இந்திய குடியரசுத் தலைவர்கள்

இந்திய குடியரசுத் தலைவர்கள், மு. ஆனந்தகுமார், அறிவுப் பதிப்பகம், விலை 40ரூ. இந்திய ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதியின் அதிகாரம், தகுதிகள், சம்பளம், வசதிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அடங்கிய பெட்டகமாக இந்த நூல் தொகுக்கப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 1/4/2015.   —- கசங்கிய காகிதம், காளிதாஸ், சவுத் இந்தியன் போஸ்ட், விலை 50ரூ. காடு மரங்களை அழித்து விட்டு அதிக கட்டிடங்களைக் கட்டிவிட்டு எப்படித்தான் தோன்றுகிறதோ தொட்டியில் செடி வளர்க்க என்பது போன்ற பொதுநல கூர்மைப் பார்வை கொண்ட கவிதைகளின் தொகுப்பு நூல். […]

Read more

சின்ன அண்ணி

சின்ன அண்ணி, தேவி வெளியீடு, விலை 140ரூ. இயல்பான ஏழைகளின் வாழ்க்கை, வாழ்க்கையின் அன்றாடப் பிரச்சினைகள், பாத்திரப் படைப்புகள், வர்ணனைகள், வட்டார வழக்குகளைப் புகுத்தி, அந்த மண்ணுக்குரிய மேன்மைகள், மென்மைகளை கதாபாத்திரம் மூலம் வாசகர் நெஞ்சில் பதிய வைக்கும் எழுத்தாளர் உமா கல்யாணி, அருமையான நாவலை படைத்திருக்கிறார். நன்றி: தினத்தந்தி, 1/4/2015.   —- இது சக்சஸ் மந்திரம் அல்ல, சித்தார்த்தன் சுந்தரம், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், விலை 85ரூ. தொழிலில் வெற்றி பெற கடின உழைப்பு தவிர்த்து வேறு சில காரணிகளும் தேவை என்பதை […]

Read more

புதுமையான அமைப்பில் திருக்குறள் நூல்

புதுமையான அமைப்பில் திருக்குறள் நூல், அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 300ரூ. உலகப் பொதுமறையாம் திருக்குறள் எண்ணற்ற மொழிகளிலே மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. திருக்குறளுக்கு பரிமேலழகர் முதல் மு. வரதராசனார் வரை ஏராளமானோர் உரை எழுதியுள்ளனர். இப்போது அருணா பதிப்பகம் 6 இன் 1 என்ற வகையில், திருக்குறள் மூலம், ஆங்கிலம் எழுத்துப் பெயர்ப்பு, ஜி.யு. போப் உரை, லாசரஸ் ஆங்கில விளக்கம், பரிமேலழகர் உரை, கீர்த்தியின் தமிழ் விளக்கம் என்று புதிய உரை நூலை வெளியிட்டுள்ளது. பின்னிணைப்பாக செய்யுள் முதற்குறிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. இது போற்றத்தக்க, பாராட்டத்தக்க […]

Read more

தோன்றியது எப்படி?

தோன்றியது எப்படி?, தனலெட்சுமி பதிப்பகம், விலை 375ரூ. காகிதம், பேனாக்கத்தி, காலனி, கத்தரிக்கோல், காக்குலேட்டர் (கணக்கிடும் கருவி), போன்ற எண்ணற்ற பொருட்களை தினந்தோறும் பயன்படுத்துகிறோம். ஆனால் இவை எப்படி, யாரால், எப்போது கண்டுபிடிக்கப்பட்டன என்ற விஷயம் தெரியாது. இந்த நூலில் நாம் பயன்படுத்தும் 137 பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட தகவல்களை வாண்டு மாமா தருகிறார். இவை வெறும் பொழுதுபோக்காக படிக்கப்படும் விஷயங்கள் அல்ல. அறிவை வளர்க்கும் சுவாரசியமான தகவல்கள். மாணவர்களுக்கு பெரிதும் பயன்படும். நன்றி: தினத்தந்தி, 1/4/2015.   —-   பாதச்சுவடுகள், பா. சிவன்பாரதி […]

Read more

இஸ்லாத்தில் முன்னுரிமைகள்

இஸ்லாத்தில் முன்னுரிமைகள், மௌலவி நூஹ்  மஹ்ழரி, இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், விலை 90ரூ. ஒரே நேரத்தில் இரண்டு செயல்கள் நம் முன்னே நிற்கின்றன. இதில் எதற்கு முன்னுரிமை கொடுபப்து? இடம், பொருள், சூழ்நிலைகளுக்கு ஏற்ப முன்னுரிமை கொடுக்க வேண்டிய அம்சங்களை முடிவு செய்ய வேண்டும். அந்த வகையில் இஸ்லாத்தில் எந்தெந்த செயலுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதை நூஹ் மஷ்ழரி இந்த நூலில் தெளிவாக எடுத்துரைக்கிறார். தனி மனித நலனா? சமுதாய நலனா? எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றால், சமூக நலனுக்கே முன்னுரிமை […]

