நிஜங்களின் பதிவுகள்

நிஜங்களின் பதிவுகள், கே.ஜி. மகாதேவா, மித்ரா ஆர்ட்ஸ் அண்டு கிரியேஷன்ஸ், 20/2, ஜக்கரியா காலனி முதல் தெரு, சூளைமேடு, சென்னை 94, விலை 90ரூ. இலங்கையின் புகழ் பெற்ற எழுத்தாளரும் பத்திரிகையாளருமான கே.ஜி.மகாதேவா எழுதிய கட்டுரைகளும், நேர்காணல்களும் கொண்ட நூல். கோவையில் நடந்த தமிழ் செம்மொழி மாநாடு, சென்னையில் கட்டப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகம், ஆயிரம் வயது கண்ட தஞ்சை பெரிய கோவில் உள்பட மொத்தம் 20 தலைப்புகள். இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து, இந்திய பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் சுருக்கமும் இடம் பெற்றுள்ளது. […]

Read more

அமானுஷ்யம்… ஆனால் உண்மை

அமானுஷ்யம்… ஆனால் உண்மை, வேணு சீனிவாசன், குறிஞ்சி பதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, இரண்டாவது தெரு, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், செக்கை 49, விலை 100ரூ. ஆவிகளின் கதையை, ஆவி பறக்க தந்திருக்கும் நூல். மனித அறிவுக்கும் ஆற்றலுக்கும் எட்டாத சில விஷயங்கள் நமக்கு பிரமிப்போடு பயத்தையும் ஊட்டுகின்றன. பறக்கும் பேய் மனதன், ஆண்களை தூக்கில் போட்டு உயிரை பலி வாங்கும் அமானுஷ்ய உருவம், கண்ணாடியில் தோன்றி அதிசயிக்க வைக்கும் சிலுவைக்குறி இப்படி ஒவ்வொரு சிலிர்ப்புப் பின்னணியிலும் ஒரு திகில் சம்பவம் […]

Read more

போதியின் நிழல்

போதியின் நிழல், அசோகன் நாகமுத்து, அந்திமழை, விலை 180ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-815-6.html 2500 ஆண்டுகளுக்கு முன்னால் தனி ஒரு மனிதராக, சீனாவிலிருந்து இந்தியா வந்து திரும்பியவர் யுவான் சுவாங். இவ்ர இந்தியா வந்தது, அத்தேடல் காரணமாகவும், பௌத்த தரிசனத்துக்காகவும், பௌத்தம் ஒரு மதமாக இந்தியாவை விட்டு விலகி இருக்கலாம். ஆனால் சமூகத்தின் அகமனதில் புத்தர் கண்மூடி தியானத்தில் அமர்ந்திருக்கிறார் என்று முன்னுரையில் எழுதுகிறார் ஆசிரியர் அசோகன் நாகமுத்து. இந்தியா முழுவதும் பரவியிருந்த  பௌத்தத்தின் எச்சமே இப்போது நம்மிடையே […]

Read more

சோழர் செப்பேடுகள்

சோழர் செப்பேடுகள், நடன. காசி நாதன், சேகர் பதிப்பகம், சென்னை 78, பக். 144, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-515-8.html சோழப் பேரரசர்களான சுந்தரச் சோழனின் அன்பில் செப்பேடு அவரது மைந்தன் முதலாம் ராஜராஜனின் பெரிய லெயிடன் செப்பேடு, அவரது மகன் முதலாம் ராஜேந்திரனின் கரந்தைச் செப்பேடு, அவரது மகன்களில் ஒருவரான வீரராஜேந்திரனின் மகள் வயிற்றுப் பெயரனான முதலாம் குலோத்துங்கனின் சிறிய லெயிடன் செப்பேடு ஆகிய செப்பேடுகளின் தமிழ்ப் பகுதிகளின் மூலம் அடங்கிய நூல் இது. மேலும் […]

Read more

விகடன் சுஜாதா மலர்

விகடன் சுஜாதா மலர், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 165ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-863-0.html புதுமைத் தமிழுக்கு சொந்தக்காரர் சுஜாதா. கம்ப்யூட்டர் என்ஜினீயராக இருந்த அவர் கடினமான விஷயங்களையும், புரிகிற மாதிரி எழுதுவதில் வல்லவராகத் திகழ்ந்தார். கதை, கட்டுரை, சிறுகதை எதிலும் புதுமை. சிவாஜி உள்பட பல திரைப்படங்களுக்கும் வசனம் எழுதினார். அவரைப்பற்றி விகடன் வெளியிட்டுள்ள இந்த மலரில், சுஜாதா பற்றி கவிஞர் வாலி, ஓவியர் ஜெயராஜ், அமுதவன் உள்பட பலர் கட்டுரைகள் எழுதியுள்ளனர். […]

