சமணம் வளர்த்த தமிழ்

சமணம் வளர்த்த தமிழ், பேராசிரியர் ஜெ. ஸ்ரீசந்திரன் (மூன்று பாகம்) தமிழ் நிலையம், சென்னை 17,பக். 1233, விலை மூன்று தொகுதிகள் 700ரூ. வேதகாலத்திற்கும் முற்பட்டதான சமண சமயத்தின் மேன்மைகளைப் பற்றி, ரிக் வேதத்தில் குறிப்புகள் உள்ளன. சந்திரகுப்தர் தென்னாட்டுக்கு வருவதற்கு முன்பே தமிழ்நாட்டில் சமண சமயம் பரவியிருந்ததற்கான சான்றுகள் இருக்கின்றன. தொல்காப்பியர் சமண சமயத்தவர் என்பதும், தொல்காப்பியம் ஏசுநாதர் பிறப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டது என்பதும் வரலாற்றில் பதிவான ஒன்று. பலநூறு ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்நாட்டில் சமண சமயம் பரவியிருந்திருக்கிறது. சமண […]

Read more

வெற்றிக்கொடி கட்டு

வெற்றிக்கொடி கட்டு, நாகூர் ருமி, சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக்.120, விலை 80ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-392-3.html பள்ளி, கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவு, இலக்கு, லட்சியம் என்று இருந்திருக்கும். கல்லூரியை விட்டு வெளியே வந்து நிதர்சனத்தை எதிர்கொள்ளும்போது, பலருக்கு அவர்களது கனவுகளும் இலக்குகளும் எங்கோ விலகிச் சென்றிருக்கும். இது யதார்த்தம். அப்படிப்பட்டவர்களை வழி நடத்திச் செல்லும் நிலையில் உள்ள பெற்றோருக்கும், மூத்தோருக்கும் உதவும் வகையில், இந்த நூலை எழுதியிருக்கிறார் ஆசிரியர். கால் நூற்றாண்டுக்கும் மேலாகப் […]

Read more

356 தலைக்கு மேல் கத்தி

356 தலைக்கு மேல் கத்தி, பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 70ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-163-8.html அரசியல் சட்டத்தின் 356வது பிரிவு மாநில அரசுகளை கலைத்த மத்திய அரசுக்கு அதிகாரம் அளிப்பதாகும். அதாவது மாநில அரசுகளின் தலைக்கு மேல் தொங்கும் கத்தி போன்றது. தமிழக முதல் அமைச்சர்களாக இருந்த மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஜானகி அம்மாள், கேரளாவின் முதல் அமைச்சராக இருந்த கம்யூனிஸ்டு தலைவர் நம்பூதிரியோடு, ஆந்திர முதல் அமைச்சராக இருந்த […]

Read more

விவேகானந்தரைப் பற்றி விவேகானந்தர்

விவேகானந்தரைப் பற்றி விவேகானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை 4, பக். 481, விலை 100ரூ. சுவாமி விவேகானந்தர் தம்மையும் தமது வாழ்க்கை நிகழ்வுகளையும் பற்றி எழுதியுள்ள மிக அரிதான நூல் இது. ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடனாக விவேகானந்தர் ஆனதும், தன் குருவின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி அவர் விவரிப்பதும் ஒரு ஆன்மிக நாவல்போல் விரிகிறது. சிகாகோ சர்வதேச மகாசபையில் அவர் ஆற்றிய உரையும் அவர் இந்தியாவிற்குத் திரும்பி வர வேண்டிய அவசியமும் படிக்கும்போது நம் உடலில் ஒரு புது உணர்வு எழுகிறது. […]

Read more

ஸ்ரீ ரமண மகரிஷி

ஸ்ரீ ரமண மகரிஷி, பாலகுமாரன், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 600002, பக். 344, விலை 160ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-512-0.html இந்தியத் திருநாட்டின் பெருமைகளுள் குறிப்பிடத்தக்கது, ஞானியர் பலர் தோன்றி, மக்களை நெறிப்படுத்தியதாகும் என்பர். ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர் போன்றோர், வடநாட்டில் தோன்றியதுபோல, ராமலிங்க சுவாமிகள், பட்டினத்தார் போன்றவர்கள் தென்னாட்டில் தோன்றி பெருமை சேர்த்தனர். அண்மையில் வாழ்ந்து மக்களை நெறிப்படுத்திய ஸ்ரீரமண மகரிஷியும் இன்றியமையாத மகான் ஆவார். அவரின் வாழ்க்கை வரலாற்றை இந்நூல் தெளிவாகக் கூறுகிறது. […]

Read more

கொங்கு நாட்டுப்புறக் கதைகள்

கொங்கு நாட்டுப்புறக் கதைகள், தி.பெரியசாமி, காவ்யா, சென்னை 24, பக். 176, விலை 135ரூ. மனிதவாழ்வின் பல்வேறு உணர்வுப் பூர்வமான பகுதிகளை எந்தவித அலங்காரமுமில்லாமல் வெளிப்படுத்துபவை நாட்டுப்புறக் கதைகள். இந்நூலில் 110 கொங்கு நாட்டுப்புறக் கதைகள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. கிராமத்து மக்களின் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு, மக்களால் பல ஆண்டுகளாகச் செவி வழியாகக் கூறப்பட்ட கதைகளை, அவற்றின் சுவை குன்றாமல் எழுத்துவடிவில் தந்திருக்கிறார் நூலாசிரியர். அன்பு, நேர்மை, ஒழுக்கம், தியாகம் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை போன்ற நற்பண்புகளைக் கொண்ட மனிதர்களையும், சுயநலம், துரோகம், […]

