ஈழம் அமையும்

ஈழம் அமையும், விடுதலைப் போராட்டத்தை முன்னெப்பவர்களுக்கான வழிகட்டி, கா. அய்யநாதன், கிழக்கு பதிப்பகம், சென்னை, விலை 250ரூ. அழிப்பின் பின்னணி! To buy this Tamil book online: http://www.nhm.in/shop/9789384149116.html கொத்துக்குண்டுகளும் வெப்பக்குண்டுகளும் பாஸ்பரஸ் குண்டுகளும் வீசி அழிக்கப்பட்ட ஈழவிடுதலை போராட்டத்தைப் பற்றி தமிழ்நாட்டின் ஈழ ஆதரவாளர்களில் ஒருவரான பத்திரிகையாளர் கா. அய்யநாதன் எழுதியிருக்கும் நூல் இது. முள்ளிவாய்க்கால், வட்டுவாகல் என இரு கிராமங்களில் குழுமி இருந்த ஈழத்தமிழ் மக்கள் புலிப்படையினருடன் கொல்லப்பட்ட நிகழ்வில் தொடங்கும் இந்நூல், இந்திய அரசு இந்தப் படுகொலையைப் பார்த்துக்கொண்டிருந்தது […]

Read more

தலைவர் பிரபாகரன்

தலைவர் பிரபாகரன், பன்முக ஆளுமை, ஓவியர் புகழேந்தி, தூரிகை வெளியீடு, விலை 230ரூ. ஈழத்தில் வரைந்த கோடுகள்! To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024221.html ஈழத்தில் நிலவிய சமாதானக் காலத்தில் அங்கு தமிழகத்தில் இருந்து பலதுறை விற்பன்னர்களை விடுதலைப்புலிகள் அழைத்து அவர்களின் திறன்களை கற்றுக்கொள்ள விழைந்தனர். அப்படி அழைக்கப்பட்டவர்களில் ஒருவர் ஓவியர் புகழேந்தி. அங்கு பலமுறை சென்று நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, புலி இயக்க உறுப்பினர்களுக்கு வகுப்புகள் எடுத்துள்ளார். முக்கிய தளபதிகளுடன் கலந்துரையாடி இருக்கிறார். பிரபாகரனையும் பலமுறை சந்தித்துப் பேசியிருக்கிறார். இந்த அனுபவங்களைக் […]

Read more

கருமை செம்மை வெண்மையைக் கடந்து

கருமை செம்மை வெண்மையைக் கடந்து, வே.மு. பொதியவெற்பன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, விலை 280ரூ. செறிவான ஆய்வு நூல்! மூத்த எழுத்தாளர் வே.மு.பொதியவெற்பனின் ஆய்வுக் கட்டுரைகள் தொகுக்கப்ட்டு மிகவும் செறிவான ஒரு நூலாக இது இருக்கிறது. இலக்கியம், மெய்யியல், தெருக்கூத்து, கலைகள், சித்தர் மரபுகள், மணிமேகலை, இறையியல், தத்துவம் என்று பல்வேறு துறைகளில் ஆய்வுப்புலத்தில் இருப்பவர்களுக்குபேருதவி செய்யக்கூடிய கட்டுரைகள். ஒவ்வொரு தலைப்பிலும் இவர் எழுதியிருக்கும் கட்டுரைகள் கிட்டத்தட்ட 360 பாகைக் கோணத்தில் மையப்பொருளை ஆராய்கின்றன. ஒப்பியல் நோக்கில் சித்தர் […]

Read more

பொலிவியன் டைரி

எர்னஸ்டோ சே குவோ, பொலிவியன் டைரி, தமிழில் என். ராமச்சந்திரன், கண்ணதாசன் பதிப்பகம், விலை 220ரூ. புரட்சியாளனின் இறுதி நாட்கள் To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000023534.html ஆங்கிலத்தில் வெளிவந்த பொலிவியன் டைரி என்னும் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு. இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் புரட்சி இயக்க வீரரான சே குவேராவின் கடைசிக் கட்ட போராட்டமான பொலிவிய விடுதலைப் போராட்டத்தை (1966 ஆம் நவம்பர் முதல் 1967 அக்டோபர் வரை) அவர் தன் கைப்பட எழுதிய நாட்குறிப்பின் அடிப்படையில் எழுதப்பட்ட நூல். அர்ஜென்டினாவின் […]

Read more

எங்கதெ

எங்கதெ, இமையம், க்ரியா, சென்னை, விலை 110ரூ. சாவுற வெளையாட்டு ஆண் பெண் உறவுகளில் இருக்கும் சிக்கல்களை உரத்துப் பேசும் பல கதைகள் தமிழில் வந்துள்ளன. அவற்றில் சிறந்த கதைகளின் வரிசையில் முன்னணியில் வைக்க வேண்டியவற்றில் ஒன்று இமையம் எழுதியிருக்கும் எங் கதெ. இந்த நெடுங்கதையில் திருமணமாகி கணவனை இழந்த ஒரு பெண் மீது ஒருவன் கொண்ட காதல், அந்த ஆணின் பார்வையில் அவனது மொழியில் விவரிக்கப்படுகிறது. இந்த வெளையாட்டுக்கு நானாத்தான் போனேன். அவ கூப்பிடல, அவ இந்த வெளையாட்டுக்கு வல்லன்னுதா சொன்னா. வெளையாட்டுல […]

