திரை இசை அலைகள்

திரை இசை அலைகள் – ஐந்தாம் பாகம், வாமனன், மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை – 108, விலை: ரூ. 250, பக்: 552. ஒருவர் சினிமா இசைத் துறையைக் குறித்து எழுத வேண்டும் என்றால், முதலில் அவருக்கு இசையிலும், இலக்கியத்திலும் நல்ல ரசனையும், ஞானமும் இருக்க வேண்டும். அது இந்நூலாசிரியருக்கு நிறைவாக இருக்கிறது என்பதை இந்நூலைப் படிக்கும்போது அறிய முடிகிறது. தவிர, இவரால் இந்நூலில் எழுதப்பட்டுள்ள இசைக் கலைஞர்களில் பெரும்பாலோர் காலஞ்  சென்றவர்கள், பெரிதும் பிரபலமாகாதவார்கள், மக்களால் மறந்து […]

Read more

என்றென்றும் நன்றியுடன்

என்றென்றும் நன்றியுடன்… கே.எஸ்.ஜீவா, நாகரத்னா பதிப்பகம், 3ஏ, டாக்டர் ராம் தெரு, நெல்வயல் நகர், பெரம்பூர், சென்னை 11, பக்கங்கள் 96, விலை 70ரூ. இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரை உதவி இயக்குநராக, இயக்குநராக, கதை, திரைக்கதை ஆசிரியராக அவருடைய ஆளுமையைக் காட்டும் நூலாக மட்டும் இந்நூலைப் பார்க்க முடியாது. தமிழ் சினிமாவின் ஒரு அத்தியாயமாக வைத்துப் பார்க்க வேண்டிய தகுதியுடன் நூல் ஆக்கம் பெற்றுள்ளது. ரஜினி, கமல் போன்ற ஜாம்பவான்களை இயக்குவதால் மட்டும் இந்த உயரத்தை அவர் எட்டவில்லை. புதிய புதிய இயக்குநர்களை உருவாக்கிய ஒரு […]

Read more

80 ஆண்டு கால தமிழ் சினிமா

80 ஆண்டு கால தமிழ் சினிமா (1931-2011) முதல் பாகம், சித்ரா லட்சுமணன், காயத்ரி பிரிண்ட்ஸ், 2வது தளம், பாரதிதாசன் காலனி, சென்னை 78, பக்கங்கள் 558, விலை 500ரூ. தமிழின் முதல் பேசும்படமான காளிதாஸ் (1931) பற்றிய செய்தியில் தொடங்கி எம்.ஜி.ஆர். மரணம் (1987) வரை தமிழ் திரையுலகில் நிகழ்ந்த பல முக்கியமான சுவையான பலரும் இதுவரை அறிந்திடாத செய்திகளை இந்நூலில் பதிவு செய்துள்ளார் ஆசிரியர். ஆதித்தன் கனவு படத்தில் நாயகனாக நடித்த டி.ஆர். மகாலிங்கத்தின் மீது கல்லெறிவதாக ஒரு காட்சி எடுக்கப்பட்டது. […]

Read more

சிவாஜியின் வரலாற்றுச் சுவடுகள்

சுடர்மணிகள், முத்துப் பதிப்பகம், 27, வில்லியம் லே அவுட், இரண்டாவது தெரு, கே.கே, சாலை, விழுப்புரம் 605 602, விலை 70ரூ- தலைவர்கள், பிரமுகர்கள் பற்றிய சுவையான தகவல்களை குட்டிக்கதைகள்போல தொகுத்துத் தந்திருக்கிறார் கோ. பாரதி (புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் பேரன்), படித்து ரசிக்கவும், சிந்திக்கவும் பயனுள்ள புத்தகம். —   சிவாஜியின் வரலாற்றுச் சுவடுகள், கா. வந்தியத்தேவன், இதயவேந்தன் வாசகர் வட்டம், 257 பவுடர் மில்ஸ் ரோடு, காந்திஜி நகர், புளியந்தோப்பு, சென்னை 12, விலை 165ரூ. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிறந்த […]

Read more

திரையுலகப் பிரபலங்கள் – 1

திரையுலகப் பிரபலங்கள் – 1, ஆசிரியர்: ஏ. எல். எஸ். வீரய்யா, விலை: ரூ 125, வெளியீடு: திருவரசு புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை -17.  சுமார் 50 ஆண்டுகள் தமிழ்த் திரையுலகில் அனுபவம் பெற்ற இந்நூலாசிரியர், தமிழகத்தில் பல வெற்றிப் படங்களுக்குத் தயாரிப்பு நிர்வாகியாகப் பணியாற்றியவர். இவர், கவிஞர் கண்ணதாசனின் பாசறையில் உருவானதால், எளிய தமிழ் நடையில் நாடகம் மற்றும் சினிமா துறைகள் குறித்த நூல்களை எழுதும் எழுத்தாளராகவும் பரிணமிக்கிறார். சினிமா துறைக்குப் புதிதாக வருபவர்களுக்கும் மற்றவர்களுக்கும், […]

