கள்ளோ? காவியமோ?

கள்ளோ? காவியமோ?, டாக்டர் மு. வரதராசன், பாரிநிலையம், 90, பிராட்வே, சென்னை 108, பக், 240, விலை 75ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-320-7.html தமிழர்களின் இதயங்களில் நீங்காது நிலைபெற்று திகழ்பவர், தெய்வத்திரு டாக்டர் மு.வ. அவர்கள், என்று கூறுவதுதான் அவருக்கு நாம் செலுத்தும் சிறந்த அஞ்சலியாகும். அன்னாரின் நாவல்களும், இலக்கிய நூல்களும், கட்டுரைகளும், மொழி இயல் நூல்களும், மற்றவைகளும் படிப்போர் மனதில் நிலைத்து நிற்கும் என்று உறுதியாகக் கூறலாம். கள்ளோ? காவியமோ? என்ற இந்நூலும் படிப்போர் மனதில் கிளர்ச்சியை […]

Read more

அரவாணிகள் அன்றும் இன்றும்

அரவாணிகள் அன்றும் இன்றும், முனைவர் கி. அய்யப்பன், விசாலாட்சி பதிப்பகம், கடையம் நல்லாப்பாளையம், விழுப்புரம் 605701, பக். 166, விலை 150ரூ. அரவாணியரின் உணவு, உறவு, சடங்குகள், தொழில்கள் என அவர்களது வாழ்க்கையை நூலாசிரியர் ஆய்வு செய்து விளக்கியுள்ளார். அரவாணிகளது கல்விநிலை, பொருளாதார நிலை போன்றவை பற்றியும், அவர்களது குழுவுக்குள் பேசும் கவுடி மொழி குறித்தும் கூறப்பட்டுள்ளது. பெண்ணியநோக்கில் அரவாணியம், திருக்குறள், அகநானூறு, நீலகேசி போன்ற இலக்கியங்களில் அரவாணியம் என அரவாணிகள் நிலை அன்றும் இன்றும் பகுத்து விளக்கப்பட்டுள்ளது. அரவாணிகள் குறித்து அறிய இந்நூல் […]

Read more

பெண்மை

பெண்மை, (ஸ்திரீ தர்மம் பற்றி ஸ்ரீ மகா பெரியவா கூறிய கருத்துக்கள்)தொகுப்பு-ரா.கணபதி, கிரி டிரேடிங் ஏஜன்சி, 3 சன்னிதித் தெரு, மயிலை, சென்னை 600004, விலை 50ரூ. உலகம் தர்மத்தில் நிலைக்க, ஸ்தீரிகள் தங்கள் தர்மத்தில் சரியாக இருக்க வேண்டும் என்று காஞ்சி மாமுனிவர் தெரிவித்த கருத்துக்கள் நூலாக உருவெடுத்திருக்கிறது. ஆசிரியர் ரா. கணபதி எழுதிய தெய்வதரிசனம் அனைவரும் அறிந்த நூல். அது காஞ்சி மாமுனிவரை பிரதிபலிக்கும் ஆன்மிக நூல். அந்த நூல் வெளியானபோது அதில் இடம் பெறாத, ஸ்திரீ தர்மம் குறித்த முனிவரின் […]

Read more

ஊஞ்சல்

ஊஞ்சல், உமா ஜானகிராமன், காவ்யா, 16, இரண்டாம் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை 24, பக். 122, விலை 110ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-325-7.html ஆசிரியை உமா ஜானகிராமன் இரக்கம் மிகுந்தவர் என்பது, இந்தத் தொகுதியைப் படிக்கும்போது தெரிகிறது. மேல்நாட்டு மருமகளை வெறுக்கும் ஒரு சாதிரிகள், கடைசியில் அவள் அன்பின் ஆழத்தைக் கண்டு சிலிர்க்கும் மேன்மையைச் சொல்லும் புத்திர சோகம் இதிலுள்ள சிறந்த கதை. மேடுகள் பள்ளங்கள் என, பல நேர்த்தியான சிறுகதைகள் அடங்கிய சிறந்த தொகுதி. […]

Read more

ஐந்திரன் படைப்புகள்

ஐந்திரன் படைப்புகள், லெனின், விஜி பதிப்பகம், டி5, 4சி, சிவ இளங்கோ சாலை, ஜவகர் நகர், சென்னை 82, விலை 100ரூ. கவிஞர் ஐந்திரன் (வெ. முத்துலிங்கம்) எழுதிய கவிதைகள், கட்டுரைகள், கதைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. இவற்றுள் கவிதைகள்தான் அதிகம். ரசிக்கத்தக்க விதத்தில் கவிதைகளை எழுதியுள்ளார் ஐந்திரன்.   —-   வாழ்வை வளமாக்கும் தன்னம்பிக்கை, பசுமைக்குமார், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானி ஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 65ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-862-6.html […]

