மறைமலையடிகள் வரலாறு

மறைமலையடிகள் வரலாறு, மறைமலையடிகள் பதிப்பகம், 29, தாமரைத் தெரு, பூம்பொழில் நகர் (ஆவடி), சென்னை 7=62, விலை 600ரூ. தமிழ்மொழியை உயிர்மூச்சாகவும், தமிழ் ஆராய்ச்சியை தவமாகவும் கொண்டு, வாழ்ந்தவர் தமிழ்க்கடல் மறைமலையடிகள். இவருடைய மகன் பேராசிரியர் மறை. திரு, நாவுக்கரசு. இந்த நூலை எழுதி உள்ளார். மறைமலையடிகள் நாகப்பட்டினம், சென்னை பல்லாவரத்தில் வாழ்ந்த தகவல்களுடன், அவருடைய வாழ்க்கை வரலாற்று தகவல்களும் அழகாகத் தொகுக்கப்பட்டுள்ளது. திருவாசக விரிவுரைக்கு அடிகள் எழுதிய வரிகளும், திரு.வி.க. மற்றும் வ.உ.சிதம்பரனாருடன் அடிகள் பழகிய நாட்களைப்பற்றி, நூலாசிரியர் எழுதியிருப்பதும், நூலுக்கு மேலும் […]

Read more

அறிவியல் தொழில்நுட்ப நூல் வரிசை தொகுதி 5

அறிவியல் தொழில்நுட்ப நூல் வரிசை தொகுதி 5, விண்வெளித் தொழில் நுட்பம் செயற்கைக்கோள்கள், நெல்லை சு. முத்து, தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னைப் பல்கலைக்கழக வளாகம், சென்னை 5, பக். 358, விலை 300ரூ. தமிழில் மிக அபூர்வமாகவே நல்ல தரமான நூல்கள் வெளியாகின்றன. தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள இந்த நூல் அப்படிப்பட்டதாகும். விண்வெளியில் உள்ள நிலைமைகள், ராக்கெட் தோன்றிய வரலாறு, ராக்கெட் வடிவமைப்பு, எரிபொருட்கள், ராக்கெட் தளம், செயற்கைகோள்கள், விண்கலன்கள் என்று தொடங்கி எதிர்கால ராக்கெட் எஞ்சின்கள் வரை அனைத்தும் இந்நூலில் […]

Read more

இருட்டிலிருந்து வெளிச்சம்

இருட்டிலிருந்து வெளிச்சம், அசோகமித்திரன், நற்றிணை பதிப்பகம், சென்னை 5, பக். 320, விலை 240ரூ. கடந்த 30 ஆண்டுகளில் பல்வேறு இதழ்களில் அசோகமித்திரன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. ஒரு சினிமா தயாரிப்பு கூடத்தில் பல ஆண்டுகள் பணிபுரிய நேராதிருந்த இத்தொகுப்பிலுள்ள பல கட்டுரைகள் சாத்தியமாகி இருக்காது என்று அவரே குறிப்பிட்டுள்ளார். அசோகமித்திரன், கட்டுரையொன்றில் அன்றைய முன்னணி ஆண் நட்சத்திரங்களுக்கு எந்தவிதத்திலும் கஞைர்களாக நடிகைகள் தாழ்ந்து போய்விடவில்லை. இன்றைய தமிழ் படங்களின் கதாநாயகிகள் எண்ஜான் உடம்பையும் நாற்புறமும் அசைக்கவல்ல பொம்மைகளாகிவிட்டனர் என்ற கருத்து இன்று பலரிடமும் […]

Read more

நேபாளில் புனிதப் பயணம்

நேபாளில் புனிதப் பயணம், இமாலயா பதிப்பகம், 285, 1/34பி, முதல் தளம், எமரால்டு வணிக வளாகம், திருச்சி முதன்மைச் சாலை, தஞ்சை 7, விலை 60ரூ. இமயமலைச் சாரலில் உள்ள நேபாளத்தில் எவரஸ்ட் சிகரம் உள்பட பல சிகரங்களும், வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களும், உலகப் புகழ் பெற்ற கோவில்களும் உள்ளன. அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட மருத்துவர் நா. மோகன்தாஸ், தன் அனுபவங்களை விவரித்து இந்த நூலை எழுதியுள்ளார். படிப்பதற்கு சுவையான பயனுள்ள புத்தகம்.   —-   டாண்கியோட்டே, சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், 10-2, […]

Read more

ட்ரஷர் ஆப் இந்தியன் மியூசிக்,

ட்ரஷர் ஆப் இந்தியன் மியூசிக், கே.ஏ. பக்கிரிசுவாமி பாரதி, குருகலம் அகாதமி, சென்னை 78, பக். 720, விலை 440ரூ. இசையும் பரதமும் நமது நாட்டின் பெருமையை உலக அரங்கில் உயர்த்திப் பிடிக்கும் இருகலைகள். இவ்விரு கலைகளைப் பற்றியும் பல பயனுள்ள தகவல்கள் இந்த நூலில் இடம்பெற்றிருக்கின்றன. 72 மேளகர்த்தா ராகங்கள், அவற்றின் ஸ்வரஸ்தானங்கள், 35 தாள வகைகள் பற்றிய விளக்கங்கள், கடபயாதி திட்டம், வாக்கேயகாரர்களின் வாழ்க்கைக் குறிப்புகள், சுமார் 130 ராகங்களின் ராக லட்சணங்கள், வாக்கேயக்காரர்களின் முத்திரைப் பட்டியல், தேவாரம், திவ்யப்பிரபந்தம் பற்றிய […]

