இறகுதிர் காலம்

இறகுதிர் காலம், கோவை சதாசிவம், வெளிச்சம் வெளியீடு, பக். 136, விலை 100ரூ. இயற்கைச் சூழல் நிரம்பிய ஏரிகள், குளங்கள், மலைகள் இன்றைய அரசியல் சமூக சூழலில், எத்தகைய பாதிப்புகள் அடைந்திருக்கின்றன. பறவை இனங்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும், எத்தகைய பாதிப்புகளுக்கு உள்ளாகி இருக்கின்றன என்பது திறம்பட படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளது. இயற்கை குறித்தும், சுற்றுச் சூழல் குறித்தும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு பயனுள்ள நூல். ஆசிரியரின் நடையழகு சிறப்பானது. -சிவா. நன்றி: தினமலர், 30/6/13.   —-   பார்க்கப் பார்க்க ஆனந்தம், […]

Read more

மஹாபாரதம் ஒரு கண்ணோட்டம்

மஹாபாரதம் ஒரு கண்ணோட்டம், டி.ஆர். குப்புஸ்வாமி, 8, தெற்கு மாட வீதி, திருவல்லிக்கேணி, சென்னை 5, பக். 552, விலை 350ரூ. மஹாபாரதத்தை இதற்கு முன் படித்தவர்கள் பெற்ற அனுபவத்திற்கும் இந்நூலைப் படிப்பவர்கள் பெறும் அனுபவத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. ஒரு எளிமையான சுவையான நாவலைப் படிப்பது போலத்தான் உள்ளது. அதே சமயம் இதில் இல்லாததே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அறிவுச் செரிவான ஒரு பெட்டகத்தை திறந்து பார்த்த உணர்வும் எழுதுகிறது. மகாபாரதத்தைப் பற்றி நூல் எழுதுவதென்பது அவ்வளவு சாதாரண விஷயமன்று. தமிழ் […]

Read more

விட்டு விடுதலையாகி

விட்டு விடுதலையாகி, வாஸந்தி, கவிதா வெளியீடு, பக். 408, விலை 200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-099-1.html இது ஒரு சமூக நவீனம் தான் என்றாலும், வரலாற்றுச் சிறப்புடையதாகவும் மிளிர்கின்றது. மாதராய் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும் என்பது ஓர் உயரிய கருத்து வெளிப்பாடு. மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்பது ஓர் ஆவேசக் கருத்தின் குரல். சரி, மாதர் தம்மை எப்படியெல்லாம், இந்தச் சமூகம் ஒரு காலத்தில் இழிவு செய்து கொண்டிருந்தது? இந்த மூன்றின் கலவையாக […]

Read more

விஸ்வரூபம்

விஸ்வரூபம், ரா. முருகன், கிழக்கு பதிப்பகம், பக். 790, விலை 400ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-749-7.html அரசூர் வம்சம் என்ற ஒரு நாவல் மூலம், தமிழ் நாவல் வாசகர்களின் கவனத்தை கவர்ந்த ரா. முருகன், அதன் தொடர்ச்சியாக இந்தப் பெரிய நாவலை எழுதியிருக்கிறார். நாவலின் தமிழ்நடை, சுஜாதாவை ஞாபகப்படுத்துகிறது. மிகப் பெரிய கதைக் களம், நிறைய கதாபாத்திரங்கள், அதிக சம்பவங்கள், நிகழ்ச்சிகள் என நாவல் வாசகனை அசத்துகிறது. மூன்று நாடுகள், எட்டு ஊர்கள், நான்கு கலாசாரச் சூழல்கள் ஊடே […]

Read more

பூர்வீக பூமி

பூர்வீக பூமி, சூர்யகாந்தன், பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானிஜான்கான்சாலை, ராயப்பேட்டை, சென்னை14, விலை 80ரூ. கர்நாடக மாநிலத்திற்கு இடம் பெயர்ந்து பிழைக்க சென்ற விவசாயிகள் பற்றிய கதையே பூர்வீக பூமி நாவல். கிராமத்தில் வேளாண்மை பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததால் புதிய வாழ்க்கை தேடுவதும், ஏழை விவசாயிகளே ஒருவரை ஒருவர் ஏமாற்றிச் சுரண்டுதல் மற்றும் அரசியல் நாடகங்களால் அண்டை மாநில வெறி தூண்டப்படுதலையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் நூலாசிரியர் சூர்யகாந்தன் இந்த நாவலில் அருமையாக வெளிப்படுத்தி உள்ளார். கோவை மாவட்டத்து மக்கள் மொழியின் பச்சை நெடி நாவல் […]

