போர்த்தொழில் பழகு

போர்த்தொழில் பழகு, புதியதலைமுறை பதிப்பகம், 25ஏ, என்.பி. இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், இக்காட்டுத்தாங்கல், சென்னை – 32, விலை: ரூ. 250. “போர்த்தொழில் பழகு” என்றார் மகாகவி பாரதியார். மனித இனம் போரின் தீமைகளை உணர்ந்திருந்தாலும் சிலநேரங்களில் அடுத்தவர்கள் நம் எல்லைகளை ஆக்கிரமிக்கும் போதும், பண்பாட்டை அழிக்கிற போதும் தடுத்து நிறுத்துவதற்காகப் போர் புரிய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. போரின் நெறிமுறைகளை உணர்பவனே தன்னையும், நாட்டையும் பாதுகாத்துக்கொள்ள முடியும். நூலாசிரியர் வெ. இறையன்பு, நாற்பது அத்தியாயங்களில் போரின் பல்வேறு உத்திகளையும் விளக்குகிறார். இந்நூலில் இருக்கின்ற விவரிப்புகள் […]

Read more

ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி

மங்களேஸ்வரியம், ஜோதிடர் அல்லூர் வெங்கட்ராமன், ஸ்ரீ ஆனந்த நிலையம், சென்னை – 600 083, பக்கம்: 676, விலை: ரூ. 360. வராகமிஹிரர், வடமொழியில் எழுதிய பிரஹத் ஜாதகம் என்ற பிரபல நூலை, தமிழில் செய்யுளாக பாடிய புலவர்கள் இருவர். இலிங்கன் என்பவரும், வைத்திலிங்கம் என்ற ஜோதிடரும் தமிழில் மங்களேஸ்வரியம் என்னும் பெயரில், மொழி பெயர்த்தும் பாடியுள்ளனர். அதற்கு, விளக்க உரை தந்திருக்கிறார் நூலாசிரியர். ஓரளவு, ஜோதிட ஞானம் உள்ளவர்கள், எளிதில் இதைப் புரிந்து கொள்ளலாம். ஆங்காங்கு காணப்படும், அச்சுப் பிழைகள் கவனத்துடன், அடுத்த […]

Read more

கிருபானந்த வாரியாரின் ஆன்மிகத் துளிகள்

கிருபானந்த வாரியாரின் ஆன்மிகத் துளிகள், பெ. கு. பொன்னம்பல நாதன், மணிவாசகர் பதிப்பகம், சென்னை – 600 108, பக்கம்: 112, விலை: ரூ. 50. தமிழகத்தில் ஆன்மிகப் பயிர் வளர்த்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், சுவாமிகளின் உரைகள் , பலரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தும்; சிலரை சிந்தித்து திருத்தவும் செய்யும். இந்நூலில் அவர் குறித்து, 16 கட்டுரைகள் உள்ளன. அத்தனையும் தேனாக இனிக்கின்றன. மரபியல் குறித்த செய்திகளும் (பக். 21), செஞ்சொல் உரைக் கோவைத்தேன் எனும் கட்டுரையும் படித்துப் பயனடைய […]

Read more

திருக்கோளூர் ரகசியங்கள்

திருக்கோளூர் ரகசியங்கள், வ.ந.கோபால தேசிகாசார்யார், அக்ஷரா பப்ளிகேஷன்ஸ், 12, கோவிந்த் ராயல் நெஸ்ட் அபார்ட்மென்ட்ஸ், 2வது தெரு, 3வது மெயின் ரோடு, கிழக்கு சி.ஐ.டி.நகர், நந்தனம், சென்னை 35, பக்கங்கள் 506, விலை 395ரூ. அக்ரூரரின் பாக்கியம் கடவுளில் கலந்தவள், தாயாக வந்த பக்தை, மாண்டவர் மீண்ட அதிசயம், விதுரரின் விருந்தோம்பல், இரண்டு மாலைகளைக் கொடுத்த தொண்டரடிப் பொடியாழ்வார் என திருக்கோளூர் திருத்தலத்தின் பெருமைகளையும் ரகசியங்களையும் அழகுறத் தந்து அசத்தியுள்ளார் நூலாசிரியர்.   —-   சௌபாக்கியமளிக்கும் ஸ்ரீ சனீஸ்வர பகவான், ஹநுமத்தாசன், அருள்மிகு […]

Read more

சர்வதேச பயங்கரவாதமும் இந்திய பயங்கரவாதமும்

சர்வதேச பயங்கரவாதமும் இந்திய பயங்கரவாதமும், டி. ஞானையா, அலைகள் வெளியீட்டகம், சென்னை – 600 024, பக்: 416, விலை: ரூ. 260. ஒபாமாவையும், இந்திய தலித்துக்களையும் பற்றி ஒரு புத்தகம் எழுதியுள்ள அதே, டி. ஞனையாவின் மற்றொரு புத்தகம் இது. நூல்களின் தலைப்பே, இவர் எதைப் பற்றி எழுதுவதில் ஆர்வம் காட்டுகிறார் என்பது புரிந்துவிடுகிறது. கம்யூனிச இயக்கத்துடன் தொடர்பும், ஈடுபாடும் கொண்டுள்ள இவருக்கு, இஸ்லாமிய – கறுப்பினர் இனக் கலப்புப் பிரதிநிதியும், அமெரிக்க (முதலாளித்துவ – ஏகாதிபத்ய) நாட்டின் அதிபருமான ஒபாமாவைப் பற்றிய […]

Read more

சிவபெருமானின் மகிமையும் சிவனடியார்களும்(முதல் பாகம்)

