மரிச்ஜாப்பி

மரிச்ஜாப்பி, ராஸ் மாலிக், தமிழில் இனியன் இளங்கோ, தலித் முரசு, கருப்புப் பிரதிகள், சென்னை, விலை 90ரூ. காங்கிரஸ் கட்சிக்கு சீக்கியப் படுகொலை, பி.ஜே.பி.க்கு குஜராத் படுகொலை என்றால் சி.பி.எம். கட்சிக்கு மரிச்ஜாப்பி படுகொலை என்று ஆதாரம் கொடுத்து அதிரவைக்கிறது இந்தப் புத்தகம். இதுவரை மரிச்ஜாப்பி என்பது மனித உரிமையாளர்களால்கூட அதிகம் பேசப்படாத கொடூரக் கொலைச் சரித்திரம். அதனைப்பற்றி தமிழில் வந்துள்ள முக்கிய ஆவணம் இது. 1980களில் மேற்கு வங்கத்தில் ஜோதிபாசு தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசு ஆண்டுவந்தது. அந்தக் காலக்கட்டத்தில் பாகிஸ்தான் […]

Read more

நெஞ்சமெல்லாம் நீ

நெஞ்சமெல்லாம் நீ, சோம. வள்ளியப்பன், ஆப்பிள் பப்ளிஷிங், சென்னை, விலை 140ரூ. எழுத்தாளர் சோம. வள்ளியப்பன் எழுதிய 24 சிறுகதைகள் கொண்ட நூல். கதைகள் ஏற்கனவே பிரபலமான பத்திரிக்கைகளில் பிரசுரமானவை. எனவே இலக்கிய அங்கீகாரம் பெற்ற சிறந்த கதைகள் என்பதை சொல்லத் தேவையில்லை. நன்றி: தினத்தந்தி, 26/3/2014.   —- வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப், செ.திவான், விகடன் பிரசுரம், 757, அண்ணாசலை, சென்னை 2, விலை 160ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-181-6.html அவுரங்க என்ற சொல்லுக்கு அரசு சிம்மாசனம் […]

Read more

மண் மொழி மக்கள்

மண் மொழி மக்கள், கவிஞர் வாலி, குமுதம் பு(து)த்தகம், சென்னை 10, விலை 75ரூ. கவிஞர் வாலி குமுதம் இதழில் கடைசியாக எழுதி வெளிவந்த மண் மொழி மக்கள் தொடர் முற்றுப்பெறாமல் முடிந்த நிலையில் 10 வாரங்கள் மட்டும் வெளியான தொடர் புத்தகமாக வெளிவந்துள்ளது. ஒரு நாட்டில் வளமான மண்ணும், வளமான மொழியும் இருந்தால்தான் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் என்பதை நூலாசிரியர் ஆணித்தரமாக கூறி உள்ளார். வழக்கமான வாலியின் வார்த்தை ஜாலங்களும், பலரது வாழ்க்கை ஜாலங்களும் விரவிக் கிடப்பதுடன், அபூர்வ புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன. […]

Read more

தமிழில் முதல் சிறுகதை எது

தமிழில் முதல் சிறுகதை எது, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, விலை 40ரூ. எழுத்துலகில் புகழ் பெற்ற டாக்டர் ஆர்.எஸ். ஜேக்கப் தமிழில் வந்த முதல் சிறுகதை எது? எழுத்தாளர் யார்? என்பதை பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து எழுதியிருக்கும் இந்த நூல் சிறுகதை இலக்கியத்தின் பெருமைக்குரிய பக்கங்கள். 1877ம் ஆண்டில் கிறிஸ்தவ பாதிரியார் சாமுவேல் பவுல் ஐயர் எழுதிய சரிகைத் தலைப்பாகை தான் தமிழில் எழுதப்பட்ட முதல் சிறுகதை என்பதை காரண, காரியங்களுடன் விவரிப்பவர், அதைக் கூட ஆய்வாளர்களின் பார்வைக்கே விட்டுவிடுகிறார். தகுதிக்கு […]

Read more

காற்றின் கையெழுத்து

காற்றின் கையெழுத்து, பழநிபாரதி, விகடன் பிரசுரம், சென்னை, பக். 256, விலை 130ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-483-1.html பத்திரிகையாளராக இருந்து பாடலாசிரியராக கவிஞர் பழநிபாரதி எழுதிய 52 கட்டுரைகளின் தொகுப்புதான் இந்தநூல். சமுதாயத்தில் புரையோடிப்போயிருக்கும் சகலவிதமான அழுக்குகளையும் சாடும் பழநிபாரதியின் ஆக்ரோஷமான கோபம், படிப்பவர்களையும் தொற்றிக்கொள்கிறது. இதுவே இந்நூலின் வெற்றி. நகரமயமாதல் என்கிற பெயரில் பன்னாட்டு நிறுவனங்களின் முதலாளிகளும் ரியல் எஸ்டேட் மாஃபியா கும்பல்களும் விவசாய நிலங்களை அடிமாட்டு விலைக்கு அடித்துத் துரத்தி வாங்கும் பின்னணியை காடு வெளையட்டும் […]