Read more

மரண வலையில் சிக்கிய மான்கள்

மரண வலையில் சிக்கிய மான்கள், வெ. தமிழழகன், அறிவுப் பதிப்பகம், 16(142), ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 180ரூ. விறுவிறுப்பு, சிக்கல்கள், திகில், அதிர்ச்சி, வியப்பு, மாயாஜால காட்சிகள் என ஒரு திரைப்படத்தை பார்த்ததுபோல பலதரப்பட்ட அனுபவம் இந்த குறுநாவலைப் படிக்கும்போது நமது எண்ணத்தில் தோன்றும். அடுத்து நடப்பது என்ன? என்ற எதிர்பார்ப்பை தூண்டி ஆர்வத்தோடு படிக்கும்படியாக அமைக்கப்பட்டது இந்நூல்.   —-   புதுக்குறள், தளவை வே. திருமலைச்சாமி, பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை, பிராட்வே, சென்னை 108, […]

Read more

திமிறி எழு

திமிறி எழு, அ. ஜெயசீலி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், சென்னை 98, பக். 72, விலை 40ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-985-1.html ஒரு பெண் பிறந்தது முதல் சமுதாயத்தில் என்னென்ன பிரச்னைகளுக்கெல்லாம் ஆளாகிறாள் என்பதை எடுத்துக்காட்டுகளுடனும் புள்ளி விபரங்களுடனும் கூறியிருக்கிறார் நூலாசிரியர். குழந்தை பாலியல் வன்முறை, இளம்பருவம், தாய் என்ற தியாகத் திருவுருவம் என ஒரு பெண்ணின் அனைத்து நிலைகளிலும் நின்று அலசியுள்ளார். திரைப்படங்கள், திரைப்படப் பாடல்கள் ஆகியவற்றில் பெண்கள் இழிவுபடுத்தப்படுவதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பெண்ணுக்கு […]

Read more

மஹாபாரதம் ஒரு கண்ணோட்டம்

மஹாபாரதம் ஒரு கண்ணோட்டம், டி.ஆர்.குப்புசாமி, ஆர்என்ஆர் பிரிண்டர்ஸ், 19, தாண்டவராயன் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 5, விலை 350ரூ. இந்தியாவின் இருபெரும் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தில் கூறப்பட்ட கருத்துக்களை திரட்டி எடுத்து எளிதாக தந்துள்ளார் ஆசிரியர். மிக எளிய நடையில் அமைந்திருப்பதால் அனைவரும் படித்து பயன்பெறலாம். பெரும்பாலானவர்கள் அறிந்திராத நுண்ணிய செய்திகள் பல நூலில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.   —-   வள்ளுவம் அல்லது வாழ்க்கையே வழிபாடு, பேராசிரியர் அர. வெங்கடாசலம், ஏ19, வாஸ்வனி வெல்லா விஸ்டா, கிராபைட் இந்தியா ஜங்ஷன், பெங்களூரு-48, விலை 85ரூ. […]

Read more

பூர்வீக பூமி

பூர்வீக பூமி, சூர்யகாந்தன், பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானிஜான்கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை 14, பக். 154, விலை 80ரூ. வானம் பார்த்த பூமியில் குடியானவர்களுக்கும், ஆடுமாடுகளும் படும்பாட்டை மானாவாரி மனிதர்கள் என்ற படைப்பாக தந்தவரின் அடுத்த அனுபவம்தான் பூர்வீகபூமி. உழைக்க சளைக்காத சிறுசிறு விவசாயிகள், தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள் தங்கள் விவசாயத்தையும் தொழிலையும் விட்டுவிட்டு, அண்டை மாநிலமான கர்நாடகாவில் வீணாய்ப்போகும் நிலங்களை விளைநிலமாக மாற்றும் பொருட்டு அங்கே குடிபோகிறார்கள். பாடுபட்டவர்கள் பலனை அனுபவிக்கும் முன்பே காவிரிப் பிரச்னை பூதாகரமாகி, தமிழர்களுக்கு எதிரான தாக்குதல் […]

Read more

தூக்கிலிடுபவரின் குறிப்புகள்

தூக்கிலிடுபவரின் குறிப்புகள், சசி வாரியார், தமிழில்-இரா. முருகவேள், உன்னதம், ஆலந்தூர் அஞ்சல், கவுந்தப்பாடி 638366, ஈரோடு மாவட்டம், விலை 140ரூ. இந்தியாவில் வேறெப்போதையும் விட தூக்குதண்டனைக்கு ஆதரவான குரல்கள் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கின்றன. மக்கள் கொடூரமான குற்றங்களை எதிர்கொள்ளும் ஒவ்வொரு சமயத்திலும் மரண தண்டனைதான் ஒரே தீர்வு என்று கூக்குரலிடுவதைக் கேட்கிறோம். ஆனால் அவர்கள் மரணதண்டனை என்றால் என்னவென்று புரிந்துகொண்டிருக்கிறார்களா என்பது சந்தேகம். திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியில் 117 பேரை தூக்கிலிட்டு மரண தண்டனை நிறைவேற்றும் தொழிலாளியாகப் பணிபுரிந்த ஜனார்த்தனன் பிள்ளையின் வாக்குமூலத்தை சசி வாரியர் […]

Read more
1 57 58 59 60 61 66