நிழல் இளவரசி

நிழல் இளவரசி, வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 17, விலை 250ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-161-4.html ஷாஜஹானின் பரந்து விரிந்த சாம்ராஜ்யத்தின் அந்தப்புரத்தின் தலைமைப் பதவிக்காகப் போட்டியிடும் இரண்டு இளவரசிகளின் போராட்டம் பற்றிய 17ஆம் நூற்றாண்டின் வரலாற்று புதினம். சக்கரவர்த்தி ஷாஜஹான், தன் காதல் மனைவி மும்தாஜின் நினைவாக நிர்மாணித்துக் கொண்டிருக்கும் வரலாற்று சிறப்பு வாய்ந்த சமாதியின் (தாஜ்மகால்) பின்னணியில், சக்கரவர்த்தியின் புதல்விகள் ஜஹனாராவும், ரோஷனாராவும் எல்லாவற்றிற்கும் போட்டியிடுகின்றனர். அந்தப்புரத்தின் ஆட்சி, சாம்ராஜ்யத்தின் எதிர்காலம், […]

Read more

புறநானூறும் திருக்குறளும் ஒப்பாய்வு

புறநானூறும்  திருக்குறளும் ஒப்பாய்வு, ஒளி பதிப்பகம், 4-63, டாக்டர் ரங்கா சாலை, சென்னை 18, விலை 150ரூ. புறநானூறு, சங்க கால மன்னர்களின் வீரத்தை உணர்த்த வந்த நூல். திருக்குறள் மக்களுக்கு அறம் உணர்த்த வந்த நூல். இந்த இரு நூல்களின் அறிமுகம், தொடர், ஒப்புமை, பொருள் ஒப்புமை, ஒற்றுமை வேற்றுமைக் கூறுகள் என ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அதில் புதிய கருத்துக்களை சிறப்புகளைப் பட்டியலிட்டு காட்டுகிறது இந்நூல். புறநானூற்றில் அமைந்துள்ள வரலாற்றுக் களஞ்சியங்கள், கவின் தொடர்கள், உள்ளம் கவர் அறக்கருத்துகள் ஆகியவை படிப்போரின் […]

Read more

இடிந்த கரை

இடிந்த கரை, குட்டி ரேவதி, ஆதி பதிப்பகம், 15, மாரியம்மன் கோயில் தெரு, பவித்திரம், திருவண்ணாமலை 606806, விலை 50ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-811-0.html  இது ஒரு கவிதை நூல். புத்தகம் முழுவதும் இடம்பெற்றுள்ள கவிதைகள் கடல் மற்றும் பெண்கள் பற்றி புனையப்பட்டுள்ளது. எளிய நடையில் உவமைகளோடு கவிதைகள் அமைந்திருப்பது தனிச்சிறப்பு. நன்றி: தினத்தந்தி, 14/8/2013   —-   முடிவளமும் சரும பொலிவும், டாக்டர் ஆர். ஞானசம்பந்தம், ஏ.கே.பி. ஹோமியோபதி மருத்துவ ஆராய்ச்சி மையம், 6, […]

Read more

நானும் மனிதனும்

நானும் மனிதனும், இளஞ்சேரன், சம்பிரித்தி பதிப்பகம், 10, ஜானகிராம் காலனி விரிவு, அரும்பாக்கம், சென்னை 106, பக். 184, விலை 120ரூ. மனுநீதிச் சோழன், பசுக்கன்றைக் கொன்ற தன் மகனை அதே தேர்க்காலிலிட்டுக் கொன்றான். இது நீதி. மனிதர்கள் ஒவ்வொரு நாளும், ஆடு, மாடு,  கோழியென நூற்றுக்கணக்கானவற்றைக் கொன்று தின்கிறார்களே. மனுநீதிச் சோழனை முன் மாதிரியாகக் கொண்டு இந்த மனிதர்களுக்குத் தூக்குத் தண்டனை விதிக்க முடியுமா? இதுபோன்ற படிப்பினை வழங்கும் 48 சின்னஞ்சிறு கதைகளை உள்ளடக்கிய கதைகள் இவை. அத்தனையும் மனிதம் பற்றி உணர்த்துபவை. […]

Read more

ஐயம் அகற்று

ஐயம் அகற்று, கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை 17 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-143-3.html கண்ணதாசன் கேள்வி – பதில், கவிஞர் கண்ணதாசன் தென்றல் பத்திரிகை நடத்திய காலகட்டத்தில் ஐயம் அகற்று என்ற தலைப்பில் கேள்வி பதில் பகுதியை எழுதினார். அவற்றை தொகுத்து ஐயம் அகற்று என்ற பெயரில் இப்போது புத்தகமாக கண்ணதாசன் பதிப்பகம் வெளிவந்துள்ளது. காரசாரமான பதில்கள், நகைச்சுவையான பதில்கள், இலக்கியச்சுவையான பதில்கள்… இப்படி பலவிதமான பதில்களை கவிஞர் அளித்துள்ளார். படித்து […]