Read more

தமிழ் சினிமாவின் மயக்கம்

தமிழ் சினிமாவின் மயக்கம், கௌதம சித்தார்த்தன், குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம், நெடுஞ்சாலை, சென்னை 10, விலை 125ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-810-4.html தமிழ் சினிமாவின் கடந்த பத்தாண்டுகள், பல்வேறு புதிய மாற்றங்களின் பெரும்களமாக இருந்திருக்கிறது. ஒருபுறம் தமிழ் சினிமாவின் மொழியையே மாற்றியமைத்த புது இயக்குனர்களின் வருகை, இன்னொருபுறம் பிரம்மாண்டமான வர்த்தக சினிமாவின் பெரும் பாய்ச்சல். நுட்பமான கலாசாரப் பின்புலம் உள்ள படங்களுடன், பெரிய ஹீரோக்களின் படங்கள் போட்டி போட நேர்ந்தன. கௌதம சித்தார்த்தனின் இந்தக் கட்டுரைகள் தமிழ் […]

Read more

கண் பேசும் வார்த்தைகள்

கண் பேசும் வார்த்தைகள், நா. முத்துக்குமார், பட்டாம்பூச்சி பதிப்பகம், 28ஏ, கிருஷ்ணன் கோயில் தெரு, ஆழ்வார் திருநகரி, சென்னை 87, விலை 60ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-812-8.html கவிமூலத்தைப் போல திரைப்படப் பாடலாசிரியர் நா.முத்துகுமார் தான் எழுதிய சினிமாப்பாடல்கள் உருவான சூழல் பற்றி எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பு இது. ஒரு பாடல் உருவாகும் சூழல், அந்தப் பாடலின் தன்மை, கவிஞர்களின் மனதில் ஏற்படுத்தும் நெருக்கடிகள் மற்றும் சுகத்தை இந்த கட்டுரைகளில் பகிர்ந்து கொள்கிறார் நா. முத்துகுமார். இவர் அடிப்படையில் […]

Read more

சுப்பிரமணியபுரம்

சுப்பிரமணியபுரம் (திரைக்கதையும் உருவான கதையும்), எம். சசிகுமார், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 150ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-812-0.html தமிழில் பெரும் திருப்புமுனை ஏற்படுத்திய படம் சுப்பிரமணியபுரம். இதன் கதாநாயகனாக நடித்த எம். சசிகுமார், தயாரிப்பாளர், இயக்குனர், கதை, வசனகர்த்தா… என்று பன்முகம் படைத்த திறமைசாலி. ஸ்ரீதர், கே. பாலசந்தர், பாரதிராஜா, சங்கர் வரிசையில் வைத்து எண்ணத்தக்கவர். திறமைசாலிகளைக் கண்டுபிடித்து, இயக்குனர்களாக அறிமுகம் செய்துவருகிறார். கதை வலுவாக இருந்தால் போதும். புதுமுகங்களை வைத்தே, குறைந்த […]

Read more

சுவடிகள் வழங்கிய கவிதைகள்

சுவடிகள் வழங்கிய கவிதைகள், கோ. வேணுகோபாலன், மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 18, விலை 85ரூ. பண்டைய தமிழ் புலவர்கள் கவிஞர்களின் பாடல்கள் அடங்கிய தொகுப்பாக இந்த நூல் இருக்கிறது. பாடல்களுடன் இணைந்த கவிதைகளின் சொல்லாட்சி, இலக்கிய நயம் போன்றவை தமிழுக்கும் அதை படைத்தவர்களுக்கும் பெருமை சேர்ப்பதை நூல் முழுவதும் காண முடிகிறது. ஒவ்வொரு கவிதையுடனும் அது தோன்றிய சூழல் மற்றும் அதன் பொருள், கவிதையை ஆக்கியவர் பற்றிய குறிப்புகளை கொடுத்து இருப்பது சிறப்பு. பல நூல்களை வாங்கி படித்தபயனை […]

Read more

பாம்பின் கண் தமிழ் சினிமா ஓர் அறிமுகம்

பாம்பின் கண் தமிழ் சினிமா ஓர் அறிமுகம், சு. தியடோர் பாஸ்கரன், கிழக்கு பதிப்பகம், லாயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 190ரூ. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-701-5.html   மௌனப்படம் தொடங்கி வண்ணப்படங்கள் வரையிலான தமிழ்ச் சினிமாவின் வளர்ச்சி இந்த நூலில் பதிவாகியுள்ளது. தமிழ்ச் சினிமா வரலாற்றின் அடிப்படை தகவல்களைத் தாண்டி சுதந்தர போராட்ட காலத்தில் தமிழ்ச் சினிமாவின் பங்களிப்பு மற்றும் எழுச்சி பெற்ற திராவிட இயக்க அரசியலின் பிரதான வெளிப்பாடாக சினிமா மாறியது போன்றவை குறித்தெல்லாம் ஆய்வு பூர்வமாகவும் […]

Read more
1 27 28 29 30