நேர் நேர் தேமா

நேர் நேர் தேமா, கோபிநாத், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், 29 (7/3)ஈ1 பிளாக், முதல் தளம், மேட்லிசாலை, தி. நகர், சென்னை 17, பக்கங்கள் 192, விலை 100ரூ To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-203-9.html அகந்தை வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் ஆண்டவன் ரொம்ப காலம் நம்மை வறுமையில வச்சிருந்தாருன்னுதான் நான் எடுத்துக்கறேன் என்ற சாலமன் பாப்பையா தொடங்கி பத்மா சுப்ரமணியம், எம்.என். நம்பியார், கே. பாலச்சந்தர், வைரமுத்து, சிவக்குமார், எம்.எஸ். விஸ்வநாதன், நான் தமிழன் என்பதன் அடையாளம்தான் இந்த வேட்டி […]

Read more

தாமிரபரணிக் கரை

தாமிரபரணிக் கரை, பொன்னுசாமி தினகரன், அனிதா பதிப்பகம், ஸ்பிக் நகர் எதிர்ப்புறம், தூத்துக்குடி, பக்கங்கள் 272, விலை 125ரூ. பல்வேறு இதழ்களில் பல்வேறு காலக்கட்டங்களில் வெளிவந்த சிறுகதைகளின் தொகுப்பு. நெல்லை, தூத்துக்குடி, மாவட்ட மண்வாசனை மிகுந்த கதைகள்தான் அதிகம். பெண் அடிமை, வறுமையின் கோரமுகம், முதியோர் படும் அவலம், அரசியல் அராஜகங்கள், ஊழல், கொடுமை என்று சிறுகதைகள் தோறும் சமகால பிரச்னைகளே அலசப்படுவதால் படிக்க சுவாரஸ்யம் கூடுகிறது. பாசத்தில் ஒருவரை ஒருவர் மிஞ்சும் லட்சுமிகளையும் ஆதவன்களையும் தாமிரபரணிக் கரையெங்கும் உலவ விட்டிருக்கிறார் ஆசிரியர். படிப்போரை […]

Read more

பாம்பின் கண் தமிழ் சினிமா ஓர் அறிமுகம்

பாம்பின் கண் தமிழ் சினிமா ஓர் அறிமுகம், சு. தியடோர் பாஸ்கரன், கிழக்கு பதிப்பகம், லாயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 190ரூ. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-701-5.html   மௌனப்படம் தொடங்கி வண்ணப்படங்கள் வரையிலான தமிழ்ச் சினிமாவின் வளர்ச்சி இந்த நூலில் பதிவாகியுள்ளது. தமிழ்ச் சினிமா வரலாற்றின் அடிப்படை தகவல்களைத் தாண்டி சுதந்தர போராட்ட காலத்தில் தமிழ்ச் சினிமாவின் பங்களிப்பு மற்றும் எழுச்சி பெற்ற திராவிட இயக்க அரசியலின் பிரதான வெளிப்பாடாக சினிமா மாறியது போன்றவை குறித்தெல்லாம் ஆய்வு பூர்வமாகவும் […]

Read more

சாதிக்க ஆசைப்படு

சாதிக்க ஆசைப்படு, முனைவர் செ. சைலேந்திரபாபு, ஐ,பி.எஸ், தமிழில் முனைவர் அ. கோவிந்தராஜு பி.ஆர்.டி, சுரா பதிப்பகம், பக்கம் 240, விலை 150 ரூ. மானிடர் வாழ்வில் சிறந்த நண்பன் நூல்களே என்று பெரியோர் கூறுவர், ஒருவரின் வாழ்க்கைப் பயணத்தில், அவர் முன்னேற வழிகாட்டுவது பெற்றோர், ஆசிரியர்கள், மட்டுமன்று. நல்ல நூல்களே என்று துணிந்து கூறலாம். இந்நூல் அந்தவகையில் இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் பயனுள்ள நூல் ஆகும். நூலாசிரியர், வெறும் உபதேசங்களை மட்டும் கூறாமல், தக்க எடுத்துக் காட்டுகளையும் தந்து நூலை எழுதிச் செல்வது, நூலை […]

Read more

கணிதமேதை ராமானுஜன்

கணிதமேதை ராமானுஜன், ரகமி, தொகுப்பும் குறிப்பும் – த. வி. வெங்கடேஸ்வரன், புக்ஸ் ஃபார் சில்ரன், 421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, விலை 120ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-810-1.html என் கணவரைப்பற்றி நம் நாட்டில் தெரிந்தவர்கள் அதிகம்பேர் இருக்கிறார்கள். ஆனால் அதைவிட வெளிநாடுகளில் அறிந்தவர்கள் பல்லாயிரக்கணக்கில் இருக்கிறார்கள் என்கிறார் கணித மேதை ராமானுஜன் மனைவி ஜானகி. விளம்பர வெளிச்சங்களில் மின்னும் அரசில் மற்றும் திரைத்துறை நட்சத்திரங்களை அறிந்துள்ள நம் சமூகம், நம்மில் பிறந்து வளர்ந்த அறிஞர்களை, அறிவியலாளர்களை […]

