அதிக ஆற்றல் வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள்

அதிக ஆற்றல் வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள், ஸ்டீபன் ஆர். கவி, தமிழில் நாகலட்சுமி சண்முகம், மஞ்சள் பப்ளிஷிங் ஹவுஸ், குர்காவ்ன் ஹரியானா, பக். 507, விலை 325ரூ. 2 கோடிப் பிரதிகள் விற்றுள்ள புத்தகம் என்ற பெருமையுடன் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தனி மனிதரும், நான்தான் என் வாழ்வின் படைப்பு சக்தி என்று கண்டுபிடித்துக் கொள்வதுதான் வளர்ச்சி மற்றும் நம்பிக்கை குறித்த கொள்கையாக வரலாறு முழுவதும் விளங்கிவருகிறது. நன்னெறிகளை அடித்தளமாகக் கொண்டு நிர்மாணிக்கப்படுகின்ற வாழ்க்கைமுறையையும், தலைமைத்துவத்தையும் குடும்பங்களிலும் நிறுவனங்களிலும் எவ்வாறு வளர்த்தெடுப்பது என்பது […]

Read more

தினமணி தீபாவளி மலர் 2012

தினமணி தீபாவளி மலர் 2012, விலை 100ரூ. வீணை சிட்டிபாபுவின் கச்சேரி ஒன்றைக் கேட்ட ரிக்க்ஷாத் தொழிலாளி ஒருவர், கச்சேரி முடிந்தவுடன் இரண்டு ஒரு ரூபாய் நோட்டுகளை அன்பளிப்பாகத் தந்தாராம். ஐயா தினமும் நான் அஞ்சு, ஆறு ரூபாய் சம்பாதிப்பேன். சம்பாக்கிறதில் பாதிக்குக் குடிச்சுருவேன். நீங்க வாசிக்கறதைப் பார்த்துட்டு இருந்துட்டன். குடிக்கணும்னே தோணலை… என்றும் சொன்னாராம். இந்த அருமையான நிகழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறார் சுந்தர் சி. பாபு, அன்புள்ள அப்பா என்னும் தலைப்பில் பாவேந்தர், கருமுத்து தியாகராயர், பி.ஆர். பந்துலு, நடிகர் ஜெய்சங்கர், அகிலன் […]

Read more

பாரதமே உயிர்த்தெழு

பாரதமே உயிர்த்தெழு, சுவாமி விவேகானந்தர், ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை 4, பக். 205, விலை 55ரூ. சுவாமி விவேகானந்தரின் பேச்சும், எழுத்தும் இளைஞர்களின் மனதில் ஆழப்பதிந்தால், இந்திய தேசம் வலிமையும், பெருமையும் பெரும் என்பதில் ஐயமில்லை. விவேகானந்தரின் சொற்பொழிவுகளையும், எழுத்துக்களையும் சுருக்கி ஆறு தலைப்புகளில் இந்நூல் விளக்குகிறது. கல்வியானது ஞானத்தை வெளிப்படுத்தி, மனிதனாக உருவாக்கி, தன்னம்பிக்கை, நற்பண்புகள், அறிவு, பண்பாடு மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றை வளர்ப்பதாக இருக்க வேண்டும் என்ற விவேகானந்தரின் கூற்றை இன்றைய கல்வியாளர்கள் சிந்தித்து பார்க்க, இந்நூல் பெரிதும் பயன்படும். […]

Read more

சான்றோர் கவி

சான்றோர் கவி, முனைவர் அ. பாண்டுரங்கன், சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர். நகர், சென்னை 78, பக். 192, விலை 120ரூ. ஆராய்ச்சி எண்ணமுடையோர்க்கு ஆர்வத்தை ஊட்டும் வகையில் அமைந்த ஆய்வுக்கட்டுரைகள் ஏழினைக் கொண்டது இந்நூல். ஆய்வரங்கங்களில் படிக்கப்பட்ட கட்டுரைகளையும், ஆய்விதழ்களில் வெளியிடப்பட்ட கட்டுரைகளையும் செம்மைப்படுத்தி, தொகுத்து வெளியிட்டுள்ள ஆசிரியரை பாராட்டலாம். சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், பக்தி இலக்கியங்கள் ஆகியவற்றில் நூலாசிரியர் ஆய்வு செய்துள்ள முறை சிறப்பானது. எட்டுத்தொகை நூல்களை படிக்க விழைபவர்களுக்கு, முதல் நான்கு கட்டுரைகள் வழிகாட்டியாய் அமைந்துள்ளன. இளங்கோவடிகள் […]

Read more

அதிசய சாதனையாளர் நிக் வாயிச்சஸ்

அதிசய சாதனையாளர் நிக் வாயிச்சஸ், சேவியர், அருவி, 10, 6வது செக்டர், கே.கே. நகர், சென்னை 78, விலை 100ரூ. கைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலைகள் இல்லை, இரண்டு கைகள், கால்கள் இல்லாத நிலையில் பிறந்த குழந்தையை (நிக்வாயிச்சஸ்) பெற்றோர் வெறுத்து ஒதுக்கிவிடாமல் வளர்த்து ஆளாக்கி இருப்பதற்கே சபாஷ் சொல்ல வேண்டும். அந்தக் குழந்தையும் வளர்ந்து இன்றைக்கு தன்னம்பிக்கை பேச்சுக்களால் உலகத்துக்கே தன்னம்பிக்கையூட்டி கொண்டிருப்பது மெய்சிலிர்க்க வைக்கிறது. மனம் வைத்தால் எந்த நிலையிலும் வாழ்வில் வென்று காட்ட முடியும் என்பதற்கு நிவ்யிச்சஸ் உதாரணமாகி […]

