வாணிதாசன் கவிதைத் திரட்டு

வாணிதாசன் கவிதைத் திரட்டு, மகரந்தன், சாகித்ய அகாடமி, பக். 304, விலை 185ரூ. தமிழ்வேந்தர் வெளியிட்ட சின்ன காசோ? பாரதிக்கு ஒரு பாரதிதாசன். பாரதிதாசனுக்கோ பல தாசர்கள். அவர்களில் சூரியனாய் சுடர் விட்டுப் பிரகாசிப்பவர்  சுரதா. பவுர்ணமி நிலவாய் பவனி வருபவர் வாணிதாசன். விண் மீனை, வாணிதாசன் வர்ணிப்பதைப் பாருங்கள் தைத் திங்கள் குளம் பூத்த பூவோ? தமிழ் வேந்தர் வெளியிட்ட சின்ன காசோ? மைத்தடங்கண் மடமாதர் உதிர்த்துப் பின்னர் மாலைக்குத் தேர்ந்தெடுக்கும் முல்லைப் பூவோ? நாளைய தமிழகம் எப்படி இருக்க வேண்டும் என்று, […]

Read more

அபிராமி சமயம் நன்றே

அபிராமி சமயம் நன்றே, ராமநாதன் பழனியப்பன், வானதி பதிப்பகம், சென்னை, பக். 736, விலை 486ரூ. ஒரு பரம்பொருளுக்கு பல வடிவங்கள், பெயர்கள் ஏன்? இந்நூல் சாக்த சமய நெறியில் நின்று, தாய்த் தெய்வமாகிய அம்பிகையை, சடங்குகள், வேள்விகள் இல்லாமல், எளிய முறையில் சாமானிய மக்களும் வழிபடுவதற்கு ஏற்ற வண்ணம், இனிய தமிழில் அபிராமி அந்தாதியை, அபிராமி பட்டர் தோற்றுவித்தார் எனவும், இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட சம்பந்தரும், நம்மாழ்வாரும் எவ்வாறு ஓர் உந்துதலால் அருட்பாக்களைப் பாடினரோ, அதேபோல் பட்டரும் அம்பிகையால் ஆட்கொள்ளப்பட்டு பாடினார் எனவும் ஒப்புமைப்படுத்துகிறது. […]

Read more

போருக்குத் தயார்

போருக்குத் தயார், தியாகி ஐ. மாயாண்டி, பாரதி பதிப்பகம், பக். 40, விலை 50ரூ. இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றை விளக்கும் நூல்கள் படிக்க படிக்க அலுப்பு ஏற்படுத்தாதவை. போராட்ட நூல்களை படிப்பவர்களுக்குதான் இது தெரியும். அந்த வரிசையில் வந்துள்ள நூல் இது. 1939ல் வெளியானதன் இரண்டாம் பதிப்பு இப்போது வந்துள்ளது. சுயநலம் வேண்டாம். தர்க்கம் வேண்டாம். நம் நாட்டு யுத்த மந்திரி காந்திஜியின் கட்டளை பிறந்துவிட்டது. தயார் தயார் என்று மார் தட்டுங்கள். உங்கள் பளிங்கு போன்ற இருதயத்திலே வீர உணர்ச்சி பீறிட்டு […]

Read more

பாரதத்தின் பண்பாடு

பாரதத்தின் பண்பாடு, சுவாமி முருகானந்தா, காந்தலட்சுமி சந்திரமவுலி, வானதி பதிப்பகம், பக். 80, விலை 50ரூ. பதினைந்து ஆண்டுகளுக்கு முன், (1999 டிச. 5ம் தேதி) தென்னாப்ரிக்க நகரான கேப்டவுனில் நிகழ்ந்த, மூன்றாவது சர்வமத மாநாட்டில், நெல்சன் மண்டேலோவுடன் கலந்து கொண்டு, சுவாமிஜி ஆற்றிய ஆங்கில உரையின் தமிழாக்கம் இது. பாரதம், ஆன்மிகம், பகவத்கீதை பற்றிய மேன்மையான செய்திகள் பல, இதன் கண் ஒளி வீசுகின்றன. போரை உருவாக்குவதற்காக போதிக்கப்பட்டதல்ல பகவத்கீதை. நீங்கள் உங்கள் கடமைகளை எங்கு, எப்போது, எப்படி செய்ய வேண்டும் என, […]

Read more

நமது தமிழ்நாடு

நமது தமிழ்நாடு, செங்கற்பட்டு மாவட்டம் (1963 வரை) கோவை மாவட்டம் (1961வரை) வடஆர்க்காடு மாவட்டம் (1961 வரை), சோமலெ, பாரிநிலையம், சென்னை, பக். 208/272/224, விலை ரூ.75/100/85 தமிழில் பயண நூல்களை படைத்த ஏ.கே.செட்டியாரின் அடியொற்றி, சோமலெ, பல்வேறு நூல்களை எழுதி உள்ளார். காரைக்குடி அருகே உள்ள நெற்குப்பை கிராமத்தில் பிறந்த சோம.லெட்சுமணன், தன் தொழில் நிமித்தமாக, இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் சுற்றி வந்தவர். தமிழகத்தில், 1960களில் பிரதான 10 மாவட்டங்களைப் பற்றி, அவர் நேரில் சென்று பார்த்த விஷயங்களை தொகுத்து எழுதியவை […]

