ஜின்னா தேசியவாதியா? பிரிவினைவாதியா?

ஜின்னா தேசியவாதியா? பிரிவினைவாதியா?, ச. ராசமாணிக்கம், சந்தியா பதிப்பகம், சென்னை – 83, பக்கம். 200, ரூ. 130. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-814-4.html இந்திய துணைக் கண்டத்தின் மிக முக்கிய இஸ்லாமியத் தலைவர்களுள் முதன்மையானவர் ஜின்னா. இத்தனைக்கும் அவர் முஸ்லிம்களின் புனிதக் கடமையான ஹஜ் யாத்திரையை மேற்கொண்டதில்லை, தன் உயிலைக் கூட இஸ்லாமிய முறைப்படி எழுதியதில்லை; மசூதிக்குப் போவதை வழக்கமாகக் கொண்டதில்லை; உருது அவருக்குத் தெரியாது; குரானுக்கும் அவருக்கும் வெகுதூரம்; இஸ்லாமிய மரபுப்படி உடையணிந்ததில்லை; அவரது மனைவி […]

Read more

அன்பே யோகம்

அன்பே யோகம், தா. நீலகண்ட பிள்ளை, செம்மூதாய் பதிப்பகம், 17, தாகூர் தெரு, எம். எம். டி. ஏ. நகர், சிட்லபாக்கம், சென்னை – 64, விலை: ரூ. 80. திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், ஆழ்வார்கள், சித்தர்களில் படைப்புகளில் பக்தி, அன்பு நெறி வீற்றிருப்பது 18 கட்டுரைகளிலும் பரந்து விரிந்து கிடக்கிறது. நாலாயிர திவ்விய பிரபந்தம், கம்பராமாயணம், சித்தர் பாடல்கள் உள்ளிட்ட இலக்கியங்களில் பொதிந்த கருத்துக்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் முயற்சியையும் காண முடிகிறது. காதல், வீரம், அன்பு, இசை, சேவை, ஆன்மிகம், நட்பு உள்ளிட்ட […]

Read more

இலங்கை கிராமத்து முஸ்லிம்களின் வாய்மொழிக் கதைகள்

இலங்கை கிராமத்து முஸ்லிம்களின் வாய்மொழிக் கதைகள், எஸ். முத்துமீரான், தானல் பதிப்பகம், 39/13, ஷேக்தாவூத்தெரு, ராயப்பேட்டை, சென்னை 14, பக்கங்கள் 127, விலை 60ரூ. வாய்மொழியாய் உலவும் கதைகள், உலகில் எல்லா மொழிகளிலும் காணப்படுகின்றன. எழுத்து மொழிக்கு முந்தையது வாய் மொழியாகும். நாட்டாரியல் என்பது அண்மைக்காலமாய் ஒரு தனித்துறையில் வளர்ந்து கொண்டிருக்கிறது. அதில் முக்கியமானது வாய்மொழியாய்ப் புழக்கும் நாட்டுப்புறக் கதைகள்தாம். இந்தக் கதைகள் யாவும், ஏதோவொரு வாழ்வியல் பயனை மையமாக வைத்தே சொல்லப்பட்டவை. நூலாசிரியர் இலங்கை நாட்டுப்புற முஸ்லிம் மக்களிடையே வழங்கி வரும், நாட்டார் […]

Read more

நீதியின் குரல்

நீதியின் குரல் (பாகம் 2), டாக்டர் ஜஸ்டிஸ் ஏஆர். லெட்சுமணன், குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை – 10, நீதியின் குரல் (2ம் பாகம்): பக். 400, விலை ரூ. 750, The Judge Speaks (vol.II):        பக். 416, விலை ரூ. 800. நீதி என்பது காலதாமதப்படுத்தாமல் உரிய நேரத்தில் உரியவர்க்கு வழங்கப்படவேண்டும். ஏன்? எதற்கு? அதற்கான பதில்கள்தான் நீதியரசர் ஏஆர். லெட்சுமணனின் ‘நீதியின் குரல்’ என்ற தலைப்பில் நூலாக்கம்  பெற்றுள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் விளங்கிய டாக்டர் […]

Read more

திரை இசை அலைகள்

திரை இசை அலைகள் – ஐந்தாம் பாகம், வாமனன், மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை – 108, விலை: ரூ. 250, பக்: 552. ஒருவர் சினிமா இசைத் துறையைக் குறித்து எழுத வேண்டும் என்றால், முதலில் அவருக்கு இசையிலும், இலக்கியத்திலும் நல்ல ரசனையும், ஞானமும் இருக்க வேண்டும். அது இந்நூலாசிரியருக்கு நிறைவாக இருக்கிறது என்பதை இந்நூலைப் படிக்கும்போது அறிய முடிகிறது. தவிர, இவரால் இந்நூலில் எழுதப்பட்டுள்ள இசைக் கலைஞர்களில் பெரும்பாலோர் காலஞ்  சென்றவர்கள், பெரிதும் பிரபலமாகாதவார்கள், மக்களால் மறந்து […]