Read more

பாரதியின் பராசக்தி

பாரதியின் பராசக்தி, டாக்டர் என். ஸ்ரீதரன், கங்கை புத்தகநிலையம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017, பக். 238, விலை 70ரூ. சிவசக்தி என்ற கதையில், அன்னை பராசக்தியைப் பற்றி, பலர் கூறுவதை பாரதி தொகுத்துத் தருகிறார். சக்தியை, இயற்கை, ஐம்பூதங்கள், உயிர்த், தீ, அறிவு, சோதி, காளி, இன்பம், துன்பம் என அடுக்கடுக்காகச் சொல்கிறார். பாரதி அறுபத்தாறிலும், ஐம்பூதங்கள் சக்தியின் உருவே என்க கூறுகிறார். பராசக்தியைப் பற்றி, அமர கவி பாரதியின் பன்முகப் பார்வையைப் பதிவு செய்யும் இலக்கியப் பொக்கிஷம். […]

Read more

வல்லமை தாராயோ

வல்லமை தாராயோ, வரலொட்டி ரெங்கசாமி, தனலட்சுமி பதிப்பகம், எஸ்-17, அரவிந்த் நரேன் என்கிளேவ், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி. நகர், சென்னை 17, பக். 416, விலை 200ரூ. ஆண்டவனிடம் வியாபார புத்தியுடன் பக்தி செய்வதால் எந்தப் பயனும் இல்லை. கடவுளை கடவுளுக்காகவே காதலித்து, அன்பு செலுத்துபவர்களின் பக்தி எப்படிப்பட்டதாக இருக்கும்? மரணம் என்பது நம் முடிவில்லை. ஜனனம் என்பது நம் தொடக்கமும் இல்லை. இந்த ஞானத்துடன் கடவுளின் செயல்களைக் காண்பவர்களுக்கு அன்பைத் தவிர, வேறு எதுவுமே தெரியாது. பாரசீகக் கவிஞன் ஜலாலுதீன் […]

Read more

வாழ்வில் வசந்தம்

வாழ்வில் வசந்தம், டாக்டர் என். ஸ்ரீதரன், கங்கை புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 17, பக். 220, விலை 60ரூ. ஊக்கமளிக்கும் வாழ்வு முன்னேற்ற நூல். உழைத்தால் முன்னேறலாம். வறுமையும் வசதிக்குறையும் ஒரு தடை அல்ல. தோல்விகள் வெற்றியின் படிக்கற்கள் என்று நிறுவுகிறார் ஆசிரியர். சர் ஐசக் நியூட்டன் சாதாரணக் குடியானவர் குடும்பத்தில் பிறந்தவர். மலேசிய அமைச்சர் டத்தோ சாமிவேலு கூலித் தொழிலாளியின் புதல்வர். டாக்டர். ம.பொ.சி, துவக்கப் பள்ளியில் மூன்றாவது வகுப்பைக்கூட முடிக்காதவர். முடியுமா? என்றெல்லாம் உதாரணங்கள் காட்டி, […]

Read more

வம்புக்கு நான் அடிமை

வம்புக்கு நான் அடிமை, மாவடு ராமுடு, சுண்டல் செல்லப்பா, கண்ணா மேங்கோ தின்ன ஆசையா, கே.எஸ்.ராகவன், அல்லயன்ஸ் பதிப்பகம், சென்னை 4, விலை 90ரூ. இந்த நூல்களின் ஆசிரியர், அறிவில் சிறந்தவர்களை சிரிக்க வைப்பது கடினம் என்ற கோட்பாடு உடையவர். ஆகவே, நடைமுறை யதார்த்தங்களுடன் நகைச்சுவை உணர்வுடன் படைத்த இப்படைப்புகளை பலரும் விரும்புவர். நன்றி: தினமலர் 21/4/2013.   —-   பழமையான ஞானம், புதுமையான உலகம், எச்.எச். தலாய் லாமா, தமிழில்-டி. வெங்கடகிருஷ்ணன், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை 17, பக்.272, விலை 125ரூ. […]

Read more

மரங்களும் திருத்தலங்களும்

மரங்களும் திருத்தலங்களும் , ஆசிரியர்: டாக்டர் ச.தமிழரசன், வெளியிட்டோர்: குறிஞ்சி பதிப்பகம், 2, சேவியர் நகர், தொல்காப்பியர் சதுக்கம் அருகில், தஞ்சாவூர் – 613 001; விலை: ரூ. 80. புல், செடி, கொடி, மரங்கள் போன்ற 60 வகையான தாவரங்களின் இலக்கியப் பெயர்கள், அவற்றின் மருத்துவ பயன்கள், தாவரவியல் பண்புகள் பற்றியும், அவை தல விருட்சங்களாக உள்ள தேவாரப்பாடல் பெற்ற திருக்கோவிகளைப் பற்றிய விளக்கமும் இடம் பெற்றுள்ள சிறந்த நூல். பூமி வெப்பமடைதலைத் தடுக்க ஒரே வழி மரம் வளர்ப்பு மட்டுமே. அதன் […]

Read more
1 20 21 22 23