ஆலயங்களின் உட்பொருள் விளக்கம்

ஆலயங்களின் உட்பொருள் விளக்கம், இலஞ்சி ஏ. சொக்கலிங்கம், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், முதல் பாகம் விலை 260ரூ., இரண்டாம் பாகம் விலை 240ரூ. ஆலயங்களின் என்பது இந்து சமயத்தின் அஸ்திவாரமாகும். கோவில்களில் செய்யப்படும் அபிஷேகம், அர்க்கியம் போன்ற கிரிகைகளின் உண்மைத் தன்மை குறித்தும், தீப ஆராதனை, நைவேதனம் முதலியவற்றின் அவசியம் குறித்தும் இந்த நூலில் இலஞ்சி ஏ. சொக்கலிங்கம் எளிய முறையில் விளக்கியுள்ளார். கொடி மரத்தின் அறிகுறியும், விழாக்களின் காரணங்களும் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 29/7/2015.   —- சைவமும் […]

Read more

பெருவெடி பிரபஞ்ச வரலாறு

பெருவெடி பிரபஞ்ச வரலாறு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், அறிவியல் வெளியீடு, சென்னை, விலை 75ரூ. குழந்தைகளுக்கான சிறந்த அறிவியல் அறிமுக நூல். பெருவெடிப்பு நிகழ்வில் இருந்து பிரபஞ்சம் உருவாகி, கோள்களும், உயிரினங்களும் வந்த வரலாற்றை குழந்தைகளுக்காக படக்கதைபோல வண்ணப்படங்களுடன் எளிமையாக உருவாக்கி வழங்கி உள்ளது தமிழ்நாடு அறிவியல் இயக்கம். நன்றி: தினத்தந்தி, 29/7/2015.   —- நவக்கிரக தோஷ நிவர்த்திக்காக சித்தர்கள் அருளிய நெறிமுறைகள், சகுந்தலை நிலையம், சென்னை, விலை 35ரூ. துன்பம் தருகிற கிரகங்களை வேதங்களில் ரிஷிகள் உபதேசித்த நெறிமுறை வணங்கி வழிபட்டால் […]

Read more

நேரு முதல் மோடி வரை

நேரு முதல் மோடி வரை, நமது பிரதமர்களின் கதை, ரா. வேங்கடசாமி, சூரியன் பதிப்பகம், விலை 100ரூ. இந்திய மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசித்து வாழ்வதற்கு, தங்கள் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் ஜனநாயக சூழலைப்பெறுவதற்கு கணிசமான பங்களிப்பைச் செய்த நம் பிரதமர்களின் தனிப்பட்ட வாழ்வு மற்றும் பொதுவாழ்வு சுவாரசியங்களைச் சொல்கிற நூல். நன்றி: குமுதம், 3/8/2015. —- வானொலித் தகவல்கள், தென்கச்சி கோ. சுவாமிநாதன், கீதம் பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 110ரூ. அறிந்ததை, புரிந்ததை, உணர்ந்ததை பிறருக்கும் பயன்படவேண்டும் என்ற எண்ணத்தினால் பாமரனும் புரிந்து […]

Read more

நல்லது நடந்தால் நல்லது

நல்லது நடந்தால் நல்லது, ஏர்வாடி ராதாகிருஷ்ணன், வானதி பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. ஏர்வாடி ராதாகிருஷ்ணன், சிறந்த கவிஞர் என்பதை அனைவரும் அறிவர். உரைநடையிலும் அவருக்கு மிக்க ஆற்றல் உண்டு என்பதை இந்நூல் எடுத்துக் காட்டுகிறது. இதில் 23 கட்டுரைகள் உள்ளன. எல்லாமே கருத்தாழம் மிக்க கட்டுரைகள். தமிழால் முடியும் என்ற கட்டுரையில் கீழ்க்கண்ட தகவல்களைக் கூறுகிறார். உலக மொழிகள் 2800ல் செம்மொழி என்கிற சிகரச் சிறப்பைப் பெற்ற மொழிகள் 6 மட்டுமே. அந்த ஆறில் ஒன்று தமிழ் என்பது தமிழுக்குப் பெருமை. சில […]

Read more

கிரவுஞ்சப் பட்சிகள்

கிரவுஞ்சப் பட்சிகள், வைதேகி, தமிழில் ஜெயந்தி, சாகித்திய அகாதெமி, சென்னை, விலை 110ரூ. கன்னடத்தில் பிரபல எழுத்தாளரான வைதேகி படைத்த சிறுகதைகளின் தொகுப்பு நூல். இதிலுள்ள எல்லாக் கதைகளிலும் ஆண், பெண் இணைந்த உலகமொன்று உள்ளது. அந்த உலகத்தில் பிரிதலும் உண்டு, சுவாரசியமான பேச்சு மட்டுமின்றி, துன்பத்தின் வரிகளும் இழையோடுகிறது. சந்தோஷத்தின் உச்சத்திலிருந்தாலும், அதனூடே துக்கத்தின் சாயலும் படிந்துள்ளது. மனதைத் தொடும் இச்சிறுகதை தொகுப்பு நூல் சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழாக்கம் ஜெயந்தி. நன்றி: தினத்தந்தி, 29/7/2015.   —- […]

