மறைக்கப்பட்ட இந்தியா

மறைக்கப்பட்ட இந்தியா, விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 275ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-171-8.html வரலாற்றை அறிந்து கொள்வது முடிவில்லாத தேடல். அது உள்ளங்கையில் அள்ளிட கடலைப் போலத்தான் இருக்கும். ஆனாலும் வரலாற்று நிகழ்வுகளை உயிர்ப்பாகவும், வியப்பாகவும் மனிதாபிமானத்தோடும், சமூக அக்கறையோடும், சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் இந்த நூலில் சொல்லப்பட்டிருக்கிறது. எத்தனையோ பல நூற்றாண்டுச் செய்திகள் ஒரு சில வரிகளுள் உள்ளடக்கமாகியிருக்கிறது. கொஞ்சமும் கூட்டியோ, குறைத்தோ கற்பனை கலந்து எழுதாமல், உண்மையான வரலாற்று நிகழ்வுகளுக்குள் வாழ்ந்தவர்களைப் […]

Read more

தலைவன் இருக்கின்றான்

தலைவன் இருக்கின்றான், நாஞ்சில் மு.ஞா.செ.இன்பா, பேரிளம் பதிப்பகம், எண்-கிருட்டிணா நகர், பம்மல், சென்னை 75, விலை 120ரூ. சிவாஜியை நடிகர்திலகமாக நேசித்தவர்கள்கூட, அவர் தமிழக அரசியலில் 30 ஆண்டுகாலம் அசைக்கமுடியாத சக்தியாக இருந்தார் என்பதை அறிந்திருக்க மாட்டார்கள். தி.மு.க. தலைவர் அண்ணாவின் இதயத்தில் முதல் தம்பியாக இருந்தவர், பிறகு அரசியல் சதுரங்கத்தில் இடம் மாறி காங்கிரசுக்கே எல்லாமுமாய் ஆனார். பெருந்தலைவரன் அன்பைப் பெற்ற சிவாஜி, காங்கிரஸ் கட்சிக்காக தன் வருமானத்தின் பெரும்பகுதியை செலவிட்டு கட்சி வளர்த்த தகவல்களை நூலாசிரியர் விவரித்திருக்கும்விதம், நிஜமாகவே அதிர்ச்சிப் பக்கங்கள். […]

Read more

மண்ணில் உலவிய மகான்கள்

மண்ணில் உலவிய மகான்கள், க. துரியானந்தம், எல்.கே.எம். பப்ளிகேஷன், 33/4 (15/4) ராமநாதன் தெரு, தி.நகர், சென்னை 17, பக். 120, விலை 50ரூ. ஸ்ரீ பாடகச் சேரிசுவாமிகைள், போதேந்திர சுவாமிகள், ஸ்ரீ வள்ளிமலை சுவாமிகள், மகான் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள், நெரூர் மகான் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர், குரு ஸ்ரீதட்சிணாமூர்த்தி சுவாமிகள், ஸ்ரீ ரெட்டியப்பட்டி சுவாமிகள் இந்த ஏழு மகான்களின் வரலாற்றை சுருக்கமாக தந்திருக்கிறார் ஆசிரியர். எளிமையான, ஆனால் கவர்ச்சிகரமான நடை, புத்தகத்தை விறுவிறுவென்று வாசிக்கத் தூண்டுகிறது.   —-   அபிராமி […]

Read more

பழஞ்சீனக் கவிதைகள்

பழஞ்சீனக் கவிதைகள், வான் முகில், மீனா கோபால் பதிப்பகம், 26, குறுக்குத் தெரு, ஆதம்பாக்கம், சென்னை 88, பக். 216, விலை 180ரூ. ஆங்கில மூலத்திலிருந்த தமிழாக்கம் செய்யப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட, 63 கவிஞர்களின் கவிதைகள் இடம் பெற்றுள்ளன. தருக்கடைந்தால் அது, தன் வீழ்ச்சிக்குத் தானே வித்திடலாகும். உன் பணி முடிந்ததும் பின்னடைந்திரு, விண்ணக வழி அத்தகையதே (பக். 75) என, மிகை வெற்றியின் அபாயம் குறித்தும். ஒளிமிகு சன்னலின் கீழ் என்னுடன் இருப்போர் யார்? இருவர் என் நிழலும் நானும், ஆனால் விளக்கு எரிந்து […]

Read more

அமெரிக்காவின் ஒபாமாக்களும் இந்தியாவின் தலித்துக்களும்

அமெரிக்காவின் ஒபாமாக்களும் இந்தியாவின் தலித்துக்களும், டி. ஞானையா, அலைகள் பதிப்பகம், 4/9, 4வது மெயின் ரோடு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 24, பக். 405, விலை 250ரூ. நூலாசிரியர் ஞானய்யாவுக்கும், இந்த நூலுக்கும் அணிந்துரை வழங்கிய நீதியரசர்(ஓய்வு) வி. சதுர். கிருஷ்ணய்யருக்கும், வயது 90ஐ தாண்டிவிட்டது. உலக வரலாற்றில் மிகவும் சென்சிடிவான ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட பிரிவனிர்களின் பரிதாபத்துக்குரிய வாழ்க்கை பற்றியும், அந்த சமூகத்தை முன்னேற்ற பாடுபட்ட தலைவர்களுள், சில முன்னோடிகள் குறித்தும் விரிவாகவும், விலாவாரியாகவும் இந்த நூலை எழுதியிருக்கிறார் டி. ஞானய்யா. […]

