நாரதர் கதைகள்

நாரதர் கதைகள், பாலகுமாரன், விசா பதிப்பகம், பக். 160, விலை 90ரூ. நாரதர் என்றவுடன், அவர் பெரும் கலகக்காரர், புராணகால மாந்தரிடையே சண்டை மூட்டிவிடுபவர், கோள் மூட்டுவதே அவருடைய தொழில் என்பதான எண்ணம் பலருக்கும் எழுவது இயல்பு. அதன் அடிப்படையிலேயே தமிழில் சில திரைப்படங்களும் வந்துவிட்டன. ஆனால் நாரதர் கோமாளியோ, கோள்மூட்டியோ அல்ல. தந்திரக்காரரோ, பிறரை இழிவுபடுத்துபவரோ அல்ல. மிகச்சிறந்த மகரிஷி, இசை வல்லுனர். தாமும் நல்வழி நடந்து, பிறரையும் நல்வழி நடக்கச் செய்பவர். பக்திக்கு ஒரே சிறந்த உதாரணம் நாரதர். நாரதரைச் சரியாகப் […]

Read more

ஹிட்லர்

ஹிட்லர், மருதன், கிழக்குப் பதிப்பகம், சென்னை, பக். 212, விலை 150ரூ. மவுசு குறையாத ஹிட்லர் உலக வரலாற்றின் மீது பெரும் ஆதிக்கம் செலுத்திய ஹிட்லர் போன்றவர்களைப் பற்றி எத்தனை புத்தகங்கள் எழுதினாலும் அவற்றைப் படிக்கும் ஆர்வம் மட்டும் குறைவதே இல்லை. இரண்டாம் உலகப் போரின் முடிவில் அவர் தற்கொலை செய்துகொள்ளவில்லை. வேறெங்கோ தப்பிச் சென்று இயற்கையாக மரணம் அடைந்தார் என்று மாற்றுச் சிந்தனையுடன் எழுதப்படும் புத்தகங்களின் எண்ணிக்கையே நூற்றுக் கணக்கில் இருக்கும். தமிழில் இரண்டாம் உலகப் போர் சார்ந்து எழுதப்பட்ட ஹிட்லரின் வரலாறுகளின் […]

Read more

தமிழர் நெல்

தமிழர் நெல், ஓம் பதிப்பகம், சென்னை, பக். 64, விலை 60ரூ. தமிழர்களின் உணவு, கலாச்சாரம், விழாக்கள் போன்ற அனைத்திலும் நெல்லும் அரிசியும் ஒன்றாகக் கலந்திருப்பதைத் தவிர்க்க முடியாது. பாரம்பரியமான அந்த அரிசி அன்று நோய் எதிர்ப்பு சக்தி மிக்கதாய் இருந்தது. இன்று சர்க்கரை வியாதி உள்ளிட்ட பல வியாதிகளுக்குக் காரணமாகிவிட்டது. அதற்குக் காரணம். இரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள்தான். இவற்றால் நம் பாரம்பரிய அரிசியின் தன்மைகெட்டு, நோய்க்கான இடமாக இக்கால அரிசி மாறிவருவதைச் சுட்டிக்காட்டுவதோடு, இன்றும் நம்மிடம் உள்ள பாரம்பரிய அரிசிகள் எவை, […]

Read more

நூற்றாண்டு கண்ட டி.எஸ். பாலையா

நூற்றாண்டு கண்ட டி.எஸ். பாலையா, திருநின்றவூர் தி. சந்தானகிருஷ்ணன், நிழல் வெளியீடு, சென்னை, பக். 140, விலை 150ரூ. தமிழ் சினிமாவில் நகைச்சுவைக்கு ஒரு புதிய பரிமாணத்தைத் தந்தவர் டி.எஸ். பாலையா. கதாநாயகன், வில்லன், குணச்சித்திர நடிகர், நகைச்சுவை நடிகர் என பன்முகத்திறன் கொண்ட டி.எஸ். பாலையாவுக்கு இதுவரை ஒரு நிறைவான நூல் இல்லை. அந்தக் குறையை தீர்த்துவைத்திருக்கிறது இந்நூல். பாலையா நடித்திருக்கும் அனைத்துப் படங்களையும் கால வரிசைப்படுத்தித் தந்திருப்பது சினிமா ஆய்வாளர்களுக்கு உதவும் பணி. பாலையாவின் ஆரம்பகால படங்களின் பிரதி எதுவும் கிட்டாத […]

Read more

கிளைக்குத் திரும்பும் இலைகள்

கிளைக்குத் திரும்பும் இலைகள், கவிஞர் பாரியன்பன், அகநி வெளியீடு, வந்தவாசி, பக். 64, விலை 30ரூ. பட்டுப்போயின மரங்கள்! பாட்டெடுக்கும் குயில்கள்! மரம் பட்டுப்போனதற்கு குயில் எழுப்பும் பாட்டு, நம்மையும் அந்த சோகவலிக்குள் இழுத்துப் போட்டுக்கொள்கிறது. இதுதான் கவிதை. இதுதான் கவிதையின் உயிர். பாரியன்பனின் ஹைக்கூ கவிதைகளுக்கு எளிதில் நம்மை ஆட்கொள்ளும் சக்தி உண்டு என்பதற்கு இஃதோர் உதாரணம். அவர் கையாளும் குறியீடுகள், படிமங்கள், காட்சிப் புனைவுகள் நம்மை கவிதைகளிடம் நெருக்கமாகக் கொண்டு செல்கின்றன. பாசங்கற்ற, போலிகளற்ற பரவசம் நிறைந்த கவிதைகளின் தொகுப்பு. நன்றி: […]

