சித்தம் சிவம் சாகசம்

சித்தம் சிவம் சாகசம், இந்திரா சவுந்தர்ராஜன், விகடன் பிரசுரம், சென்னை, விலை 160ரூ. தமிழகத்தில் வாழ்ந்த பல சித்தர்கள் பற்றியும், அவர்கள் நிகழ்த்திக் காட்டிய சித்துக்கள் எந்த அளவு உண்மையானது என்பது பற்றியும் விறுவிறுப்புன வார்த்தைகளால் கொடுத்து இருககிறார் ஆசிரியர். குறிப்பாக போகர், கருவூர் சித்தர், திருமூலர் போன்றவர்களைப் பற்றிய அரிய குறிப்புகள் வியக்க வைக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 22/10/2014.   —- இனிமையான என் கிராமத்து கனவுகள், சிவ. வடிவேலு, மணிமேகலைப்பிரசுரம், சென்னை, விலை 55ரூ. பாமரர்கள், வானம், தேடல் போன்ற 54 […]

Read more

கந்தபுராணக் கதைகள்

கந்தபுராணக் கதைகள், கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 90ரூ. சூரபத்மனை வதம் செய்ய முடிவு எடுக்கும் சுப்பிரமணியர், அவனிடம் வீரபாகு தேவரை தூது அனுப்புகிறார். சூரபத்மன் மிகக் கொடியவன். வீரபாகு தேவரை அலட்சியம் செய்கிறான். இறுதியில் சூரபத்மனை சுப்பிரமணியர் கொன்று, அவன் உடலின் ஒரு பகுதியை மயிலாகவும், மற்றொரு பகுதியை வேலாகவும் ஏற்கிறார். இதை சுவைபட எழுதியுள்ளார் ஆசிரியர் குஹப்பிரியன். நன்றி: தினத்தந்தி, 22/10/2014.   —- வலி தாங்கும் மூங்கில், ஞா. சந்திரன், பாவை வெளியீடு, சென்னை, விலை 70ரூ. வாழ்க்கையில் மனிதர்கள், […]

Read more

குமரி நாட்டு வரலாற்று ஆவணங்கள்

குமரி நாட்டு வரலாற்று ஆவணங்கள், காவ்யா, சென்னை, விலை 250ரூ. இந்நூலில் குமரி மாவட்டம் சார்ந்த 21 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. குமரி மாவட்ட மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பல விவரங்கள் இந்நூலில் குவிந்துகிடக்கின்றன. அவற்றுள் நாகர்கோவிலில் இருந்த அரண்மனைகள், நாகராஜா கோவில், பத்மநாபபுரம், உதயகிரி கோட்டைகள், மாராயன், மகாராசன், குமரி நாடு கன்னியாகுமரி, சமண மதத்தின் பழமை, அனந்த பத்மநாபன், வேளிமலை முதலிய கட்டுரைகள் மிக முக்கியமானவை. குமரி நாட்டின் வரலாற்று ஆவணங்களைக் கொண்டதால் இந்நூலை குமரி நாட்டு கருவூலம் என்றே கூறலாம். […]

Read more

தேடி வந்த நன்றி

தேடி வந்த நன்றி, உடுமலை நன்னன், சிவா பதிப்பகம், திருப்பூர் மாவட்டம், விலை 100ரூ. அவள் தந்த பரிசு, கைதியின் மனைவி, செல்லப்பெண், கெட்டிக்காரி போன்று பெண்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 26 கதைகள் இந்நூலில் உள்ளன. இந்த சிறுகதைகள் ஏற்கனவே தமிழில் வெளிவந்து கொண்டிருக்கும் பல்வேறு வார, மாத இதழ்களில் வெளிவந்தவையாகும். இந்த கதைகள், வாழ்க்கையை நெறிப்படுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ளதால் அனைவரையும் சிந்திக்க வைக்கிறது. நன்றி: தினத்தந்தி, 27/8/2014.   —- விநாயகர், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், சென்னை, விலை 22ரூ. விநாயகர் […]

Read more

நபிமார்கள் வரலாறு

நபிமார்கள் வரலாறு, ஸலாமத் பதிப்பகம், சென்னை, விலை 40ரூ. சிறுவர், சிறுமியர்களுக்காக எழுதப்பட்ட நபிமார்கள் வரலாறு பாகம் 2ம் நூஹ் நபி, ஹுது, ஸாலிஹ் நபி ஆகியோரின் வரலாறு கூறப்பட்டுள்ளது. அபுல் ஹசன் அலீ அந்நத்வீ எழுதிய இந்த நூலை மவுலவி ஷேக் முகம்மது மழாஹிரி தமிழில் மொழி பெயர்த்துள்ளார். சிறுவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 22/10/2014.   —- அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில், தொகுப்பும் உரையும் ந. முருகேச பாண்டியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் […]

