திருக்குறள் (தமிழ் ஆங்கில உரை)

திருக்குறள் (தமிழ் ஆங்கில உரை), நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 200ரூ. வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ் நாடு என்பது பாரதியாரின் பாராட்டுரை. வள்ளுவர் தந்த பொதுமறையாம் திருக்குறள், தனி மனித ஒழுக்கம் உயர்வடைய வேண்டும் என்ற உன்னத நோக்கில் எழுதப்பட்டது. திருக்குறளுக்கு பலரும் உரை எழுதியுள்ளனர். இருந்தபோதிலும், ‘திருக்குறள் தூதர்’ மு.க. அன்வர் பாட்சா, எளிய உரையை எல்லோருக்கும் புரியும் வகையில் தந்திருக்கிறார். மேலும், ஆங்கிலம் அறிந்த மாணவர்கள் பயனடையும் வகையில் பாதிரியார்கள் டபிள்யூ.எந்.ட்ரூ, ஜான் லாசரஸ் […]

Read more

வடலிமரம்

வடலிமரம், ஐரேனிபுரம் பால்ராசய்யா, முதற்சங்கு பதிப்பகம், நாகர்கோவில், பக். 124, விலை 80ரூ. பனைமரத்தின் விடலைப் பருவத்தை வடலிமரம் எனக்கூறுவது உண்டு. அதே விடலைப் பருவத்தை ஒத்த இருவரின் காதலில், அந்த மரத்தையும் காட்சிப்படுத்தியுள்ளார் நூலாசிரியர். சாதியைக் காரணம் காட்டி காதலைப் பிரிக்கிறார் கதை நாயகனின் தந்தை. இதனால் மதுவுக்கு அடிமையாகும் நாயகனை நல்வழிப்படுத்தும் முயற்சியாக காதலுக்கு சம்மதம் தெரிவிக்கிறார். கர்ப்பமுற்ற நிலையில் நாயகி காதலனை ஏற்கிறாளா அல்லது மறுக்கிறாளா என்பதை திரைப்பட பாணியில் காட்சியாக எழுதியுள்ளார் நூலாசிரியர். இடையிடையே காதலை, கவிதையாக தர […]

Read more

காலச் சப்பரம்

காலச் சப்பரம், விழிகள் பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. பாவல் கவிமுகில் எழுதிய கவிதைகளின் தொகுப்பு. சிறுவயதில் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சிகளின் மலரும் நினைவுகளாக கவிதை நடையில் உலா வருகின்றன. பேச்சு நடை வீச்சில் கவிதைகள் அமைந்துள்ளன. அமாவாசை கணக்கா ஒருத்தன் வெளுப்பா தேடுனாக்கா கைநகமும் கண்ணு முழியும்தான் ஆனா பேரு வெள்ளத்துரை என்பன போன்ற பாடல்கள். கிராமீய மணம் வீசுகின்றன. நன்றி: தினத்தந்தி, 15/7/2015.   —- நீ உன்னை அறிந்தால், ஜி. மீனாட்சி, வானதி பதிப்பகம், சென்னை, விலை 65ரூ. விண்வெளி, […]

Read more

வீரபாண்டிய கட்டபொம்மன் சில நிகழ்வுகளின் பதிவுகள்

வீரபாண்டிய கட்டபொம்மன் சில நிகழ்வுகளின் பதிவுகள், இதயவேந்தன் வாசகர் வட்டம், சென்னை, விலை 135ரூ. சிவாஜிகணேசன் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் முதலில் நாடக மேடையிலும் பிறகு வெள்ளித்திரையிலும் மாபெரும் சாதனை படைத்தது. அப்போது நடந்த விழாக்கள், தலைவர்களின் புகழாரங்கள், பத்திரிகை விமர்சனங்கள், சுவையான நிகழ்ச்சிகள் ஆகியவற்றை சிறப்பாகத் தொகுத்து, இந்தப் புத்தகத்தை உருவாக்கியுள்ள எஸ்.கே. விஜயன் பாராட்டுக்கு உரியவர். நிறைய படங்கள், அழகுக்கு அழகு சேர்க்கின்றன. சிவாஜி ரசிகர்கள் மட்டுமல்ல, எல்லோரும் படித்து ரசிக்கலாம். நன்றி: தினத்தந்தி, 15/7/2015.   —- நேர்மைக்கு கிடைத்த […]

Read more

பரபரப்பான வழக்குகள்

பரபரப்பான வழக்குகள், தந்தி பதிப்பகம், பக். 352, விலை 200ரூ. தினத்தந்தியில் வரலாற்றுச் சுவடுகள் நெடுந்தொடர் வெளியானபோது, அதில் பரபரப்பான வழக்குகள் என்ற தலைப்பில் இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் நடந்த இதயத்தை உறைய வைத்த கொலை வழக்குகளும், மக்கள் மத்தியில் பெரும் அனுதாபத்தை ஏற்படுத்திய எம்.ஜி.ஆர். சுடப்பட்ட வழக்கும் இடம் பெற்றன. இவை வாசகர்களிடையே மகத்தான வரவேற்பைப் பெற்றன. இது இப்போது தந்தி பதிப்பகம் சார்பில் நூலாக வெளிவந்துள்ளது. இருபதாம் நூற்றாண்டில் அகில உலகையே அதிர்ச்சி அடையச் செய்த நிகழ்ச்சி மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதாகும். […]

