பையர் பிவேர்

பையர் பிவேர், ஆர். குமார், சி. சீதாராமன் அண்டு கோ வெளியீடு, பக். 142, விலை 160ரூ. சொத்து வாங்கவோருக்கான போதுமான அடிப்படை சட்ட நுணுக்கங்களையும் வழிமுறைகளையும் விளக்கும், வழிகாட்டுதல் நூல் இது. இதில், அசையா சொத்துகளை வாங்கும்போதும், விற்கும்போதும் கடைபிடிக்கப்படும் அனைத்து சட்ட நுணுக்கங்கள், நடைமுறை கோட்பாடுகள் எளிய நடையில் விளக்கப்பட்டுள்ளன. பட்டா, சிட்டா, அடங்கல், கிஸ்தி ரசீது, நிலம் எந்தப் பிரிவின் கீழ் வருகிறது போன்றவற்றின் அடிப்படை அறிவும், இந்த நூலில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. மூதாதையர் சொத்தில், பெண்களுக்குரிய சட்டப்பூர்வமான விதிமுறைகளையும், […]

Read more

அன்றாட வாழ்வில் தேவைப்படும் சட்டங்கள்

அன்றாட வாழ்வில் தேவைப்படும் சட்டங்கள், ஏ.பி.ஜெயச்சந்திரன், மணிமேகலைப் பிரசுரம், சென்னை, பக். 216, விலை 120ரூ. ஸி.பி.ஐ. வழக்குகள், விஜிலன்ஸ் ஊழல் தடுப்பு வழக்குகள்… போன்ற பல கிரிமினல் வழக்குகளை ஏற்று நடத்திய இந்நூலாசிரியர், தமிழ்நாடு பிரஸ் கிளப் மற்றும் பிரபல நாளிதழ்களுக்கு சட்ட ஆலோசகராகவும் இருந்து வருகிறார். இவர், அன்றாட வாழ்வில் தேவைப்படும் சட்டங்கள் குறித்த விவரங்களை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில், முன்பு தினத்தந்தி ஞாயிறு மலரில் ‘சட்டம் தெரிந்துகொள்ளுங்கள்’ என்ற தலைப்பில் 100க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதினார். […]

Read more

குற்றம் தண்டனை மரண தண்டனை

குற்றம் தண்டனை மரண தண்டனை, அ. மார்க்ஸ், கருப்புப் பிரதிகள் வெளியீடு, சென்னை, விலை 100ரூ. எதிர்ப்பு மரண தண்டனைக்கு எதிராக தீவிரமாகச் செயல்படும் கருத்தியலாளர் அ.மார்க்ஸின் குற்றம், தண்டனை, மரண தண்டனை என்ற நூல் கருப்புப் பிரதிகள் வெளியீடாக வந்திருக்கிறது. அஜ்மல் கசாப், அப்சல் குரு ஆகியோர் தூக்கிலிடப்பட்டதன் பின்னணியில் உள்ள விஷயங்கள், மரண தண்டனை கொடிய குற்றங்களுக்கு எதிரான அச்சுறுத்தும் கருவி என்பது உண்மைதானா போன்ற விவாங்கள் இதில் உள்ளன. நமது தூக்குமுறை வலி நிறைந்ததாகவும் இழிவுமிக்கதாகவுமே உள்ளது என்கிறார் அ.மார்க்ஸ். […]

Read more

மனித நோய்கள்

மனித நோய்கள், அருள் செங்கோர், தமிழ்க்கோட்டம், சென்னை, விலை 125ரூ. மருத்துவ நூல்களில், குறிப்பிடத்தக்க சிறந்த நூல். மாரடைப்பு ஏன் ஏற்படுகிறது? தூக்கமின்மை, மனச்சோர்வு, ஜலதோஷம், தலைவலி, வாதம், சிறுநீரகச் செயல் இழப்பு, மஞ்சள் காமாலை முதலிய நோய்கள் ஏன் ஏற்படுகின்றன என்பதைப் பற்றியும், இந்த நோய்கள் வராமல் தடுப்பது பற்றியும், வந்துவிட்டால் என்ன சிகிச்சை செய்வது என்பது குறித்தும் இந்த நூலில் விளக்கியுள்ளார் டாக்டர் அருள் செங்கோர். நோயின்றி வாழ வழி காட்டும் நூல் இது. நூலாசிரியர் அருள் செங்கோர் தமிழறிஞர் க.ப.அறவாணனின் […]

Read more

லீகல் பிராட்டர்னிட்டி எம்ப்ரேஸ்டு மீடு

லீகல் பிராட்டர்னிட்டி எம்ப்ரேஸ்டு மீடு (ஆங்கிலம்), நீதியரசர் டி.எஸ். அருணாச்சலம், சட்ட உதவி ஆணையத்திற்கு நன்கொடையாக வெளியீடு, பக். 232. கீழமை நீதிமன்றம் தான் வழக்கறிஞர் தொழிலுக்கு அஸ்திவாரம் நீதியரசர் டி.எஸ். அருணாச்சலத்தால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்நூல், விற்பனைக்கல்ல; எனினும் அச்சுக் கூலியாக 100ரூபாயை சட்ட உதவி ஆணையத்திற்கு நன்கொடையாக அளித்து பெற்றுக் கொள்ளலாம் என்ற குறிப்போடு இந்நூலை வழக்கறிஞர் சமூகத்திற்கும், நீதிமன்றத்திற்கும் அர்ப்பணித்துள்ளார். கடந்த 1948 முதல் 17/12/1998ல் திருவண்ணாமலையில் மகான் யோகிராம் சரத்குமார், தம்மை அடியவராக ஆட்கொண்டவது வரை, 50 ஆண்டுக்கால […]

