நானும் நாற்பது திரைப்பட இயக்குநர்களும்

நானும் நாற்பது திரைப்பட இயக்குநர்களும், மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 108, விலை 100ரூ. ஆயிரம் பிறைகண்ட ஆரூர்தாஸ், ஆயிரம் படங்களுக்கு வசனம் எழுதி சாதனை படைத்தவர். மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள், பட அதிபர்களுடன் நெருங்கிப் பழகியவர். திரை உலகம் பற்றிய விவரங்கள் இவர் விரல் நுனியில் இருக்கும். ஏ.பீம்சிங், பி. மாதவன், எல்.வி. பிரசாத், தாதாமிராசி, புல்லையா, சி.ஹெச். நாராயண மூர்த்தி, திருலோகசந்தர், கிருஷ்ணன் பஞ்சு, கே. சங்கர், ஏ.எஸ்.ஏ. சாமி, […]

Read more

தமிழ் சினிமாவின் பரிமாணங்கள்

தமிழ் சினிமாவின் பரிமாணங்கள், விட்டல்ராவ், நிழல், 31/48, இராணி அண்ணாநகர், கே.கே. நகர், சென்னை 78, பக். 230, விலை 100ரூ. விட்டல்ராவ் திரைத்துறையைச் சேர்ந்தவரோ, திரையியல் ஆய்வாளரோ அல்ல. தொலைபேசித் துறையில் பணிபுரிந்தவர். தன்னுடைய அன்றாடங்களிலிருந்தே இந்நூலை அனுபவித்து தொகுத்திருக்கிறார். சிறு வயது முதலே படங்களை நாட்குறிப்புகளாக எழுதிவந்திருக்கிறார். 1935-1950 வரை கிட்டத்தட்ட எல்லாப் படங்களையும் பார்த்து, பரந்த வாசிப்பனுபவத்தோடு சேர்ந்து இந்தப் புத்தகத்தில் விட்டல்ராவ் பதிவு செய்திருக்கிறார். நடிகர்களோடு நின்றுவிடாமல் தொழில்நுட்பக் கலைஞர்களின் விவரங்களையும்கூட பதிவு செய்திருக்கிறார். படம் பார்க்கும்போதே திரையரங்கிலேயே […]

Read more

காந்தியைக் கடந்த காந்தியம்

காந்தியைக் கடந்த காந்தியம், ஒரு பின் நவீனத்துவ வாசிப்பு, பிரேம், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில் 1, பக். 288, விலை 240ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-925-9.html சர்வதேச சமூகத் தனது நீண்ட, நெடிய பயணத்தில் எதிர்கொண்ட சவால்கள், தற்போது சந்தித்து வரும் அரசியல், பொருளாதார, சமூகப் பிரச்னைகளை ஆழமாக அலசி ஆராய்ந்துள்ள நூலாசிரியர், இந்தச் சிக்கல்களுக்கெல்லாம் தீர்வு காண அறிஞர்கள் இதுவரை வகுத்தளித்துள்ள கோட்பாடுகளும், கொள்கைகளும் போதுமானவையாக இல்லை என்பதைத் துணிவுடன் சுட்டிக்காட்டியுள்ளார். காந்தியைப் பற்றியும், காந்தியத்தைப் […]

Read more

கனவுகள்

கனவுகள் (ஒரிய மொழி சிறுகதைகள்), சந்திரசேகர் ராத்,ரா. குமரவேலன், சாகித்யஅகடமி, 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, பக். 400, விலை 190ரூ. பேராசிரியர் சந்திரசேகர் ராத், ஒரிய மொழி எழுத்தாளர்களில் மிகச் சிறந்த ஒருவராகக் கருதப்படுபவர். அவர் ஒரு நாவலாசிரியரும், நல்ல கவிஞரும் கூட. அவர் எபதிய நூற்றுக்கணக்கான சிறுகதைகளில் மிகச் சிறந்ததாகக் கருதப்படும் 25 சிறுகதைகளை மொழிபெயர்த்து தொகுத்திருக்கின்றனர். இவற்றில் சாமூவேல் பாதிரியாரின் கதை, உள்ளத்தை உருக்குவதாய் இருக்கிறது. அனாதை ஆசிரமத்தை நிர்வகிக்க அவர் படும்பாடு, தியாகம் ஆகியவை அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது. […]

Read more

குத்தகை ஒப்பந்தம் 999

குத்தகை ஒப்பந்தம் 999, ஜெ. ஜாக்குலின் மேரிராஜ், ஆதாம் ஏவாள் பதிப்பகம், நாகர்கோவில் 1, விலை 100ரூ. அணை எழுந்ததும், மடிந்து வாடிய மனித சமூகமும் எழுந்தது என்பதற்கு ஏற்ப உருவான முல்லைப் பெரியாறு அணையை பலவீனமாக உள்ளது என கூறி அதை உடைத்து புதிய அணை கட்டும் கருத்தை கேரள மக்கள் மனதில் ஏற்படுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான சூழ்ச்சிகள் மற்றும் காரணிகளை ஆதாரபூர்வமாக விளக்கி கூறும் நூல். அணையை கட்டுவதற்கு பொன்னிகுயிக் மேற்கொண்ட முயற்சிகள் வியக்க வைக்கின்றன.   —- […]

