கிராமத்து ராட்டினம்

கிராமத்து ராட்டினம், ஜி. மீனாட்சி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41பி, சிட்கோ இன்டஸ்ட் ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, விலை 85ரூ. இயல்பு எல்லையைத் தாண்டாமல் கதை சொல்வதென்பது சிலருக்கு வரம். அப்படியொரு வரம் வாய்க்கப்பெற்றவர் எழுத்தாளர் ஜீ. மீனாட்சி என்பது இந்த நூலில் அவர் படைத்திருக்கும் பதினோரு கதைகளிலுமே தெரிகிறது. வாழ்க்கைச் சக்கரம் எப்போதுமே மேலே இருந்தவர்களை கீழே தள்ளியும், கீழே இருந்தவர்களை மேலே உயர்த்தி வைத்தும் தன் கண்ணாமூச்சி ஆட்டத்தை தொடர்ந்துகொண்டிருக்கிறது என்பதை இவரது கிராமத்து ராட்டினம் கதை […]

Read more

வந்தாங்க ஜெயிச்சாங்க,

வந்தாங்க ஜெயிச்சாங்க, மணவை பொன். மாணிக்கம், கற்பகம் புத்தகாலயம், 402, சுந்தரம் தெரு, தி.நகர், சென்னை 17, பக். 207, விலை 130ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-879-7.html சாதிக்கத் துடிப்பவர்களுக்கு சாதனையாளர்களைப் பற்றி மட்டும் போதித்தால் போதுமா? அவர்களின் மனதில் பொதிந்து கிடக்கும் உண்மைகளையும் சேர்த்துத் தந்தால்தான் அது முழுமையடையும் என அவர்களின் மொழிகளிலேயே கொட்ட வைத்திருக்கிறார் ஆசிரியர். வைரமுத்து முதல் மயில்சாமி வரை கலைத்துறையைச் சேர்ந்த 70 சாதனையாளர்களின் வாழ்க்கையை சாறாக்கித் தரும் உத்தியிது. சாதனையாளர்களின் குடும்பப் […]

Read more

கரமசோவ் சகோதரர்கள்

கரமசோவ் சகோதரர்கள் (2 தொகுதிகள்), கவிஞர் பெருமான் புவியரசு (டாஸ் டாவ்ஸ்கி), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 1490, விலை 1300ரூ. உலக இலக்கியத்தில் மிகச்சிறந்த நாவலாசிரியர் என்ற புகழுக்கு உரியவர், ரஷ்ய இலக்கிய மேதை டாஸ் டாவ்ஸ்கி. ஏழை மக்கள், மரணம் அடைந்தவர்களின் வீடு, முட்டாள், குற்றமும் தண்டனையும், கரமசோவ் சகோதரர்கள் என்ற ஐந்துபடைப்புகள் மிகச் சிறந்தவை. இவற்றில் குற்றமும் தண்டனையும், கரமசோவ் சகோதரர்கள் ஆகிய இரண்டு நாவல்களும் கலையின் சிகரங்கள். அவருடைய நாவல்களை, அவ்வளவு சுலபமாக படித்துவிட முடியாது. மிகவும் […]

Read more

நில் கவனி கண்மணி

நில் கவனி கண்மணி, மார்பக நோய்களும் மருத்துவ தீர்வுகளும், டாக்டர் க. முத்துச் செல்லக்குமார், விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 80, விலை 65ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-840-7.html குழந்தைப் பருவம் முதல் ஒவ்வொரு கட்டமாக பெண்ணின் மார்பக வளர்ச்சி குறித்தும் ஒவ்வொரு பருவங்களின்போதும் அவை அடையும் மாற்றங்கள் குறித்தும் விரிவாகக் கூறும் நூல். மார்பகத்தில் புற்று நோய் இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள பெண்கள் தங்களுக்கு தாங்களே மார்பக பரிசோதனை செய்து கொள்ளும் முறைகள் விளக்கப்பட்டிருக்கின்றன. […]

Read more

அநீதி, நீதி, சமூக நீதி

அநீதி, நீதி, சமூக நீதி, தேவ். பேரின்பன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், 41, பி. சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, பக். 126, விலை 60ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-006-8.html ஆசிரியர் தேவ். பேரின்பன், இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர். மார்க்சியக் கொள்கைகள், தமிழியல் ஆய்வுகள், விவாதங்களை முன்னெடுக்கும் சமூக விஞ்ஞானம் இதழின் நிர்வாக ஆசிரியர். மார்க்சிய நோக்கிலான பல நூல்களின் ஆசிரியர் என்பதன் மூலம் இந்நூலின் சிறப்பை உணர்ந்து […]

