நர பட்சணி

நர பட்சணி, நானக் சிங், தமிழில்-முத்து மீனாட்சி, சாகித்திய அகாதெமி, 443, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை 18. இந்திய விடுலையின்போது வாழ்ந்த பொதுவுடமை சிந்தனை கொண்ட இரு இளைஞர்களின் போராட்ட வாழ்க்கையே இந்தப் புதினம். பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்தவர் ஆலை முதலாளி டாகூர் சிங். இவரது மனைவி அமர்கௌர், மகன் பிரீத்பால். இவர்களது பக்கத்துவீட்டைச் சேர்ந்த ஊனமுற்ற சராசரி இளைஞன் சிங்காரா சிங். அவனது இளம் மனைவி சுலோச்சனா என விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய கதாபாத்திரங்களுடன் தொடங்கும் கதை, பொதுவுடமை சித்தாந்தம் பேசும் […]

Read more

பெண் ரகசியமற்ற ரகசியங்கள்

பெண் ரகசியமற்ற ரகசியங்கள், அருவி, 10, 6வது செக்டார், கே.கே. நகர், சென்னை 78, விலை 150ரூ. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பெருகி வருகிற இந்தக் காலக்கட்டத்தில் பெண்களுக்கு இந்த சமூகத்தில் என்னவெல்லாம் பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்று கோடிட்டு காட்டி இருப்பதுடன் அந்தப் பிரச்சினைகள் வராமல் காக்கவும் வழிமுறைகள் கூறி இருப்பது சிறப்பு. பெண்கள் எப்படியெல்லாம் ஏமாற்றப்படுகிறார்கள் என அறிகிறபோது, பதற்றம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. பெண்கள், பெண் பிள்ளையை பெற்றவர்களின் பெண் பிள்ளைகள் அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம் இது. நன்றி: […]

Read more

சங்கச் செவ்வியல்

சங்கச் செவ்வியல் (சங்க கிரேக்க ஒப்பீடு), முனைவர் செ. சாரதாம்பாள், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை 1, பக். 336, விலை 175ரூ. நீண்ட விரிவான மரபும் கட்டுக்கோப்பும் விரிவான முறைமைகளும் கொண்ட தன்மைதான் செவ்வியல். இதை ஆங்கிலத்தில் கிளாசிசம் என்பர். அத்தகைய செவ்வியல் பண்பைத் தமிழ் இலக்கியங்கள் பெற்றிருக்கின்றன. வாய்மொழி இலக்கியப் பண்புகளும் வரிவடிவ இலக்கியச் செம்மையும் ஒன்றமிடத்தில்தான் செவ்வியல் தோற்றம் பெறுகிறது என்பது நிதர்சன உண்மை. தமிழில் இலக்கியங்களில் உள்ள செவ்வியல் கூறுகளை பண்புகளை, கிரேக்க இலக்கியங்களுடன் ஒப்பிட்டு சில ஆய்வு […]

Read more

ஸ்ரீ ராமானுஜர் வாழ்வும், தொண்டும்

ஸ்ரீ ராமானுஜர் வாழ்வும், தொண்டும், ஜெகதா, ஸ்ரீசெண்பகா பதிப்பகம், தி.நகர், சென்னை 17, பக். 136, விலை 50ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-058-2.html வைணவர்களால் போற்றி வணங்கப் பெறுபவரும், ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்தவருமான மகான் இராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை முறைப்படி தொகுத்து வெளியிட்டுள்ளார் நூலாசிரியர் ஜெகதா. ஒன்றே குலம் என்று எல்லோரையும் சமமாகக் கொண்டாடிய உத்தமர் ராமானுஜர். குருவின் ஆணையையும் மீறி, திருக்கோட்டியூர் சவும்ய நாராயணப் பெருமாள் கோவில் கோபுரத்தின் மேல் ஏறி நின்று, எல்லோரையும் உரத்த குரலில் அழைத்து, […]

Read more

அசடன்

அசடன், பியோதர் தஸ்தயேவ்ஸ்கி, தமிழில்-எம்.ஏ.சுசீலா, பாரதி புக் ஹவுஸ், பக். 672, விலை 650ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-492-6.html இந்த நாவல் பியோதர் தஸ்தயேவ்ஸ்கியால் 1869ல் எழுதப்பட்ட, த இடியட் என்ற நாவலின் மொழிபெயர்ப்பு. திருமதி. எம்.ஏ.சுசீலாவால் மொழிபெயர்க்கப்பட்டது. இந்த நாவல் பல சிறப்புடையது. அதாவது முழுமுற்றான தீமை என்பது, இல்லவே இல்லை என தஸ்தயேவ்ஸ்கி தன்னுடைய நாவல் அனைத்திலும் சொல்லி வந்தாலும், முழுமுற்றான நன்மையை, இந்த கதையின் நாயகனான மிஷ்கின் மூலம் படைக்க முற்பட்டார். அதில் […]

