மானாவாரிப்பூ

மானாவாரிப்பூ, மேலாண்மை பொன்னுசாமி, கங்கை புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 17, விலை 299ரூ. 34 சிறுகதைகளின் தொகுப்பே இந்நூல். தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் இலக்கிய பரிசு பெற்றள்ள இந்நூலில் சாதி, ஏழ்மை என பல்வேறு கருக்களை மையமாகக் கொண்டு படைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கதையையும் விறுவிறுப்பாகவும், படித்துத்தூண்டும் வகையிலும் எழுதியிருப்பதில் ஆசிரியரின் கைவண்ணம் புலனாகிறது. சிறுகதைகள் ஒவ்வொன்றும் யதார்த்தமாக அதே நேரம் சிந்தனையை தூண்டும் வகையில் எழுதப்பட்டு உள்ளது இதன் சிறப்பு.   —-   சனிக்கிரகத்தின் […]

Read more

நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராட்டம்

நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராட்டம், இராம. கோபாலன், விஜயபாரதம் பதிப்பகம், சென்னை 31, பக். 296, விலை 200ரூ. சுதந்திரம் என்பது போராடுவதற்கான உரிமையையும் உள்ளடக்கியது. நமது நாட்டின் சுதந்திரத்துக்கும் மக்களாட்சி மாண்புக்கும் 1975 ஜுன் 25இல் பெரும் நெருக்கடி ஏற்பட்டது. அந்த நெருக்கடியிலிருந்து மீண்டது எப்படி? நமது உரிமைகளை சத்தமின்றி மீட்டவர்கள் யார்? அதில் அவர்கள் அடைந்த கஷ்டங்கள் எவை? என்பதை இந்நூல் விளக்குகிறது. தனது அரசியல் எதிரிகள் பலம் பெற்று வருவதைத் தடுக்கவும், நீதிமன்றங்களின் கண்டனங்களிலிருந்து தப்பவும் அன்றைய பிரதமர் இந்திரா […]

Read more

ஈழம் எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம்

ஈழம் எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம், யமுனா ராஜேந்திரன், அடையாளம், 1205/1, கருப்பூர் சாலை, புத்தாநத்தம், திருச்சி மாவட்டம், விலை 550ரூ. விடுதலைப் புலிகளை ஆராதிக்கும் புத்தகங்கள் அதிகம். விடுதலைப் புலிகள் என்றாலே பாசிஸ்ட்டுகள் என்று பாய்ந்து பறாண்டும் புத்தகங்களும் அதைவிட அதிகம். ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பை அதற்கான பலம், பலவீனங்களுடன் நடுநிலைமை தவறாமல் எழுதப்பட்டுள்ள புத்தகங்கள் குறைவு. அதில் ஒன்று யமுனா ராஜேந்திரனின் இந்தப் புத்தகம். எதைப் பற்றி எழுதினாலும் அதனுடைய நுண்மையான அரசியலுக்குள் நுழைந்து, சகல தரப்பையும் அலசி ஆராய்ந்து எழுதக் […]

Read more

தமிழர் சமுதாய சிந்தனைகள்

தமிழர் சமுதாய சிந்தனைகள், க.ப. அறவாணன், தமிழ்க் கோட்டம், பக். 128, விலை 100ரூ. பதினாறு தலைப்புகளில் சமுதாயச் சிந்தனைகளை அறவுரையாக, தமிழர் சமுதாயச் சிந்தனைகள் என்ற தலைப்பில் வழங்கியிருக்கிறார் க.ப. அறவாணன். அவ்வப்போது, பல ஏடுகளிலும் (தினமலர் உட்பட) இதழ்களிலும் ஆசிரியர் எழுதிய சமுதாயக் கட்டுரைகளின் தொகுப்புதான் இந்நூல். திருமண வயதைக் குறைத்தால் என்ன? உலகத் தமிழர் கவனத்திற்கு, ஆகிய கட்டுரைகளில், நமது பாரம்பரியத்தை எடுத்துக்காட்டிய அதே சமயம், நடைமுறை சிக்கல்களையும் சொல்லியிருந்தது நல்ல அலசல். ஒவ்வொரு கட்டுரையும் சிந்தனையைத் தூண்டும், விதமாக […]

Read more

துக்காராம்

துக்காராம், பால சந்திரா நெமதே, தமிழாக்கம்-ஆர்.கே. நாகு, சாகித்ய அகடமி, குணா பில்டிங்ஸ், தேனாம்பேட்டை, சென்னை 600018, பக். 136, விலை 50ரூ. மகாராஷ்டிரா மாநிலத்தில், பக்தி நெறியை பரப்பியவர்களில் மிக முக்கியமானவர் துக்காராம். 13ம் நூற்றாண்டில் தோன்றிய வரகரி இயக்கத்தின் மிக முக்கியமான அங்கமாக திகழ்ந்தவர். ஜாதிப் பாகுபாடுகளை ஏற்காமல், எல்லாரும் சமம் என்ற கோட்பாட்டை கொண்டது இந்த இயக்கம். அப்போது மித மிஞ்சிய ஆணவப் போக்கோடு இருந்த பிராமணீயத்தை சரிக்கட்டும் மாற்றுச் சக்தியாய் இயங்கிய வரகரி இயக்கத்தை லட்சக்கணக்கான மக்களிடையே பரப்பியவர் […]