Read more

இலக்கியமும் வாசிப்பும்

இலக்கியமும் வாசிப்பும், ம. திருமலை, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, பக். 144, விலை 70ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-223-5.html ஓர் இலக்கியப் படைப்பு அனைத்து வாசகர்களுக்கும் ஒரேவிதமான அனுபவத்தைத் தர வேண்டும் என்ற நியதியில்லை. அவ்வகையில், தமிழ் இலக்கியப் பாடல்களில் நூலாசிரியர் தாம் பெற்ற உயர்ந்த உன்னத அனுபவங்களை அழகான இனிய நடையில் வெளிப்படுத்தியுள்ள திறனாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பே இந்தநூல். சங்கப் பாடல்களும் கம்பராமாயணமும், பக்தி இலக்கிய முன்னோடி காரைக்காலம்மையார், மணிமேகலையில் நீர் ஆதாரங்கள், என காதல், […]

Read more

எது சரியான கல்வி

எது சரியான கல்வி, முனைவர் வெ. இறையன்பு, நேசம் பதிப்பகம், சென்னை, விலை 25ரூ. மதிப்பெண் தேடும் கல்வியைத் தாண்டி வாழ்வியல் மதிப்புக்களை நாடும் கல்வியாக படிப்புமுறை எப்படி மாற வேண்டும் என்பதை நூலாசிரியரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான முனைவர் வெ. இறையன்பு சிந்தனைச் சுவைபட எளிய நடையில் இந்த நூலில் கூறி உள்ளார். முறையான கல்வி என்பதே முறைசாராக் கல்வி தான் என்றும், மனப்பாடம் செய்வதை கற்றுக் கொள்வதையே கல்வி என எண்ணுபவர்கள் பெரிதாக எதையும் சாதிக்க முடியாது என்பதையும் நூலாசிரியர் ஆணித்தரமாக கூறியுள்ளார். […]

Read more

வாழ்க்கை ஒரு சாகசம் சாதியுங்கள்

வாழ்க்கை ஒரு சாகசம் சாதியுங்கள், நீதியரசர் எம். கற்பகவிநாயகம், வானதி பதிப்பகம், சென்னை, பக். 317, விலை 100ரூ.   To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-548-0.html நீதியரசர் எம். கற்பகவிநாயகம் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆற்றிய உரைகளின் தொகுப்பாக அமைந்துள்ளது. பெண்கள் தினவிழா, பட்டமளிப்பு விழா, மகளிர் சிறைவாசிகளுக்கான இலவச சட்ட விழிப்புணர்வு முகாம், யோகா எக்ஸ்னோரா தொடக்க விழா, புத்தகத் திருவிழா என 16 நிகழ்ச்சிகளில் பங்கேற்று நீதியரசர் பேசியவற்றைப் படிக்கும்போது நேரில் கேட்ட உணர்வு ஏற்படுகிறது. தன்னம்பிக்கை, இறை […]

Read more

உலகம்

உலகம், செ.ஏழுமலை, ராசகுணா பதிப்பகம், 913, ஈ, சாய் ஸ்டோன் அபார்ட்மெண்ட்ஸ், பஜார்ரோடு, ராம் நகர், மடிப்பாக்கம், சென்னை 91, விலை 50ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-223-3.html புத்தகத்தில் இடம்பெற்றுள்ள 11 சிறுகதைகளும் வரதட்சணை, வறுமை, காதல், குடும்பம், மாமியார்- மருமகள் சண்டை, பெண்மனம், திறமை போன்றவற்றை கதையின் கருவாக்கி அறத்தை நிலைநாட்டும்விதமாக அமைந்துள்ளன. கதை கூறியிருக்கும்விதம் ரசிக்கும் வகையில் உள்ளது. நன்றி: தினத்தந்தி, 5/3/2014.   —- கடந்தை கூடும் கேயாஸ் தியரியும், எஸ். ஜே. சிவசங்கர், […]

Read more

வெற்றிப்படிக்கட்டு

வெற்றிப்படிக்கட்டு, ஹெச். வசந்தகுமார், வெற்றி பவுண்டேஷன், சென்னை 15, விலை 150ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-223-1.html தமிழில் தன்னம்பிக்கை நூல்கள் பல வந்துகொண்டிருக்கும் காலம் இது. ஆனால் ஒரு வெற்றியாளரே தம் அனுபவங்கள் வாயிலாக வெற்றியை நோக்கி வழிநடத்திச் செல்வது உளப்பூர்வமானது. சாதாரண குடும்பத்தில் பிறந்து இன்று தொழிலதிபராக வளர்ந்துள்ள ஹெச். வசந்தகுமார், புராணம், இதிகாசம், சமகால வாழ்க்கையில் இருந்து குட்டிக் குட்டிக் கதைகளைச் சொல்லி, அதன் வழியாக வாழ்வின் யதார்த்தத்தையும் வெற்றிக்கான சூத்திரங்களையும் உணர்த்தும் இந்த நூல் […]

Read more
1 168 169 170 171 172 223