செல்லப் பிராணிகள் வளர்ப்பு

செல்லப் பிராணிகள் வளர்ப்பு, கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 350ரூ. நன்றி மறவாமைக்கு எடுத்துக்காட்டாய் கூறப்படுவது நாய். காவல் காப்பதிலும், ஆபத்து காலத்தில் உதவுவதிலும் நாய்க்கு நிகரான விலங்கு இல்லை. அதுவே மனிதர்களின் செல்லப் பிராணிகளில் முதலிடம் பெறுகிறது. அத்தகைய நாய்களை முறையாக வளர்பப்து எப்படி? என்பது பற்றி பல சுவையான, சுவாரஸ்யமான தகவல்களை இந்த நூலில் ஆசிரியர் வாண்டு மாமா விவரித்துள்ளார். மேலும் பூனை வளர்ப்பு, முயல் வளர்ப்பு, மீன் வளர்ப்பு, வெள்ளெலி, சீமைப் பெருச்சாளி, தேனீ வளர்ப்பு போன்றவை பற்றியும் இந்த […]

Read more

நீங்கள் அறிய வேண்டிய முக்கிய சட்டங்கள்

நீங்கள் அறிய வேண்டிய முக்கிய சட்டங்கள், வழக்கறிஞர் முனைவர் சோ. சேசாசலம், சுபா பதிப்பகம், சென்னை, விலை 40ரூ. பல்வேறு நிலச்சட்டங்கள், தகவல் அறியும் உரிமைச்சட்டம், மதிப்புக் கூட்டுவரி வெள்ளை அறிக்கை, மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு முதலியவை பற்றி விரிவாகக் கூறுகிறார் வழக்கறிஞர் முனைவர் சோ. சேசாலசலம். பயனுள்ள நூல். இதே நூலாசிரியர் எழுதிய மகளிருக்கான சட்டங்கள் விலை 50ரூ. நன்றி: தினத்தந்தி, 12/8/2015.   —- மூலிகை மருத்துவம், டாக்டர் எம்.எல்.ஜே. லார்ட்வின் லாரன்ஸ், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 50ரூ. தமிழ் […]

Read more

அனுமன் கதைகள்

அனுமன் கதைகள், திருப்பூர் குமரன் பதிப்பகம், சென்னை, விலை 260ரூ. ராமாயணத்தில் முக்கிய கதாபாத்திரமாக வலம் வருபவர் ஆஞ்சிநேயர். அவருடைய சாகசங்களை அனைவரும் அறிவோம். ஆனால் அவர் பிறப்பைப் பற்றி அறிந்தவர்கள் ஒரு சிலரே இருப்பார்கள். வானுலகில் இருந்து பூமிக்கு வந்த புஞ்சிக்ஸ் தலை என்ற அப்சரஸ் குரங்கு முகம் கொண்ட ஒரு முனிவரை கேலி செய்ததால், குரங்காகி விடுகிறாள். பிறகு சிவனை நோக்கி தவம் செய்ததால், சிவன் அவர் முன் தோன்றுகிறார். “சிறிது காலம் குரங்காய் வாழ்ந்து, மிகுந்த பராக்கிரமம் உடைய ஒரு […]

Read more

நடிப்பிசைப்புலவர் கே.ஆர். ராமசாமி நினைவுகள்

நடிப்பிசைப்புலவர் கே.ஆர். ராமசாமி நினைவுகள், வசந்தா பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. நாடகத்துறையிலும், சினிமா துறையிலும் சாதனை படைத்தவர் கே.ஆர். ராமசாமி. பாகவதர், பி.யு. சின்னப்பா, டி.ஆர். மகாலிங்கம் போல, சொந்தக் குரலில் பாடி நடித்தவர். அறிஞர் அண்ணா வசனம் எழுதிய வேலைக்காரி, ஓர் இரவு, சொர்க்கவாசல் முதலான படங்களில் நடித்து புகழ் பெற்றவர். தி.மு. கழகத்தில் உறுப்பினராக இருந்ததால், புராணப் படங்களில் நடிக்க மறுத்தவர். சம்பாதித்த பணத்தில் பெரும் பகுதியை கட்சி நலனுக்காக செலவிட்டவர். அவருடைய வாழ்க்கை வரலாற்றை, அவரோடு நாடகத்தில் நடித்தவரும், […]

Read more

காவ்யா ஒரு காவியம்

காவ்யா ஒரு காவியம், ஆரூர்தாஸ், பூம்புகார் பதிப்பகம், சென்னை, விலை 125ரூ. 1000 திரைப்படங்களுக்கு மேல் வசனம் எழுதி சாதனை படைத்த ஆரூர்தாஸ், இப்போது நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகள் எழுதுவதிலும் சாதனை படைத்து வருகிறார். அவர் எழுதிய காவ்யா ஒரு காவியம், இலட்சியப் பயணம், இதய இலக்கணம், அரண்மனை வாரிசு ஆகிய 4 குறுநாவல்கள் இப்புத்தகத்தில் அடங்கியுள்ளன. பாசமலர் போன்ற காவியங்களை படைத்தவர் அல்லவா? இந்த குறுநாவல்களிலும் அவரது முத்திரையைப் பதித்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 12/8/2015.   —- மருத்துவ நோபல், நெல்லை சு. […]