Read more

நாளைய பொழுது உன்னோடு

நாளைய பொழுது உன்னோடு, ஜனகன், கங்கை புத்தக நிலையம், விலை 90ரூ. திண்ணைகளால் நிரம்பிய கும்பகோணம் அவள் சென்ற பாதையில் அவன் கண்களும் சென்றன. அவள் மீது பதித்த பார்வையை எடுக்கக் கொஞ்சம் சிரமப்பட வேண்டியிருந்தது. இப்படியெல்லாம் சற்றும் விரசமில்லாமல் எழுதி ஒரு வித்தியாசமான காதல் கதையைத் தந்திருக்கிறார் ஜனகன். கும்பகோணத்திலிருந்து வெவ்வேறு காலகட்டங்களில் அமெரிக்காவுக்குப் போக நேர்ந்த இருவர் காலங்கடந்த காலத்தில் காதல்வயப்பட்டுக் கல்யாணமும் செய்து கொள்வதுதான் கதை. சீர் முறுக்கைப் பற்றிய வர்ணனை, சாப்பிடிப் பிடிக்கும் என்பது ஒருபுறம் இருக்கட்டும். இந்த […]

Read more

ஜாதியை அழித்தொழிக்கும் வழி

ஜாதியை அழித்தொழிக்கும் வழி, அம்பேத்கர், தலித் முரசு, சென்னை, பக். 143, விலை 70ரூ. அம்பேத்கரின் மூலச் சிறப்பான சிந்தனை சாதி பௌதீகத் தடையல்ல. அது மனத்தடை என்பதாலேயே அதை கடப்பது கடினம் என்கிறார் அம்பேத்கர். அம்பேத்கரின் ஆளுமை காந்தியின் கருத்துநிலையை விமர்சிப்பதன் மூலமாகவே உருப்பெற்றதாகக் கூறும் சிந்தனைப் போக்குகளும், அதேபோல இந்து சமுதாயத்துக்கு வெளியே இருந்து அதை அம்பேத்கர் கடுமையாக விமர்சிக்க, காந்தியோ உள்ளிருந்துகொண்டே அதில் தீண்டாமை ஒழிப்பு முதலிய சீர்திருத்தங்களைச் செய்தார் என்கிற கருத்தும் அண்மைக் காலமாக முன்வைக்கப்படுகிறது. இச்சூழலில் அம்பேத்கரின் […]

Read more

காற்றின் பாடல்

காற்றின் பாடல், கலாப்ரியா, புதிய தலைமுறை பதிப்பகம், சென்னை, பக். 128, விலை 140ரூ. காற்றில் கரையாத பாடல் காற்று அடித்துக்கொண்டு போக, காலப்போக்கில் சருகுகள் மட்கி, உள்ளிருந்து அரிக்கும் என்றும் மரிக்காத ஓர்மைகள் இவை. வேட்டி மடிப்பிலிருந்து இவை விபூதியை எடுத்து எதிர்வந்த அம்மாவிடம் கொடுத்தேன். எப்பொழுதும் அம்மா, முருகா என்றபடி திருநீறு பூசிக் கொள்வாள். அதையும் அன்று சொன்னாளா இல்லையா? எதுவும் நினைவில்லை. சொல்லி இருக்கலாம். அவள் வாய் திறந்து சொல்கிற ஒன்றிரண்டு அபூர்வ வார்த்தைகளில் அதுவும் ஒன்று. மிச்சமெல்லாம் சொல்லாதவை. […]

Read more

அங்கீகாரம்

அங்கீகாரம், கலைமாமணி, பி.ஆர்.துரை, சந்திரிகா பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. இந்நூலாசிரியர் மேடை நாடகம், திரைப்படம், டி.வி. நாடகம், வானொலி நாடகம், டி.வி. தொடர், வசனப் பயிற்சியாளர், தயாரிப்பு நிர்வாகி, ஒருங்கிணைப்பாளர் என்று தனது 55 ஆண்டு கால கலையுலகில் பல அவதாரங்களை எடுத்தவர். அந்த அனுபவங்களைத்தான் இந்நூலில் சுவையாகவும், யதார்த்தமாகவும் கூறியுள்ளார். இது சுயவரலாறாக இருந்தாலும், தன்னோடு சம்பந்தப்பட்ட பல முக்கியப் பிரமுகர்களைப் பற்றிய நிகழ்ச்சிகள், அவர்களின் பண்புகள், செயல்பாடுகள், அன்றைய சூழ்நிலைகள் போன்றவையும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சிறு வயதிலேயே பெற்றோர்களை இழந்து, […]

Read more

முதல் மனிதன்

முதல் மனிதன், ஆல்பெர் காம்யு, தமிழில் வெ. ஸ்ரீராம், க்ரியா, சென்னை, விலை 270ரூ. பிரெஞ்சு இலக்கியத்தின் பெரிய ஆதர்சம் ஆல்பெர் காம்யுதான். வெகுகாலமாக வெளியிடப்படாமல் இருந்து, சமீபத்தில் முதல் மனிதன் வெளியானபோது திசையெங்கும் பெரும் அதிர்வலைகள். சித்தாந்தம் மனிதகுல முன்னேற்றத்திற்கு உதவ வேண்டும் என்பதில் காம்யு எப்போதும் உறுதியாக இருந்தார். அதனால்தான் இப்போதும் அவருக்கான இலக்கிய மரியாதை, பகிர்வு அப்படியே இருக்கிறது. பிரெஞ்சிலிருந்து நேரடிமொழிபெயர்ப்பு என்பதால், தொனி கொஞ்சமும் குறையாமல் வந்திருக்கிறது. அவரின் குழந்தைப் பருவமும், எதிர்கொண்டபோரும், எதிர்ப்பும், தந்தை, தேடிச் சென்ற […]

Read more
1 5 6 7 8