மாணவர்களுக்கு இந்திய விடுதலையின் கதை

மாணவர்களுக்கு இந்திய விடுதலையின் கதை, மு.அப்பாஸ் மந்திரி, நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 300ரூ. இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த வெள்ளையர்கள், கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவைக் கைப்பற்றிக்கொண்டு ஆட்சி நடத்தினர். அவர்களை விரட்டி அடித்து, இந்தியாவை மீட்க கட்டபொம்மன் போன்ற மன்னர்கள் வீரப்போர் புரிந்தனர். பின்னர் மகாத்மா காந்தி தலைமை ஏற்று, சுதந்திரப் போராட்டத்தை மக்கள் இயக்கமாக நடத்தினர். சுதந்திரப்போர் பற்றிய அனைத்து விவரங்களையும் எளிய இனிய நடையில் கதைபோல் கூறுகிறார் மு.அப்பாஸ் மந்திரி. ஏராளமான புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன. மாணவ மாணவிகள் அவசியம் […]

Read more

மனவளர்ச்சி குன்றுதல்

மனவளர்ச்சி குன்றுதல், ந. செந்தில் குமார், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 204, விலை 130ரூ. மனவளர்ச்சிக் குறைபாடு வேறு; மனநலக் குறைபாடு வேறு என்பதை ஆசிரியர் நூலின் ஆரம்பத்திலேயே விளக்கிவிடுகிறார். மனவளர்ச்சிக் குறைபாடு என்பது முழுக்க முழுக்க மூளையின் செயல்பாடுகளில் உண்டாகும் குறைபாடாகும். இந்த அடிப்படையில் மனவளர்ச்சிக் குறைபாட்டுக்கான பல்வேறு காரணங்கள் விளக்கப்பட்டுள்ளன. ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து 5 வயது வரை ஒவ்வொரு வயதிலும் என்னென்ன வளர்ச்சிப் படிநிலைகளை அடையுமோ, அவற்றை அடையாவிட்டால் அக்குழந்தை மனவளர்ச்சிக் குறைபாட்டுக்கு உள்ளாகியிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். […]

Read more

சாதகலங்காரத்தில் சித்தர் கருத்துகள்

சாதகலங்காரத்தில் சித்தர் கருத்துகள், தி. கல்பனாதேவி, இராசகுணா பதிப்பகம், சென்னை, பக். 160, விலை 130ரூ. சித்தர்கள் பற்றிய குறிப்புகள், அவர்கள் எழுதிய நூல்கள், மருத்துவ விளக்கங்கள், சமயம், உயிர்களின் பிறப்பு போன்ற பல்வேறு கருத்துக்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. சாதக அலங்காரத்தை முதன்மையாக எடுத்துக்கொண்டு அதில் மருத்துவம், மந்திரம், ஜோதிடம் என்ற பிரித்து ஆராயப்பட்டுள்ளது. ஐந்தெழுத்து மந்திரத்தைக் கொண்டு, சித்தர்கள் செய்த அஷ்டகர்மம் என்ற எட்டுவகைச் செயல்களும் விளக்கப்பட்டுள்ளன. சமய வழிபாட்டு முறைகள், புத்திரப்பேறு மற்றும் திருமணத் தடைகளுக்கு அரசமர வழிபாடு, நாகப் பிரதிஷ்டை […]

Read more

இந்திய விடுதலைப் போரில் சென்னை

இந்திய விடுதலைப் போரில் சென்னை, வி.சீ.கமலக்கண்ணன், விழிகள் பதிப்பகம், சென்னை, பக். 256, விலை 200ரூ. சென்னை நகரில் நடந்த விடுதலைப் போர் நிகழ்வுகளே நூலின் மையப் பொருளாக இருந்தாலும், சென்னை மாநகர உருவாக்கம், சென்னையில் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சி, தேசிய இயக்கத்தின் தோற்றம், வளர்ச்சி என நிறைய விஷயங்களை இந்நூல் பேசுகிறது. விடுதலைப் போராட்டத்தின் வீச்சு சென்னையில் வாழ்ந்த எல்லாத் தரப்பு மக்களையும் எந்த அளவுக்கு ஈர்த்தது என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது. மாணவர்கள் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டதால் வந்தேமாதரம் என்று […]

Read more

அணு அதிசயம் அற்புதம் அபாயம்

அணு அதிசயம் அற்புதம் அபாயம், என். ராமதுரை, கிழக்கு பதிப்பகம், சென்னை, பக். 168, விலை 100ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/978-81-8493-143-3.html குழந்தைகளுக்கும் புரியும் விதத்தில் அணு என்றால் என்ன? புரோட்டான், எலக்ட்ரான், நியுட்ரான் என்றால் என்ன? ஐசோடோப் என்றால் என்ன? கதிர்வீச்சு என்றால் என்ன? அணு மின்கலங்கள் நம்பகமானவையா? அணுப்பிளப்புக்கும் அணுச்சேர்க்கைக்கும் என்ன வித்தியாசம்? என அணுவைச் சுற்றிச் சுற்றி அனைத்து விஷயங்களையும் கூறும் நூல். சித்தர்களின் இரசவாதம் மூலம் ஒரு பொருளைத் தங்கமாக மாற்ற முடியாது. […]

