ஒற்றை வைக்கோல் புரட்சி

ஒற்றை வைக்கோல் புரட்சி, மசனாபு ஃபுகோகா, பூவுலகின் நண்பர்கள். இயற்கை வேளாண்மை குறித்த உலகப் புகழ்பெற்ற அடிப்படை நூல் இது. இயற்கை வேளாண் இயக்கம் தமிழகத்தில் பெரிய உந்துதலைப் பெறுவதற்கு முன்பே வெளியாகிவிட்டது. இன்றைக்கும் இயற்கை வேளாண்மையின் பாடப் புத்தகமாகக் கருதப்படுகிறது. நன்றி: தி இந்து, 22/4/2014.‘   —- மௌன வசந்தம், ரேச்சல் கார்சன், எதிர் வெளியீடு. பூச்சிக்கொல்லிகள் உள்ளிட்ட வேதிப்பொருள்கள் எப்படி நிலம், நீர், காற்று என ஒட்டுமொத்த சுற்றுச்சூழலை மாசுபடுத்தி, நம் உடல்நலனுக்குக் கேடு தரும் பின்விளைவுகளை உருவாக்குகின்றன என்பதை […]

Read more

கண்ணன் வருவாயா

கண்ணன் வருவாயா, வாழ்வியல் அனுபவங்கள், வரலொட்டி ரெங்கசாமி, தனலெட்சுமி பதிப்பகம், சென்னை, விலை 330ரூ. தன்னலமற்ற அன்பின் வெளிப்பாடு பகவத் கீதையைப் புனித நூலாக்கியது நாம் செய்த மிகப் பெரிய தவறு என்று இந்நூலைத் தொடங்கியுள்ளார் வரலொட்டி ரெங்கசாமி. பகவத் கீதையை ஒரு தத்துவமாக நினைத்து ஒதுக்கிவைக்காமல் வாழ்க்கைக்குத் தேவையான ஒன்றாகப் பார்க்கும்போது அதில் ஏராளமான வாழ்வியல் விளக்கங்கள் பொதிந்து கிடக்கின்றன என்கிறார் ஆசிரியர். பகவத் கீதையை முதிய வயதில் படிக்கலாம் என்னும் எண்ணம் குறித்த மாறுபட்ட கருத்தைப் பதிவு செய்திருக்கிறார் வரலொட்டி ரெங்கசாமி. […]

Read more

ஸ்ரீ வேங்கடேஸ மஹாத்மியம்

ஸ்ரீ வேங்கடேஸ மஹாத்மியம், ஸ்ரீஸ்ரீ ஸத்யாத்ம தீர்த்த ஸ்ரீ பாதங்களவர்கை ஸ்ரீமத் உத்தராதி மடாதீஸர், தொகுப்பாசிரியர் எல். லஷ்மி நரசிம்ஹன், அம்மன் சத்தியநாதன், அருள்மிகு அம்மன் பதிப்பகம், விலை 150ரூ. பவிஷ்யோத்தர புராணம் திருப்பதிக்கு யுகக் கிரமமாக ரிஷபாசலம், அஞ்ஜனாசலம், சேஷசலம், வேங்கடாசலம் என்ற நான்கு பெயர்கள் வந்தன என்று சொல்கிறது. வராக புராணம் இன்னும் பதினான்கு பெயர்களைச் சொல்கிறது. இஷ்ட்டப்பட்டதையெல்லாம் கொடுப்பதால் அந்த பர்வதத்திற்கு சிந்தாமணி என்று பெயர். ஞானத்தைக் கொடுப்பதால் அது ஞானாசலம். எல்லா தீர்த்தங்களின் சன்னிதானத்தைக் கொண்டிருப்பதால் அது தீர்த்தாசலம். […]

Read more

மாங்குடி மருதனாரின் மதுரைக் காஞ்சி

மாங்குடி மருதனாரின் மதுரைக் காஞ்சி, விளக்க வடிவு சாமுவேல் சுதானந்தா, கயல்கவின் புக்ஸ், 28/ப.எண். 20, டாக்டர் அம்பேத்கர் சாலை, கோடம்பாக்கம், சென்னை 24, விலை 200ரூ. மதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள் மதுரைக் காஞ்சியில் உள்ள மதுரை நகரம் தொடர்பான காட்சிகளைப் பார்க்கம்போது, அன்றைய மதுரைக்கும், இன்றைய மதுரைக்கும் உயிர்ப்புள்ள ஒரு தொடர்ச்சி இருப்பதைப் பார்க்கமுடிகிறது. மதுரை, அன்றும் மெதுவாகவே உறங்கச் சென்றதென்பதை உணர்த்தும் காட்சிகள் இவை. இரவில் பழைய மதுரையும், புதிய மதுரையும் நெருங்கிப் பேசிக்கொண்டிருப்பதைப் போன்ற தோற்றம் மதுரைக் காஞ்சியில் […]

Read more

வீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள்

வீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள், வண்ணன்,வெளியீடு காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், விலை ரூ. 175.   To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-195-7.html கர்நாடகாவைச் சேர்ந்த பிரபல வனவிலங்கு புகைப்படக்காரர்களான கிருபாகர் சேனானி இருவரையும் அரசு உயர் அதிகாரிகள் என நினைத்து வீரப்பன் கடத்திவிடுகிறார். தன்னார்வ வனவிலங்கு புகைப்படக்காரர்கள் எனத் தெரிய வந்ததும் வீரப்பனுக்கும் இருவருக்கும் நட்பு உருவாகிறது. காட்டுப் பறவைகள் குறித்து நிறைய விஷயங்களை இருவரிடமும் ஒரு குழந்தையின் ஆர்வத்துடன் கேட்டு வீரப்பன் தெரிந்துகொள்கிறார். வீரப்பனுடன் இருந்த தங்கள் அனுபவத்தை […]