Read more

திருமகள் தேடி வந்தாள்

திருமகள் தேடி வந்தாள், லட்சுமி பிரபா, திருமகள் நிலையம், சென்னை 17, பக். 280, விலை 125ரூ. To buy this Tamil book online – https://www.nhm.in/shop/100-00-0001-020-5.html பிரபல மாத நாவல்களில் வெளிவந்த இரு கதைகளைத் தாங்கியுள்ளது இந்நாவல். சுவைபட கதைக் களத்தை நகர்த்தியுள்ளதால் வாசிப்பது அலாதி மகிழ்வைத் தருகிறது. இப்புத்தகத்தில் திருமகள் தேடி வந்தாள், மாயக்கண்கள் என இரு நாவல்கள். முதல் நாவலான திருமகள் தேடி வந்தாள் யதார்த்தமான குடும்பக் கதை. கதைப்படி வசதி படைத்த இளம் பெண் சஹானாவைக் காதலிக்கும் இளைஞன் […]

Read more

ஈழம் சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள்

ஈழம் சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள், பிரான்ஸிஸ் ஹாரிசன், தமிழில் என்.கே. மகாலிங்கம், காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், 669, கே.பி. சாலை, நாகர்கோவில் 1, விலை 250ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-797-0.html இலங்கையில் நடந்த இனப்படுகொலையின் கொடூரமான சாட்சியங்கள் பலவற்றை பிபிசியின் செய்தியாளராக இலங்கையில் பணிபுரிந்த பிரான்ஸிஸ் ஹாரிசன் என்பவர். ஆங்கிலத்தில் ஈழம் சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள் என்ற பெயரில் நூலாக எழுதியுள்ளார். இதனை தமிழில் என்,கே. மகாலிங்கம் மொழிபெயர்த்து உள்ளார். இந்த நூலில் 2009ம் ஆண்டு இலங்கையில் நடந்த […]

Read more

சாலப்பரிந்து

சாலப்பரிந்து, நாஞ்சில்நாடன், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில் 1, பக். 240, விலை 190ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-797-3.html தேர்ந்தெடுக்கப்பட்ட 25 சிறுகதைகளின் தொகுப்பு. கிராமம், நகரம், பயணம் இந்த மூன்ற பின்னணிகளில் பெரும்பாலான கதைகள் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு சிறுகதையிலுமே அந்தக் கதை நடக்கும் சூழல் குறித்த ஏராளமான தகவல்களை அளிக்கிறார் நூலாசிரியர். சிறுகதைக்கு இவ்வளவு தகவல்கள் தேவையா? என்ற எண்ண அலை நமக்குள் எழும்போதே, அரிசியில் எத்தனை வகைகள், பழங்காலத்தில் நம்மிடம் வழக்கத்தில் […]

Read more

இலக்கிய மரபியல்

இலக்கிய மரபியல், கி. இராசா, பார்த்திபன் பதிப்பகம், திருச்சி 21, பக். 504, விலை 350ரூ. இலக்கிய ஆய்வில் பொதுவாக இலக்கிய மரபு என்ற வழக்கு உண்டு. இலக்கிய மரபியல் என்ற வழக்கு இதுகாறும் இல்லை. இலக்கிய மரபு என்பது வேறு. இலக்கிய மரபியல் என்பது வேறு. இலக்கிய மரபு (Literary Genetics) என்பது இலக்கியத்தின் தோற்றம் வளர்ச்சி குறித்தது. இதனை இலக்கியப் பரிணாமம் (Evolution lf Literature) என்றால் சட்டென விளங்கும். இந்த இலக்கியப் பரிமாணத்திற்கு அடிப்படையாக விளங்குகின்ற இலக்கிய மரபுக் கூறுகள் […]

Read more

சிபி

சிபி, ஏ.ஏ.ஹெச்.கே.கோரி, இருவாட்சி, 41, கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை 11, பக். 288, விலை 170ரூ. சிறுபான்மை பிரிவு என்பதன் சுருக்கமே சிபி என்னும் நாயகனின் பெயராக இருக்கிறது என்பதைப் படிக்கும் இடத்திலிருந்தே சுவாரஸ்யம் தொடங்கிவிடுகின்றது. கற்பனைப் பாத்திரங்களோடு மகாத்மாகாந்தி, நேரு, காமராஜர், மொரார்ஜி தேசாய் போன்ற அரசியல் தலைவர்களையும் இந்தத் தலைமுறைக்குத் தெரியாத அவர்களின் அரிய குணங்களையும் நம் கண்முன் தரிசனப்படுத்துகிறது இந்நாவல். மேற்கத்திய கலை வடிவமான டாக்குடிராமா என்னும் யுக்தியில் எழுதப்பட்டிருககும் இந்த நாவலில், இறந்த காலமும் நிகழ்காலமும் எதிர்காலமும் […]

Read more
1 59 60 61 62 63 66