Read more

தேசத்தை நேசிப்போம்

தேசத்தை நேசிப்போம், செந்தமிழ்த்தாசன், இளைஞர் இந்தியா புத்தகாலயம், 109, பெருமாள் கோயில் தெரு, மாதவரம், சென்னை 60, விலை 150ரூ. இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றைக் கூறும் நூல். சுதந்திரப் போராட்ட வீரர்கள் நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த தியாகிகள் ஆகியோருடைய வாழ்க்கைக் குறிப்புகளும் உள்ளன. இளைய தலைமுறையினர், சுதந்திரப் போராட்டம் பற்றி சிறிதளவே அறிந்திருப்பார்கள். அவர்கள் இந்தப் புத்தகத்தைப் படித்தால் முழுமையாக அறிந்து கொள்வார்கள். சுருக்கமாகச் சொன்னால் சுதந்திரப் போராட்டம் பற்றி அறிந்து கொள்ள சிறந்த புத்தகம்.   —-   திருக்குறள் கூறும் […]

Read more

வானம் தொடு தூரம்தான்

வானம் தொடு தூரம்தான், ஆர்த்தி சி. ராஜரத்னம், பிருந்தா ஜெயராமன், கல்கி பதிப்பகம், 47 என்.பி.ஜவகர்லால் நேரு சாலை, ஈக்காடுதாங்கல், சென்னை 32, விலை 90ரூ. குழந்தை வளர்ப்பு என்பது ஒரு அரிய கலை. ஆனால் குழந்தைகளை வளர்ப்பதில் சென்ற தலைமுறைக்கும் இந்த தலைமுறைக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. இந்தத் தலைமுறைக் குழந்தைகள் புத்திசாலிகளாகவும், சுட்டிகளாகவும் உள்ளனர். இக்கால குழந்தைகளை எப்படி வளர்ப்பது, எதிர்காலப் பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடியவர்களாக அவர்களை உருவாக்குவது எப்படி என்பதை எல்லாம் இந்த நூலில் ஆர்த்தி சி. ராஜரத்னம், பிருந்தா ஜெயராமன் […]

Read more

புத்தகம் பற்றிய புத்தகம்

புத்தகம் பற்றிய புத்தகம், ஜெ. வீரநாதன், எஸென்சியல் பப்ளிகேஷன்ஸ், 167ஏ, போலீஸ் கந்தசாமி வீதி, கணேசபுரம், ஒலம்பஸ், ராமநாதபுரம், கோயம்புத்தூர் 641045, விலை 275ரூ. புத்தகத்தின் தலைப்பைப் பார்த்ததும் புத்தகம் பற்றியே ஒரு புத்தகமா என்று வியப்படையத்தோன்றும். புத்தகம் பற்றி அப்படி என்ன அபூர்வமான தகவல்களைக் கூறிவிடப் போகிறார்கள்? என்று பலர் நினைக்கவும் செய்வார்கள். ஆனால் உண்மையில் புத்தகங்கள் பற்றி பல அபூர்வமான தகவல்கள் இந்நூலில்உள்ளன. ஆரம்ப காலத்தில் ஒரு புத்தகத்துக்கு வெறும் 200 பிரதிகள்தான் அச்சிட்டார்கள். அதை விற்பதற்கே ரொம்பவும் சிரமப்பட்டார்கள். இப்போது […]

Read more

குறிஞ்சி மலர்

குறிஞ்சி மலர், தீபம் நா. பார்த்தசாரதி, கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, தி.நகர், சென்னை 17, பக். 480, விலை 200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-862-7.html எழுத்தாளர் நா. பார்த்தசாரதியின் புகழ்பெற்ற நாவல்களில் ஒன்று குறிஞ்சிமலர். அரவிந்தன், பூரணி என்ற இரண்டு கதாபாத்திரங்களும் இந்த நாவலின் மூலம் பிரபலமானார்கள். இந்தக் கதாபாத்திரங்களின் பெயர்களேகூட பின்னாளில் குழந்தைகள் பலருக்கு சூட்டப்பட்டதும் உண்டு. சமூகம், அரசியல் இரண்டு களங்களும் சிறப்பாக வெளித்தெரியும் இந்நாவலில்,தேர்தல் காலத்தில் நிகழும் வன்முறை காட்டுமிராண்டிச் சம்பவம் […]

Read more

அண்டமும் ஆன்மீகமும்

அண்டமும் ஆன்மீகமும், பி. ஆர். வெங்கட்ராஜு, சாகித் பப்ளிகேஷன்ஸ். அண்டத்திலும், ஆன்மீகத்திலும் புதைந்து கிடக்கும் புரியாத புதிர்களை, தர்க்க ரீதியில் கோர்வையாகப் புரிய வைக்க ஆசிரியர் எடுத்துள்ள முயற்சியைப் பாராட்டியிருக்கிறார், சுவாமி விமூர்த்தானந்தாஜி, ஆசிரியர், ஸ்ரீராமகிருஷ்ண விஜயம். இந்த நூல் அறிவியலையும், ஆன்மீகத்தையும் அற்புதமாகத் தொடர்புபடுத்தி சில மேற்கோள்களையும் சில தகவல்களையும் நம் பார்வைக்குக் கொண்டு வரும். ஆசிரியரின் பணி வியக்க வைக்கிறது. சுவாமி விமுர்த்தானந்தாஜியின் பாராட்டு மெத்தச் சரியே. வியப்பூட்டும் விஞ்ஞானம், இந்நூலில் அதி அற்புதமான மெஞ்ஞானத்துடன் கைகோர்த்துக் கொண்டு நம்மை வாசிக்கத் […]

Read more
1 767 768 769 770 771 841