Read more

கவிதையும் கத்தரிக்காயும்

கவிதையும் கத்தரிக்காயும், விக்ரமாதித்யன், நக்கீரன் வெளியீடு, சென்னை, விலை 90ரூ. கவியின் பெருமூச்சு கவிதையும் கத்தரிக்காயும் என்ற கவிஞர் விக்கிரமாதித்தனின் கவிதைத் தொகுப்பில் 1990-ல் இருந்து 2010 வரை பல்வேறு இலக்கிய சிற்றிதழ்கள், பேரிதழ்களில் வெளிவந்த கவிதைகள் இடம்பெற்றுள்ளன. எளிமையான நீரோடை போன்ற கவிதைகள். நம்பிக்கையும் அவநம்பிக்கையுமாக மாறிமாறி பிரதிபலித்துச் செல்கறி காலக்கண்ணாடி. சமகாலத்தின் முகங்களை விமர்சிக்கவும் வியக்கவும் செய்கிற மொழியின் ஜாலம். தென்னை வளர்த்தால் துட்டுமேல் துட்டு தமிழ்க்கவிதை வளர்த்தால் ததிங்கிணத்தோம் தாளம்தான் – என்று 1990-ல் எழுதும் கவிஞர், கத்தரிக்காய்க்குத் தரும் […]

Read more

என் உடல் என் மூலதனம்

என் உடல் என் மூலதனம், போப்பு, சந்தியா பதிப்பகம், சென்னை, விலை 90ரூ. மருந்தென வேண்டாவாம் தன்னுடலைக் குறித்த புரிதலும் வணிக மருத்துவத்தை நிராகரித்தலும் இயற்கையைச் சார்ந்திருத்தலும் மிகப்பெரிய ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கை என்கிறார் நூலாசிரியர் போப்பு முன்னுரையில். இயற்கை மருத்துவம், மாற்று மருத்துவ ஆர்வலர் இவர். உடலோடு பேசுங்கள் என்பதுதான் இந்த நூலின் ஆதார சுருதி. உடலில் தொந்தரவுகள் இருக்கும்போது ஒரு பத்துநிமிடம் கூடுதலாகக் குளியுங்கள் என்பதில் ஆரம்பித்து நடை மேற்கொள்வதை விட ஓர் ஆராக்கியமான நண்பன் கிடையாது என்று சொல்லி விளங்க […]

Read more

சாதேவி

சாதேவி, ஹரன் பிரசன்னா, மயிலை முத்துக்கள், சென்னை, விலை 300ரூ. விரியும் அக உலகம்! To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000023779.html ஹரன் பிரசன்னா எழுதிய 34 சிறுகதைகள் தொகுக்கப்பட்டு சாதேவி என்ற பெயரில் நூலாக வெளிவந்துள்ளன. பெரும்பாலும் சமூகத்தில் வலுவிழந்த மாந்தர்களைப் பற்றியே இக்கதைகள் பேசுகின்றன. மனித உறவுகளின் நுட்பமான இயங்கியலை பதிவு செய்கின்றன. வயதான அம்மாக்கள், குடும்பபாரம் சுமக்கும் மாமிகள், வீட்டு வேலை செய்யும் மாமாக்கள், கணவனை இழந்த விதவைகள், மாற்றுத் திறனாளிப் பெண், மரணத்துக்குப் பிந்தைய குடும்ப […]

Read more

நூல் ஏணி தலித் பார்வையில் ஆசிரியர்கள்

நூல் ஏணி தலித் பார்வையில் ஆசிரியர்கள், தொகுப்பு ரவிக்குமார், மணற்கேணி வெளியீடு, சென்னை, விலை 80ரூ. பள்ளி நாட்களும் கல்லூரி நாட்களுமே சமூகத்தில் ஒரு மனிதரின் எதிர்காலத்தை உறுதி செய்கின்றன. அங்கு சந்திக்கும் ஆசிரியர்கள் மாணவர்களின் எதிர்காலத்தை செதுக்குகிறவர்களான இருக்கிறார்கள். இந்த நூல் தலித் எழுத்தாளர்கள் பார்வையில் அவர்கள் சந்தித்த ஆசிரியர்களை விவரிக்கிறது. இந்த நூலில் எல். இளையபெருமாள், ஒவீயர் சந்துரு, ரவிக்குமார், அழகிய பெரியவன், அபிமானி, விழி.பா. இதையவேந்தன், அ.ஜெகந்நாதன், சிவா.சின்னப்பொடி ஆகியோரின் ஆசிரியர்கள் பற்றிய நினைவலைகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொன்றும் மாறுபட்ட காலகட்டம், […]

Read more

மருந்தில்லா மருத்துவம்

மருந்தில்லா மருத்துவம், டாக்டர் பி.எஸ். லலிதா, மயிலை முத்துக்கள் வெளியீடு, சென்னை, விலை 150ரூ. டாக்டர் பி.எஸ். லலிதா கால்நடை மருத்துவத் துறைப் பேராசிரியர் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற பின் மருந்தில்லா மருத்துவம் என்ற சிகிச்சை முறையில் நோய்களை எளிதாக குணப்படுத்த முடியும் என்று நிரூபித்துக்கொண்டிருக்கிறார். ரெய்கி, அக்குபஞ்சர், அக்குபிரஷர் ஆகிய சிகிச்சை முறைகளைக் கடைப்பிடித்து சிகிச்சை அளிப்பவர் இவர். சர்வதேச அளவில் புகழ்பெற்றவரான இவர் எழுதியிருக்கும் இந்நூல் மருந்தில்லா மருத்துவம். ரெய்கி சிகிச்சையின் அடிப்படை அம்சங்களை இந்நூலில் விளக்குகிறார். அத்துடன் தன்னிடம் […]

Read more
1 4 5 6 7 8 12