Read more

கிராமத்து ராட்டினம்

கிராமத்து ராட்டினம், ஜி. மீனாட்சி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், 41 பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, பக். 118. சமகாலப் பிரச்சினைகளின் கலை வடிவம் To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-211-1.html சிறுகதைகள் அருகிவரும் சூழலில் ஜி. மீனாட்சி பெயரைப் புதிதாக அறிய நேர்த்து. நல்ல தமிழில் எழுதியிருப்பது மகிழ்ச்சி தருகிறது. கதைச் கருக்கள் எளிமையானவை. மிக நுட்பமான விஷயங்களைப் பேச அவ்வளவாக சிரமமற்ற சம்பவங்களை அவர் தேர்ந்திருப்பது ஆச்சரியம் தருகிறது. மாறியிருக்கிற […]

Read more

வெற்றிக்கனி

வெற்றிக்கனி, மா. முருகப்பன், கலா கருணா பப்ளிகேஷன்ஸ், 11, முதல் தெரு, பக்தவத்சலம் நகர், அடையாறு, சென்னை 20, பக். 370, விலை 75ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-211-3.html புதினம் அல்ல அறிவுநூல். ஆசிரியர் மா. முருகப்பனால் எழுதப்பட்ட இந்நூல் பலரது உதவியுடன் வடிவமைக்கப்பட்டது. இந்நூலில் கதையுடன் பல விளக்கப் படங்களும் உள்ளன. ஆசிரியர் எம்.பி.ஏ., எம்.எஸ்சி., பட்டம் பெற்றவர். அவரது அறிவை நாவல் முழுவதும் உணரலாம். குமரன், பிரியா, மனோஜ், ருக்காணி, பூங்கொடி ஆகிய கதாபாத்திரங்கள் நாவலில் […]

Read more

கச்சத்தீவு

கச்சத்தீவு, ஆர். முத்துக்குமார், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், 10/2, (8/2) , போலீஸ் குவாட்டர்ஸ் சாலை, தியாகராயநகர், சென்னை 17, விலை 100ரூ. மீனவர்களின் தன்னுரிமைப் போராட்டம் To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-266-6.html 1974ல் இந்திரா காந்தி சிறிமாவோ பண்டாரநாயக ஒப்பந்தம் மூலம் முந்நூறு ஏக்கர் நிலப்பரப்பைப் பெற்றுக்கொண்டது இலங்கை. கச்சத்தீவு சந்தேகமில்லாமல் இந்தியாவின் ஒருபகுதியாக இருந்ததுதான் என்று வரலாற்று ரீதியான ஆதாரங்களுடன் கூறும் புத்தகம் ஆர். முத்துக்குமார் எழுதிய, கச்சத்தீவு தமிழக மீனவர்களின் தன்னுரிமைப் போராட்டம். ஆசிரியருக்கு இந்திய அரசியல், […]

Read more

கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி

கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி, நாகரத்தினம் கிருஷ்ணா, சந்தியா பதிப்பகம், சென்னை, பக். 256, விலை 160ரூ. பூமியில் மனித இருப்பு என்பது நினைவுகளின் வழியே கட்டமைக்கப்படுகிறது. கடந்த காலத்தில் எப்பொழுதோ நடைபெற்ற சம்பவங்களின் தொகுப்பாக விரிவும் பதிவுகள் வரலாறாக உருமாகின்றன. வரலாற்றை மீண்டும் எழுதுதல் என்பது தொடர்ந்து நடைபெறுகின்றது. புனைவுகளின் வழியே கட்டமைக்கப்படும் வரலாற்றை முன்வைத்து எழுத்து, ஒரு நிலையில் வரலாறாகவும் புனைவாகவும் உருமாறுகின்றது. நாகரத்தினம் கிருஷ்ணாவின் நாவலான கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி, செஞ்சிக்கோட்டையை முன்வைத்த வரலாற்றுச் சம்பவங்களின் பின்புலத்தில் விரிந்துள்ளது செஞ்சிக் கோட்டை […]

Read more

இயற்கையுடன் இசைந்த பெரு வாழ்வு

இயற்கையுடன் இசைந்த பெரு வாழ்வு, பேரா. ஜான்சி ஜேக்கப், மொழிபெயர்ப்பு யூமா வாசுகி, புலம், சென்னை, விலை 60ரூ. பேரா. 1936ஆம் ஆண்டு கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தில் நாட்டகம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட குறிச்சி என்னும் ஊரில் பிறந்தவர். விலங்கியல் பேராசிரியராகப் பணியாற்றியவர். சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் உயர் கல்வி பயின்றவர். 1978ஆம் ஆண்டு தென்னிந்தியாவில் முதன்முறையாக இயற்கையுடன் இருத்தல் என்னும் முகாமை நடத்தினார். 1979ஆம் ஆண்டு SEEK (Society for Environmental Education in Kerala) என்னும் அமைப்பைத் தொடங்கினார். இயற்கையுடன் இசைந்த வாழ்க்கை […]

Read more
1 32 33 34 35 36