Read more

போராளியின் காதலி

போராளியின் காதலி, வெற்றிச்செல்வி, சோழன் படைப்பகம், எண்10, 6வது தெரு, முதல் செக்டார், கே.கே.நகர், சென்னை 78, விலை 120ரூ. தமிழ் ஈழப்போரின் இறுதி நாட்களில் இலங்கையில் நடந்த உண்மை சம்பவங்களை நாவலாக அளித்துள்ளார் ஆசிரியர். எத்தனை எத்தனை இடர் இன்னல்கள் அங்கு வாழும் தமிழ் மக்கள் அடைந்துள்ளனர். படிக்கும்போதே நெஞ்சம் பதறுகிறது. தரையில் கிடப்பதில் பிணங்கள் எவை? உயிர் இருக்கும் உடல்கள் எவை? என கண்டுபிடிப்பதே சிரமமாகிப்போனது என்ற வரிகள் அடங்கிய கடைசி அத்தியாயங்களை படிக்கும்போது இதயம் கனக்கிறது. அழகான காதலோடு தொடங்கி, […]

Read more

கல்வெட்டுக்கலை

கல்வெட்டுக்கலை, பொ. ராசேந்திரன், சொ. சாந்தலிங்கம், பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம், மதுரை, பக். 240, விலை 250ரூ. தமிழ் மன்னர்கள் பற்றியும், தமிழ்நாட்டு வரலாறு பற்றியும் அரிய கல்வெட்டுகளும், ஓலைச்சுவடிகளும், செப்பேடுகளும் பெரிதும் உதவுகின்றன. நாம் அச்சில் படிக்கும் தமிழ் எழுத்துக்களும், கல்வெட்டு எழுத்துக்களுக்கும் பெரிய மாறுதல் காணப்படும். கல்வெட்டைப் படிக்க மிகுந்த திறமையும், பயிற்சியும் வேண்டும். பொ. இராசேந்திரன், சொ. சாந்தலிங்கம் ஆகிய இருவரும் இணைந்து எழுதிய இப்புத்தகத்தில், தமிழ்நாட்டின் முக்கிய கல்வெட்டுகள், பற்றி அபூர்வமான தகவல்கள் நிறைந்துள்ளன. இப்புத்தகத்தை […]

Read more

ராஜீவ் படுகொலை-தூக்குக்கயிற்றில் நிஜம்

ராஜீவ் படுகொலை-தூக்குக்கயிற்றில் நிஜம், பேட்ரிஷியா பப்ளிகேஷன், 2/40பி, இரண்டாம் தளம், ராம்நகர், நங்கநல்லூர், சென்னை 61, விலை 200ரூ. ராஜீவ்காந்தி படுகொலை பின்னணியில் தனக்கு தெரிந்த விஷயங்களை வெளியிட்டு உள்ளார், திருச்சி வேலுசாமி. திடுக்கிடும் தகவல்கள் பல இடம்பெற்று இருக்கின்றன. ராஜீவ் கொலை, தொடர்பாக அவர் எழுப்பிய வினாக்கள் இன்னும் விடைகாண முடியாமலே இருக்கின்றன என்பதை உணரமுடிகிறது. அத்துடன் அன்பு கணவரை பறிகொடுத்த சோனியாகாந்தி, பாசத் தந்தையை இழந்த பிரியங்கா காந்தி ஆகியோர் வேதனைகளின் மவுன வெளிப்பாடுகள் நெஞ்சை கனக்கச் செய்கிறது. நன்றி: தினத்தந்தி, […]

Read more

பெயரற்றது

பெயரற்றது, சயந்தன், தமிழினி, 63, நாச்சியம்மை நகர், சேலவாயல், சென்னை 51, பக்.128, விலை-90ரூ. போருக்குப் பிந்தையது ஈழத்துப் படைப்புகள், காத்திரமான யுத்த இலக்கியங்களாக உருவாகி வருகின்றன. சுவிஸ் நாட்டில் வசிக்கும் ஈழத் தமிழரான சயந்தன் எழுதியுள்ள பெயரற்றது. புலம்பெயர் இலக்கியத்தின் இன்னோர் உலகத்தை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. மொத்தம் எட்டு கதைகள். அனைத்துமே போரின் வலிகளைப் பேசுகிறது. தமிழ் டைகர்ஸ் பிறீடம் பைட்டர்ஸ் என்ற சிறுகதை, புகலிடத்தில் மொழிப்பெயர்ப்பாளராக வேலை செய்யும் ஒருவருடைய குறிப்பு. தாய்நாட்டில் வாழ முடியாத சூழல் நிலவுவதை நிரூபித்தாக வேண்டிய […]

Read more

கச்சத்தீவு

கச்சத்தீவு,(தமிழக மீனவர்களின் தன்னுரிமைப் போராட்டம்), ஆர். முத்துக்குமார், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், 10/2, (8/2) போலீஸ் குவாட்டர்ஸ் சாலை, தி.நகர், பேருந்து நிலையம் பின்புறம், தியாகராயநகர், சென்னை 17, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-266-6.html கச்சத்தீவை சூழ்ந்து நிற்பது தண்ணீர் அல்ல. தமிழனின் கண்ணீர். நாகை, ராமேஸ்வரம், ராமநாதபுரம் மீனவர்களின் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட இடம் மட்டுமல்ல அது. தமிழகத்தின் வளத்தோடு சம்பந்தப்பட்டது. இப்போது இந்தியாவின் மானத்தோடு தொடர்புடையது. கடந்த 40 ஆண்டு காலமாக 600க்கும் மேற்பட்ட மீனவர்களைக் கொலை […]

Read more
1 753 754 755 756 757 841