோடு 50 ஆண்டுக் காலம் பழகிய எழுத்தாளர் நவபாரதி, அவரோடு பகிர்ந்து கொண்ட எண்ணங்கள், அவரிடம் இருந்து பெற்ற அனுபவங்களை இந்த நூலில் பதிவு செய்து இருக்கிறார். மேலும் அவரது சிறுகதைகள் […]

Read more

தமிழ்வாணனின் தன்னம்பிக்கை கட்டுரைகள்

தமிழ்வாணனின் தன்னம்பிக்கை கட்டுரைகள், லேனா தமிழ்வாணன், மணிமேகலைப் பிரசுரம், விலை 270ரூ. மறைந்த எழுத்தாளர் தமிழ்வாணன் எந்த பொருள் பற்றியும், மனதைத் தொடும் விதத்தில் எழுதுவதில் வல்லவர். அவருடைய தன்னம்பிக்கைக் கட்டுரைகளின் 2ம் பாகம் இப்போது வெளிவந்துள்ளது. மொத்தம் 59 கட்டுரைகள் உள்ளன. வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் இளைஞர்கள் படிக்க வேண்டிய கட்டுரைகள். நன்றி: தினத்தந்தி, 04/5/2016.   —- வர்ம மருத்துவ கையடக்கம், மருத்துவர் த. இராஜேந்திரன், வர்ம அறிவியல் ஆய்வு மையம், பவர் பப்ளிகேஷன்ஸ், விலை 390ரூ. உலக மக்களின் பிணிகளைத் […]

Read more

பாஞ்சாலி

பாஞ்சாலி, எஸ். விஜயராஜ், பூம்புகார் பதிப்பகம், விலை 425ரூ. ராமாயணமும், மகாபாரதமும், இந்த நாட்டில் இந்து பெருமக்களால் போற்றப்படுகின்ற பெருங்காப்பியமாகும். இந்து மத சம்பிரதாயங்கள், சடங்குகள், சாஸ்திரங்கள், கற்பு நெறி, நடை உடை பாவனைகள் அனைத்தும் இந்த இரு இதிகாசங்களில் இருந்து பிறந்தவையாகவே கருதப்படுகிறது. அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு உறுதிப்பொருட்களையும் தரவல்லது மகாபாரதம். மகாபாரத கதாபாத்திரங்களாகிய துரியோதனன், கர்ணன், சகுனி ஆகியோரை தனித்தனி பாத்திரங்களாகப் பிரித்தெடுத்து ஏற்கனவே நூலாக்கித் தந்தவர் எழுத்தாளர் எஸ். விஜயராஜ். அவர் இப்போது பாஞ்சாலியின் வரலாற்றை […]

Read more

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் திரை இசைப் பாடல்கள்

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் திரை இசைப் பாடல்கள், கே. ஜீவபாரதி, மேன்மை வெளியீடு, விலை 150ரூ. தமிழ் திரைப்பட பாடல் ஆசிரியர்களில் ‘மக்கள் கவிஞர்’ பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்திற்கு தனித்த இடம் உண்டு. 24 வயதில் பாடல் எழுதத் தொடங்கிய அவர் 29 வயதில் மரணத்தைத் தழுவினார். 5 ஆண்டு காலத்தில் 57 திரைப்படங்களுக்கு சுமார் 201 பாடல்களை எழுதியுள்ளார். காதல் பாடல்களில் கண்ணியத்தையும், பக்திப் பாடல்களில் பகுத்தறிவையும், சமூகப் பாடல்களில் பொதுவுடைமை கருத்துக்களையும் புகுத்தியவர். ‘சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா’, ‘தூங்காதே […]

Read more

தொல்காப்பியக் கலைச்சொல் விளக்கம்

தொல்காப்பியக் கலைச்சொல் விளக்கம், முனைவர் இரா. இளங்குமரனார், தமிழ்ப் பேராயம், திருராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம், விலை 200ரூ. தொல்காப்பியம், தமிழில் கிடைத்துள்ள மிகவும் தொன்மையான இலக்கண நூலாகும். தமிழ் அமைப்பையும், பண்டைத் தமிழ் மக்களின் வாழ்வியல் சிறப்புகளையும் வெளிப்படுத்தும் பெருமையுடைய நூலாகும். இத்தகைய சிறப்பு பெற்ற தொல்காப்பியத்தைத் தமிழ் மக்கள் படித்து நன்கு புரிந்துகொள்ளும் வகையில் அதில் உள்ள கலைச்சொற்களுக்கு முனைவர் இரா.இளங்குமரனார் அழகிய முறையில் பொருள் விளக்கம் அளித்துள்ளார். உண்மை என்ற சொல்லை விளக்குகையில், உள்> உண்>உண்மை. இதற்கு “உள்ளத்தே உள்ளதாம் தன்மை […]

Read more

பாரதியாரின் புதுச்சேரித் தோழர்கள்

பாரதியாரின் புதுச்சேரித் தோழர்கள், வில்லியனூர் தியாகி முத்து. சுந்தரமூர்த்தி, விலை 200ரூ. பாரதியார், அரவிந்தர், வ.வே.சு. அய்யர், நாகசாமி ஆகியோர் புதுச்சேரியில் வாழ்ந்த காலத்தில் (1908-1918) அவர்களுக்கு நண்பர்களாக இருந்தவர்கள் பற்றி விவரிக்கிறது, “இவர்களின் புதுச்சேரி தோழர்கள்” என்ற இந்த புத்தகம். பாரதிக்கும், மற்றவர்களுக்கும் நண்பர்களாக இருந்தவர்கள் பொதுமக்களிடம் புகழ் பெற்றவர்களாக இல்லாமல் இருக்கலாம். ஆயினும் சரித்திரத்தில் இடம் பெற்றவர்கள். தேசத்தொண்டு செய்தவர்கள், அவர்களைப்பற்றி இளைய தலைமுறையினர் அறிய இந்நூல் உதவும்.  சுதந்திரப் போராட்டம் உச்சத்தில் நடந்து கொண்டிருந்த காலக்கட்டத்தில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளையும் […]

Read more
1 2 3 4 9