தமிழ்நாட்டில் காந்தி

தமிழ்நாட்டில் காந்தி, அ. ராமசாமி, விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 425ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-198-9.html மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்காவில் போராட்டத்தை தொடங்கியபோது அவருக்கு உறுதுணையாக இருந்தவர்களில் பலர் தமிழர்களே. இதன் தாக்கத்தால் தமிழர்கள் மீதும், தமிழ் மீதும் மகாத்மா கொண்டு இருந்த அளப்பரிய பாசத்தால் அவர், 1896 முதல் 1946 வரை 20 முறை தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதன் அனைத்து நிகழ்வுகளையும் ஒரு நொடி பிசகாமல் இந்த நூலில் பதிவு […]

Read more

குற்றாலக் குறிஞ்சி

குற்றாலக் குறிஞ்சி, கோவி. மணிசேகரன், பூம்புகார் பதிப்பகம், பக். 360, விலை 275ரூ. 1992ஆம் ஆண்டின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற நாவல் இது. தஞ்சையில் சரபோஜி மன்னர் காலத்தில் வாழ்ந்த குறிஞ்சி என்ற தாழ்ந்த குலத்தில் பிறந்த பாடகியின் வாழ்க்கையை இந்நாவல் சித்திரிக்கிறது. சரபோஜி மன்னராகட்டும், அக்காலத்தில் இருந்த பல ஜமீன்தார்களாகட்டும், குறிஞ்சியி இசையைவிட அவளுடைய அழகில் மயங்கி அவளை அடைய முயல்கின்றனர். பாடகி என்ற கர்வத்தோடும், பெருமையோடும் அவர்களின் முயற்சிகளுக்கெல்லாம் பணிய மறுக்கிறாள் குறிஞ்சி. அவளுடைய காதலன் சிறை வைக்கப்படுகிறான். அவன் […]

Read more

வெற்றி தரும் நேர நிர்வாகம்

வெற்றி தரும் நேர நிர்வாகம், பராங்க் அட்கின்ஸர், தமிழாக்கம் வெ. ராஜகோபால், ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ், ஏ2, ஜாஷ் சேம்பர்ஸ், 7 அ சர் பிரோஷா மேத்தா சாலை, போர்ட், மும்பை 400 001, விலை 185ரூ. இங்கிலாந்து நாட்டில் ஆங்கிலத்தில் வெளியான நூல் வெற்றி தரும் நேர நிர்வாகம் என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. காலம் பொன் போன்றது என்ற வேத வாக்கிற்கு இணங்க, இன்றைய உலகின் தேவைகளைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப முன்கூட்டியே நேரத்தைத் திட்டமிடுவது தற்போது இன்றியமையாதது. இ.மெயில், […]

Read more

முதல் கோணல்

முதல் கோணல், ஏ.எஸ். பன்னீர்செல்வன், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 60ரூ. பன்முகத்தன்மை கொண்ட நம் நாட்டில் வாழும் மக்களின் நிலையைக் கருத்தில்கொண்டு வெளியிடப்படும் மத்திய பட்ஜெட் எப்படி இருக்க வேண்டும். எப்படி இருக்கிறது என்பதை நூலாசிரியர் விளக்கமாக அளித்துள்ளார். சுற்றும் முற்றும் தொகுப்பின் 2ம் பாகமான முதல் கோணல் நூலில் ஒபாமா முதல் இலங்கை பிரச்சினை வரை அனைத்து தகவல்களும் அலசப்பட்டுள்ளது. முதல்கோணலை எவ்வாறு சரி செய்வது என்பதற்கு ஒரு வழிகாட்டியாக இந்த நூல் அமைந்துள்ளது. […]

Read more

நரேந்திரமோடி

நரேந்திரமோடி, எஸ்பி. சொக்கலிங்கம், சிக்ஸ்த் சென்ஸ், 10/2, போலீஸ் குவாட்டர்ஸ் சாலை, தியாகராயநகர், சென்னை 17, விலை 125ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-200-6.html நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பரபரப்பு கதாநாயகனாக வலம் வரும் நரேந்திர மோடியின் இளமைக்காலம்முதல், தற்போது மிரட்டிக்கொண்டு இருக்கும் பிரச்சினைகள் வரை அனைத்தையும் அலசி ஆராயும் தகவல் பெட்டகமாக இந்த நூல் திகழ்கிறது. அவரது ஆரம்பகால ஆர்.எஸ்.எஸ். தொடர்பு, நெருக்கடி காலத்தில் அவரது செயல்பாடுகள், குஜராத் முதல் மந்திரியாக அவர் ஆற்றிய பணிகள், குஜராத் […]