சிவபெருமானின் மகிமையும் சிவனடியார்களும்(முதல் பாகம்), சாந்தா வரதராஜன், சாந்தா வரதராஜன் பதிப்பகம், ஜி 1, நாதன்ஸ் ஆகாஷ், 10, லட்சுமி தெரு, மேற்கு மாம்பலம், சென்னை 33, பக்கங்கள் 224, விலை 150ரூ. சிவலிங்க தத்துவம், சிவ பூஜையின் பலன்கள், பஞ்சபூத தலங்கள், ஜோதிர்லிங்க ஆலயங்கள், சிவனாரின் மூன்று விரதங்கள் மற்றும் விசேஷங்கள், அன்னாபிஷேகத்தின் சிறப்பு, சிவபஞ்சாட்சர ஸ்தோத்திரம் என அழகுறத் தொகுத்துத் தந்துள்ளார் ஆசிரியர். இந்த நூல், சிவனடியார்களுக்குப் பொக்கிஷம்.   —-   நவக்ரஹ தோஷங்களும் பரிகாரங்களும், ஹனுமத்தாசன், அருள்மிகு அம்மன் […]

Read more

அன்புள்ள அம்மா

அன்புள்ள அம்மா, மணவை. பொன். மாணிக்கம், கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு, தி.நகர், சென்னை 600017, பக்கங்கள் 278, விலை 160ரூ அம்மாவே தெய்வம், உலகிலே அம்மாவைக் கொண்டாடாதவர்கள் யார்? எழுபத்தைந்து வெற்றியாளர்கள் தங்கள் அன்னையரைப் பற்றிச் சொல்லும், போற்றுதல் கட்டுரைகள் அடங்கிய அருமையான தொகுதி. திலகவதி ஐ.பி.எஸ்., தன் அம்மா பற்றிச் சொல்வதைக் கேளுங்கள். அவர் அம்மாவுக்கு எழுதிய கடிதத் தகவல் சுவையானது. அப்பா பார்த்த ஜாதகப்படி எனக்கு திலகவதி அம்மையார் என்று பெயர் சூட்டினர். பள்ளியில் என் பெயரை, ஆசிரியர் […]

Read more

பாம்பன் சுவாமிகள் பெருமை

பாம்பன் சுவாமிகள் பெருமை, முனைவர் கோமதி சூரிய மூர்த்தி, சைவ சித்தாந்தப் பெருமன்றம், 4, வேங்கடேச அக்ரகாரம் சாலை, சென்னை 4, பக்கங்கள் 136, விலை 50ரூ. அகத்தியர், நக்கீரர், அவ்வையார், அருணகிரிநாதருக்குப் பின் முருகன் அருள் பெற்று 6666 பாடல்களைப் பாடியவர் பாம்பன் சுவாமிகள். பாம்பன் சுவாமிகளின் இல்லற வாழ்வு, துறவற ஞானம் போன்ற வரலாற்று செய்திகளை, அவரது பாடல் ஆதாரங்களுடன் இந்நூலாசிரியர் அருமையாக, எளிமையாக எழுதியுள்ளமை பாராட்டத்தக்கதாகும். பாம்பனாரின் பாடல்கள், நூல்கள், பண்பு நலன்கள், அவரது அளவற்ற வடமொழி, தமிழ்ப்புலமை, அவரது […]

Read more

ப்ரம்ஹ ஸுத்ர சாங்கர பாஷ்யம்

ப்ரம்ஹ ஸுத்ர சாங்கர பாஷ்யம், பாகம் 3, தமிழ் உரை: ப்ரம்ம ஸ்ரீ கடலங்குடி நடேச சாஸ்திரிகள், ஆசிரியர்: கே.என்.சரஸ்வதி, கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், 38, நடேச அய்யர் தெரு, தி.நகர், சென்னை 600017, பக்கங்கள் 540, விலை 500ரூ. வேதாந்த தத்துவத்தில் உபநிஷத்துகள், பகவத்கீதை, ப்ரம்ம ஸ்ரீதரம் என்ற மூன்று விஷயங்கள் முக்கியம். அவை ப்ரஸ்தானங்கள் எனப்படும் ப்ரம்ம சூத்ரத்தை நையாயப்ரஸ்தானம் என்கின்றன. நையாயம் என்றால் கோர்வையான தாக்கம். ப்ரம்ம சூத்ரங்கள் நாலு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 1932ம் ஆண்டு சாங்கர பாஷ்யத்தின் 3வது பாகம் […]

Read more

ஊமைத்துரை வரலாறு

ஊமைத்துரை வரலாறு, வே. மாணிக்கம், மகிழ் பதிப்பகம், 4ஆ, பக்தராய் பணிவார் தெரு, பாளையங்கோட்டை 627002, பக்கங்கள் 102, விலை 70ரூ. இந்திய விடுதலை வரலாற்றில், கயத்தாற்றில் தூக்குத்தண்டனை பெற்ற கட்டபொம்மனின் வரலாறு பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய பகுதி. கட்ட பொம்மனின் இளவல் ஊமைத்துரையின் பங்களிப்பு இந்த வரலாற்றோடு இணைந்ததுதான் என்ற போதிலும், பெரிய அளவில் வெளிச்சத்திற்கு வந்ததாகச் சொல்ல முடியாது. வே. மாணிக்கம் ஊமைத்துரையின் வீரவரலாற்றை, ஆவணங்களின் துணையுடனும் நேரடி தொடர்பு கொண்டு ஆய்வு நோக்கி எழுதியிருக்கிறார். நல்ல பணி, பாராட்டுக்குரியவர். அவசியம் […]

Read more
1 802 803 804 805 806 841