அமுதம் பருகுவோம்

அமுதம் பருகுவோம், ப. முத்தக்குமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை 14, பக். 128, விலை 100ரூ. இந்து மதத்தின் சிறப்புகளை அழகாக வெளிப்படுத்தும் நூல். தியானம் மனித வாழ்வுக்கு எவ்வளவு அவசியம் என்பதையும் வலியுறுத்துகிறது. தனி மனிதனின் உயர்வுக்கும் சமுதாய வளர்ச்சிக்கும் தேவையான அறநெறிகளை ராமாயணம், மகாபாரதம், பாகவதம், பகவத் கீதை போன்ற அறநூல்களின் மேற்கோள்களோடு எடுத்துரைக்கும் பயனுள்ள நூல் இது. ஆகம விதிப்படி நிறுவப்படாத சிலைகளினால் மக்களுக்கு நன்மைகள் கிடைக்காது. ஆகம விதிப்படி கட்டப்பட்ட கோவில்களினால் பொதுவாக நன்மைகள் […]

Read more

ஸ்ரீமகாவிஷ்ணு மகாத்மியம்

ஸ்ரீமகாவிஷ்ணு மகாத்மியம், உமா பாலகுமார், அருண் பதிப்பகம், எண் 107/8, கௌடியா மடம் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, பக். 396, விலை 175ரூ. 33 தலைப்புகளில் மகாவிஷ்ணு குறித்த கதைகளின் தொகுப்பு. மகாவிஷ்ணு, லட்சுமி, பூ தேவி, நீளா தேவி கதைகளுடன் துவங்குகிறது. மகாவிஷ்ணுவிடம் இருந்து பிரம்ம தேவர் தோன்றியது. கலைமகள் கதை என விரிந்து அனந்த பத்மநாப சுவாமி, திருப்பதி மலையப்ப சுவாமி, உப்பிலியப்பன், அரங்கநாதர், சுந்தராஜப் பெருமாள் என பெருமாள்களின் கதைகளுடன் செல்கிறது. ஆதிசேஷன், கருடாழ்வான், அனுமன் ஆகியோரின் கதைகளுடன் […]

Read more

சாலப்பரிந்து

சாலப்பரிந்து, நாஞ்சில்நாடன், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில் 1, பக். 240, விலை 190ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-797-3.html தேர்ந்தெடுக்கப்பட்ட 25 சிறுகதைகளின் தொகுப்பு. கிராமம், நகரம், பயணம் இந்த மூன்ற பின்னணிகளில் பெரும்பாலான கதைகள் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு சிறுகதையிலுமே அந்தக் கதை நடக்கும் சூழல் குறித்த ஏராளமான தகவல்களை அளிக்கிறார் நூலாசிரியர். சிறுகதைக்கு இவ்வளவு தகவல்கள் தேவையா? என்ற எண்ண அலை நமக்குள் எழும்போதே, அரிசியில் எத்தனை வகைகள், பழங்காலத்தில் நம்மிடம் வழக்கத்தில் […]

Read more

சாதியும் தமிழ்த்தேசியமும்

சாதியும் தமிழ்த்தேசியமும், பெ. மணியரசன், பன்மை வெளி, எண் 1, இராசா வணிக வளாகம், நீதிமன்றச் சாலை, புது ஆற்றுப் பாலம், தஞ்சாவூர் 1, விலை 80ரூ. சாதி ஒழித்தல் ஒன்று – நல்ல தமிழ் வளர்த்தல் மற்றொன்று பாதியை நாடு மறந்தால் – மற பாதி துலங்குவதில்லையாம் – என்றார் பாவேந்தர் பாரதிதாசன். சாதி ஒழிப்பு வீரர்கள் தமிழைப் புறக்கணிப்பதும், தமிழ்த் தீரர்கள் சாதிப் பிரச்னைகளை மறைத்துச் செயல்படுவ்தும்தான் இன்று தமிழ்ச் சமூகத்தில் நடக்கிறது. இந்த இரண்டு பிரச்னைகளையும் சம அளவில் வைத்துப் […]

Read more

சங்கர காவியம் – பூஜ்யஸ்ரீ காஞ்சி மகானின் புனித வாழ்க்கை வரலாறு

சங்கர காவியம் – பூஜ்யஸ்ரீ காஞ்சி மகானின் புனித வாழ்க்கை வரலாறு, டால்மியாபுரம் கணேசன், அகஸ்தியர் பதிப்பகம், விலை 250ரூ. எதையுமே கதை கட்டுரைகளைப் படிப்பதைவிட நாடக வடிவமாக்கித் தந்துவிட்டால் போதும். அப்படியே எடுத்துச் சுளைசுளையாய் விழுங்குகிற மாதிரி மனத்தின் உள்வாங்கிக் கொண்டுவிடலாம். இந்தக் கலையில் தாம் வல்லவர் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார் டால்மியாபுரம் கணேசன். நடமாடும் தெய்வம் என்று பெருமையோடு வழிபட்ப்பட்ட காஞ்சி மகாப்பெரியவாளைப் பற்றிய பல நிகழ்வுகளைப் பலரும் பலவாறாகப் பேசியும் எழுதியும் வந்திருக்கிறார்கள். சென்ற நூற்றாண்டின் ஆன்மிக அற்புதம் அவர். […]

