மெழுகாய் கரையும் பெண்மைகள்

மெழுகாய் கரையும் பெண்மைகள், ஸ்ரீஜா வெங்கடேஷ், வானதி பதிப்பகம், பக். 288, விலை 100ரூ. ஸ்ரீஜா வெங்கடேஷின் நாவல்கள் பெரும்பாலும், சமூகம் மற்றும் குடும்பத்தில் பெண்களின் நிலை, அவர்களின் உணர்வுகள், கோபம், தியாகம் இவற்றை மையமாக வைத்தே புனையப்படுகின்றன. மெழுகாய் கரையும் பெண்கள் என்ற இந்த நாவலில், பிறந்த வீட்டுப் பாசத்தால் கணவனையும், வயிற்றில் வளரும் குழந்தையையும்கூட, பலி கொடுக்கத் துணிகிறாள், கதாநாயகி. இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் மற்றொரு நாவலான உயிரே உருகாதே. ஒரு மகளாக, மனைவியாக, தாயாக என்று எல்லா நிலைகளிலும், […]

Read more

அந்நிய நிலத்தின் பெண்

அந்நிய நிலத்தின் பெண், மனுஷ்யபுத்திரன், உயிர்மை பதிப்பகம், சென்னை. சர்ச்சையை ஏற்படுத்தும் அந்நிய நிலத்தின் பெண் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் எழுதி, உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ள, அந்நிய நிலத்தின் பெண் என்ற கவிதை நூலைப் படித்தேன். இந்த நூல் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தும் என்றே நினைக்கிறேன். நம் சமூகத்தின் ஆண், பெண் விருப்பங்கள், அவர்களின் உறவுகள் குறித்து, இக்கவிதை நூல் விவரிக்கிறது. அன்றாட வாழ்வீல் நாம் பயன்படுத்திய பயன்படுத்தும் பல சொற்களை கவிதையில் பயன்படுத்தி உள்ளார் ஆசிரியர். இந்த சொற்களை பயன்படுத்தக்கூடாத கெட்ட சொற்கள் என, […]

Read more

மேனேஜரியல் எபிலிட்டி ஆப் ஸ்ரீ ராமானுஜா இன்ரெட்ரோஸ்பெக்ஷன்

மேனேஜரியல் எபிலிட்டி ஆப் ஸ்ரீ ராமானுஜா இன்ரெட்ரோஸ்பெக்ஷன், ஸ்ரீ வைஷ்ணவஸ்ரீ கிருஷ்ணமாச்சாரி, ஸ்ரீ வைஷ்ணவஸ்ரீ வெளியிடு, திருச்சி, பக். 257, விலை 300ரூ. காவிரி வெள்ளத்தை தடுக்க பொறியியலாளர்களை நியமித்த ராமானுஜர் கி.பி. 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த ராமானுஜர், வைணவ நெறியின் கலங்கரை விளக்காக திகழ்ந்தவர். சுவாமி விவேகானந்தர், ராமானுஜரை, சேவைக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்த மகான் என போற்றுகிறார். அரிய நெறிகளை பரப்ப, ராமானுஜர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் ஏராளம். இஸ்லாமிய ஆட்சி, இந்தியாவில் வந்து காலூன்றிய காலகட்டத்தில் பாமர மக்கள் மதமாற்றத்தில் சிக்கி விடாமல் […]

Read more

ஸ்ரீ பூண்டி மகான் நிகழ்த்திய அற்புதங்கள்

ஸ்ரீ பூண்டி மகான் நிகழ்த்திய அற்புதங்கள், புலவர் அனு. வெண்ணிலா, திவ்யா பதிப்பகம், திருவண்ணாமலை, பக். 302, விலை 220ரூ. மனதை வெட்ட வெளியாக்கு நல்லதெல்லாம் நாடி வரும். தேவைகளைத் தேடி ஓடும் மனிதர்களுக்கு, வியப்பாகத் தோன்றுவதை நிகழ்த்திக் காட்டி, அவர்களால் வணங்கப்பெறும் சித்தர்கள், காலந்தோறும் அவதரித்துக் கொண்டே இருப்பர் என்று சொல்லப்படுவதுண்டு. அவ்வாறான சித்தர்களின் வரிசையில் பூண்டிச்சித்தரின் வாழ்க்கையை பூண்டி மகான் நிகழ்த்திய அற்புதங்கள் என, வாழ்வியல் சித்திரமாக படைத்துள்ளார் நூலாசிரியர் அனு வெண்ணிலா. முதல் பாகத்தில் 52 தலைப்புகளிலும், இரண்டாம் பாகத்தில் […]

Read more

பெயரில்லாத கதை

பெயரில்லாத கதை, ஆ. மாதவன், தொகுப்பாசிரியர் நெல்லை சு. முத்து, திருவரசு புத்தக நிலையம், சென்னை, பக். 256, விலை 160ரூ. முப்பது சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. கண்டெடுத்த கதை என்ற குறிப்புடன் வெளியாகியுள்ள அழுகை சிறுகதை. கூர்மையான உத்தியுடன் கூடிய படைப்பு.  இக்கதையின் நாயகி அடிக்கடி அழுது உணர்ச்சி வசப்படுகிறாள். ஒரு மயக்கமான சூழலில் அவள் தன் வசமிழக்கிறாள். தன் பலவீனம் பயன்படுத்தப்பட்டதை அவள் உணர்ந்தாளா என்பது வாசகர்களின் யூகத்துக்கு விடப்பட்டுள்ளது. வாழ்வு சார்ந்த இருண்மை ஆழமாகப் பதிவு செய்யப்பட்டுள்ள படைப்பு. உரையாடல் […]