Read more

வரலாறு படைத்த தமிழ்ப் புதினங்கள்

வரலாறு படைத்த தமிழ்ப் புதினங்கள், கண்ணகி கலைவேந்தன், தமிழ் ஐயா வெளியீட்டகம், தஞ்சை, விலை 500ரூ. தமிழில் புகழ் பெற்று விளங்கும் நாவல்கள் பற்றி, ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. அதில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். கல்கியின் சிவகாமியின் சபதம், டாக்டர் மு. வரதராசனாரின் அகல் விளக்கு, அகிலனின் நெஞ்சின் அலைகள், வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம், தி. ஜானகிராமனின் மோகமுள் உள்பட 89 நாவல்கள் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் இதில் அடங்கியுள்ளன. சிவகாமியின் சபதம் நாவலை 4 பேர்கள் 4 கோணங்களில் ஆராய்ந்துள்ளனர். […]

Read more

கம்பரின் நூலகம் ஆழ்வார்கள்

கம்பரின் நூலகம் ஆழ்வார்கள், நயவுரைநம்பி டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன், ஆழ்வார்கள் ஆய்வு மையம், சென்னை, விலை 200ரூ. வால்மீகி எழுதிய ராமாயணத்தில், ராமனை ஒரு மாவீரனாகத்தான் சித்தரிக்கிறார். திருமாலின் அவதாரம் என்று கூறவில்லை. ராமனை திருமாலின் அவதாரம் என்று எழுதியவர் கம்பர்தான். கம்பராமாயணத்தில், பலஇடங்களில் அடியெடுத்துக் கொடுத்தவர்கள் ஆழ்வார்கள் என்பதை ஆதாரத்துடன் எடுத்துக்கூறுகிறார் நயவுரைநம்பி டாக்டர் எஸ். ஜெகத்ரட்சன். கம்பராமாயணத்தின் சுவையான பல பகுதிகளை எடுத்துக்கூறி, அவற்றுக்கு அழகிய நடையில் பொருள் கூறுகிறார் ஜெகத்ரட்சகன். எனவே நூலைப் படித்து முடிக்கும்போது, கம்பராமாயணத்தையே படித்து முடித்த […]

Read more

கனவு சினிமா

கனவு சினிமா, க. மணிகண்டன், டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை, பக். 128, விலை 100ரூ. ஒரு உதவி இயக்குநரின் அனுபவங்களின் பதிவாக மட்டும் நில்லாமல், சினிமா இயக்குநராக வேண்டும என்ற கனவோடு வரும் இளைஞர்களுக்கு சொல்லித்தரும் அனுபவப்பாடமாகவும் இந்நூலைத் தந்துள்ளார் நூலாசிரியர். வாய்ப்புக்காக பல இயக்குநர்களைத் தேடிப் போனதை, கேட்டறிந்த உண்மைகளை, கண்டுணர்ந்த அனுபவங்களை கனவு சினிமாவாக பதிவு செய்துள்ளார். வாசிப்பவர்களுக்கு சுவாரசியத்தைத் தர கற்பனை கலந்திருக்கிறார். அதுதானே சினிமா. சினிமாவை சுவாசிப்பவர்கள் வாசிக்க வேண்டிய நூல். நன்றி: குமுதம், 3/8/2015.   […]

Read more

சங்கப்பாடல்களில் சாதி தீண்டாமை இன்ன பிற…,

சங்கப்பாடல்களில் சாதி தீண்டாமை இன்ன பிற…, வீ.எஸ். ராஜம்,மணற்கேணி பதிப்பகம், சென்னை, பக். 80, விலை 60ரூ. சாதி, தீண்டாமை என்ற கோட்பாடுகள் தமிழகத்தில் ஏன் தோன்றின, எப்போது தோன்றின? குறிப்பாக சங்க இலக்கியங்களில் அவை தென்படுகின்றனவா? என்ற தேடலின் முயற்சியே இந்நூல். சாதி, தீண்டாமை என்கிற கோட்பாடுகள் காலந்தோறும் எப்படி உருப்பெற்றன என்ற வகையிலும் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நன்றி: குமுதம், 3/8/2015.   —- வல்லினம் நீ உச்சரித்தால், முகமது மதார், வாசகன் பதிப்பகம், சேலம், விலை 50ரூ. ஒவ்வொருவர் வாழ்க்கையின் ஏதாவது […]

Read more

யோகாசனமும் மருத்துவப் பயன்களும்

யோகாசனமும் மருத்துவப் பயன்களும், டாக்டர் ரேவதி பெருமாள்சாமி, கண்ணப்பன் பதிப்பகம், சென்னை, பக். 96, விலை 60ரூ. நோயின்றி நாம் நூறு ஆண்டுகள் வாழ வழிவகுக்கும் சக்தி யோகாசனங்களுக்கு உண்டு என்கிறார் நூலாசிரியர். நாம் முறையாக சோகாசனங்கள் செய்வதன் மூலம் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக நோயின்றி வாழமுடியும் என்கிறார். மனதில் அமைதி ஏற்படுதல், உடல் வலிமை பெறுதல், இதய பாதுகாப்பு உள்ளிட்ட யோகாவின் பயன்களைக் கூறி, அந்த யோகாசனங்களை எப்படிச் செய்வது என்பதையும் விளக்கும் நூல். நன்றி: குமுதம், 3/8/2015.   —- 1001 […]

Read more
1 119 120 121 122 123 223