பஞ்ச தந்திரக் கதைகள்

பஞ்ச தந்திரக் கதைகள், ஜெ. குமணன், பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம், 167, கந்தசாமி வீதி, ஒலம்பஸ், இராமநாதபுரம், கோவை – 45. விலை ரூ. 156 மகிளாரூப்பியம் நகரை ஆண்ட அமரசக்தி என்ற திறமையான மன்னனுக்கு மூன்று புதல்வர்கள். இம்மூவரும் சர்வ முட்டாள்கள். வருத்தம் அடைந்த மன்னன், தனது ராஜகுருவின் ஆலோசனைப்படி, சகல கலைகளையும் கற்றுத் தேர்ந்த விஷ்ணு சர்மனை அணுகி, தனது பிள்ளைகளைப் புத்திசாலிகளாக மாற்றித் தர கோரினான். விஷ்ணுசர்மன் அதை ஏற்று ஆறே மாதங்களில் சாதித்துக் காட்டுகிறார். அதற்கு அவர் […]

Read more

அவர்தான் கலைவாணர்

அவர்தான் கலைவாணர், சோழ. நாகராஜன், தழல் பதிப்பகம், 25, பாண்டியன் நகர் 3-வது தெரு. கரிசல் குளம், மதுரை – 18. விலை ரூ. 50 கலையில் கஷ்டமானது, சிரிக்க வைப்பது என்பார்கள். அதைவிடக் கஷ்டமானது சிரிப்போடு சிந்திக்கவும் வைப்பது. இரண்டையும் ஒருசேரச் செய்து காட்டிய கலைஞன், என்.எஸ். கிருஷ்ணன். கலைக்காக மட்டுமல்ல அவரது கொடைக்காகவும் இன்று வரை நினைக்கப்படுகிறார். ‘எப்போது ஒருவன் லாப நஷ்டத்தைப் பற்றிக் கவலைப்பட ஆரம்பிக்கிறானோ, அப்போதே அவனிடம் இருக்கும் கலைத்திறமை போய்விடும்’ என்று சொன்ன மகத்தான மனிதனின் சுருக்கமான […]

Read more

முல்லை பெரியாறு – வைகை அணைக்கட்டுகளின் பசுமை வரலாறு

முல்லை பெரியாறு – வைகை அணைக்கட்டுகளின் பசுமை வரலாறு, எஸ். வர்க்கீஸ் ஜெயராஜ், பக். 150, பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை – 14. விலை ரூ. 150 முல்லை பெரியாறு அணை கட்டப்பட்ட வரலாறும், அதற்கடுத்து பல ஆண்டுகள் கழித்து வைகை அணை கட்டப்பட்டதன் வரலாறும் மிகச் சுருக்கமாக அழகாக விளக்கப்பட்டுள்ளது. இந்த நூலின் பின் இணைப்பில் உள்ள குறிப்புதவி நூல்கள் மற்றும் அரசு ஆணைகள், பத்திரிகைக் குறிப்புகள் ஆகியன இந்த நூலின் புள்ளிவிவரங்கள் ஓர் ஆவணம் என்பதை மெய்ப்பிக்கின்றன. பெரியாறு அணையில் பென்னிகுக்கின் […]

Read more

2012 யுக மாற்றத்தின் வாசல்

2012 யுக மாற்றத்தின் வாசல், மா. கணேசன், பக்.164, புதிய மானுடம் பிரசுரம், 222, அசோக் நகர் – II, காந்திநகர் அஞ்சல், வடக்குத்து, குறிஞ்சிப் பாடி தாலுகா. விலை ரூ. 100 ‘டிசம்பர் – 21, 2012 உலகம் அழிந்துவிடும், மாயன்களின் நாள்காட்டி அதோடு முடிந்துவிட்டது,’ இந்தச் செய்தி உலகெங்கும் தற்போது கிண்டலும் கேலியுமாக விவாதிக்கப்பட்டு வருகிறது! ‘யாரும் நம்பத் தயாராக இல்லை, நம்பவும் வேண்டாம் – ஆனால், நம் கண் முன்னே தினம் தினம் நடந்துவரும் நிகழ்வுகளும், நாம் படிக்கும் செய்திகளும், […]

Read more

தமிழ்நாடு (நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள்)

தமிழ்நாடு (நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள்), திரட்டித் தொகுத்தவர்: ஏ.கே. செட்டியார், சந்தியா பதிப்பகம், 57, 53வது தெரு, 9வது அவென்யூ, அசோக்நகர், சென்னை – 600083. விலை ரூ. 180 தமிழில் பயண இலக்கியத்தின் அடையாளமாக இன்று நிலைத்திருக்கும் பெயர், ‘உலகம் சுற்றிய தமிழன்’ ஏ.கே. செட்டியார். அவர் எழுதிய புகழ் பெற்ற பயண இலக்கிய நூல்கள், பல நாடுகளைப் பற்றிய அரிதான பழங்கால சித்திரங்களைத் தருபவை. ஏ.கே. செட்டியார் மற்றவர்கள் எழுதிய பயணக் கட்டுரைகளை இந்த நூலில் தொகுத்துள்ளார். தமிழகத்திற்குள் பலரும் […]

Read more

சோதனைகளை சாதனைகளாக மாற்றுவது எப்படி?

