சைவமும் தமிழும்

சைவமும் தமிழும், முனைவர் ரா. செல்வகணபதி, ஓம் நமச்சிவாய பிராத்தனைக் கோபுரம், பள்ளிக்கரணை, சென்னை 100, விலை 60ரூ. சைவ சமயத்தின் உயர்வையும், தமிழ் மொழியின் சிறப்பையும் நன்கு எடுத்துக்காட்டும் வகையிலும், அதே நேரம் மற்ற சமயங்களிலும் மொழிகளிலும் காணப்படாத அளவிற்கு, பல்வகை சிறப்புகளை சைவ சமயமும், தமிழ் மொழியும் பெற்றிருப்பதையும், அந்த சிறப்புகளின் அருமையையும், முனைவர் ரா.செல்வகணபதி எளிய, இனிய நடையில் உருவாக்கித் தந்திருக்கிறார். இதில் எக்காலத்திலும் பொலிவு குறையாத தமிழ் மொழியின் சிறப்புகளையும் என்றும் உயர்வளிக்கும் சைவ சமயத்தின் அளப்பிலா உயர்வுகளையும், […]

Read more

புனித பூமியில் மனித தெய்வங்கள்

புனித பூமியில் மனித தெய்வங்கள், பதஞ்சலி, விடகன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, பக். 152, விலை 90ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-832-8.html நல்லது, கெட்டது எதுவென சரியாகத் தெரியாமல் தடுமாறி வாழும் மனிதகுலத்தார், நன்னெறியில் செல்ல, இறைவனே மனித வடிவில் தோன்றி, தான் வாழும் முறையாலும், உபதேசங்களாலும் நெறிப்படுத்தினான் என்று பெரியோர்கள் கூறுவர். இறை தத்துவத்தையும், ஆன்மிகத்தின் அவசியத்தையும், பக்தி இலக்கியங்கள் வாயிலாகவும், பாடல்கள் மூலமாகவும் பரப்பிய பல மகான்களின் வாழ்க்கையே நமக்கு சிறந்த வழிகாட்டியாகும். […]

Read more

துணை வேந்தர் சொல்லும் செயலும்

துணை வேந்தர் சொல்லும் செயலும், மு. பொன்னவைக்கோ, தமிழ்ப்பேராயம், எஸ்.ஆர்.எம், பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம் 603203. பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் துணைவேந்தராகப் பணிபுரிந்துள்ள பொன்னவைக்கோ, தமிழறிஞர்களுடன் நெருக்கமாக பழகும் வாய்ப்பைப் பெற்ற பொறியாளர். தமிழ் மொழியைக் கடந்து, பிறமொழிகள் மீது பற்றும் பாசமும் உள்ள ஒரு பரந்துப்பட்ட, விசாலமான பார்வையாளர். பெரியாரின் கொள்கைகளை வரவேற்கும் இவர், ஆன்மிகத்திலும் நாட்டம் உள்ளவராக இருக்கிறார். சொந்த வாழ்க்கை பற்றி சில தகவல்கள், பணிபுரிந்தபோது பெற்ற அனுபவங்கள், செய்து முடித்த சில சாதனைகள், சில சொற்பொழிவுகள் என […]

Read more

ஏமாறும் கலை

ஏமாறும் கலை, யுவன் சந்திரசேகர், காலச்சுவடு, 669, கே.பி.சாலை, நாகர்கோவில் 629001, பக். 240, விலை-190ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-797-5.html நவீன இலக்கியத்தில் புதிய கதை சொல்லியாக இருக்கிறார் யுவன் சந்திர சேகர். சும்மா பம்மாத்துப் பண்ணாமல் சக பயணி போன்றே நம்முடன் பயணிக்கிறது இச்சிறுகதை தொகுப்பு. மொத்தம் 12 சிறுகதைகள். கதை, கதைகளுக்குள் கதை, அதில் மற்றொரு கதை என்று பல படிம வெரைட்டிகளைத் தந்திருக்கிறார். சுவையான வாசிப்பனுபவம் கிடைக்கிறது. சிறுகதைத் தொகுப்பு என்றாலும் ஒவ்வொரு கதையும் […]

Read more

மெழுகுவர்த்திகள்

மெழுகுவர்த்திகள், எ.எஸ்.யைர், பிரேமா பதிப்பகம், 58/1, ஆழ்வார்ப்பேட்டை தெரு, சென்னை 18, விலை 40ரூ. தன்னை அழித்துக்கொண்டு, தான் உருகி உலகத்திற்கு ஒளி வெள்ளத்தை தருவது மெழுகுவர்த்தி. அதன் தியாகத்திற்கு இணையாய் வாழ்ந்து, இந்த சமுதாயத்தின் மடமை இருளை விரட்ட தங்கள் தியாகச் செயல்களால் புது வெளிச்சம் பாய்ச்சியவர்கள் பற்றிய குறிப்புகளே மெழுகுவர்த்திகள் எனும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன. சில தியாக மெழுகுவர்த்திகளான காந்தி, நேரு, காமராஜர், தெரசா, விவேகானந்தர், இந்திரா, ராஜிவ், ராதாகிருஷ்ணன் ஆகியோரின் வாழ்வியல் சம்பவங்கள் சுவாரஸ்யம் ததும்ப தொகுக்கப்பட்டுள்ளன. நன்றி: தினமலர், […]

