ஹைகூ வானம்

ஹைகூ வானம், வீ. தங்கராஜ், அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், 41, கல்யாண சுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை 11, பக். 104, விலை 60ரூ. அவன் தைத்த செருப்பில் ஊரே நடக்கிறது அவனுடையது கக்கத்தில் தங்கராஜின் ஹைகூவில் ஒரு பருக்கை பதம் இது. மெல்லப்போ தென்றலே வழியில் கருவேல மரங்கள். இந்த ஹைகூ உணர்த்தும் காட்சி மிகப் பெரியது. விரித்து எழுதினால் ஒரு ஆயிரம் பக்கங்களுக்கு இதை எழுத முடியம். அதை மூன்றடியில் அளந்திருக்கிறார் கவிஞர். ஹைகூ எழுதுவது கடினமான பணி. அது ஆசிரியருக்கு […]

Read more

மாலன் சிறுகதைகள்

மாலன் சிறுகதைகள், மாலன், கவிதா பப்ளிகேஷன், சென்னை 17, பக். 416,விலை 200ரூ. ஆசிரியர் மாலன் பல்வேறு பத்திரிகைகளில், பல்வேறு காலகட்டங்களில் எழுதிய, 65 சிறுகதைகள் இந்நூலில் தொகுக்கப்பெற்றுள்ளன. இலக்கியத்தரம் வாய்ந்த சிறுகதைகள் பற்றி தமிழன், தமிழ் இளைஞர்களின் இன்றைய நிலை குறித்து, மாலன் மிக அக்கறையோடு தாயுள்ளத்தோடு யோசித்துள்ளார் என கூறியுள்ளார் பிரபஞ்சன். ஆரோக்கியமான விவாதங்களை நம்முன் வைக்கும் சிறுகதை தொகுதி நூல். -கவுதம நீலாம்பரன். நன்றி: தினமலர், 6/1/13.   —-   காலத்தின் குரல் தி.க.சி., வே. முத்துக்குமார், ஆவாரம்பூ, […]

Read more

தேவதாசியும் மகானும்

தேவதாசியும் மகானும், வெங்கடகிருஷ்ணன் ஸ்ரீராம், தமிழில் பத்மா நாராயணன், காலச்சுவடு பதிப்பகம், விலை 175ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-814-3.html தேவதாசிகள் என்று ஒரு குலம் உருவாக்கப்பட்டு சென்று நூற்றாண்டின் முன்பாதியிலேயே ஒழிக்கப்பட்டும் விட்டது. சங்கீத உலகில் அரும்பாடுபட்டுத் தமக்கென்று தனியிடம் அமைத்துக் கொண்ட பெங்களூரூ நாகரத்தினம்மா அந்த சமூகப் பிரிவைச் சேர்ந்தவர். நெஞ்சை உலுக்கி நிமிர வைக்கும் அவருடைய வாழ்க்கை வரலாறை தேவதாசியும் மகானும் என்ற தலைப்பில் வி.ஸ்ரீராம் ஆங்கிலத்தில் வெளியிட்டதை அழகாகத் தமிழாக்கம் செய்திருக்கிறார் பத்மா […]

Read more

மௌனியின் மறுபக்கம்

மௌனியின் மறுபக்கம், ஜே.வி. நாதன், விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை 2, விலை 75ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-837-1.html தமிழ்ச் சிறுகதை உலகின் முன்னோடியும், சிறுகதைத் திருமூலர் என்று போற்றப்படுபவருமான மௌனியைப் பற்றிய முக்கிய ஆவணம். வெறும் 24 சிறுகதைகள் மட்டுமே எழுதி, உலகின் சிறந்த சிறுகதையாளர்கள் வரிசையில் இடம்பிடித்தவர் மௌனி. மரபு சார்ந்த சிறுகதை இலக்கியத்தின் பாதையைத் தகர்த்து புதுத்தடம் போட்டவர். 16 ஆண்டுகாலம் மௌனியோடு பழகி அவரின் அன்பைப் பெற்ற பத்திரிகையாளர் […]

Read more

மனச்சிறகுகள்

மனச்சிறகுகள், கவிஞர் மருதம்கோமகன், கோமகன் பதிப்பகம், 479ஏ, 8வது தெரு, பாரதிநகர் தெற்கு, கும்பகோணம், விலை 90ரூ. கண்ணில் கண்ட காட்சிகளை காதில்பட்ட செய்திகளை கவிதையாய், புகைப்படத்துடன் சமுதாய சிந்தனை கருத்துடன் சொல்லப்பட்டுள்ளது. 104 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி 10/4/13.   —-   சுற்றுச்சூழல் சிந்தனைகள், அரிமா. ஜே, ஜோபிரகாஷ், ரேவதி பதிப்பகம், 19, ராஜசேகரன் தெரு, மைலாப்பூர், சென்னை 4, விலை 225ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-023-8.html என்னென்ன காரணங்களால் நமது சுற்றுச்சூழல் […]