Read more

காமராஜ்

காமராஜ், டி.எஸ். சொக்கலிங்கம், சந்தியா பதிப்பகம், சென்னை, பக். 152, விலை 110ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-366-2.html காமராஜ் டி.எஸ். சொக்கலிங்கம் இருவருமே இருதுறை ஆளுமைகள். இருவரும் நெருங்கிப் பழகியவர்கள். இருப்பினும்கூட, புத்தகத்தின் ஒரேயொரு இடத்தில், “நானும் சென்றிருந்தேன்” என்று கூறுவதைத் தவிர, வேறு எந்த இடத்திலும் தன்னைப் பற்றிப் பேசாததே டி.எஸ்.சொக்கலிங்கத்தின் பெருமை. தமிழ்நாட்டில் ஏன் நீதிக்கட்சி உருவானது என்பதையும், அரசியலில் பிராமணர் அல்லாதார் தலைமேயேற்கும் நிலையையும் முதல் அத்தியாயத்தில் விவரித்து, அதன் பிறகு காமராஜர் வரலாற்றை […]

Read more

ஆன்மாவின் பயணங்கள்

ஆன்மாவின் பயணங்கள், ப. முத்துக்குமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், பக். 280, விலை 210ரூ. நம் உடலை இயக்கும் ஆன்மா குறித்து, இந்த நூல் தெளிவாகக் கூறுகிறது. இந்த நூலில் கூறப்பட்டுள்ள சில பயிற்சிகள், தனக்கும் கடினமாக இன்று வரை இருந்து வருவதாகவும், வாசகர்கள் சலிப்படைய வேண்டாம் என்றும் ஆசிரியர் தெளிவுபடுத்துகிறார் (பக். 19). ஆன்மா உடலை விட்டு நீங்கியபின், பல்வேறு உணர்வு நிலைக்கு செல்கிறது, தலைகீழாக எண்ணுவது ஒரு சிறந்த ஆழ்நிலை ஏற்படுத்தும் உத்தி, நெற்றியில் தட்டுவதன் மூலம், மனோவசிய நிலை மேலும் ஆழமாகி, […]

Read more

100 சிறந்த சிறுகதைகள்

100 சிறந்த சிறுகதைகள், தொகுப்பாசிரியர் எஸ். ராமகிருஷ்ணன், டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை, பக். 1092, விலை 650ரூ. எல்லாருக்கும் பிடித்த சிறுகதைகள் இவை எல்லாம் எனக்கு பிடித்த தமிழ் சிறுகதைகள். இந்த பட்டியலுக்கு வெளியிலும் சிறந்த கதைகள் உண்டு என்ற விளக்கத்தோடு, ஒரு நூறு சிறுகதைகளை எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் தொகுத்திருக்கிறார். யார் எங்கே பட்டியல் போட்டாலும் இடம்பெறும், புதுமைப்பித்தனின் ‘கடவுளும் கந்தசாமி பிள்ளையும்’, மவுனியின் ‘அழியாச் சுடர்’ போன்றவற்றோடு, எஸ்.ரா., ஐந்து முக்கிய வரையறைகளை வைத்து தேர்ந்தெடுத்த மற்ற கதைகளும், இடம்பெற்ற […]

Read more

காலனியம் சமயம் பரவர் சில வரலாற்று குறிப்புகள்

காலனியம் சமயம் பரவர் சில வரலாற்று குறிப்புகள், ஜெ.எச். செல்வராஜ், வெய்தல் வெளியீடு, நாகர்கோவில், விலை 85ரு. மகாகவி பாரதியின் சமகாலப் பண்டிதரும், இதழாளருமான மணப்பாடு ஜே.ஆர். மிராந்தாவின் பேரன், செல்வராஜ் மிராந்தா, 80. அவர் தற்போது தூத்துக்குடியில் வாழ்ந்து வருகிறார். கடந்த 1900ம் ஆண்டில் இருந்து, 1950ம் ஆண்டு வரை பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்த காலகட்டத்தில், தூத்துக்குடியில் பரவர்கள் வாழ்க்கையின் முதன்மையான சமூகவியல் பொருளியல் கூறுகளை இந்த நூலில் ஆவணப்படுத்தியுள்ளார். சுவையான பாரதி ஆய்வாளர்கள் கூட அறிந்திராத ஒரு நிகழ்வு பற்றிய […]

Read more

112 ரகசியங்கள்

112 ரகசியங்கள், ஓஷோ, ஓஷோ இன்டர்நேஷனல் நியூயார்க் பதிப்பகம். சோர்வை நீக்கி உற்சாகம் தரும் 112 ரகசியங்கள் ஓஷோவின் 112 ரகசியங்கள் என்ற ஆங்கில நூலை சமீபத்தில் படித்தேன். ஓஷோ இன்டர்நேஷனல் நியூயார்க் பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது. தியான வழிமுறைகளை, இந்த நூல் சொல்கிறது. சாதாரண மனிதனுக்கு, அவன் மொழியில் புரியும் வகையில், மிகுந்த ஆளுமையுடன் ஓஷோ எழுதியுள்ளார். அன்றாட வாழ்வில் ஏற்படும் சிறுசிறு மன உளைச்சல், உடல் வலி, சோர்வு ஆகியவற்றுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், எவ்வித வழிகாட்டுதலும் இல்லாமல், ஓஷோ […]

Read more
1 99 100 101 102 103 336