முஸ்லிம் சட்டம்

முஸ்லிம் சட்டம், எஸ்.ஏ.சையது காசிம் அறக்கட்டளை, திரியெம்பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 300ரூ. திருக்குர்ஆனையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளையும், நபித்தோழர்களின் விளக்கத்தையும், தீர்ப்புகளையும் ஆதாரமாகக் கொண்டது முஸ்லிம் ஷரியத் சட்டம். ஷரியத் என்றால் பாதை, நேரிய பாதை, சட்டம் என்று பெவாருள். திருமணம், திருமணத்தின்போது மணப்பெண்ணுக்கு அளிக்கும் மஹர் (மணக்கொடை) திருமண முறிவு (தலாக்), ஜீவனாம்சம், காப்பாளர் பொறுப்பு, கொடை, உயில், சொத்துரிமை போன்ற முஸ்லிம் சட்ட கோட்பாடுகளை பேராசிரியர் எச்.எம்.அபுல்கலாம் முஸ்லிம்சட்டம் என்ற தலைப்பில் அழகிய முறையில் விளக்கி இருக்கிறார். மேலும் […]

Read more

பச்சை விரல் பதிவு

பச்சை விரல் பதிவு, வில்சன் ஐசக், தமிழில் எஸ். ராமன், காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், நாகர்கோவில், பக். 144, விலை 120ரூ. கேரள மாநிலத்தில் பிறந்தபோதிலும் இந்தியாவில் துயரம் நேர்ந்த பகுதிகளுக்கெல்லாம் சென்று தொண்டு செய்த பெண்மணி தயாபாய் (மேர்சி மாத்யூ) பற்றிய நூல். சுயசரிதை என்றாலும் அவரது களப்பணிகளின் பதிவுகள் மட்டுமே இடம்பெறுகிறது. பிகாரில் கோண்டு பழங்குடியினரிடையே சுமார் 14 ஆண்டுகள் வாழ்ந்து, அவர்களது வாழ்வின் மேம்பாட்டுக்காக சேவை புரிந்திருக்கிறார். அதிகார வர்க்கத்தின் மெத்தனப்போக்கு, ஆதிவாசிகளின் அறியாமை இரண்டுக்கும் பாலமாக இருப்பதைப் […]

Read more

நொறுக்கப்படும் மக்களும் மறுக்கப்படும் நீதியும்

நொறுக்கப்படும் மக்களும் மறுக்கப்படும் நீதியும், முருகப்பன். ஜெசி,இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம், திண்டிவனம், விலை 200ரூ. சக மனிதனை ஓர் உயிராகக்கூட மதிக்காமல் நாகரிகச் சமூகமாக ஆகிக்கொண்டு இருக்கிறோம். சக மனிதனை எத்தகைய அநாகரிகமாக நடத்துகிறோம் என்பதை அம்பலப்படுத்தும் புத்தகம் இது. தீண்டாமை ஒழிப்புச் சட்டம், குடியுரிமைப் பாதுகாப்புச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டம் என்று ஒவ்வொன்றாக உருவாக்கப்பட்டு 58 ஆண்டுகள் ஆன பிறகும் தீண்டாமை இருக்கிறது. வன்கொடுமை இருக்கிறது. பலாத்காரம் நடக்கிறது என்றால், வெறும் சட்டங்களால் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்பதே […]

Read more

நபிகள் நாயகம்

நபிகள் நாயகம், குலாம் ரசூல், காஜியார் புக் டிப்போ, தஞ்சாவூர், பக். 420, விலை 120ரூ. அண்ணல் முஹம்மத் நபி சரிதையை புதிய பாணியில் கூறும் நூல். நபி அவர்களைப் பற்றி தமிழில் பல நூல்கள் வந்திருந்தாலும், அவரைப் பற்றிய சரித்திர சம்பவங்கள், நிகழ்வுகள், அவற்றிற்கு ஆதாரமான நூல்களைக் குறிப்பிட்டு இச்சரிதத்தை உருவாக்கி இருப்பதால் கவனத்திற்குரிய நூலாகிறது. முஸ்லிம் சமூகத்தார்மட்டுமல்லாது, பிற சமூக அன்பர்களும் படித்துப் பயனடையும் வகையில் படைத்திருப்பது சிறப்பு. நன்றி: குமுதம், 30/4/2014.   —- அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள், […]

Read more

திருவரங்கன் உலா

திருவரங்கன் உலா, ஸ்ரீ வேணுகோபாலன், நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 400ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-377-8.html ஏறத்தாழ 650 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் மீது படையெடுத்து வந்து பெரும் பகுதியை கைப்பற்றிய துருக்கியர்களின் ஆட்சியின்போது பெரும்பாலான கோவில்களும் அங்கு இருந்த சிலைகளும் நாசப்படுத்தப்பட்டன. அப்படிப்பட்ட அழிவில் இருந்து தப்பிக்க ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்த திருவரங்கன் விக்ரகம், பலரது உயிர் தியாகங்களுக்கு ஊடே எவ்வாறு பாதுகாப்பாக தென் இந்தியா முழுவதும் ரகசியமாக எடுத்துச் செல்லப்பட்டது என்ற வரலாறு பின்னணியுடன் எழுதப்பட்ட […]