Read more

சங்கர காவியம்

சங்கர காவியம், பூஜ்ய ஸ்ரீ காஞ்சி மகானின் புனித வாழ்க்கை வரலாறு, டால்மியாபுரம் கணேசன், அகஸ்தியர் பப்ளிகேஷன்ஸ். காஞ்சி மாமுனிவர் வாழ்வை, நடந்த சம்பவங்களை, அதில் வந்த நிஜ பாத்திரங்களை நாடக வடிவில் உலாவ விட்டிருக்கிறார் ஆசிரியர். இவைகளைப் படித்தால், எந்த அளவு அவர் பணத்தின் மீது சிறிதும் ஆசையின்றி, சிறந்த ஏழை பக்தர்களுக்கு உதவ காரணமாக இருந்தார் என்பதும், அவர் நிகழ்த்திய அருள் சம்பவங்களும் விரிவாக தரப்பட்டிருக்கின்றன. காஞ்சி முனிவரை நேசிக்கும் அனைவரும் இந்த நூலை விரும்பி ரசிப்பர்.   —-   […]

Read more

சேரர் கோட்டை பாகம் 1-2

சேரர் கோட்டை பாகம் 1-2, கோகுல் சேஷாத்ரி, கமலம் புக்ஸ், பாகம் 1, பாகம் 2, பக். 555, பக். 608, விலை 375ரூ, விலை 400ரூ. சோழ நாட்டின் அரியணை ஏறிய நாள் முதல், தன் அண்ணன் ஆதித்த கரிகாலனை நயவஞ்சக சூழ்ச்சியால் படுகொலை செய்த ரவிதாஸன் கும்பலைப் பழி தீர்க்கத் துடிக்கிறான் ராஜராஜ சோழன். ரவிதாஸன் கும்பலுக்குப் பயிற்சி அளித்துத் திட்டம் தீட்டித் தந்த காந்தளூர்ச் சாலைப் பயிற்சி முகாமைத் தாக்கி, அடியோடு அழித்து அதைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரப் […]

Read more

பாம்பின் கண் (தமிழ்சினிமா ஓர் அறிமுகம்)

பாம்பின் கண், (தமிழ்சினிமா ஓர் அறிமுகம்), கிழக்குப் பதிப்பகம், 177/130, அம்மன் பில்டிங், லாயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 190ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-701-5.html திரைப்படத்துறை பற்றி ஆராய்ச்சிகள் செய்து புகழ் பெற்ற க. தியோடர் பாஸ்கரன், தமிழ் சினிமா வரலாற பற்றிய இந்த நூலை எழுதியுள்ளார். இந்நூல் முதலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு, பிறகு தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கில நூல் ஜனாதிபதி பரிசைப் பெற்றது. தமிழின் முதல் பேசும் படமான காளிதாஸ் (1931) […]

Read more

கவியரசு கண்ணதாசனின் சிங்காரி பார்த்த சென்னை

சிங்காரி பார்த்த சென்னை, கவியரசு கண்ணதாசன், கண்ணதாசன் பதிப்பகம், தி.நகர், சென்னை 600017, பக். 184, விலை 80ரூ. சினிமாவில் நடிக்க வந்து மானத்தோடு ஊர்திரும்பும் ஒரு கிராமத்து பெண் ணமையமாக கொண்ட நூல். 32 ஆண்டுகளுக்கு பின் மறுபதிப்பாக மலர்ந்திருக்கிறது. ஒன்று நடிகைகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அல்லது நடுரோட்டில் அலைகிறார்கள். சில நடிகைகள் கடத்தல் மன்னர்களை கல்யாணம் செய்து கொண்டு, அவர்கள் சம்பாதிப்பதற்கு தங்கள் உடம்பைக் கொடுத்து, நானும் என் கணவரும் அமெரிக்காவிற்கு போகிறோம், ஜெனீவாவிற்கு போகிறோம் என்று பேட்டி கொடுக்கிறார்கள். […]

Read more

தலைவன் இருக்கின்றான்

தலைவன் இருக்கின்றான், நாஞ்சில் மு.ஞா.செ.இன்பா, பேரிளம் பதிப்பகம், எண்-கிருட்டிணா நகர், பம்மல், சென்னை 75, விலை 120ரூ. சிவாஜியை நடிகர்திலகமாக நேசித்தவர்கள்கூட, அவர் தமிழக அரசியலில் 30 ஆண்டுகாலம் அசைக்கமுடியாத சக்தியாக இருந்தார் என்பதை அறிந்திருக்க மாட்டார்கள். தி.மு.க. தலைவர் அண்ணாவின் இதயத்தில் முதல் தம்பியாக இருந்தவர், பிறகு அரசியல் சதுரங்கத்தில் இடம் மாறி காங்கிரசுக்கே எல்லாமுமாய் ஆனார். பெருந்தலைவரன் அன்பைப் பெற்ற சிவாஜி, காங்கிரஸ் கட்சிக்காக தன் வருமானத்தின் பெரும்பகுதியை செலவிட்டு கட்சி வளர்த்த தகவல்களை நூலாசிரியர் விவரித்திருக்கும்விதம், நிஜமாகவே அதிர்ச்சிப் பக்கங்கள். […]

Read more
1 23 24 25 26 27 30