Read more

சைவ இலக்கிய வரலாறு

சைவ இலக்கிய வரலாறு, ஔவை சு. துரைசாமி பிள்ளை, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 392, விலை 250ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-809-6.html சைவத் தமிழ்ப் பேரறிஞர் ஔவை துரைசாமிப் பிள்ளை. கி.பி. 700 முதல் கி.பி. 1000 வரையில், 300 ஆண்டுகளில் உருவான பக்திநூல்களின் வரலாற்றை, பக்தி மனத்துடனும், ஆய்வு நலத்துடனும் இந்நூலில் மிக அற்புதமாகத் தந்துள்ளார். தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா முதலிய 12 சைவத் திருமுறைகள் தோன்றிய காலத்தை சந்தேகத்துக்கு இடமின்றி இவர் உறுதி […]

Read more

காவடிச் சிந்தும் கவிஞனின் வரலாறும்

காவடிச் சிந்தும் கவிஞனின் வரலாறும், அரங்க. சீனிவாசன், அருள் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர். நகர், சென்னை 78, விலை 120ரூ. வண்ணமயமான வாழக்கை. பாரதியின் வாழ்க்கையைப்போல அண்ணாமலை ரெட்டியாரின் வாழ்க்கையும் வண்ணமயமானது. அரங்க. சீனிவாசனால் எழுதப்பட்ட காவடிச் சிந்தும் கவிஞன் வரலாறும் என்னும் நூலின் வழியே இதை அறிய முடிகிறது. அவர்களுக்கெனத் தனி சாம்ராஜ்யம். அதை கவிராஜனாகத் தன்னை அறிவித்துக்கொள்வது போன்ற பண்புகளில் இருவருக்கும் உள்ள உற்றுமை நெருக்கத்தைத் தருகிறது. கண்கள் கூசப் பிரகாசத்தொளி மாசற்று விலாசத்தோடு இதுபோன்ற மொழியின் சௌந்தர்யம் […]

Read more

முதல் விடுதலைப்போர் 1800-1801

முதல் விடுதலைப்போர் 1800-1801, டாக்டர் கே. ராஜய்யன், ஜெகமதி கல்வி அறக்கட்டளை வெளியீடு, விலை 500ரூ. வெள்ளையர்களே போற்றிய விடுதலை வீரர்கள் அன்னியர் ஆதிக்கத்தை எதிர்த்து இந்தியர்கள் நடத்திய முதல் போராட்டம் எது? 1857இல் நடைபெற்ற சிப்பாய்க் கலகம் என்று வழங்கப்படும் போராட்டத்தையே அப்படி அங்கீகரித்திருக்கிறார்கள். ஆனால் அதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே ஆங்கிலேயரை எதிரத்துப் போராடி 1799இல் தூக்கிலிடப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் கூட்டத்தார், அடுத்த இரண்டு ஆண்டுகளில், 1801இல் துடிக்கத் துடிக்கப் படுகொலை செய்யப்பட்ட 543க்கும் மேற்பட்ட மருதுபாண்டியர் அணியினர் என்று தமிழ்நாட்டு […]

Read more

பாரதத்தின் விஸ்வரூபம்

பாரதத்தின் விஸ்வரூபம், ஐ. மாயாண்டி பாரதி, பாரதி பதிப்பகம், பாரதமாதா இல்லம், 13/10ஏ, சுப்பராயர் அக்ரஹாரம், காக்கா தோப்பு, மேலமாசி வீதி, மதுரை, விலை 100ரூ. தியாகத்தை நேரில் பார்க்க வேண்டுமா? வாழும் வரலாறாக மதுரையில் வசித்துக் கொண்டிருக்கிறார் ஐ.மாயாண்டி பாராதி. பழகிய தோழர்கள் அனைவருக்கும் அவர் ஐ.மா.பா. இந்திய விடுதலை வேள்விக்கு விறகு சுமந்த ஐ.மா.பா. அதனை தனது பெரும் சாகசமாகக் கருதாமல், தனது கடமையாக நினைத்துச் செயல்பட்ட நினைவுகளுடன் 97 வயதைத் தாண்டி வாழ்ந்து வருகிறார். 15 வயதில் பட்டாளத்தில் சேராதே, […]

Read more

நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராட்டம்

நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராட்டம், இராம. கோபாலன், விஜயபாரதம் பதிப்பகம், சென்னை 31, பக். 296, விலை 200ரூ. சுதந்திரம் என்பது போராடுவதற்கான உரிமையையும் உள்ளடக்கியது. நமது நாட்டின் சுதந்திரத்துக்கும் மக்களாட்சி மாண்புக்கும் 1975 ஜுன் 25இல் பெரும் நெருக்கடி ஏற்பட்டது. அந்த நெருக்கடியிலிருந்து மீண்டது எப்படி? நமது உரிமைகளை சத்தமின்றி மீட்டவர்கள் யார்? அதில் அவர்கள் அடைந்த கஷ்டங்கள் எவை? என்பதை இந்நூல் விளக்குகிறது. தனது அரசியல் எதிரிகள் பலம் பெற்று வருவதைத் தடுக்கவும், நீதிமன்றங்களின் கண்டனங்களிலிருந்து தப்பவும் அன்றைய பிரதமர் இந்திரா […]

Read more
1 87 88 89 90 91 104