Read more

சுரதா

சுரதா, ஆர். குமாரவேலன், சாகித்ய அகடமி, பக். 128, விலை 50ரூ. உவமைக் கவிஞர் என்று பலராலும் புகழப் பெற்றவர். 85 ஆண்டு காலம் (1921-2006) உடையில் தூய்மை, உள்ளத்தில் தூய்மை, நட்பில் தூய்மை என்று எங்கும் எப்போதும் தூய்மையாகவே வாழ்ந்து காட்டியவர். அவரது வாழ்க்கை வரலாற்றை மிக அருமையாக, எளிமையாக எழுதியிருக்கிறார் ஆசிரியர். -சிவா.   —-   Guru Vijayeendra The Invinvible Saint(part 1). தமிழ்மூலம்-அம்மன் சத்தியநாதன், ஆங்கிலத்தில்-கே. லஷ்மண், அருள்மிகு அம்மன் பதிப்பகம், பக். 320, விலை 290ரூ. […]

Read more

நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராட்டம்

நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராட்டம், ராம கோபாலன், விஜயபாரதம் பதிப்பகம், 12, எம்.வி. நாயுடு தெரு, சேத்துப்பட்டு, சென்னை 600031, பக். 294, விலை 200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-490-8.html இந்திரா பிரதமராக இருந்தபோது அமல்படுத்தப்பட்ட நெருக்கடி கால நிகழ்வுகளை, ஒரு இந்துத்வ கண்ணோட்டத்தில் ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார். அரசியல் ரீதியாக ஜனநாயக வாதிகளால் நெருக்கடி நிலையை விமர்சித்து எழுதப்பட்ட நூல்களிலிருந்து வேறுபட்டு வித்தியாசமான கோணத்தில் நிகழ்வுகளை பதிவு செய்துள்ள நூலாசிரியர். ஆர்.எஸ்.எஸ். விசுவ இந்து பரிஷத் […]

Read more

வைரமணிக்கதைகள்

வைரமணிக்கதைகள், தாரிணி பதிப்பகம், பிளாட் எண். 4ஏ, ரம்பா பிளாட்ஸ், 32/79, காந்திநகர் 4வது பிரதான சாலை, அடையார், சென்னை 20, விலை 450ரூ. ‘எழுத்தாளர் வைரவனின் 80 சிறந்த சிறுகதைகளை தேர்வுசெய்து ஒரே பெரிய புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார்கள். வைரமணிக்கதைகள் என்று குறிப்பிட்டிருப்பது பொருத்தமானதே என்பதை பல கதைகள் நிரூபிக்கின்றன. நன்றி: தினத்தந்தி 16/10/2013.   —-   சிறுவருக்கு மகாபாரதம், பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை 14, விலை 150ரூ. சிறுவருக்கு மகாபாரதம் என்ற தலைப்புடன் வெளியிடப்பட்டுள்ள இந்த […]

Read more

தூது வந்த வீரர்

தூது வந்த வீரர், ஏம்பல் தஜம்முல் முகம்மது, நியூ லைட் புக் சென்டர், 1504ஏ, எம்ஐஜி, 3ஆம் முதன்மைச் சாலை, மாத்தூர், சென்னை 68, பக். 224, விலை 200ரூ. தாமஸ் கார்லைல் 19ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் வாழ்ந்த ஒரு வரலாற்று அறிஞர். இவரது எழுத்துக்களும், சொற்பொழிவுகளும் உலக இலக்கியத் தரம் வாய்ந்தவை. இவரது சொற்பொழிவுகளை ஆங்கிலேயர்கள் காசு கொடுத்துக் கேட்டனர். அன்றைய காலகட்டத்தில் இஸ்லாத்தின் மீது மேற்கத்திய நாடுகளின் கிறிஸ்தவர்களும், யூதர்களும் கொண்டிருந்த வெறுப்புணர்வு அளவிட முடியாதது. அந்தளவுக்கு பிரசாரம் முடுக்கி விடப்பட்டிருந்தது. […]

Read more

மனநலம் தெரிந்து கொள்வோம்

மனநலம் தெரிந்து கொள்வோம், டாக்டர் சி. பன்னீர்செல்வன், கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை 17, விலை 100ரூ. மனிதனுக்கு ஏற்படும் மனநோய்கள், அவற்றுக்கான காரணங்கள், அறிகுறிகள், சிகிச்சை முறைகள் மற்றும் பல்வேறு ஆலோசனைகளை கொண்ட நூல். நூலின் ஆசிரியர் மன நல மருத்துவர் என்பதால் மனநோயாளிகளை கையாள வேண்டிய வழிமுறைகளையும் சிறப்பாக விளக்கியுள்ளார்.   —-   காற்றுவாக்கிலே, கவிஞர் காற்று (எ) கலைவாணி கிருட்டிணன், கீதா பதிப்பகம், அஞ்சல்பெட்டி 2985, டாடாபாத் அஞ்சல், கோவை 12, விலை […]

Read more
1 5 6 7 8 9