Read more

இந்திய விவசாயிகளின் பேரெழுச்சி

இந்திய விவசாயிகளின் பேரெழுச்சி, எல். நடராஜன், தமிழாக்கம்-ஆர். நல்லக்கண்ணு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், 41 பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, விலை 60ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-864-1.html இந்தியா ஒரு விவசாய நாடு என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை அது விவசாயப் புரட்சிகளின் நாடு என்பதும், அதனால்தான் காந்தி ஒரு இந்திய விவசாயியின் புறத்தோற்றத்தைப் பூண்டு இந்திய விடுதலையை வென்றெடுக்க வேண்டி வந்தது. விவசாயிகள் தங்கள் உரிமைகளுக்காகவும் தங்கள் […]

Read more

விட்டு விடுதலையாகி

விட்டு விடுதலையாகி, வாஸந்தி, கவிதா வெளியீடு, பக். 408, விலை 200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-099-1.html இது ஒரு சமூக நவீனம் தான் என்றாலும், வரலாற்றுச் சிறப்புடையதாகவும் மிளிர்கின்றது. மாதராய் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும் என்பது ஓர் உயரிய கருத்து வெளிப்பாடு. மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்பது ஓர் ஆவேசக் கருத்தின் குரல். சரி, மாதர் தம்மை எப்படியெல்லாம், இந்தச் சமூகம் ஒரு காலத்தில் இழிவு செய்து கொண்டிருந்தது? இந்த மூன்றின் கலவையாக […]

Read more

அண்டமும் ஆன்மீகமும்

அண்டமும் ஆன்மீகமும், பி. ஆர். வெங்கட்ராஜு, சாகித் பப்ளிகேஷன்ஸ். அண்டத்திலும், ஆன்மீகத்திலும் புதைந்து கிடக்கும் புரியாத புதிர்களை, தர்க்க ரீதியில் கோர்வையாகப் புரிய வைக்க ஆசிரியர் எடுத்துள்ள முயற்சியைப் பாராட்டியிருக்கிறார், சுவாமி விமூர்த்தானந்தாஜி, ஆசிரியர், ஸ்ரீராமகிருஷ்ண விஜயம். இந்த நூல் அறிவியலையும், ஆன்மீகத்தையும் அற்புதமாகத் தொடர்புபடுத்தி சில மேற்கோள்களையும் சில தகவல்களையும் நம் பார்வைக்குக் கொண்டு வரும். ஆசிரியரின் பணி வியக்க வைக்கிறது. சுவாமி விமுர்த்தானந்தாஜியின் பாராட்டு மெத்தச் சரியே. வியப்பூட்டும் விஞ்ஞானம், இந்நூலில் அதி அற்புதமான மெஞ்ஞானத்துடன் கைகோர்த்துக் கொண்டு நம்மை வாசிக்கத் […]

Read more

கம்யூனிஸத்திற்குபின் ரஷ்யா

கம்யூனிஸத்திற்குபின் ரஷ்யா, நடிகர் ராஜேஷ், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-157-7.html நடிகர் ராஜேஷ் தனது ரஷிய பயணத்தின்போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை நூலாக தொகுத்துள்ளார். இந்த நூலை படிக்கும்போது ரஷியாவுக்கு சென்று வந்த உணர்வு ஏற்படுகிறது. சோவியத் ரஷியா 22 குட்டி நாடுகளாக பிரிந்ததும், அதனால் கம்யூனிசம் பலியான சம்பவங்களும் நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இன்றைய ரஷியாவின் பண்பாடு, கலாசாரம், விலைவாசி […]

Read more

திமிறி எழு

திமிறி எழு, அ. ஜெயசீலி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், சென்னை 98, பக். 72, விலை 40ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-985-1.html ஒரு பெண் பிறந்தது முதல் சமுதாயத்தில் என்னென்ன பிரச்னைகளுக்கெல்லாம் ஆளாகிறாள் என்பதை எடுத்துக்காட்டுகளுடனும் புள்ளி விபரங்களுடனும் கூறியிருக்கிறார் நூலாசிரியர். குழந்தை பாலியல் வன்முறை, இளம்பருவம், தாய் என்ற தியாகத் திருவுருவம் என ஒரு பெண்ணின் அனைத்து நிலைகளிலும் நின்று அலசியுள்ளார். திரைப்படங்கள், திரைப்படப் பாடல்கள் ஆகியவற்றில் பெண்கள் இழிவுபடுத்தப்படுவதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பெண்ணுக்கு […]

Read more
1 22 23 24 25 26