Read more

இலக்கிய மரபியல்

இலக்கிய மரபியல், கி. இராசா, பார்த்திபன் பதிப்பகம், திருச்சி 21, பக். 504, விலை 350ரூ. இலக்கிய ஆய்வில் பொதுவாக இலக்கிய மரபு என்ற வழக்கு உண்டு. இலக்கிய மரபியல் என்ற வழக்கு இதுகாறும் இல்லை. இலக்கிய மரபு என்பது வேறு. இலக்கிய மரபியல் என்பது வேறு. இலக்கிய மரபு (Literary Genetics) என்பது இலக்கியத்தின் தோற்றம் வளர்ச்சி குறித்தது. இதனை இலக்கியப் பரிணாமம் (Evolution lf Literature) என்றால் சட்டென விளங்கும். இந்த இலக்கியப் பரிமாணத்திற்கு அடிப்படையாக விளங்குகின்ற இலக்கிய மரபுக் கூறுகள் […]

Read more

தடைகளும் விடைகளும்

தடைகளும் விடைகளும், முரு.பழ.ரத்தினம் செட்டியார், சைவ சித்தாந்த வாழ்வியல் ஆய்வு மையம், 3, அண்ணாநகர், சோளிங்கர் 631102, பக். 306, விலை 120ரூ. சைவ சித்தாந்தத்தின் வழியில், பல்வேறு வடிவில் எழுப்பப்படும் சமயம் தொடர்பான 250 கேள்விகளுக்கான விடைகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. கேள்விகள் இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முதல் பகுதியில் அருள் அறம், உலக நலம், ஊழ்வினை, பழக்க வழக்கங்கள், தெய்வமாடி, பேயகள், மந்திரங்கள், சித்துகள், வழிபாடு, புராணக் கதைகள் உள்ளிட்ட 10 தலைப்புகளில் கேள்விகள் தொகுக்கப்பட்டுள்ளன. பால் குடிப்பது தீமையா, வட்டி […]

Read more

சிபி

சிபி, ஏ.ஏ.ஹெச்.கே.கோரி, இருவாட்சி, 41, கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை 11, பக். 288, விலை 170ரூ. சிறுபான்மை பிரிவு என்பதன் சுருக்கமே சிபி என்னும் நாயகனின் பெயராக இருக்கிறது என்பதைப் படிக்கும் இடத்திலிருந்தே சுவாரஸ்யம் தொடங்கிவிடுகின்றது. கற்பனைப் பாத்திரங்களோடு மகாத்மாகாந்தி, நேரு, காமராஜர், மொரார்ஜி தேசாய் போன்ற அரசியல் தலைவர்களையும் இந்தத் தலைமுறைக்குத் தெரியாத அவர்களின் அரிய குணங்களையும் நம் கண்முன் தரிசனப்படுத்துகிறது இந்நாவல். மேற்கத்திய கலை வடிவமான டாக்குடிராமா என்னும் யுக்தியில் எழுதப்பட்டிருககும் இந்த நாவலில், இறந்த காலமும் நிகழ்காலமும் எதிர்காலமும் […]

Read more

சோசலிச சமுதாய மேதைகள்

சோசலிச சமுதாய மேதைகள், அ,சா. குருசாமி, சுரா பதிப்பகம், 1620 ஜே பிளாக், அண்ணா நகர், சென்னை 40, விலை 90ரூ. சோசலிச தத்துவார்த்த மரபில் குறிப்பிடத்தக்க, மூவரான ஸன் யாட் சென், காரல் மார்க்ஸ், பிரடெரிக் எங்கெல்ஸ் ஆகியோரின் வாழ்க்கையை விவரிக்கும் நூல். இது தத்துவார்த்த நூல் இல்லை என்றாலும் தத்துவ அறிஞர்களின் வாழ்க்கை எளிய நடையில் விவரிக்கும் நூல் இது. நன்றி: இந்தியாடுடே, 13/3/2013.   —-   குறுந்தொகை, இலந்தையடிகள் வித்துவான் இராச. சிவ. சாம்பசிவவர்மா(1934-37), பதிப்பும் ஆய்வும்- இரா. […]

Read more

சார்லி சாப்ளினின் எனது வாழ்க்கை

எனது வாழ்க்கை, சார்லி சாப்ளின், தமிழில்-சிவன், கவிதா பப்ளிகேஷன்ஸ், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, பக். 288, விலை 200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-469-1.html சார்லி சாப்ளின் என்ற நகைச்சுவை சக்கரவர்த்தியை எல்லாரும் அறிவர். ஆனால் அவரது ஆராம் கால வாழ்வு எத்தனை துக்கம் நிறைத்தாக இருந்தது என்பது, பலருக்குத் தெரியாது. ஏப்ரல் 16ல் 1889ம் ஆண்டு சார்லி சாப்ளின் பிறந்தார். டிசம்பர் 1877, 25ம் தேதி மறைந்தார். இந்த இடைப்பட்ட காலத்தில் கண்ணீர் […]

Read more
1 284 285 286 287 288 336