Read more

போதியின் நிழல்

போதியின் நிழல், அசோகன் நாகமுத்து, அந்திமழை, ஜி-4, குருவைஷ்ணவி அப்பார்ட்மெண்ட்ஸ், 20, திருவள்ளுவர் நகர், மெயின்ரோடு, கீழ்க்கட்டளை, சென்னை 117, விலை 180ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-815-6.html ஏறத்தாழ 1380 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவைச் சேர்ந்த புத்தமத துறவி யுவான் சுவாங், புத்தமதம் தோன்றிய இந்தியாவை நேரில் காண வேண்டும் என்ற வேட்கையுடன் உயிரை துச்சமாக மதித்து மேற்கொண்ட புனித பயணத்தை வறட்டு வரலாற்று குறிப்புகளாக அல்லாமல், விறுவிறுப்பும், திடீர் திருப்பங்களும் நிறைந்த நாவலாக ஆக்கித்தந்து இருக்கிறார் […]

Read more

எண்ணங்களின் அதிசய சக்தி

எண்ணங்களின் அதிசய சக்தி , ஆரிசன் ஸ்வெட் மார்டன், தமிழில்: விமலநாத், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை 17, பக்கம்: 314, ரூ. 160. வாழ்வில் நாம் இப்போது என்ன நிலையில் இருக்கிறோம் என்பதற்கும் , எதிர்காலத்தில் உயரங்களை எட்ட இருக்கிறோமா அல்லது பாதாளத்தில் விழ இருக்கிறோமா என்பதையும் நமது எண்ணங்களே நிர்ணயிக்கின்றன என்பதைத் தெளிவாக விளக்கும் நூல் இது. நியாயமான கனவுகள் படைப்புச் சக்தி உடையவை, மனதில் ஏற்படும் ஒவ்வொரு ‘செல்’லும் லாபமடைகிறது அல்லது துன்பமடைகிறது. நம் யோசிப்பதும், நேசிப்பதுமே நம்மைக் கட்டமைக்கிறது என்பன […]

Read more

வரப்பெற்றோம்

காலமறிந்து கூவிய சேவல், கே. ஜீவபாரதி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை – 98,  பக். 148, ரூ. 95. — இதயம் திருந்த இனிய மருந்து, சிராஜுல் ஹஸன், இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட், சென்னை – 12, போன்: 044 – 2662 4401, பக். 64, ரூ. 30. — தமிழச்சியின் வனப்பேச்சியில் மண்ணும் மனித உறவுகளும், மு. அருணாசலம், அருண் பதிப்பகம், தரைத்தளம் ‘சி’ பாலாஜி பிளாக், எஸ்பிஐ காலனி, கண்டோன்மெண்ட், திருச்சி – 620 […]

Read more

சிவ தரிசனம்

சிவ தரிசனம், ப. முத்துக்குமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், 25, பீ+ட்டர்ஸ் சாலை, சென்னை – 600 014. பக்: 192, விலை: ரூ. 150. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-013-7.html காலத்தால் மூத்த சிவ வழிபாட்டை விளக்கும் நூல். சிவன், கணபதி, முருகன், நடராஜர் போன்ற தெய்வ வழிபாட்டின் தத்துவங்களையும், வாழ்வியல் நெறிகளோடு ஆசிரியர் சிறப்பாக விளக்கி உள்ளார். சிவன் உயர்ந்த தபஸ்வீ. மங்களம் என்பது சிவனுக்கு மட்டுமே பொருந்தும். சத்தி மூலம் சிவனை அடைய முடியும், சிவன் […]

Read more

இந்தியாவின் விடிவெள்ளி சுவாமி விவேகானந்தர்

இந்தியாவின் விடிவெள்ளி சுவாமி விவேகானந்தர், நெல்லை விவேகானந்தா, வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை – 600 017, பக்கம்: 252, விலை: ரூ. 125. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-546-3.html இந்து மதத்தின் பெருமையை, உலக அரங்கில் நிலை நாட்டியவர் விவேகானந்தர். எத்தனை முறை படித்தாலும், அலுக்காது அவரது வாழ்க்கை வரலாறு. இந்நூலாசிரியர் சுவாமிஜியின் வாழ்க்கையில் முக்கியமான சம்பவங்கலை, 43 தலைப்புகளில் சுருக்கமாக, ஆனால் சுவைபட எழுதியுள்ளார். சுவாரஸ்யமாகப் படைத்திருக்கிறார். – கேசி. […]

Read more
1 78 79 80 81 82 88