அன்பே யோகம்

அன்பே யோகம், தா. நீலகண்டபிள்ளை, செம்மூதாய் பதிப்பகம், 17, தாகூர் தெரு, எம்.எம்.டி.ஏ. நகர், சிட்லபாக்கம், சென்னை 64, பக். 150, விலை 80ரூ. 18 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது. பக்தி இலக்கியங்கள் மனிதர்களை செழுமைப்படுத்தத் தோன்றியவை என்பதை சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் பாக்களோடு விளக்கியிருக்கிறார் ஆசிரியர். திருமூலர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், புனிதவதியார், கம்பன் ஆகியோரின் பாடல்களில் பிறரிடம் அன்பு செலுத்த வேண்டும் என்கிற கருத்தை மேலோங்கியிருந்தது என்பதை உணர்த்தும் ஆசிரியர் அன்பே யோகம் என்று நூலுக்கும் தலைப்பிட்டது பொருத்தமானதே. இந்த இலக்கியங்களின் […]

Read more

பிரபல கொலை வழக்குகள்

பிரபல கொலை வழக்குகள், எஸ்.பி. சொக்கலிங்கம், கிழக்கு பதிப்பகம், 57, பி.எம்.ஜி. காம்ப்ளக்ஸ், தெற்கு உஸ்மான் ரோடு, தி.நகர், சென்னை 17, பக். 200, விலை 140ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-787-9.html இப்படிக் கூடவா நடந்திருக்கும் என்று பலரால் வியந்து பேசும்படியான சம்பவங்களை உள்ளடக்கிய வழக்குகளை பிரபலமான வழக்குகள் என்று கூறுவோம். சமுதாயத்தில் புகழ் பெற்றவர் புரியும் குற்றச் சம்பவங்கள் தொடர்பான வழக்குகளுக்கும் அப்பெயர் உண்டு. அந்த வகையில் சென்ற நூற்றாண்டில் பத்திரிகைகளில் தினமும் வெளியாகி, மக்களால் பெரிதும் […]

Read more

இலக்கியத்தில் வரலாறும் பண்பாடும்

இலக்கியத்தில் வரலாறும் பண்பாடும் (ஆசிரியர்: புலவர் முத்து.எத்திராசன், வெளியிட்டோர்: சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர். நகர். சென்னை – 78, விலை: ரூ. 130) சங்க கால இலக்கியங்களில் உள்ள வரலாற்று குறிப்புகளை கொண்டு அக்காலத்தில் மன்னர்கள், மக்கள் எப்படியெல்லாம் ஆட்சி செய்தனர், வாழ்ந்தனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தவிர அக்கால கல்வெட்டுகளில் காணப்படும் குறிப்புகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே சில பத்திரிகைகளில் வெளிவந்துள்ள 32 ஆய்வு கட்டுரைகள் அடங்கிய நூல். நன்றி: தினத்தந்தி (13.3.2013).   —-   ஆசையின் நிமித்தம் (ஆசிரியர்: […]

Read more

சமகால மலையாளக் கவிதைகள்

சமகால மலையாளக் கவிதைகள், தொகுப்பு-சுகத குமார், தமிழில்-சா. சிவமணி, சாகித்ய அகடமி, 433, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 600018, பக். 256, விலை 135ரூ. மகாகவி ஜி. சங்கர குறுப்பு முதல் பாலச்சந்திரன் கள்ளிக்காடு வரையுள்ள கவிஞர்கள் 1950 முதல் 1980 வரை எழுதியுள்ள கவிதைகளிலிருந்து 56 கவிதைகள் இந்நூலுள் தொகுக்கப்பட்டுள்ளன. மலையாளக் கவிதைகளின் 30 ஆண்டுகால வரலாற்றின் பதிவுகள் இவை. இந்தக் கவிதைகளைப் படித்துப் பார்க்கும்போது புலப்படுவது. ஒரு மகா நதியின் பிரவாகச் சித்திரம். உயர்ந்த இமயமலைச் சிகரங்களில் இருந்து, பள்ளத்தை நோக்கி […]

Read more

காவிரி பிரச்சனையின் வேர்கள்

காவிரி பிரச்சனையின் வேர்கள், வே. ஜீவகுமார், பாரதி புத்தகாலயம், 421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, பக். 48, விலை 30ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-013-4.html காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி உத்தரவை அரசிதழில் வெளியிட்டு விட்டார்கள். இனி தமிழகத்திற்கு காவிரி நீர் வருவதில் பிரச்னை இருக்காது என்றே அத்தனை கோடி தமிழர்களும் நம்பியிருந்தனர். ஆனால் கடிகாரம் பின்னோக்கி சுற்ற ஆரம்பித்துவிட்டது. மாநில எல்லைக் கோடுகள் நதிகளுக்குக் கிடையாது என்கிற நிலையில், ஒரு நதி பாயும் அத்தனை நிலப்பரப்புக்கும் […]