Read more

கபிலர்

கபிலர், கா. அரங்கசாமி, சாகித்திய அகாதெமி, குணா பில்டிங், 443, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, விலை 50ரூ. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கப் புலவர்களால் போற்றப்பெற்றவர் கபிலர். திருகோவிலூர் பாடல் கல்வெட்டு இவர் பெருமையை பறைசாற்றுகிறது. கபிலர் குறித்து பல தமிழார்வலர்கள் புத்தகங்கள் எழுதியுள்ளனர். ஆனால் கபிலரின் வரலாற்றையும், கபிலரின் தமிழியல், ஆளுமைத்திறன், இலக்கியக் கோட்பாடுகள் குறித்து மாறுபட்ட கோணத்தில் படம்பிடித்து காட்டுகிறார் கல்வெட்டியல் புலமை பெற்ற நூலாசிரியர் கா. அரங்கசாமி. நன்றி: தினத்தந்தி 10/4/13.   —-   சாம்ராட் […]

Read more

கங்காபுரிக் காவலன்

கங்காபுரிக் காவலன், விக்கிரமன், ஆலயா, 6/11, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, வ.உ.சி. நகர், பம்மல், சென்னை 75, விலை இரண்டு பாகங்களும் சேர்த்து 500ரூ. ராஜராஜசோழனின் மகனான ராஜேந்திர சோழன், தந்தைக்கு நிகராக சரித்திரத்தில் இடம் பெற்றவர். ராஜராஜன் தஞ்சை பெரிய கோவிலைக் கட்டினார். ராஜேந்திரன் கங்கை கொண்ட சோழபுரத்தை உருவாக்கினார். இதன் பின்னணியில் கங்காபுரிக்காவலன் வரலாற்று நாவலை இரண்டு பாகங்களில் எழுதியுள்ளார், கலைமாமணி விக்கிரமன். பொன்னியின் செல்வனுக்குத் தொடர்ச்சியாக நந்திபுரத்து நாயகியை எழுதி சாதனை படைத்த விக்கிரமன், கங்காபுரிக் காவலனை சிறப்பாக எழுதி […]

Read more

அரசியல் சதுரங்கம்

அரசியல் சதுரங்கம், சோலை, நக்கீரன், 105 ஜானி ஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 140ரூ. அரசியல் விமர்சகர் சோலை நக்கீரன் வார இதழில் எழுதிய அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு. இந்த கட்டுரை தொடர் வெளியான காலகட்டத்தில் பரபரபப்பாக பேசப்பட்ட உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரையிலான விஷயங்களை தனது பாணியில் அலசி ஆராய்ந்து எழுதியுள்ளார். கட்சிபேதமின்றி உண்மைகளை உலகுக்கு எடுத்துச் சொல்லும் தைரியம் அவரது எழுத்தில் பளிச்சிடுகிறது. சமுதாய நோக்குடன் உண்மைகளை ஆணித்தரமாக எழுதியிருப்பது சிறப்பு.   —-   […]

Read more

அமுதம் பருகுவோம்

அமுதம் பருகுவோம், ப. முத்தக்குமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை 14, பக். 128, விலை 100ரூ. இந்து மதத்தின் சிறப்புகளை அழகாக வெளிப்படுத்தும் நூல். தியானம் மனித வாழ்வுக்கு எவ்வளவு அவசியம் என்பதையும் வலியுறுத்துகிறது. தனி மனிதனின் உயர்வுக்கும் சமுதாய வளர்ச்சிக்கும் தேவையான அறநெறிகளை ராமாயணம், மகாபாரதம், பாகவதம், பகவத் கீதை போன்ற அறநூல்களின் மேற்கோள்களோடு எடுத்துரைக்கும் பயனுள்ள நூல் இது. ஆகம விதிப்படி நிறுவப்படாத சிலைகளினால் மக்களுக்கு நன்மைகள் கிடைக்காது. ஆகம விதிப்படி கட்டப்பட்ட கோவில்களினால் பொதுவாக நன்மைகள் […]

Read more

ஸ்ரீமகாவிஷ்ணு மகாத்மியம்

ஸ்ரீமகாவிஷ்ணு மகாத்மியம், உமா பாலகுமார், அருண் பதிப்பகம், எண் 107/8, கௌடியா மடம் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, பக். 396, விலை 175ரூ. 33 தலைப்புகளில் மகாவிஷ்ணு குறித்த கதைகளின் தொகுப்பு. மகாவிஷ்ணு, லட்சுமி, பூ தேவி, நீளா தேவி கதைகளுடன் துவங்குகிறது. மகாவிஷ்ணுவிடம் இருந்து பிரம்ம தேவர் தோன்றியது. கலைமகள் கதை என விரிந்து அனந்த பத்மநாப சுவாமி, திருப்பதி மலையப்ப சுவாமி, உப்பிலியப்பன், அரங்கநாதர், சுந்தராஜப் பெருமாள் என பெருமாள்களின் கதைகளுடன் செல்கிறது. ஆதிசேஷன், கருடாழ்வான், அனுமன் ஆகியோரின் கதைகளுடன் […]

Read more
1 283 284 285 286 287 336