Read more

பாரதிதாசன் கவிதைகள்

பாரதிதாசன் கவிதைகள் (பாவேந்தர் பாடல்களின் முழுத்தொகுப்பு), தொகுப்பாசிரியர்-கவிஞர் சுரதா கல்லாடன், மணிவாசகர் நூலகம், சென்னை 108, பக். 804, விலை 600ரூ. 1920 முதல் 1978 வரை வெளியான பாவேந்தர் பாரதிதாசனின் அனைத்து நூல்களும் அடங்கிய முழுத்தொகுப்பு. அவரது முழு ஆளுமையை விவரிக்கிறது. கற்பகத்தின் நற்குளிர் கிடப்பதென்று உளத்து எழுந்த சுப்புரத்தினம் உரைத்த நற்பதத்தை உச்சரிப்பீர் என்று தன்கவியை வியக்கும் ஆன்மிகக் கவிஞராக இருந்தவர் (மயிலம் ஸ்ரீசிவசண்முகக் கடவுள் பஞ்சரத்நம்) முற்றிலும் நாத்திகராக மாறி, சுயமரியாதை இயக்கத்தோடு இணைந்து தமிழுக்காக தமிழருக்காகப் பாடிய பாடல்கள் […]

Read more

இலக்கியத் திறனாய்வியல் ஓர் அறிமுகம்

இலக்கியத் திறனாய்வியல் ஓர் அறிமுகம், பகுதி 2, இரா. சாவித்திரி, சக்தி பதிப்பகம், 197, புட்பம் காலனி, அருளானந்த நகர், தஞ்சாவூர் 613007, பக். 402, விலை 200ரூ. தமிழ் இலக்கியத்தில் இளங்கலை பயிலும் மாணவர்களுக்கு ஒரு பாடமாக உள்ளது திறனாய்வியல். இரண்டாவது தொகுதியான இதில், தமிழ்த் திறனாய்வு வரலாறு என்ற இயலில் நிகழ்கால திறனாய்வுப் போக்குகள், நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் பங்களிப்பு பற்றியும், இதழ்கள் வளர்த்த திறனாய்வு இயலில் எழுத்து, இலக்கிய வட்டம், கணையாழி, வானம்பாடி, கொல்லிப்பாவை, உயிர்மை ஆகிய இதழ்களின் திறானாய்வுப் […]

Read more

ஈழத்துப் போர் இலக்கியச் சிறப்பிதழ்

ஈழத்துப் போர் இலக்கியச் சிறப்பிதழ், இலங்கை, ஞானம் பதிப்பகம்,3பி, 46வது ஒழுங்கை, கொழும்பு -06, விலை 1500ரூ. தமிழில் யுத்த இலக்கியத்திற்கு நீண்ட கால மரபு இருக்கிறது. புறநானூறு என்ற மாபெரும் இலக்கியத் தொகுப்பின் மூலம், யுத்தத்தை தமிழ்ச் சமூகம் எப்படி அணுகியிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால் நவீன உலகின் தமிழர்கள் கால் நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக தங்கள் விடுதலைக்கான யுத்தம் ஒன்றை நடத்தினார்கள். குருதி வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்ட அந்த யுத்தத்தின் மாபெரும் தொகை நூல் ஒன்றினை இலங்கியிலிருந்து வெளிவரும் ஞானம் கலை […]

Read more

திரும்ப வராத கடந்த காலம்

திரும்ப வராத கடந்த காலம், பியோதர் தஸ்தயேவ்ஸ்கி, பரத் பதிப்பகம் இந்த கதையில் வரும் கதாநாயகன் ஒரு கற்பனையாளன், ஏழையான பீட்டர்ஸ் பர்க், அறிவுத்திறம் மற்றம் உயர்ந்த ஆன்மிக தரம் உடையவன். தஸ்தயேவ்ஸ்கியின் மற்ற படைப்புகளில் வரும், பெரும்பாலான கதாநாயகர்களை போன்றே தன்னை சுற்றியுள்ள வாழ்க்கைக்கு தான் ஏற்றவனல்ல என்று நினைக்கிறான். சென்ற நூற்றாண்டின் மத்திய பகுதியை சேர்ந்த பழைய பாரம்பரிய ரஷ்யாவை குறிக்கும் வகையில் ஒரு பெரிய இரைச்சல் மிகுந்த, இருண்ட நகரை தஸ்தயேஸ்வ்கி தன் படைப்பில் வியத்தகு முறையில் சித்தரிக்கிறார். முதன் […]

Read more

பாரதத்தில் ராஜதர்மம் அன்றும், இன்றும்

பாரதத்தில் ராஜதர்மம் அன்றும், இன்றும், ஆர்.பி.வி.எஸ். மணியன், வர்ஷன் பிரசுரம், 33/4, ராமநாதன் தெரு, தி.நகர், சென்னை 17, பக். 456, விலை 250ரூ. ஆட்சியாளர்கள் கடைபிடிக்க வேண்டிய உயரிய நெறிமுறைகளே ராஜதர்மம் எனப்படுவது. போற்றத்தக்க இத்தகைய நெறிமுறைகளை உருவாக்கி, அவற்றை உலகிற்கு முதன் முதலில் போதித்தது பாரத நாடு என்று கூறும் இந்நூலாசிரியர், அவை குறித்த பல்வேறு வரலாற்றுத் தகவல்களை இந்நூலில் தொகுத்துள்ளார். இதற்கு ராமாயணம், மகாபாரதம், சுக்ர நீதி, அர்த்த சாஸ்திரம் போன்ற ஹிந்து தர்ம நூல்கள் முதல், திருக்குறள், அகநானூறு, […]

Read more
1 8 9 10 11