Read more

பாரதத்தின் பேரரசி

பாரதத்தின் பேரரசி (சாதனை வரலாறு), அழகிய பாண்டியன், குமரன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தி. நகர், சென்னை 17, பக். 504, விலை 360ரூ. TO buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-015-4.html முதல்வர் அம்மாவின் வாழ்க்கை சரிதத்தை புதுக்கவிதை நடையில் தந்துள்ளார் கவிஞர் அழகிய பாண்டியன். அம்மாவின் வாழ்வில் அவர் சந்தித்த தடைகள், இடையூறுகள், சூழ்ச்சிகள், சோதனைகள் என்று ஒன்றுவிடாமல் அலசி, அத்தனை சோதனைகளையும் சாதனைகளாக மாற்றிக் காட்டிய அவரது வீரத்தையும் காட்டி, அவரை பாரதத்தின் பேரரசியாக நம்முன் […]

Read more

ஹைகூ வானம்

ஹைகூ வானம், வீ. தங்கராஜ், அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், 41, கல்யாண சுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை 11, பக். 104, விலை 60ரூ. அவன் தைத்த செருப்பில் ஊரே நடக்கிறது அவனுடையது கக்கத்தில் தங்கராஜின் ஹைகூவில் ஒரு பருக்கை பதம் இது. மெல்லப்போ தென்றலே வழியில் கருவேல மரங்கள். இந்த ஹைகூ உணர்த்தும் காட்சி மிகப் பெரியது. விரித்து எழுதினால் ஒரு ஆயிரம் பக்கங்களுக்கு இதை எழுத முடியம். அதை மூன்றடியில் அளந்திருக்கிறார் கவிஞர். ஹைகூ எழுதுவது கடினமான பணி. அது ஆசிரியருக்கு […]

Read more

மனச்சிறகுகள்

மனச்சிறகுகள், கவிஞர் மருதம்கோமகன், கோமகன் பதிப்பகம், 479ஏ, 8வது தெரு, பாரதிநகர் தெற்கு, கும்பகோணம், விலை 90ரூ. கண்ணில் கண்ட காட்சிகளை காதில்பட்ட செய்திகளை கவிதையாய், புகைப்படத்துடன் சமுதாய சிந்தனை கருத்துடன் சொல்லப்பட்டுள்ளது. 104 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி 10/4/13.   —-   சுற்றுச்சூழல் சிந்தனைகள், அரிமா. ஜே, ஜோபிரகாஷ், ரேவதி பதிப்பகம், 19, ராஜசேகரன் தெரு, மைலாப்பூர், சென்னை 4, விலை 225ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-023-8.html என்னென்ன காரணங்களால் நமது சுற்றுச்சூழல் […]

Read more

ஊரகப் பொருளாதாரமும் வேளாண்மைப் பொருளாதாரமும்

ஊரகப் பொருளாதாரமும் வேளாண்மைப் பொருளாதாரமும், வே. கலியமூர்த்தி, சுடரொளிப் பதிப்பகம், 99/அ, 3, பாஞ்சாலியம்மன் கோவில் தெரு, அரும்பாக்கம், சென்னை 106, பக். 416, விலை 150ரூ. ஊரகப் பொருளாதாரத்தைப் பற்றியும் வேளாண்மைப் பொருளாதாரத்தைப் பற்றியும் பேராசிரியரால் எழுதப்பட்ட இந்த நூல் இளங்கலை, முதுகலைப் பட்ட வகுப்பு மாணவர்களுக்குப் பெரிதும் பயன்படும். இந்நூலைப் படிக்கும் மாணவர்கள் இத்துடன் நில்லாமல் இதில் குறிப்பிடப்பட்டுள்ள நூல் பட்டியலைக் கொண்டு மூலநூல்களையும் படிப்பது அவர்களுடைய அறிவு வளர்ச்சிக்குப் பெரிதும் துணை புரியும். பட்டங்களைப் பெறுவதற்கு மட்டுமல்லாமல், போட்டித் தேர்வுகளுக்குத் […]

Read more

அமுதம் பருகுவோம்

அமுதம் பருகுவோம், ப. முத்தக்குமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை 14, பக். 128, விலை 100ரூ. இந்து மதத்தின் சிறப்புகளை அழகாக வெளிப்படுத்தும் நூல். தியானம் மனித வாழ்வுக்கு எவ்வளவு அவசியம் என்பதையும் வலியுறுத்துகிறது. தனி மனிதனின் உயர்வுக்கும் சமுதாய வளர்ச்சிக்கும் தேவையான அறநெறிகளை ராமாயணம், மகாபாரதம், பாகவதம், பகவத் கீதை போன்ற அறநூல்களின் மேற்கோள்களோடு எடுத்துரைக்கும் பயனுள்ள நூல் இது. ஆகம விதிப்படி நிறுவப்படாத சிலைகளினால் மக்களுக்கு நன்மைகள் கிடைக்காது. ஆகம விதிப்படி கட்டப்பட்ட கோவில்களினால் பொதுவாக நன்மைகள் […]

Read more
1 50 51 52 53 54 57