மானாவாரிப்பூ

மானாவாரிப்பூ, மேலாண்மை பொன்னுசாமி, கங்கை புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 17, விலை 299ரூ. 34 சிறுகதைகளின் தொகுப்பே இந்நூல். தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் இலக்கிய பரிசு பெற்றள்ள இந்நூலில் சாதி, ஏழ்மை என பல்வேறு கருக்களை மையமாகக் கொண்டு படைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கதையையும் விறுவிறுப்பாகவும், படித்துத்தூண்டும் வகையிலும் எழுதியிருப்பதில் ஆசிரியரின் கைவண்ணம் புலனாகிறது. சிறுகதைகள் ஒவ்வொன்றும் யதார்த்தமாக அதே நேரம் சிந்தனையை தூண்டும் வகையில் எழுதப்பட்டு உள்ளது இதன் சிறப்பு.   —-   சனிக்கிரகத்தின் […]

Read more

சுந்தரகாண்டம்

சுந்தரகாண்டம், கிரி டிரேடிங் ஏஜென்சி, டி.எஸ்.வி.கோவில் தெரு, மைலாப்பூர், சென்னை 4, விலை 225ரூ. இலங்கை மன்னன் ராவணனால் கவர்ந்து செல்லப்பட்ட சீதையை இலங்கை சென்று, சீதையைக் கண்டுபிடித்து அனுமன் வெற்றியுடன் திரும்புவதே சுந்தரகாண்டம். சக்கரவர்த்தி திருமகனான ராமபிரானின் கட்டளைப்படி சீதையைத் தேடி வந்த வானர படை தென் சமுத்திரக்கரை வந்து சேர்ந்தது. எங்ஞனம் கடலைத் தாண்டுவது என்று அவர்கள் கவலையில் சோர்ந்திருந்போது, ஜாம்பவான் ஆஞ்சநேயனுக்கு அவருள் உறைந்து கொண்டிருந்த அளப்பரிய செயலாற்றலை நினைவுபடுத்தி, புத்துணர்ச்சியுடன் வீறுகொண்டு எழச் செய்கிறார். அதனால் உத்வேகமடைந்த அனுமன் […]

Read more

வெள்ளை மொழி

வெள்ளை மொழி, அரவாணியின் தன் வரலாறு, ரேவதி, அடையாளம், புத்தாநத்தம் 621310, பக். 271, விலை 200ரூ. நாமக்கல்லில் துரை சாமியாகப் பிறந்தவர், ரேவதி என்னும் திருநங்கையாக தன்னை மாற்றிக் கொண்டதற்கு முன்பும் பின்பும் அவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களையும், தன் வரலாறாகச் சொல்லிச் செல்லும் நூல். பெண் உணர்வோடு ஆணாக வளைய வரும் ஒருவருக்கு, ஆதரவாக இருக்க வேண்டிய குடும்பத்தினர், அவரை வெறுப்பதாலேயே அவர், தன்னுடைய சுயத்தை மீட்டெடுக்க குடும்பத்தை விட்டு வெளியேறி, சமூகத்தின் பொதுவெளியில் பல துயரங்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது என்பதை […]

Read more

தமிழும் ஈழமும்

தமிழும் ஈழமும், குன்றில் குமார், செந்தமிழ் பதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, இரண்டாவது தெரு, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை 49, விலை 60ரூ. இலங்கையின் வரலாற்றை, 160 பக்கங்கள் கொண்ட சிறு புத்தகத்தில் சிறப்பான முறையில் எழுதியிருக்கிறார் குன்றில் குமார். இலங்கையின் பூர்வகுடிகள் தமிழர்கள், ராஜ ராஜ சோழன் ஆட்சியின் கீழ் இலங்கை இருந்திருக்கிறது. சிங்களவர்கள் தங்கள் புனித நூலாகப் போற்றும் மகா வம்சம் சிங்கத்தின் மூலமாகத் தோன்றியவர்கள் சிங்களர்கள் என்று கூறப்பட்டுள்ளது. முதலான விவரங்களுடன் தனி ஈழம் கேட்டு […]