Read more

என்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்

என்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும், அம்மன் சத்தியநாதன், அருள்மிகு அம்மன் பதிப்பகம், சென்னை 5, பக். 184, விலை 150ரூ. ஆண்டாள் அளித்த வாசகம் எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் என்பது. ஆன்மரீதியாக இறைவனுடன் கட்டுண்ட அடியார்களுக்கு நேரும் சிலிர்க்கும் அனுபவங்களை உணர்பவர்கள் இப்படியே கூறுவர். இநத் நூலில் அப்படிப்பட்ட சிலிர்க்கும் ஆன்ம அனுபவக்கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. ஆன்மிக மாத இதழில் எழுதப்பட்ட 20 கட்டுரைகளின் தொகுப்பு நூலான இதில், ஆண்டாளைப் பற்றிய கட்டுரையுடன் துவங்குகிறது. குரு ராகவேந்திரர் வாழ்க்கை, திருக்கச்சி நம்பிகளும் வரதராஜப் பெருமாளும், ஸ்ரீகிருஷ்ணர், ஜாம்பவானின் […]

Read more

சீர்காழி மூவர்

சீர்காழி மூவர், டாக்டர் சுதா சேஷய்யன், எல்கேஎம் பப்ளிகேஷன், விலை 120ரூ. அற்புதங்களின் வரலாறு அற்புதங்களை நாம் வரலாறாக ஏற்கத் தயங்குகிறோம். பல மகான்களின் வாழ்க்கை நிகழ்வுகளை அவை அற்புதங்களாக இருப்பதாலேயே நமது தர்க்கவியல் பார்வைக்கு உட்படுத்தி செவி வழிச் செய்திகள் என்று முத்திரை குத்துகிறோம் ஆனால் அற்புதங்கள் என்னவோ உலகெங்கும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அதுவும் நமது பாராத புண்ணிய பூமியில் அள்ளக் குறையாத வகையில் நிறைந்துள்ளன. அத்தகையதொரு அற்புதந்தான் முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை, அருணாசல கவிராயர் ஆகிய சீர்காழி மூவரின் தோற்றமும் சங்கீதப் […]

Read more

உயிரைத் தேடி

உயிரைத் தேடி, வ. தென்கோவன், அருள்மிகு சீதளாதேவி அம்ன் பதிப்பகம், 41, சீதள மகால், டாக்டர் ராதாகிருண்ணன் சாலை, அம்மையார் நகர், கீழகாசாக்குடி, காரைக்கால், பக். 168, விலை 125ரூ. சைவ சமயத்தின் சித்தாந்த சாத்திர நூல்கள் பதினான்கு. அவற்றுள் முதன்மையானது மெய் கண்டார் இயற்றிய சிவஞானபோதம். திருவியலூர் உய்ய வந்த தேவர் இயற்றிய திருவுந்தியாரும் திருக்கடவூர் உய்ய வந்த தேவர் இயற்றிய திருக்களிற்றுப்படியாரும் காலத்தால் சிவஞான போதத்திற்கு முற்பட்டவையாயினும் சித்தாந்த சாத்திர நூல்களில் சிவஞான போதமே முதல் நூலாக விளங்குகிறது. அத்தகைய சிவ […]

Read more

பகவத் கீதை-விளக்க உரை சுவாமி ராமா

பகவத் கீதை-விளக்க உரை சுவாமி ராமா, கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை 17, பக். 560, விலை 300ரூ. பகவத் கீதையை ஏதோ மதம் சார்ந்த ஒரு கோட்பாடு அல்லது கொள்கை என்று பார்க்கக்கூடாது. அது மனித வாழ்வின் அகச் செயல்பாடுகளை அலசி ஆராய்வதாகும். உளவியலின் ஊற்றுக்கண் பகவத்கீதை என்பதே சரி. அந்த உளவியல் கோட்பாடுகளை விளக்கி அதை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதே இந்த உரையின் நோக்கம். உளவியல் கோட்பாடுகளை அவற்றிலிருந்து தனியே பிரித்து எடுத்து நடைமுறை வாழ்வில் அவை எவ்வாறு […]

Read more

சாந்திவனத்து வேர்கள்

சாந்திவனத்து வேர்கள், ஆ. திருநாவுக்கரசு, பாவை பப்ளிகேஷன்ஸ், பக். 182, விலை 100ரூ. கிராமத்துக்கு அடிமைச் சேவகமும், சுடுகாட்டுப் பணிகளும் செய்து வாழ்கிற வெட்டியான் சங்கிலியின் குடும்பம், சாதீய ஒடுக்கு முறையால் சிதைக்கப்படுகிற அவலத்தை, மிக யதார்த்தமாக சித்தரிக்கிறார் ஆசிரியர். அவர்களோடு தங்கியிருந்து, தொழிலில், அவர்கள் அனுபவிக்கும் சிரமங்களை நேரடியாகக் கண்டு, கேட்டு, இந்த நூலை உருவாக்கியிருக்கிறார். உள்ளத்தை உருக்கும் நாவலைப் படிக்கும்போது, படிப்பவர் இதயம் கணக்கவே செய்யும். -சிவா. நன்றி; தினமலர், 23/6/2013.   —-   அகம் பொதிந்தவர்கள், கர்ணன், மெய்யப்பன் […]

Read more
1 112 113 114 115 116 128