Read more

மீண்டும் ஒரு மழைக்காலத்தில்

மீண்டும் ஒரு மழைக்காலத்தில், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, விலை 210ரூ. கவிஞர் தியாரூ எழுதிய 21 சிறுகதைகளின் தொகுப்பு. இந்த நூலில் இடம் பெற்றுள்ள ஒவ்வொறு சிறுகதையையும் சமுதாயக் கண்ணோட்டத்துடனும், ஆழ்ந்த மனித நேயம் வெளிப்படும் விதமாகவும் எழுதியுள்ளார். சிறுகதை வளர்ச்சிக்கு ஆசிரியரின் அழகிய பங்களிப்பு இந்த நூல் என்றால் அது மிகையல்ல. எழுத்து என்பது சமூக நோக்கிற்கான ஓர் உபகரணம்-கருவி என்பதே உண்மை என்று அணிந்துரையில் கவுதம நீலாம்பரன் கூறி இருப்பதை உண்மை ஆக்கியருக்கிறார். நன்றி: தினத்தந்தி, 12/8/2015.   […]

Read more

ஏற்றுமதி இறக்குமதி வணிகம்

ஏற்றுமதி இறக்குமதி வணிகம், ஜஸ்டின் பால் ராஜீவ் அசேர்கர் , தமிழில் லயன் எம். சீனிவாசன், கற்பகம் புத்தகாலயம், சென்னை, விலை 250ரூ. ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் குறித்து ஜஸ்டின் பால் ராஜீவ் அசேர்கர் எழுதிய நூல். இதைத் தமிழில் லயன் எம்.சீனிவாசன் மொழிபெயர்த்துள்ளார். அயல்நாட்டு வர்த்தக நிறுவனங்களின் கட்டமைப்பு, இறக்குமதி ஏற்றுமதி ஆவணங்களை தயாரிக்கும் முறை, சுங்க இலாகாசெயல்பாடுகள் மற்றும் சரக்குப் போக்குவரத்து பற்றி விரிவாக விளக்கியுள்ளார். ஏற்றுமதி இறக்குமதி வணிகம் சவால்கள் நிறைந்த பணியாகும். அதில் ஈடுபடுவோர் கையாள வேண்டிய நெறிமுறைகள் […]

Read more

குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கான அடிப்படைகள்

குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கான அடிப்படைகள், டாக்டர் இரா. விருத்தகிரி, வானதி பதிப்பகம், சென்னை, விலை 250ரூ. குழந்தை வளர்ப்பு பற்றிய சிறந்த புத்தகம் இது. குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும், அவர்களுக்கு வரக்கூடிய நோய்கள் எவை, அதற்கு என்ன சிகிச்சை அளிக்க வேண்டும், அவர்களுக்குக் கொடுக்கக்கூடிய சத்துள்ள உணவுகள் எவை என்பதையெல்லாம் விவரமாகப் படங்களுடன் விளக்குகிறார், டாக்டர் இரா. விருத்தகிரி.  ஆண், பெண் குழந்தைகள் வாலிப வயதை அடையும்போது, அவர்கள் உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள், அக்காலக்கட்டத்தில் பெற்றோர்களின் கடமை ஆகியவை பற்றியும் ஆசிரியர் விளக்குகிறார். அளவிலும், […]

Read more

உதயணகுமார காவியம்

உதயணகுமார காவியம், உமா பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. ஐம்பெரும் காப்பியங்கள் போன்ற ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றான உதயணகுமார காவியம் சமண காப்பியத்தை குறிப்பது. இது விருத்தப்பாவில் அமைந்தது. ஆறு காண்டங்களில் 367 பாடல்களைக் கொண்டது. அப்பாடல்களுக்கு விளக்கவுரை கொடுத்திருக்கிறார் முனைவர் பழ. முத்தப்பன். நன்றி: தினத்தந்தி, 5/8/2015.   —- திருக்குறள் சீர் ஏழுக்கு ஏழு வியனுரை, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, விலை 75ரூ. இதுவரை திருக்குறளுக்கு அரிய பெரிய சான்றோர்கள் உரை எழுதியுள்ளனர். ஒருவரி உரையும் எழுதியுள்ளனர் சிலர். இன்னும் எளிய […]

Read more

நீரிழிவு நோயில் உணவின் அற்புதங்கள்

நீரிழிவு நோயில் உணவின் அற்புதங்கள், யசோதரை கருணாகரன், விகடன் பிரசுரம், விலை 115ரூ. நீரிழிவு நோய் பற்றிய நல்ல விளக்கம் மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த என்ன விதமான உணவைச் சாப்பிடலாம் என்பதுடன், அந்த உணவு வகைகளைத் தயாரிக்கும் முறையும் கொடுத்து இருப்பது பயன் உள்ளதாக இருக்கிறது. நன்றி: தினத்தந்தி, 5/8/2015.   —- சோதிடப் பேரகராதி, சோதிட சாஸ்திரி எஸ். கூடலிங்கம் பிள்ளை, அழகு பதிப்பகம், சென்னை, விலை 180ரூ. சோதிட சாஸ்திரத்தில் இடம் பெற்றுள்ள செய்யுள் நடைகளை அனைவரும் தெரிந்து கொள்ளும் […]

Read more
1 120 121 122 123 124 223