Read more

நுகர்வோர் விழிப்புணர்வு கையேடு

நுகர்வோர் விழிப்புணர்வு கையேடு, வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 248, விலை 200ரூ. To buy this Tamil book online:https://www.nhm.in/shop/100-00-0002-338-0.html பொதுமக்கள் பொருட்கள் வாங்கும்போது ஏமாறாமல் இருப்பதற்கும், அப்படி ஏமாற்றப்பட்டால் அதற்கு தீர்வு காண்பது எப்படி? எங்கே முறையிடுவது? தொடர்பு கொள்ள வேண்டிய முகவரிகள், தொலைபேசி எண்கள், நுகர்வோர் நீதிமன்றங்கள், தமிழகத்தில் உள்ள தன்னார்வ நுகர்வோர் மன்றங்கள் முதலான விவரங்கள் கொண்ட பயனுள்ள புத்தகம். நன்றி: தினத்தந்தி, 8/10/2014.   —-   மெழுகாய் கரையும் பெண்மைகள், வானதி பதிப்பகம், […]

Read more

வளரிளம் பருவம்

வளரிளம் பருவம், சு. தமிழ்ச்செல்வி, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், விலை 40ரூ. மனித வாழ்வில் வளரிளம் பருவம் முக்கியமான கால கட்டம். ஒருவர் வாழும் தகுதியை வளர்த்துக் கொள்ளவே இப்பருவம். வளரிளம் பருவத்தினருக்கு உதவும் வகையில் பல்வேறு சிந்திக்க வேண்டிய கருத்துக்களை நூலாசிரியர் சு, தமிழ்ச்செல்வி பயனுள்ள வகையில் தொகுத்துள்ளார். தினத்தந்தி.   —- நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம், வழக்கறிஞர் புலமை வேங்கடாசலம், கிரிலா ஹவுஸ், சேலம், விலை 155ரூ. வழக்கறிஞர்களும், பொதுமக்களும் நீதிமன்றத்தில் வாதாடுவது எப்டி? என்பதற்கான வழிமுறைகளை கூறும் நூல். உரிமையியல் […]

Read more

தமிழர் வாழ்வில் தகவலியல்

தமிழர் வாழ்வில் தகவலியல்,முனைவர் வெ. நல்லதம்பி, வையவி பதிப்பகம், சென்னை, விலை 180ரூ. மிகப் பழங்காந்தொட்தே தமிழ் வாழ்வில் தகவல் தொடர்புகள் எவ்விதமெல்லாம் செழித்து வளர்ந்து வந்திருக்கின்றன என்பதை ஆராய்கிறது இந்த நூல். தகவலியல் என்னும் கண்ணோட்டத்தில் இத்தனை செய்திகள் நம் பரந்த பன்னெடுங்கால இலக்கிய நூல்களில் பொதிந்திருப்பது வியப்பு என்றால், அதை அழகுபட ஒரு முத்துமாலைப்போல் தொகுத்துத் தந்திருக்கும் நூலாசிரியரின் ஆற்றல் அதனினும் வியப்பு. சிலப்பதிகாரம், மணிமேகலை, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, புறநானூறு, அகநானூறு, முருகாற்றுப்படை, முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, தொல்காப்பியம் ஆகிய நூல்களில் […]

Read more

உலகத்தின் தோற்றமும் வரலாறும்

உலகத்தின் தோற்றமும் வரலாறும், கே. வெங்கட்ரத்னம், சேது அலமி பிரசுரம், சென்னை, விலை 170ரூ. சுமார் 460கோடி ஆண்டுகளுக்கு முன் சூரியனில் இருந்து தெறித்து வந்த ஒரு அக்கினிப் பிழம்புதான் பிறகு பூமியாக மாறியது. அதன்பின் ஜீவராசிகள் தோன்றின. காட்டிமிராண்டியாக வாழ்ந்த மனிதன், பல ஆண்டுகளுக்குப்பின் படிப்படியாக கற்கால மனிதனாக மாறினான். உலகின் பல்வேறு பகுதிகளில் நாகரிகங்கள் தோன்றி வளர்ந்தன. பூமியின் வரலாற்றை கதைபோல் கூறுகிறார் ஆசிரியர். பயனுள்ள நூல். நன்றி: தினத்தந்தி, 17/9/2014.   —- நிரபராதி பாமரனுக்கு சட்ட வழிகாட்டி, செந்தமிழ்க்கிழார், […]

Read more

பவளம் தந்த பரிசு

பவளம் தந்த பரிசு, ரேவதி, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, பக். 124, விலை 50ரூ. சிறுவர்களுக்கான இலக்கியம் தமிழில் அரிதாகவே படைக்கப்பட்டு வரும் சூழலில், ரேவதியின் இதுபோன்ற நூல்கள் அதற்கு ஒரு புத்துணர்வு ஊட்டும் வகையில் அமைந்துள்ளது. கோகுலம் இதழின் சிறப்பாசிரியராக இருந்த டாக்டர் ஈ.எஸ். ஹரிஹரன் ரேவதி என்ற புனைபெயரில் எழுதிய சிறுகதைகளுக்கான கதைகள் இவை. பவளம் தந்த பரிசு, கண்மணி தந்த பரிசு, அம்பிகை தந்த பரிசு, கமலம் தந்த பரிசு, வாசுகி கேட்ட பரிசு என்ற ஐந்து கதைகளும் மரங்களை […]

Read more
1 6 7 8 9 10 12