Read more

காவல்கோட்டம்

காவல்கோட்டம், சு. வெங்கடேசன், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 520ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-195-9.html தமிழகத்தில் பழங்காலந்தொட்டு காவல் தொழில் புரிந்தவர்கள், குற்றப் பரம்பரையினராக மாறிய வரலாற்றுப் பின்னணியில், மதுரை பகுதியின் 600 ஆண்டுகால வரலாற்றை அழமாக பதிவு செய்தபடி இந்த நாவல் விறுவிறுப்பாக அமைக்கப்பட்டுள்ளது. படித்து முடிக்கும்போது, இதில் இடம் பெற்றுள்ள பல கதாபாத்திரங்கள், அன்றைய மக்களின் பண்பாடுகள், கலாசாரம் ஆகியவை மனதில் நீங்காத இடத்தைப் பிடித்து அமர்ந்துவிடுகின்றன. மதுரை மாநகரின் அமைப்பு, […]

Read more

நாட்டுக்கோட்டை நகரத்தார்

நாட்டுக்கோட்டை நகரத்தார், சீத்தலை சாத்தன் (சுப்ரமணிய வெங்கடாச்சலம்), ஆனந்த நிலையம், 7/14, புதூர் முதலாவது தெரு, அசோக்நகர், சென்னை 83, விலை 500ரூ. நகரத்தாரின் வழிபாடு, வாழ்க்கை முறை, கல்வி, அரசியல், தொழில், பழக்க வழக்கங்கள், திருமண முறைகள் குறித்த அபூர்வ தகவல்கள் தொகுக்கப்பட்ட நூலாகும். இதில் நகரத்தார் வீடுகள், கோவில்களின் வண்ணப்படங்கள் அழகுற பிரசுரிக்கப்பட்டு உள்ளன. நகரத்தார் ஊர்களின் வரைபடம், தபால் நிலையங்களின் எண்ணங்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வெளிநாடுகளில் வாழும் நகரத்தார் அடிக்கடி பிறந்த மண்ணுக்கு வரவேண்டும் என்ற செய்தியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரத்தார் […]

Read more

மோகினித் தீவு

மோகினித் தீவு, தங்கத்தாமரை பதிப்பகம், 37, கால்வாய்க்கரை சாலை, கஸ்தூரிபா நகர், அடையாறு சென்னை 20, விலை 25ரூ. அமரர் கல்கியின் புகழ் பெற்ற குறுநாவல்களில் ஒன்று மோகினித்தீவு. அது நவீன வடிவமைப்புடன் இப்போது புத்தகமாக வெளிவந்துள்ளது. ஸ்யாம் வரைந்துள்ள ஓவியங்கள், நூலின் அழகுக்கு அழகு சேர்க்கின்றன. நன்றி: தினத்தந்தி, 19/3/2014.   —- சைவத் திருக்கோயில்களின் தல விருட்சங்களும் மருத்துவ குணங்களும், மு. அண்ணாஜோதி, சந்தனத் தென்றல், 105, காமராசர் தெரு, கொல்லைச்சேரி, குன்றத்தூர், சென்னை 69, விலை 300ரூ. நமது திருக்கோவில்களின் […]

Read more

பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும்

பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும், அ. வெண்ணிலா, விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 160, விலை 100ரூ. தமிழ் படைப்புலகில் குறிப்பிடத்தக்க கவிஞராக அறியப்பட்ட அ.வெண்ணிலாவின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு இது.  முதல் 5 கதைகளின் நாயகியாக பிருந்தா வருகிறாள். பூப்பெய்தும் பருவத்தில் உள்ள அவளுடைய குடும்பம் விதிக்கும் தடைகள் ஆண்களால் அவளுக்கு நேரும் அனுபவங்கள் இவற்றில் விவரிக்கப்படுகின்றன. மேல் பார்வைக்கு மென்மையானவர்களாக, அன்பானவர்களாக, இணக்கமானவர்களாகத் தோன்றும் ஆண்கள் ரகசிய வெளியில் அவளுக்கு, பாலியல் தொல்லை தருபவர்களாக மாறிவிடுகிறார்கள். அடுத்தடுத்து இக்கதைகளை வாசிக்கும் […]

Read more

திருப்பாவை அமுதம்

திருப்பாவை அமுதம், தாடா. ஸுப்ரமண்யம், தாடா. ஸுப்ரமண்யம், கைத்தறி நகர், நிலையூர், மதுரை 625005, விலை 230ரூ. தமிழ் மறை எனப் பாராட்டப்படும் நாலாயிர திவ்யப்ரபந்தத்தின் ஒரு பகுதிதான் திருப்பாவை. ஸ்ரீமத் நாராயணனைத் துதித்துப் போற்றும் பாடல்களின் தொகுப்பாகிய திவ்யப்ரபந்தத்தை இயற்றிய 12 ஆழ்வார்களுள், குறிப்பிடத்தக்கவர் பெரியாழ்வார். இவரது பெண் பிள்ளைதான் ஸ்ரீ ஆண்டாள். இவர் ஸ்ரீ நாராயணன் மீது கொண்ட அளவிட முடியாத காதலால், அவனையே தனது கணவனாக மனதில் வரித்து, பக்தி பரவசத்துடன் பாடிய 30 பாடல்களின் தொகுப்பே திருப்பாவை. மாதங்களில் […]

Read more
1 169 170 171 172 173 223