Read more

வாக்ரிகளின் வாழ்வியல்

வாக்ரிகளின் வாழ்வியல், ஆ.குழந்தை, பயணி பதிப்பகம், திருவல்லிக்கேணி, சென்னை 5, பக். 248, விலை 150ரூ. தமிழகத்திலுள்ள வாக்ரி சமுதாயத்தினருடன் குறிப்பாக, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் வாழும் வாக்ரி சமுதாயத்தினருடன் பல ஆண்டுகள் உடனிருந்து பெற்ற அனுபவத்தின் அடிப்படையிலான தேடலை எழுத்து வடிவமாக்கியுள்ளார் நூலாசிரியர். வாக்ரிகளின் வாழ்வியலை பண்பாட்டு வாழ்வியல், அரசியல் வாழ்வியல், பொருளாதார வாழ்வியல், வாய்மொழி வழக்கான வாழ்வியல், சமூக, சமய வாழ்வியல் எனப் பல கூறுகளாக பகுத்து ஆராய்ந்துள்ளார். மேலும் கூடி வாழ்வதிலும், உறவு ஏற்படுத்துவதிலும், அன்பு […]

Read more

வெள்ளந்தி மனிதர்கள்

வெள்ளந்தி மனிதர்கள், ஆ. அறிவழகன், செம்மூதாய் பதிப்பகம், 17, தாகூர் தெரு, எம்.எம்.டி.ஏ.நகர், சிட்லபாக்கம், சென்னை 64, விலை 50ரூ. சூதுவாது இல்லாத விவரங்கள் தெரியாது வாழ்ந்து வரும் மனிதர்களை மனதில் கொண்டு எழுதப்பட்ட 8 சிறுகதைகள்.   —-   ஸ்ரீ அதிசங்கரர், பருத்தியூர் டாக்டர் கே. சந்தானராமன், பூங்கொடி பதிப்பகம், 14, சித்திரைக் குளம் மேற்குத்தெரு, மைலாப்பூர், சென்னை 4, விலை 30ரூ. ஸ்ரீ ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாற்றையும், தொண்டுகளையும் கூறும் சில நூல்.   —-   இந்திய விஞ்ஞானிகள், […]

Read more

நீதிமன்றத்தில் நீயா, நானா, நாமா?

நீதிமன்றத்தில் நீயா, நானா, நாமா?, டாக்டர் ஏ.ஈ. செல்லையா கல்வி அறக்கட்டளை, ஏபி147, மூன்றவாது பிரதான சாலை, அண்ணாநகர், சென்னை 40, விலை 75ரூ. திருமண வாழ்க்கையில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு, கணவனும், மனைவியும் விவாகரத்து கேட்டு கோர்ட்டை அணுகுவது அதிகமாகிவிட்டது. இதற்கு தீர்வு காண்பது எப்படி? என்று கேள்வி எழுப்புகிறார் சி. வசந்தகுமாரி செல்லையா அவர் வழக்கறிஞராக இருப்பதால் தான் சந்தித்த பல வழக்குகளை மேற்கோள் காட்டி, பிரச்சினைகளை அலசி ஆராய்கிறார். வாழ்க்கைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண பல்வேறு வழிமுறைகளையும் கூறுகிறார்.   […]

Read more

சைவ சமயக் கலைக் களஞ்சியம்

சைவ சமயக் கலைக் களஞ்சியம், தொகுதி 1, சைவ-சமய-தமிழகம், முனைவர் ஆர். செல்வக்கணபதி, தெய்வ சேக்கிழார் மனித வள மேம்பாட்டு அறக்கட்டளை, பக். 895, விலை – 10 தொகுதிகளும் சேர்த்து 15000ரூ. சைவ சமயம், தமிழகம் என்பதாக அமைந்துள்ள கலைக் களஞ்சியத்தின் மூலம் தொகுதி, சைவ சமய வழிபாடு தமிழகத்தில் எவ்வாறு நிலை பெற்றுள்ளது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. மிகப் பெரிய தரவுகளைத் தருகிற இக்கலைக் களஞ்சியம், நுண்ணிய நோக்கோடு அவற்றை ஒருங்கமைக்கவும் செய்கிறது. கலைக்களஞ்சியம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கு வரைமுறை […]

Read more

ஒழிவில் ஒடுக்கம் எனும் சைவ சித்தாந்த ஞானம்

ஒழிவில் ஒடுக்கம் எனும் சைவ சித்தாந்த ஞானம், டாக்டர் ஆர். சிவசக்தி வேலன், நர்மதா பதிப்பகம், 10, நானாதெரு, தி.நகர், சென்னை 17, பக். 216, விலை 80ரூ. திருவருட் பிரகாச வள்ளல் ராமலிங்க அடிகளால், 1851ல் பதிப்பித்து வெளியிடப்பட்ட இந்நூலை இயற்றியவர் 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்ரீகண்ணுடைய வள்ளல் ஆவார். தமிழ்க் குரிசில் சீகாழிச் சம்பந்தனை (பக். 31) தெய்வமாக வழிபட்டு இயற்றப்பட்ட, ஒழிவில் ஒடுக்கம் விரித்த நூற்கெல்லாம் விதை (32) எனலாம். வடலூர் வள்ளலார் பதிப்பித்த பின், வேதாந்த அடிப்படையில் விளக்கவுரை […]

Read more
1 109 110 111 112 113 128