ஹிட்லரின் கடற்போர் சாகஸங்கள்

ஹிட்லரின் கடற்போர் சாகஸங்கள், தோராளிசங்கர், சென்னை புக்ஸ், சென்னை 91, பக். 488, விலை 300ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-815-9.html அமைதி, சமாதானம், காருண்யம் ஆகியவற்றை நேசிக்கும் மானுடர்களுக்கு வேப்பங்காயாகக் கசப்பது ஹிட்லர் என்ற வார்த்தை என்றால் அது மிகையில்லை. கடந்த நூற்றாண்டில் நிகழ்ந்த 2ஆம் உலகப் போருக்கு வித்திட்டவர் ஜெர்மன் சர்வாதிகாரியான அடால்ஃப் ஹிட்லர் என்பது மட்டுமே அதற்குக் காரணமல்ல. சுமார் 5 கோடி பேரை காவு வாங்கியதாகக் கூறப்படும் இரண்டாம் உலகப்போரின் மூலம் உலகப் […]

Read more

வன்னி யுத்தம்

வன்னி யுத்தம், (களத்தில் நின்ற கடைசி சாட்சியின் கண்ணீர் பதிவு), அப்பு, விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 125ரூ. ஈழத் தமிழர்கள் கொத்துக்குண்டுகளுக்குப் பலியான கண்ணீர்க் கதை குறித்து எத்தனையோ பதிவுகள் வெளியாகி விட்டன. மேலும் ஒரு புத்தகம் அல்ல இது. இறுதிக்கட்டப் போரின் போது புலிகள் அமைத்த போர் வியூகங்கள் எப்படி அமைந்திருந்தன? அவை ஏன் தோற்றன? என்பது குறித்த ஆழமான விமர்சனத்தை நேர்நின்று பார்த்த அப்புவின் எழுத்தில் படிக்கும்போது ஆர்வமும் அதிர்ச்சியும் ஏற்படுகிறது. பள்ளிப் பருவம் முதல் […]

Read more

தகவல் அறியும் உரிமை சட்டம்

தகவல் அறியும் உரிமை சட்டம், வடகரை த. செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், 76, பாரதீஸ்வரர காலனி 2வது தெரு, பொன்மணி மாளிகை அருகில், கோடம்பாக்கம், சென்னை 24, விலை 100ரூ. மத்திய, மாநில அரசுகள் வழங்கும் சேவைகள், மற்றும் சலுகைகளை தொகுத்து எழுதப்பட்ட இரண்டாவது சுதந்திரம் நூல், தகவல் அறியும் உரிமைச் சட்டம். இதனை வடகரை த. செல்வராஜ் எழுதி உள்ளார். தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 மக்களுக்கு கிடைத்த பகல் சுதந்திரமாகும். இந்த சட்டத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டால் அரசின் செயல்பாடுகளை […]

Read more

அரசியல் சதுரங்கம்

அரசியல் சதுரங்கம், சோலை, நக்கீரன், 105 ஜானி ஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 140ரூ. அரசியல் விமர்சகர் சோலை நக்கீரன் வார இதழில் எழுதிய அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு. இந்த கட்டுரை தொடர் வெளியான காலகட்டத்தில் பரபரபப்பாக பேசப்பட்ட உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரையிலான விஷயங்களை தனது பாணியில் அலசி ஆராய்ந்து எழுதியுள்ளார். கட்சிபேதமின்றி உண்மைகளை உலகுக்கு எடுத்துச் சொல்லும் தைரியம் அவரது எழுத்தில் பளிச்சிடுகிறது. சமுதாய நோக்குடன் உண்மைகளை ஆணித்தரமாக எழுதியிருப்பது சிறப்பு.   —-   […]

Read more

ராஜீவ் படுகொலை-தூக்குக்கயிற்றில் நிஜம்

ராஜீவ் படுகொலை-தூக்குக்கயிற்றில் நிஜம், திருச்சி வேலுசாமி, பேட்ரிஷியா பதிப்பகம், 2/40, பி, இரண்டாம் தளம், ராம்நகர், நங்கநல்லூர், சென்னை 61, விலை 200ரூ. ஸ்ரீபெரும்புதூரில் 1991ல் நடந்த ராஜீவ் காந்தி படுகொலை ஒட்டுமொத்த தமிழின வரலாற்றில் பெரும் மாறுதல்களை ஏற்படுத்திய ஒன்று. இன்று அது முள்ளிவாய்க்காலில் தமிழினம் அழிக்கப்பட்ட நிகழ்வு வரைக்கும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த படுகொலை மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் இந்திய வரலாறு நிச்சயமாக வேறாக இருந்திருக்கும். ஒருவேளை இலங்கையில் நிலைமை கூட இப்போதிருப்பதில் இருந்து முற்றிலும் வேறாக இருந்திருக்கலாம். […]

Read more

திராவிடமா? தீரா விடமா?