Read more

இனி ஒரு வலியில்லா பயணம்

இனி ஒரு வலியில்லா பயணம், விஜயஸ்ரீமகாதேவன், சூரியா கம்யூனிகேஷன், பக். 56, விலை 50ரூ. நோயின் தாக்கம் முற்றிய நிலையில், ஒன்றும் செய்ய முடியாது என டாக்டர் கைவிரித்து விடுகின்றனர். நோயின் தாக்கத்தால் ஏற்படும் வலியாலும், உறவுகள் புறக்கணிப்பால் மனரீதியான பாதிப்பாலும், மரண நாட்களை பொங்கும் துன்பத்த்லும் நோயாளிகள் துவண்டுவிடுகின்றனர். அத்தகையோருக்கு, மருத்துவ சிகிச்சைக்கு அடுத்த நிலையில் அன்பு, ஆதரவு, அரவணைப்பு என்ற வலி தணிப்பு சிகிச்சை பாலியேட்டிவ் கேர் தேவை. மேலை நாடுகளில் இந்த வகை சிகிச்சை முறை பிரபலம் என்றாலும், நம் […]

Read more

தமிழர் வாழ்வில் தகவலியல்

தமிழர் வாழ்வில் தகவலியல், வெ. நல்லதம்பி, வையவி பதிப்பகம், பக். 104, விலை 100ரூ தமிழர் வாழ்வில் தகவலியல் செயல்பாடு பற்றிய வழிமுறைகளை பற்றி ஆராய்கிறது இந்த நூல். பழந்தமிழ் இலக்கியங்கள், தகவல்களை பயன்படுத்தியுள்ள விதம் குறித்து விரிவாக பேசுகிறது. கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய் கேளாரும் வெட்ப மொழிவதாம் சொல் என்ற குறளை, தகவலியல் சார்ந்து மிகவும் நுட்பமாக விளக்கியுள்ளார். இது ஓர் உதாரணம்தான். இதுபோல் பழந்தமிழ் இலக்கியங்களில் தகவல் சார்ந்தும், அவற்றை வெளிப்படுத்திய விதம் சார்ந்தும் நுட்பமாக அணுகிய விவரிப்புகள் புத்தகத்தில் பரந்து […]

Read more

போதி தர்மர் பற்றிய அற்புதமான விஷயங்கள்

போதி தர்மர் பற்றிய அற்புதமான விஷயங்கள், மணிமேகலைப் பிரசுரம், சென்னை, விலை 200ரூ. உலக சரித்திரத்தில் பவுத்த நெறியை ஒளிரச் செய்த மிகப்பெரிய தமிழ் ஞானியான போதிதர்மர் பற்றிய அற்புதமான விஷயங்களைக் கூறும் நூல். போதி தர்மர், தென்னிந்தியாவில் தமிழ் மண்ணில் தோன்றிய ஞானப் பேரொளி, சீன தேசத்தை ஆட்கொண்டது மட்டுமல்லாது, உலக முழுக்கத் தமது அருள் மணம் கமழச் செய்த பெருமை இவருடையது. ஜென் தத்துவம், தற்காப்புக்கலை, மருத்துவ அறிவியல் என இவருடைய மனித நேயப் பணியின் எல்லை மிக விரிவானது. ஆசியாவின் […]

Read more

நோக்கு நூல்கள்-மரபும் புதுமையும்

நோக்கு நூல்கள்-மரபும் புதுமையும், இரா. பன்னிருகை வடிவேலன், தமிழாய்வு மன்றம், பக். 104, விலை 100ரூ. ஐந்து ஆய்வுக் கட்டுரைகளை உள்ளடக்கிய இந்த நூலில், ஆங்கில ஆய்வுக் கட்டுரை ஒன்றும் உள்ளது. நோக்கு நூல்கள் என, நிகண்டுகளைச் சுட்டிக் காட்டும் இந்த நூல், நிகண்டுகளின் பழைமையையும், அகராதியியலின் புதுமையையும் ஆய்வு நோக்கில் வெளிப்படுத்துகிறது. ஐந்திணை மஞ்சிகன் சிறுநிகண்டு, நிரரர் நிகண்டு, சிந்தாமணி நிகண்டு எனும் மூன்று நிகண்டுகளை இந்த நூல் அறிமுகம் செய்கிறது. அகராதியியலின் எதிர்காலம் கணினிக்குள் அடங்கியிருக்கிறது எனும் உண்மையையும், கணினியில் நூலடைவு […]

Read more

அஞ்சாத சிங்கம் சூர்யா

அஞ்சாத சிங்கம் சூர்யா, விகடன் பிரசுரம், சென்னை, விலை 100ரூ. நடிகர் சூர்யா பற்றிய வண்ணமயமான புத்தகத்தை விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ளது. படிப்பை முடித்ததும், மாதம் 5 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் ஐவுளி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்தவர் சூர்யா. கூச்ச சுபாவம் உடைய அவர் சினிமாவுக்கு வந்ததும், படிப்படியாக உயர்ந்து இப்போது சிகரத்தைத் தொட்டிருப்பதும் நம்பமுடியாத உண்மை. இதுபற்றிய விவரங்களுடன் ஜோதிகாவுடன் காதல் ஏற்பட்டது முதல் குழந்தை பிறந்தபோது வீடியோ படம் எடுத்தது முதலான நிகழ்ச்சிகளையும் சுவைபட விவரித்துள்ளார் சூர்யா. சூர்யா நடித்த […]

Read more
1 148 149 150 151 152 223