Read more

மகளிர் மகிமை

மகளிர் மகிமை, பி. முஹம்மது சல்தான் ஃபாஜில் தேவ்பந்தி, பி.எம். கலிலூர் ரஹ்மான் மன்பஈ, அமானத் அறக்கட்டளை, சென்னை, பக். 384, விலை 140ரூ. ஆண் பெண் இரு பாலரும் ஒன்றாகப் பேசுவதிலும், பழகுவதிலும் எப்படிப்பட்ட கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும். இரு பாலருக்கும் உள்ள ஒழுக்க முறைகள் என்ன – என்பன போன்ற விஷயங்கள் எல்லா சமயங்களிலும் வரையறுக்கப்பட்டுள்ளன. முன்பு இவை முறையாக போதிக்கப்பட்ட கடைபிடிக்கப்பட்டால், பாலியல் குற்றங்கள் என்பது நாட்டில் மிக மிகக் குறைவானதாகவே இருந்தன. இன்றோ இக்குற்றங்கள் பல்கி பெருகி சர்வசாதாரண […]

Read more

ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும்

ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும், வெ. இறையன்பு, ஐ.எஸ்.ஏ., நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, பக். 221, விலை 140ரூ. எழுத்தாலும், பேச்சாலும் இளைஞர்களுக்கு, குறிப்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஊட்டி வரும் இந்நூலாசிரியர், பிரபலமான ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் ஒருவர். இவரது இந்நூல் இதுவரை 6 பதிப்புகளைக் கண்டு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 20 வருடங்களுக்கு முன்பு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட இந்தியக் குடிமைப் பணிகளுக்கான தேர்வுகள் குறித்து போதிய விபரங்கள் இல்லாததால், இத்தேர்வில் பங்கெடுப்பவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் மிகக் குறைவாக இருந்தது. […]

Read more

நேருவின் ஆட்சி பதியம் போட்ட 18 ஆண்டுகள்

நேருவின் ஆட்சி பதியம் போட்ட 18 ஆண்டுகள், ரமணன், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 152, விலை 115ரூ. தராசுத் தட்டில் நேருவின் பதினெட்டு ஆண்டுகால ஆட்சியை நிறுத்திப் பார்க்கும் முயற்சி இது. புத்தகத்தின் சிறப்பான பகுதிகள் சில – சட்டமேதை அம்பேத்கர் மொழிவாரி மாநிலம் என்ற பதத்துக்கு ஒரு மாநிலத்துக்கு ஒரு மொழி இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். கவனியுங்கள். ஒரு மொழிக்கு ஒரு மாநிலம் இல்லை. அதாவது பிரிக்கப்படும் பகுதியில் பல மொழிகள் இருந்தாலும் ஆட்சியின் நிர்வாக வசதிக்காக அவற்றில் ஒரு […]

Read more

கம்பன் தமிழும் கணினித் தமிழும்

கம்பன் தமிழும் கணினித் தமிழும், நா. முத்து நிலவன், அகரம் வெளியீடு, தஞ்சாவூர், விலை 140ரூ. இரண்டாம் பரிசு பெற்ற பாரதியார் கவிதை நாட்டுப்பற்று பற்றிய பாடல் எழுதப் போட்டி ஒன்று தூத்துக்குடியில், நடைபெற்றிருக்கிறது 1914இல் நண்பர்களின் வற்புறுத்தலுக்காக அதில் கலந்துகொண்டு இரண்டாம் பரிசு பெற்றவர் மகாகவி என்று கொண்டாடப்படுகிற பாரதியார். அந்தப் பாடல்தான் செந்தமிழ் நாடென்னும் போதினிலே என்று குறிப்பிட்டுச் சுவையான சில செய்திகளைத் தருகிறார் நா. முத்துநிலவன் தம்முடைய கட்டுரை ஒன்றில். கம்பனைப் பற்றிய கட்டுரை ஒன்றில் வடமொழி பக்தி நூல்களை […]

Read more

may be your are my next love உறவுகளைத் தேடி ஓர் உன்னதப் பயணம்

may be your are my next love உறவுகளைத் தேடி ஓர் உன்னதப் பயணம், கார்த்திக் தம்பையா, டாட் 3 பப்ளிகேஷன், திருச்சி, விலை 200ரூ. பூவா தலையா? போட்ட காதல் மே பி யூ ஆர் மை நெக்ஸட் லவ் என்று ஆங்கிலத்தில் பிரதானமாகவும், போனால் போகிறது என்கிற மாதிரி உறவுகளைத் தேடி ஓர் உன்னத பயணம் என்று தமிழிலும் தந்திருப்பதை மன்னித்து விட்டு தைரியமாக நூலின் உள்ளே போகலாம். இன்னும் பக்கத்துக்குப் பக்கம் வருகிற ஆங்கிலச் சொற்கள் அவ்ளவையும் ஆங்கில […]

Read more
1 608 609 610 611 612 841