Read more

வண்ண மலர்த் தோட்டம்

வண்ண மலர்த் தோட்டம், மா.பா. குருசாமி, காந்திய இலக்கிய சங்கம், பக். 116, விலை 50ரூ. சிறுவர்களுக்கு மிகவும் பிடித்தவை கதைகள். அதனால் கதை புத்தகங்கள் அதிகம் வெளிவருகின்றன. கதை சொல்வோரும், எழுதுவோரும் அதிகம் இருக்கும் நிலையில், சிறுவர்களுக்கான கவிதைகளை எழுதி, ‘வண்ண மலர்த்தோட்டம்’ தலைப்பில் புத்தகமாக்கியுள்ளார், முனைவர் மா.பா. குருசாமி. குழந்தைகளுக்கான கவிதைகள் எழுதுவது என்பது காற்றில் பறக்கும் பஞ்சுப் பொதிகளை கையில் பிடிப்பது போலத்தான். சுதந்திரமாய் சோலையில் சுற்றித்திரியும் வண்ணத்துப் பூச்சிகள்போல் வலம் வரும் குழந்தைகளுக்காக எழுத நினைப்போருக்கு எளிமையும், மனத்தூய்மையும், […]

Read more

என் உளம் நிற்றி நீ

கவனிக்க வைத்த புத்தகங்கள் 2015 என் உளம் நிற்றி நீ, ஞானக்கூத்தன், காலச்சுவடு, விலை 160ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000023876.html ஐம்பது ஆண்டுகளாகக் கவிதை வடிவத்திலும் சொல்லல் முறையிலும் தொடர்ந்து வளர்ச்சி காட்டிவருபவை ஞானக்கூத்தனின் கவிதைகள். எள்ளல் மற்றும் அடங்கிய பரிகாசத்தை இயல்பாகக் கொண்ட இவரது சமீபத்திய கவிதைகளில் ஆச்சரியமும் நேசத்தின் ஈரமும் சேர்ந்துள்ளன. நன்றி: தி இந்து, 2/1/2016. (கவனிக்க வைத்த புத்தகங்கள் 2015)

Read more

மீரா

மீரா, இரா. மோகன், சாகித்ய அகாடமி, பக். 112, விலை 50ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024735.html ‘மரபில் பூத்த புதுமலர்’ என்றும், ‘காலத்தின் குரல்’ என்றும், ‘பாவேந்தரின் வாரிசு’ என்றும் திறனாய்வாளர்களால் மதிப்பிடப்பெற்ற மீரா (மீ.ராசேந்திரன்) இருபதாம் நூற்றாண்டு தமிழ்க் கவிதை உலகில் தமக்கென தனியிடம் வகுத்துக்கொண்ட ஆற்றல்சால் ஆளுமையாளர். ‘கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள்’ எனும் புதுக்கவிதை நூல் மூலம், 1980களில், கல்லூரி மாணவர்களின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருந்தவர். அவரது படைப்புகளில் அங்கதச் சுவை ஆழ்ந்து விரிந்து கிடக்கும். அரசியல்வாதியின் பதவி […]

Read more

காப்பிய மகளிர் ஒரு புதிய கண்ணோட்டம்

காப்பிய மகளிர் ஒரு புதிய கண்ணோட்டம், ந.யோகாம்பாள், முல்லைப் பதிப்பகம், பக். 80, விலை 80ரூ. காப்பியங்களில் வரும் பெண்களை காதல், வீரம், கற்பு, தீக்குணம், தியாகம், காமம் போன்ற கண்ணோட்டத்தில் பார்க்கும் புது முயற்சி. கண்ணகி, மாதவி முதல் நீலகேசி, வேகவதி வரையான காப்பியப் பெண்களின் மாறுபட்ட குணங்களை இந்நூலில் காண முடியும். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 4/1/2016.   —- ஹைக்கூ பூக்கள், மயிலாடுதுறை இளையபாரதி, நம் மொழி பதிப்பகம், பக். 128, விலை 120ரூ. 58 கவிஞர்களின் ஹைக்கூ […]

Read more

மஞ்சள் முத்தம்

மஞ்சள் முத்தம், அ.ரோஸ்லின், அகநாழிகை பதிப்பகம், பக். 64, விலை 60ரூ. ஒரு அமைதியின் இருப்பைக்கூட அர்த்தப்படுத்தி கவிதையாக்கும் திறன் கவிஞருக்கு இயல்பாகவே கைவரப்பெற்றிருக்கிறது. உதாரணமாக, இருளைத் தின்றிருந்த இரவை குத்திக் கிழிக்கும் வன்மம் நம்மையும் புளகாங்கிதமடையச் செய்கிறது. அதில் பிரியங்கள் எப்படி அந்நியப்பட்டுப்போகின்றன என்பதை காட்சிப்படுத்தும் முயற்சி புரிகிறது. ‘சதைகளின் சந்தையில், ஆட்டிறைச்சியைவிட விலை மலிவாகியிருக்கிறது, பெண்களுடையது’ -என்ற சமூகநீதிக்கான சாடல்கள் உக்கிரம் கொள்கின்றன. ஆனால் இன்னும் பிரிக்கப்படாமல் இருக்கின்றன வாசகனுக்கெழுதப்பட்ட கடிதங்கள் என்ற நிலையிலேயே மொத்த கவிதைகளும் வார்த்தைகளால் அடுக்கப்பட்டு அடைபட்டுக்கிடக்கின்றன. […]

Read more
1 25 26 27 28 29 57