Read more

தேசத்தை நேசிப்போம்

தேசத்தை நேசிப்போம், இளைஞர் இந்தியா செந்தமிழ்தாசன், இளைஞர் இந்தியா புத்தகாலயம், 109, பெருமாள் கோயில் தெரு, மாதவரம், சென்னை 60, பக். 335, விலை 150ரூ. நம் தேசம் காத்த தலைவர்களின் தியாகங்களையும் பாரதத் திருநாட்டின் மாபெரும் மாண்புகளையும் ஒரு வரலாற்றுக் கண்ணோட்டத்தில் படைக்கப்பட்ட நூல். ஒரு பாரதபூமி ஒரு நாளில் ஒரு எளிய நிகழ்வில் ஒரு தனிப்பட்ட மனிதரின் முயற்சியில் விடுதலைக் கனியை எட்டிவிடவில்லை. அதற்காக தூக்குக் கயிற்றை முத்தமிட்டவர்கள், செக்கிழுத்தவர்கள், கல்லுடைத்தவர்கள், கைவிலங்கு, கால்விலங்கு, இரும்புக் குண்டுடன் வாழ்வை முடித்தவர்கள் எத்தனையோபேர். […]

Read more

ஸ்ரீ கருடபுராணம்

ஸ்ரீ கருடபுராணம், ஏ.கே. செல்வதுரை, கங்கை புத்தக நிலையம், சென்னை 17, பக். 224, விலை 80ரூ. பெருமாள் கோவில்களுக்குச் செல்லும் எல்லாருடைய கண்ணையும் கருத்தையும் முதலில் கவர்வது ஸ்ரீ கருடாழ்வாரும் ஸ்ரீ ஆஞ்சநேயரும்தான். இராமயணக்கதை அனைவருக்கும் தெரிந்திருப்பதால் ஆஞ்சநேயர் குறித்துப் பரவலாக நம் நாட்டவரும் வெளிநாட்டவரும்கூட தெரிந்து வைத்துள்ளனர். நம்மவருக்கே அதிகம் தெரியாதவர் உண்டென்றால் அது கருடாழ்வார்தான். அவருடைய பிறப்பு, வளர்ப்பு, பெருமாளிடத்தில் அவர் கொண்ட பக்தி, பெருமாள் அவரிடம் கொள்டுள்ள அன்பு என்று அனைத்தையும் இந்த நூலில் எளிமையாக, கோர்வையாக வடித்திருக்கிறார் […]

Read more

நவக்கிரகஹங்கள்

நவக்கிரகஹங்கள், உமா ஹரிகரன், லட்சுமி மந்திர், பீச், ஆலப்புழை 688012, கேரளா மாநிலம். இந்து சமய புராணங்களில் நவக்கிரகங்களின் ஆதிக்கம், தாக்கம் மற்றும் குணாதிசயங்கள் மற்றும் ஒவ்வொரு ராசியிலும் தான் இருக்கும் இடத்தில் ஏற்படுத்தும் பலன்கள் என்ன என்பது பற்றியும் விரிவாக எழுதப்பட்ட நூல். ஆண்டவன் எங்கும் நிறைந்திருந்தாலும் கோவில்களின் மூலமாகத்தான் அருள் பாலிக்கிறான். கோவிலில் உள்ள மூர்த்தியின் மூலமாகத்தான் அருள் கிடைக்கிறது. இது இந்து சமயத்தின் ஒரு மரபு. அந்த அடிப்படையிலே தமிழகத்திலேயே நவக்கிரக ஸ்தலங்கள் அமைந்துள்ளன. சூரியன் ஆரோக்கியத்தையும் கீர்த்தியையும், சந்திரன் […]

Read more

108 திவ்ய தேச தர்சனம்

108 திவ்ய தேச தர்சனம், மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 108, விலை 125ரூ. திருமாலின் 10 அவதாரங்களைப்பற்றி நூலின் தொடக்கத்தில் கூறும் நாவலாசிரியர் வாசு.இராதாகிருஷ்ணன் பின்னர் 108 வைணவ கோவில்கள் பற்றி விரிவாக எழுதியுள்ளார். இந்த கோவில்கள் எங்கே உள்ளன, அவற்றின் சிறப்புகள் என்ன, எப்படிப் போவது என்ற விவரங்களும் உள்ளன. திருமாலின் 10வது அவதாரமான கல்கி அவதாரம், இந்த கலியுகத்தில் நிகழும் என்று புராணங்கள் கூறுகின்றன. அதுபற்றி இந்த நூலில் காணும் தகவல்- சலியுக கொடுமைகளைத் தீர்க்கத் […]

Read more
1 104 105 106 107 108 128