பாரதத்தின் விஸ்வரூபம்

பாரதத்தின் விஸ்வரூபம், ஐ. மாயாண்டி பாரதி, பாரதி பதிப்பகம், பாரதமாதா இல்லம், 13/10ஏ, சுப்பராயர் அக்ரஹாரம், காக்கா தோப்பு, மேலமாசி வீதி, மதுரை, விலை 100ரூ. தியாகத்தை நேரில் பார்க்க வேண்டுமா? வாழும் வரலாறாக மதுரையில் வசித்துக் கொண்டிருக்கிறார் ஐ.மாயாண்டி பாராதி. பழகிய தோழர்கள் அனைவருக்கும் அவர் ஐ.மா.பா. இந்திய விடுதலை வேள்விக்கு விறகு சுமந்த ஐ.மா.பா. அதனை தனது பெரும் சாகசமாகக் கருதாமல், தனது கடமையாக நினைத்துச் செயல்பட்ட நினைவுகளுடன் 97 வயதைத் தாண்டி வாழ்ந்து வருகிறார். 15 வயதில் பட்டாளத்தில் சேராதே, […]

Read more

வேதமும் பண்பாடும்

வேதமும் பண்பாடும், ஸ்ரீசர்மா சாஸ்திரிகள், ஆர் மீடியா, 37/55, சிவில் ஏவியேஷன் காலனி, நங்கநல்லூர், சென்னை 61, விலை 200ரூ. தொன்மை வாய்ந்த ஹிந்து மதத்திற்கு சனாதன தர்மம் என்றும் ஒரு பெயர் உண்டு. இதன் நெறிமுறைகள், வைதீக கர்மாக்கள் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ரிஷிகளால் உருவாக்கப்பட்டவை. அவற்றில் வேதங்களும், வேதாந்தங்களும் அடக்கம். அவை தனிநபர் மற்றும் உலக நலன்கள் அனைத்திற்காகவும் ஏற்படுத்தப்பட்டவை. இத்தகைய சனாதன தர்மத்தின் சிறப்பு, வைதீக நுணுக்கங்கள், ஆசார அனுஷ்டானங்கள், கலாசாரங்களைப் பற்றிய விளக்கங்களை இந்நூலாசிரியர், தமிழில் பல […]

Read more

சர்க்கரை மனிதர்கள்

சர்க்கரை மனிதர்கள், புதிய தலைமுறை பதிப்பகம், 25ஏ, என்.பி.இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஈக்காட்டுதாங்கல், சென்னை 32, விலை 90ரூ. எவ்வித பிரதிபலனும் எதிர்பார்க்காமல், பிறருக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று ஆர்வத்துடன் உழைப்பவர்கள் ஒவ்வொரு ஊரிலும் ஒருசிலர் இருப்பார்கள். எல்லோருக்கும் பத்திரிகைச் செய்திகளை படித்துச் சொல்வதுடன், பிழையின்றி செய்திகளைப் படிக்கும் சிறவர்களுக்கு சாக்லெட் கொடுக்கும், பேப்பர் பெருசு, எதிர்பாராமல் பிரச்சினைகளில் சிக்குவோருக்கு வட்டி இல்லாமல் பணம் கொடுத்து உதவும் சிறுவாட்டு லட்சுமி. இப்படி பெரிய மனம் படைத்த எளிய மனிதர்களை கண்டுபிடித்து சந்தித்திருக்கிறீர்களா?என்ற தலைப்புடன் […]

Read more

பாவேந்தர் பாரதிதாசன் திரைத்தமிழ்

பாவேந்தர் பாரதிதாசன் திரைத்தமிழ், முனைவர் ச.சு. இளங்கோ, இசையமுது பதிப்பகம், பி3, சுங்கவரி அலுவலர் குடியிருப்பு, 75, தேவாலய முதன்மைச் சாலை, பெருங்குடி, சென்னை 96, பக். 488, விலை 180ரூ. துப்பாக்கி வயிற்றில் பீரங்கி பிறந்ததைப்போல பாரதி வழித்தடத்தில் பாரதிதாசன் தோன்றினார் என்ற நூலாசிரியரின் முன்னுரையே நூலுக்கு ஒரு கம்பீரம் தருகிறது. பாரதிதாசனின் திரைத்தமிழ் வாழ்க்கை பற்றிய ஒரு ஆய்வு நூல் இது. அவர் எழுதிய ஆயிரம் தலை வாங்கிய அபூர்வசிந்தாமணி, வளையாபதி ஆகிய திரைப்படங்களின் திரைக்கதை, உரையாடல்களை வைத்து ஆய்வு செய்துள்ளார் […]

Read more

தரிசனம்

தரிசனம், வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ். குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக். 88, விலை 75ரூ. மலைமேல் பயணம் செய்ய வேண்டும். பயணத்தை எங்கிருந்து தொடங்குவது சிஷ்யன் கேட்டான். ஞானி சொன்னால் மலை உச்சியிலிருந்து தொடங்கு என்று. பயணத்தைத் தொடங்க வேண்டும் என்று நினைத்த உடனேயே, இந்நேரம் நீ மலை உச்சியில் இருந்திருக்க வேண்டும் என்பதுதான் ஞானிகளின் எண்ண தரிசனம். ஆழ்மனத்திற்குள் புதைந்திருக்கும் அந்த அனுபூதி தன்மையை தரிசிக்க முடிந்தவர்களுக்கு இது எளிது என்கிறார்கள் ஞானிகள். இறையன்பும் அப்படித்தான் பேரண்டத்தைக் […]