Read more

ஐ. சண்முகநாதனின் உலக வரலாற்றுக் களஞ்சியம்

உலக வரலாற்றுக் களஞ்சியம், ஐ. சண்முகநாதன், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, பக்கங்கள் 527, விலை 265ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-807-9.html இந்நூலாசிரியர் 42 ஆண்டு காலம் தினத்தந்தியில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நாதன் என்ற புனைப்பெயரில் இவர் எழுதிய படைப்புகள் பிரபலமானவை, நூற்றுக் கணக்கான நூல்களைத் தேடி படிப்பதன் மூலம் அறியக்கூடிய பல தகவல்களை, இந்த ஒரு நூலில் அறிந்து கொள்ளும் வகையில் இதை உருவாக்கியுள்ளார் ஆசிரியர். உலகம் எவ்வாறு […]

Read more

ஸ்டார் சமையல்

ஸ்டார் சமையல், தொகுப்பு – தேனி கண்ணன், குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை -10, பக்கங்கள் 144, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-021-1.html நளன் காலம்தொட்டு இன்றைய ஐந்து நட்சத்திர ஹோட்டல் செஃப் வரை ஆண்கள் சமையல் கலையில் கோலோச்சினாலும், பெண்களின் கைப்பக்குவத்தில் தயாராகும் சமையலுக்கு ருசியே தனிதான். அதுவும் நம் நடிகைகள் சமைத்தால் அதன் ருசி இன்னும் கூடும்தானே. நடிகைகள் பலரை சமைக்கச்சொல்லி, அதன் செய்முறைகளை குமுதம் இதழில் வாரந்தோறும் வெளியிட்டார்கள். […]

Read more

சின்மயி விவகாரம்: மறுபக்கத்தின் குரல்

சின்மயி விவகாரம்: மறுபக்கத்தின் குரல், விமலாதித்த மாமல்லன், சத்ரபதி வெளியீடு, 5/6 CPWD (Old) Qtrs, பெசன்ட் நகர், சென்னை – 90. விலை ரூ.120 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-900-8.html சமூக வலைத்தளங்கள் கடந்த சில ஆண்டுகளில் தமிழில் விவாதங்களின் மொழியை முற்றாக மாற்றியமைத்துவிட்டன. சீரான, தர்க்கபூர்வமான வாதமுறைகள் மறைந்து, குறுக்குவெட்டாக பாய்ந்து செல்லும் வாத முறை இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. பாடகி சின்மயி ட்விட்டரில் தெரிவித்த சில கருத்துகள், அவர் மீது தெரிவிக்கப்பட்ட சில கருத்துகள் எல்லாம், சில […]

Read more

வாலிப வாலி

வாலிப வாலி, நெல்லை ஜெயந்தா, பக். 372, வாலி பதிப்பகம், 12/28, சௌந்தர்ராஜன் தெரு, தி.நகர், சென்னை – 17, விலை ரூ. 250 82 வாரங்களாக சென்னை பொதிகை தொலைக்காட்சியில் கவிஞர் வாலியுடன் நிகழ்த்திய நேர்காணல்களின் தொகுப்பு இந்நூல். தமிழ் சினிமாவின் வரலாற்றினை வாலியின் மனப்பெட்டகத்தில் இருந்து அள்ளி எடுத்துத் தந்திருக்கிறார்கள். திரை உலகின் ஒவ்வொரு அங்குலத்தையும் வாலியின் வாக்கு அளந்து வைக்கிறது. நம் கண்முன் நான்கு தலைமுறையைத் தாண்டியும் அவரது திரைத்தமிழ் வெள்ளமாய் ஓடிவருவதை ஒவ்வொரு நேர்காணலின்போதும் ரசிக்க முடிகிறது. நான் […]

Read more

உலகம் அழியுமா? ஏன்? எப்போது? எப்படி?

உலகம் அழியுமா? ஏன்? எப்போது? எப்படி?, பி.எம். கலீலுர் ரஹ்மான் மன்பஈ, ஸலா பப்ளிகேஷன், 21/10, 4-வது தெரு, மந்தைவெளி பாக்கம், சென்னை – 28. விலை ரூ. 100 உலக அழிவு குறித்து அன்றும் இன்றும் வெளியான சுவையான திகிலூட்டும் பல்வேறு செய்திகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக – விஞ்ஞானிகள், வான்கலை வல்லுநர்கள், புவியியல் அறிஞர்கள், கடல் ஆராய்ச்சியாளர்கள், ஜோதிடர்கள் அனைத்து மத தீர்க்க தரிசிகள், ஞானிகள், நாஸ்டர்டாம், சாக்ரடீஸ் போன்ற முற்கால தத்துவவாதிகள்… என்று பலரும் பல்வேறு காலகட்டங்களில் கூறிய காரணங்களை எல்லாம் தேடிப் பிடித்து, அதற்குரிய […]

Read more
1 59 60 61 62 63