சோதனைகளை சாதனைகளாக மாற்றுவது எப்படி?, லோகநாயகி, குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை – 10. பக். 224, விலை ரூ. 130 குமுதம் சிநேகிதி ஆசிரியர் லோகநாயகி, சிநேகிதிகளின் கேள்விகளுக்கு அளித்த பதில்களின் தொகுப்பே இந்நூல். கேள்விகளுக்கான பதில்கள்தான் என்றாலும், பதில்களில் உங்களுக்குக் கிடைக்கும் செய்திகள் ஏராளம். அறிவியல், ஆன்மிகம், குடும்ப உறவுகள், ஆண்-பெண் மன இயல்புகள், பயணம் குறித்த அனுபவங்கள், வரலாற்றுச் சான்றுகள், சினிமா உள்ளிட்ட நாட்டு நடப்புகள், அரசியல் விமர்சனங்கள் என்று தகவல் பெட்டகமாக விளங்குகிறது. பெண்கள் முன்னேற்றம், தன்னம்பிக்கை, சோதனைகளை சாதனைகளாக […]

Read more

வள்ளுவரின் வித்தியாசமான பார்வைகள்

ஆலந்தூர் கோ.மோகனரங்கன் கவிதைகள், ஆலந்தூர் கோ.மோகனரங்கன், வசந்தா பதிப்பகம், ஆதம்பாக்கம், சென்னை – 88. விலை ரூ. 170 எளிமையான கவிதைகளுக்குப் பெயர் பெற்றவரான ஆலந்தூர் கோ.மோகனரங்கன், பள்ளிகளில் தமிழ்ப்பாட நூல்களின் வாயிலாக அறிமுகமானவர். அவரது தொகுப்பின் நான்காம் பாகம் இது. எளிமையும் இனிமையும் கலந்த இவரது கவிதைகள் இதுவரை இதுபோன்ற பெரிய தொகுப்பாக வந்ததில்லை என்பது குறிப்பிட வேண்டியது.   —   வள்ளுவரின் வித்தியாசமான பார்வைகள், கலியராஜன், மணிமேகலைப் பிரசுரம், சென்னை, விலை ரூ. 100 திருக்குறளில் கூறப்பட்டுள்ள கருத்துகளை நுட்பமாக […]

Read more

நாம் இந்தியர்கள்! பெருமிதம் கொள்வோம்!

நாம் இந்தியர்கள்! பெருமிதம் கொள்வோம்!, தொகுப்பாசிரியர்: ப. இலட்சுமணன், மாதவ் பப்ளிகேஷன்ஸ், டி-3, வசந்தம் அபார்ட்மென்ட், 1/338, சபரி சாலை, மடிப்பாக்கம், சென்னை – 91. விலை ரூ. 60   உலகின் பழம் பெருமை மிக்க நாடுகளில் இந்தியா முன்னோடியானது என்பதற்கு உரிய ஆதாரபூர்வமான தகவல்கள் சுருக்கமாகவும், சுவையாகவும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. பல நாடுகளில் மக்கள் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்தபோது, இந்தியா சிறப்பான கலாசாரம், பண்பாடு கொண்ட மக்களாக மட்டுமல்லாமல், அறிவியல், அரசியல், ஆன்மீகம், இலக்கியம், தத்துவம், மருத்துவம், கல்வி, பொறியியல், வானவியல், கட்டடவியல்… […]

Read more

ஏன் வேண்டும் தமிழ்த் தேசியம்

ஏன் வேண்டும் தமிழ்த் தேசியம், கோவை ஞானி, புதுப்புனல் வெளியீடு, பாத்திமா டவர் (முதல் மாடி), 117, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, ரத்னா கபே எதிரில், சென்னை – 5. விலை ரூ. 50   பார்வையற்ற கோவை ஞானி, தமிழ்த் தேசியத்துக்கு வெளிச்சம் பாய்ச்சுவதற்காக எழுதிய புத்தகம் இது. தமிழ்த் தேசியம் என்ற சொல், இன்று அரசியல் மற்றும் அறிவுச் சூழலில் அதிகமாக உச்சரிக்கப்படுகிறது. ‘தமிழகத்தை தமிழன்தான் ஆளவேண்டும்’, ‘இங்கு வாழும் மற்ற மொழிக்காரர்கள் வெறும் பார்வையாளர்கள் மட்டுமே… பங்கேற்பாளர்கள் ஆகக்கூடாது’, ‘திராவிடன் என்று […]

Read more

சங்கப்பலகை

சங்கப்பலகை, சோலை, நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானி ஜான்சான் ரோடு, சென்னை – 14. விலை ரூ. 125 முதுபெரும் பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான சோலை, நக்கீரன் இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. கறார் தன்மை மிகுந்த விமர்சனங்களோடு பல்வேறு தலைப்புகளில் எழுதியிருக்கிறார் சோலை. தி.மு.க., அ.இ.அ.தி.மு.க இணைப்புக்காக எம்.ஜி.ஆர். போட்ட ரகசியத் திட்டம் குறித்த கட்டுரை இளைய தலைமுறை படிக்க வேண்டிய ஒன்று.   —   உங்கள் மனசு, மனநல ஆலோசகர் வி. சுனில் குமார், நக்கீரன் வெளியீடு, 105, ஜானி […]

Read more
1 825 826 827 828 829 841