Read more

நொறுக்கப்படும் மக்களும் மறுக்கப்படும் நீதியும்

நொறுக்கப்படும் மக்களும் மறுக்கப்படும் நீதியும், முருகப்பன், ஜெசி, இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம், திண்டிவனம், நன்கொடை 200ரூ. தொல்காப்பியம் உள்ளிட்ட இலக்கியங்கள் இழிந்தோர், அடியோர், இழிசனர், இழிபிறப்பாளர், துடியர், பறையர், புலையன், புலைத்தி, வண்ணார், வெட்டியான் எனப் பேசுகின்றன. பறை அடித்து அறுவடை செய்தோரைக் கடைசியர் என்கிறது சங்ககாலப் பாடல். கி.மு. 170க்கும் 150க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்ட மநு தர்மம் இந்தியாவின் நால் வர்ண சமூகத்தில் புதிதாக 5வது பிரிவாகப் பஞ்சமர்களை உருவாக்கியது என்கிறார் அம்பேத்கர். ஆதாம் என்பவர் 1840ல் எழுதிய நூலில் […]

Read more

சட்டம் உன் கையில்

சட்டம் உன் கையில், ஆதிலட்சுமி லோகமூர்த்தி, சூரியன் பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அதற்குள்ளேயே இருக்கும்போது, அது பிரம்மாண்டமாகத்தான் தெரியும். அதை விட்டு தள்ளி நிற்கும்போதுதான் பிரச்சினையின் உண்மையான வீரியம் பிடிபடும். இப்படி பெண்கள் தங்களைச் சூழ்ந்திருக்கிற பிரச்சினைகளில் இருந்து தள்ளி நின்று தீர்வு காண வழிகாட்டுகிறது வழக்கறிஞர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி எழுதியிருக்கும் சட்டம் உன் கையில் புத்தகம். மூடப்பட்டிருக்கும் வீட்டின் ஜன்னல்கள் அடைபட்டு இருக்கும்போது, விசாலமாகத் திறக்கிற கதவைப்போலவே, பெண்கள் தங்கள் குடும்பத்திலும், அலுவலகத்திலும் சந்திக்க நேர்கிற பிரச்சினைகளுக்கு, […]

Read more

சிறுவாடு

சிறுவாடு, மாலிறையன் (இரா. கிருட்டிணமூர்த்தி), சந்தியா பதிப்பகம், சென்னை, விலை 90ரூ. மரபுக் கவிதை நூல்கள் அரிதாகி வருகிற இன்றைய நிலையில் பல விஷயங்களை பாடுபொருளாகக் கொண்ட சிறுவாடு கவிதை நூலைப் படைத்திருக்கிறார் கவிஞர் மாலிறையன். பாடல்கள் அனைத்திலும் இயல்பான சந்தமும், அழகும் கொஞ்சுகின்றன. கவிஞரின் தமிழ்ப் பற்றை நூல் முழுவதும் காண முடிகிறது. நன்றி: தினத்தந்தி, 23/4/2014.   —- காணாமல் போன கவிதைகள், தங்கத்தாய் பதிப்பகம், புதுக்கோட்டை, விலை 140ரூ. பஞ்சபூதம், ஆறாம் அழிவு, இரக்கத்தின் சிலுவைகள் உட்பட பல்வேறு தலைப்புகளில் […]

Read more

கொலை கொலையாம் காரணமாம்

கொலை கொலையாம் காரணமாம், கோமல் அன்பரசன், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 140ரூ. தமிழகத்தை உலுக்கிய வழக்குகள் தமிழ்நாட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய வழக்குகளைப் பற்றி கோமல் அன்பரசன் எழுதிய புத்தகம் கொலை கொலையாம் காரணமாம். எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா சுட்ட வழக்கு, ஆட்டோ சங்கர் வழக்கு, நாவரசு கொலை வழக்கு, லட்சுமிகாந்தன் கொலை வழக்கு, ஆளவந்தார் கொலை வழக்கு, டாக்டர் பிரகாஷ் வழக்கு, விஷ ஊசி வழக்கு, வைஜெயந்திமலா கார்டியன் வழக்கு உள்பட 25 வழக்குகள் பற்றிய விவரங்கள் இதில் […]

Read more

வால்மீகி இராமாயணம்

வால்மீகி இராமாயணம், அழகர் நம்பி, கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 200ரூ. எத்தனை முறை படித்தாலும் ஒவ்வொரு முறையும் ஒரு புதிய அனுபவத்தைத் தரக்கூடிய, காலத்தால் அழியாத காவியமான ராமாயணத்தை பலரும் பல வழிகளில் எடுத்துக் கூறி இருக்கிறார்கள். வால்மீகி முனிவர் அருளிய ராமாயணத்தை எளிய தமிழில் ஒரு நாவல்போல சுவைபட கொடுத்து இருப்பது புதுமை என்பதோடு, ராமாயணத்தின் மீது ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தும் கருவியாக இந்த நூல் அமைந்து இருப்பது பாராட்டுக்குரியது. உத்ர காண்டம் […]

Read more
1 7 8 9 10 11 12