Read more

மக்கள் சமூகத்தின் மனசாட்சி

மக்கள் சமூகத்தின் மனசாட்சி, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, விலை 150ரூ. சிறந்த சிறுகதைகள் பலவற்றை எழுதி விருதுகள் பெற்றவரான பாரதி வசந்தன் எழுதியுள்ள கட்டுரைத் தொகுதி மக்கள் சமூகத்தின் மனசாட்சி. இலக்கியம், கலை, அரசியல், சமூகப் பிரச்சினைகள் என்று பல்வேறு பொருள்கள் பற்றிய 17 கட்டுரைகள் இதில் அடங்கியுள்ளன. பல்கலைக் களஞ்சியமாக இந்நூல் திகழ்கிறது. சுதந்திரப் போரில் பங்கு கொண்ட நாடகக் கலைஞர் விஸ்வநாததாஸ், மணிலாசனத்தில் அமர்ந்தபடி தேசபக்திப் பாடல்களை பாடிக்கொண்டே உயிர்நீத்த சம்பவத்தைப் படிக்கும்போது நெஞ்சம் நெகிழ்கிறது. மகாகவி பாரதியார் உயிர் நீத்தபோது […]

Read more

ஓடாத குதிரைகள்

ஓடாத குதிரைகள், கற்பக வித்யா பதிப்பகம், சென்னை, விலை 70ரூ. நாடகங்கள் நம் கண்முன் நடப்பவை, ஆனால் வானொலி நாடகங்கள் நம் செவிகளின் வழியே பாய்ந்து, காட்சிகளை நம் மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்துபவை. ஆகவேதான் வானொலி நாடகம் என்பது, காற்றில் வரையப்படுகிற ஓவியம் என்று வர்ணிக்கப்படுகிறது. இதை எழுதுவதற்கு மிகுந்த ஆற்றல் வேண்டும். வானொலி அண்ணா என்று புகழ்பெற்ற என்.சி. ஞானப்பிரகாசம், வானொலி நாடகங்கள் எழுதுவதில் மிகுந்த ஆற்றலும், அனுபவமும் உள்ளவர். அதற்கு ஓடாத குதிரைகள் என்ற இந்த புத்தகத்தில் அடங்கியுள்ள […]

Read more

பொது அறிவுப் புதையல்

பொது அறிவுப் புதையல், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 280ரூ. சின்னஞ்சிறு உயிரினங்களான பூச்சிகள், வண்டுகள் முதற்கொண்டு, பறவைகள், விலங்குகள் ஆகியவை குறித்த அறிவியல் கருத்துகளைக் கூறும் நூல். மேலும் பல அறியப்படாத வரலாறு, அறிவியல், புவியியல், வானியல், கலை, இலக்கியம், சமூகவியல் தொடர்பான செய்திகளையும் இந்த நூலில் ஆசிரியர் உ. கருப்பணன் தொகுத்து வழங்கியுள்ளார். சாதாரணமாக அனைவரும் தெரிந்து வைத்துள்ள தகவல்களாக இல்லாமல், புதிய செய்திகளையும் அரிய தகவல்களையும் தந்திருப்பது நூலுக்கு சிறப்பு சேர்க்கிறது. மாணவர்களுக்கும், போட்டித் தேர்வுக்ளில் பங்கேற்போருக்கும் பயனுள்ள நூல். […]

Read more

சில பாதைகள் சில பயணங்கள்

சில பாதைகள் சில பயணங்கள், பாரதி பாஸ்கர், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 144, விலை 90ரூ. சமூகத்தாக்கத்தோடு, சமுதாய முன்னேற்றத்திற்காக தங்களின் வாழ்க்கையை அர்ப்பணித்து, அதில் வெற்றி பெற்று வரலாற்றில் இடம் பெற்றுள்ள, மதுவிலிருந்து மீள வழிகாட்டும் சாந்தி ரங்கநாதன், அமில வீச்சுக்கு ஆளான அர்ச்சனா குமாரி, பாலியல் தொழிலாளர் குழந்தைகளைப் படிக்க வைக்கும் சோம்லே மாம், தேவதாசி ஒழிப்பில் வெற்றிகண்ட டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, சமையல் புத்தகம் முதலில் எழுதிய மீனாட்சி அம்மாள், கர்நாடக சங்கீதக் கலைஞர் வீணை தனம்மாள், கம்யூனிஸ்ட் பார்வதி […]

Read more

தமிழக வழிபாட்டு மரபுகள்

தமிழக வழிபாட்டு மரபுகள், திருச்சிற்றம்பலம் மு. அருணாசலம், சிவ. முருகேசன், சந்தியா பதிப்பகம், பக். 208, விலை 160ரூ. பேராசிரியர் மு. அருணாசலம் தமிழில் எழுதி வெளிவராத, தலவழிபாடு எனும் படைப்பையும் உள்ளிட்டு, அவர் ஆங்கிலத்தில் எழுதிய ஐந்து ஆய்வுக் கட்டுரைகளை தமிழாக்கம் செய்து, மொத்தம் ஆறு கட்டுரைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. வாதாபி கணபதிக்கு முன்பே, கணபதி வழிபாடு தமிழகத்தில் நிலவியது என்பதை, பிடியதன் உருஉமை கொளமிகு கரியது (பக். 20) என, அப்பரடிகள் பாடியதையும், புல்லிலை எருக்கம் ஆயினும் உடையவை […]

Read more
1 118 119 120 121 122 223