Read more

போதியின் நிழல்

போதியின் நிழல், அசோகன் நாகமுத்து, அந்திமழை, ஜி4, குருவைஷ்ணவி அப்பார்ட்மென்ட்ஸ், 20, திருவள்ளுவர் நகர், மெயின்ரோடு, கீழ்க்கட்டளை, சென்னை 600117, பக். 266, விலை 180ரூ. உலக வரலாற்றை, பயணிகள்தான் தீர்மானிக்கிறார்கள். அவர்களின் சாகசங்களும் அறிவார்ந்த செயல்களும் உலக வரலாற்றின் நீள அகலங்களை மாற்றி அமைத்திருக்கின்றன. ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு வரலாற்றுப் பாடத்தின் மூலம் நமக்கு ஒரு வரியில் அல்லது ஒரு பத்தியில் மட்டுமே அறிமுகமான சீனப் பயணி யுவான் சுவாங்கின் இந்திய பயணம்தான், அசோகன் நாகமுத்துவின் இந்த நாவல். நாட்டைவிட்டு இன்னொரு […]

Read more

சங்கர காவியம்

சங்கர காவியம், டால்மியாபுரம் கணேசன், அகஸ்தியர் பதிப்பகம், 39, நந்திகோவில் தெரு, தெப்பக்குளம், திருச்சி 2, விலை 250ரூ. காஞ்சி பெரியவர் சங்கராச்சாரியாரின் ஆன்மிக வாழ்க்கையின் சில பகுதிகள் நாடக வடிவில் தொகுக்கப்பட்டிருக்கிறது. இந்த தொகுப்பில் அவர் எத்தனை பெரும் அருளாளர் என்பதும், பாமரனுக்கும் இரங்கும் கருணாமூர்த்தி என்பதும் நெஞ்சில் பரவசமாய் பதிந்து போகின்றன. எத்தனை துயர நிலையில் ஒருவர் வந்தாலும் அவரை பசியமரத்தி ஆற்றுப்படுத்தும் மகானின் கருணை உள்ளம் பக்தர்களை எந்தெந்த விதமாய் குளிர்வித்தது என்பதையும், நடுநடுவே சொல்லிப் போயிருப்பது நெஞ்சார்ந்த சிலிர்ப்பு. […]

Read more

இனிக்கும் முதுமைக்கும் இனிய யோசனைகள்

இனிக்கும் முதுமைக்கும் இனிய யோசனைகள், டாக்டர் ஜி. லாவண்யா, நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 55ரூ. முதுமையில் ஏற்படும் மன உளைச்சல், நோய்கள் ஆகியவற்றை முன்கூட்டியே தடுப்பது எப்படி? அதற்கான உணவு மற்றும் இயற்கை மருத்துவ முறை என்ன? முதுமைக்கான யோகாசன குறிப்புகள், நீரிழிவை தடுப்பது எவ்வாறு என்பது போன்ற பல தகவல்கள் சுவைபட கூறப்பட்டுள்ளன.   —-   கணவர்தான் எனக்கு எல்லாமே, ந. சந்திரன், மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தி.நகர், […]

Read more

மொழிப்போர்

மொழிப்போர், ஆர். முத்துக்குமார், கிழக்கு பதிப்பகம், 57, பி.எம்.ஜி. காம்ப்ளக்ஸ், தெற்கு உஸ்மான் ரோடு, தி.நகர், சென்னை 17, விலை 110ரூ. நாட்டின் விடுதலைக்கு முன்னும், பின்னும் பல்வேறு கால கட்டங்களில் தமிழகத்தில் இந்தி மொழி திணிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்தன. இதை எதிர்த்து 1938ம் ஆண்டு முதல் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் குறித்த வரலாற்றை இந்நூல் விவரிக்கிறது. இந்தி திணிப்புக்கு எதிராக தமிழர்கள் நடத்திய மொழிப்போர், மற்றுமொரு சுதந்திர போராட்டமாக கோடிட்டு காட்டப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 16/10/2013.   —- […]

Read more

செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல்

செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல், வயல்வெளி பதிப்பகம், இடைக்கட்டு, உள்கோட்டை அஞ்சல், கங்கை கொண்ட சோழபுரம் வழி, அரியலூர் மாவட்டம், விலை ரூ150. சங்க இலக்கியம் காட்டும் கரிகாற்சோழன் முதலாகப் பட்டினப்பாலை என்னும் கட்டுரை ஈறாக 20 கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. இலக்கிய நூல்களின் கருத்துக்களை வாழ்வியல் செய்திகளோடு எளிய மொழி நடையில் சுவைபட சொல்லியிருக்கிறார் நூலாசிரியர் முனைவர் மு. இளங்கோவன். நன்றி: தினத்தந்தி, 16/10/2013   —-   ஜுபிடர் பிக்சர்ஸ் – ஜுபிடர், எஸ்.கே. ஹபிபுல்லா,  விஜயா பப்ளிகேஷன்ஸ், சென்னை 26, […]

Read more
1 4 5 6 7 8 9