திராவிடமா? தீரா விடமா?, ஓவியப்பாவலர் மு.வலவன், முத்தையன் பதிப்பகம், பக். 296, விலை 180ரூ. தமிழ்நாடு, கேரளம், ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம் என்னும் நான்கு மாநிலங்களையும் புதுச்சேரி என்னும் யூனியன் பிரதேசத்தையும் உள்ளடக்கியது திராவிட நாடு. இந்தத் திராவிட நாட்டில் பெரும்பான்மை மக்களால் நான்கு மொழிகள் பேசப்படுகின்றன. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் இன்னும், இந்த நான்கு மொழிகளில் எந்த மொழியைத் திராவிட நாட்டின் தேசிய மொழியாக ஏற்றுக் கொள்வது? என்னும் கேள்விக்குத் திராவிட நாட்டுக்காரர்களால், எந்தப் பதிலையும் தரமுடியவில்லை. ஆட்சி அமைப்பு வசதிக்கு, ஒரு […]

Read more

அகர வரிசை கதைகள்

அகர வரிசை கதைகள், கமலா சுவாமிநாதன், வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 17, விலை 40ரூ To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-582-9.html அகர வரிசையில் எழுதப்பட்ட சிறுவர்களுக்கான கதைகள் கொண்ட புத்தகம். இதில் 24 கதைகளை எழுதி வெளியிட்டுள்ளார் ஆசிரியர் கமலா சுவாமிநாதன்.   —-   மாமேதை லெனின், பசுமைக்குமார், விகடன் பிரசுரம், 757 அண்ணாசாலை, சென்னை 2, விலை 95ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-847-8.html உலகத் தலைவர்களில் […]

Read more

பாரதப் பிரதமர்கள்(அன்று முதல் இன்றுவரை)

பாரதப் பிரதமர்கள்(அன்று முதல் இன்றுவரை), குன்றில் குமார், அழகு பதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, 2வது தெரு, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை 49, பக்கங்கள் 232, விலை 120ரூ. இந்தியத் திருநாடு விடுதலை பெற்றது முதல், இன்றுவரை 14 பிரதமர்களை கண்டுள்ளது. அவர்களின் அரசியல் மற்றும் ஆட்சிப் பணிகள் குறித்து, இந்நூல் மிக விரிவாகக் கூறுகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் நேரு, இத்தாலி நாட்டின் சர்வாதிகாரி முசோலினியின் அழைப்பை ஏற்காத காரணம் (பக்க. 33), நேரு இந்திரா என்று பெயர் […]

Read more

தேவதாசியும் மகானும்

தேவதாசியும் மகானும், வெங்கடகிருஷ்ணன் ஸ்ரீராம், தமிழில் பத்மா நாராயணன், காலச்சுவடு பதிப்பகம், விலை ரூ 175. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-814-3.html தேவதாசிகள் என்று ஒரு குலம் உருவாக்கப்பட்டு, சென்ற நூற்றாண்டின் முன் பாதியிலேயே ஒழிக்கப்பட்டும் விட்டது. சங்கீத உலகில் அரும்பாடுபட்டுத் தமக்கென்று தனியிடம் அமைத்துக் கொண்ட பெங்களூரு நாகரத்தினம்மா அந்த சமூகப் பிரிவைச் சேர்ந்தவர். நெஞ்சை உலுக்கி நிமிர வைக்கும் அவருடைய வாழ்க்கை வரலாறை ‘தேவதாசியும் மகானும்’ என்ற தலைப்பில் வி. ஸ்ரீராம் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டதை […]

Read more

ஜின்னா தேசியவாதியா? பிரிவினைவாதியா?

ஜின்னா தேசியவாதியா? பிரிவினைவாதியா?, ச. ராசமாணிக்கம், சந்தியா பதிப்பகம், சென்னை – 83, பக்கம். 200, ரூ. 130. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-814-4.html இந்திய துணைக் கண்டத்தின் மிக முக்கிய இஸ்லாமியத் தலைவர்களுள் முதன்மையானவர் ஜின்னா. இத்தனைக்கும் அவர் முஸ்லிம்களின் புனிதக் கடமையான ஹஜ் யாத்திரையை மேற்கொண்டதில்லை, தன் உயிலைக் கூட இஸ்லாமிய முறைப்படி எழுதியதில்லை; மசூதிக்குப் போவதை வழக்கமாகக் கொண்டதில்லை; உருது அவருக்குத் தெரியாது; குரானுக்கும் அவருக்கும் வெகுதூரம்; இஸ்லாமிய மரபுப்படி உடையணிந்ததில்லை; அவரது மனைவி […]

Read more
1 39 40 41 42 43 44