Read more

பிராத்தனையின் மகிமை பற்றி மகாத்மா காந்தி

பிராத்தனையின் மகிமை பற்றி மகாத்மா காந்தி, தமிழில் லா.சு.ரங்கராஜன், அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, பக். 224, விலை 100ரூ. இந்திய அரசியல் ஆன்மிகமும் தார்மீகமும் இழைந்ததாகச் செயல்பட வேண்டும் என்று விரும்பிய மகாத்மா காந்தி, தனது ஆசிரமங்களின் கூட்டுப் பிரார்த்தனையின்போதுபாடுவதற்காகத் தேர்ந்தெடுத்த 253 துதிப்பாடல்களின் தொகுப்பே இந்நூல். உபநிடதம், துவாதச பஞ்சரிகம், துளசிதாசர், துகாராம், ஏக்நாத், சூர்தாஸ், கபீர், மீராபாய், ஹரிதாஸ், குருநானக், இஸ்லாமிய சூஃபி பாடல்கள் மற்றும் பெயர் தெரிந்த பெயர் தெரியாத பக்திப் பாடல்கள் (வினோபா பாவே கூட ஒரு பாடல் […]

Read more

உறங்கும் மனசாட்சி

உறங்கும் மனசாட்சி, ஆ. தமிழ்மணி, மந்திரச்சிமிழ் பதிப்பகம், சென்னை, பக். 246, விலை 140ரூ. தினமணி, ஜனசக்தி நாளிதழ்கள், புதிய பார்வை உள்ளிட்ட பல இதழ்களில் வெளிவந்த 52 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். சமகாலப் பிரச்னைகளைப் பற்றி இந்நூலில் உள்ள அனைத்துக் கட்டுரைகளும் அலசி ஆராய்கின்றன. நீர்வளத்தை எப்படிப் பாதுகாப்பது? கிரிக்கெட் விளையாட்டு அணியைப் பெரிய நிறுவனங்கள் விலைக்கு வாங்குவது சரியா? வியாபாரமயமான கல்விமுறையை மாற்றி அமைப்பது எப்படி? எனப் பல்வேறு சமகாலப் பிரச்னைகளுக்குத் தெளிவான தீர்வுகளை நூலாசிரியர் முன் வைக்கிறார். ஈராக் பிரச்னை […]

Read more

பயத்திலிருந்து விடுதலை

பயத்திலிருந்து விடுதலை, ஜே.கிருஷ்ணமூர்த்தி, தமிழில் எஸ். ராஜேஸ்வரி, நர்மதா பதிப்பகம், சென்னை, பக். 208, விலை 120ரூ. தத்துவஞானி ஜே. கிருஷ்ணமூர்த்தி பயம் குறித்தும் அதனை எதிர்கொள்ள வேண்டிய விதம் குறித்தும் பல இடங்களில் பேசியதிலிருந்தும், எழுதியதிலிருந்தும் தொகுக்கப்பட்ட கட்டுரைகள் அடங்கிய நூல். நம் எல்லோருக்குமே பயம் உள்ளது. வேலை போய்விடுமோ என்ற பயம், பணம் இல்லாமல் போய்விடுமோ என்ற பயம், மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்ற பயம், வெற்றி பெற மாட்டோமோ என்கிற பயம், நோய்கள் குறித்த பயம், மரணம் […]

Read more

வீரசாவர்க்கர்

வீரசாவர்க்கர், ஷிவ்குமார் கோயல், தமிழில் பி.ஆர். ராஜாராம், விஜயபாரதம் பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-218-1.html ஒரு போராளியின் கதை பாரதம் சுதந்திரம் பெறுவதற்காகப் பலரும் பலவிதங்களில் போராடினார்கள். அவர்களில் முக்கியமானவர்களுள் ஒருவர் விநாயக தாமோதர சாவர்க்கர் என்னும் வீர சாவர்க்கர். மிக அதிகமான தண்டனையை ஐம்பது ஆண்டுகள் கடுங்காவல் பெற்றவர் இவர். கொள்கையளவில் மகாத்மாவுடன் ஒத்துப்போக முடியாதவரான சாவர்க்கர் அவருடைய கொள்கைகளைத் தாக்கி, மராட்டி மொழியில் காந்தி கட்பட் என்று ஒரு நூலை எழுதினார். […]

Read more

என் பயணம்

என் பயணம், அசோக மித்திரன், நற்றிணை பதிப்பகம், சென்னை, விலை 140ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-343-1.html அசோகமித்திரனுக்கு அறிமுகம் தேவை இல்லை. செறிவான உள்ளடக்கத்தை எளிமையாகக் காட்சிப்படுத்துவதன் மூலமாகத் தனது படைப்பைக் காலங்கள் கடந்தும் உயிரோட்டமாக வைத்திருக்கும் ஒரு சில எழுத்தாளர்களில் அசோகமித்திரனும் ஒருவர். அதைப்பற்றி அவர் அலட்டிக்கொள்வதில்லை என்பது மற்ற எழுத்தாளர்களில் இருந்து அவரை வேறுபடுத்திக் காட்டும். மனிதர்கள் நடுவில் இருக்கிறேன். நான் எழுதும் எழுத்தை நான் புரிந்துகொள்ளும் வகையில் புரிந்துகொண்டு வாசிக்க ஒரு வாசகனாவது இருப்பான் […]

Read more
1 2 3 4 8