Read more

நவக்கிரகஹங்கள்

நவக்கிரகஹங்கள், உமா ஹரிகரன், லட்சுமி மந்திர், பீச், ஆலப்புழை 688012, கேரளா மாநிலம். இந்து சமய புராணங்களில் நவக்கிரகங்களின் ஆதிக்கம், தாக்கம் மற்றும் குணாதிசயங்கள் மற்றும் ஒவ்வொரு ராசியிலும் தான் இருக்கும் இடத்தில் ஏற்படுத்தும் பலன்கள் என்ன என்பது பற்றியும் விரிவாக எழுதப்பட்ட நூல். ஆண்டவன் எங்கும் நிறைந்திருந்தாலும் கோவில்களின் மூலமாகத்தான் அருள் பாலிக்கிறான். கோவிலில் உள்ள மூர்த்தியின் மூலமாகத்தான் அருள் கிடைக்கிறது. இது இந்து சமயத்தின் ஒரு மரபு. அந்த அடிப்படையிலே தமிழகத்திலேயே நவக்கிரக ஸ்தலங்கள் அமைந்துள்ளன. சூரியன் ஆரோக்கியத்தையும் கீர்த்தியையும், சந்திரன் […]

Read more

அகம் பொதிந்தவர்கள்

அகம் பொதிந்தவர்கள், கர்ணன், மெய்யப்பன் பதிப்பகம், 53, புதுத்தெரு, சிதம்பரம் 608001, பக். 160, விலை 75ரூ. மகாகவி பாரதியார் தொடங்கி எழுத்தாளர் மாஜினி வரை தன் மனம் கவர்ந்த, தான் நேரில் பார்த்துப் பழகிய, பழகத் தவறிய 26, எழுத்தாளர்களுடனான தனது அனுபவங்கள், அவர்களைப் பற்றிய தனது கருத்துகள் போன்றவற்றை சுவையாகப் பதிவு செய்துள்ளார் ஆசிரியர். எழுத்தாளர்கள் எழுதிய நூல்களின் பட்டியல், அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு போன்ற தெரிந்த தகவல்களையே சொல்லி நம்மைச் சலிப்படைய வைக்காமல், அவர்களை தான் சந்தித்தபோது நிகழ்ந்த சம்பவங்கள், […]

Read more

கரமசோவ் சகோதரர்கள்

கரமசோவ் சகோதரர்கள் (2 தொகுதிகள்), கவிஞர் பெருமான் புவியரசு (டாஸ் டாவ்ஸ்கி), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 1490, விலை 1300ரூ. உலக இலக்கியத்தில் மிகச்சிறந்த நாவலாசிரியர் என்ற புகழுக்கு உரியவர், ரஷ்ய இலக்கிய மேதை டாஸ் டாவ்ஸ்கி. ஏழை மக்கள், மரணம் அடைந்தவர்களின் வீடு, முட்டாள், குற்றமும் தண்டனையும், கரமசோவ் சகோதரர்கள் என்ற ஐந்துபடைப்புகள் மிகச் சிறந்தவை. இவற்றில் குற்றமும் தண்டனையும், கரமசோவ் சகோதரர்கள் ஆகிய இரண்டு நாவல்களும் கலையின் சிகரங்கள். அவருடைய நாவல்களை, அவ்வளவு சுலபமாக படித்துவிட முடியாது. மிகவும் […]

Read more

நில் கவனி கண்மணி

நில் கவனி கண்மணி, மார்பக நோய்களும் மருத்துவ தீர்வுகளும், டாக்டர் க. முத்துச் செல்லக்குமார், விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 80, விலை 65ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-840-7.html குழந்தைப் பருவம் முதல் ஒவ்வொரு கட்டமாக பெண்ணின் மார்பக வளர்ச்சி குறித்தும் ஒவ்வொரு பருவங்களின்போதும் அவை அடையும் மாற்றங்கள் குறித்தும் விரிவாகக் கூறும் நூல். மார்பகத்தில் புற்று நோய் இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள பெண்கள் தங்களுக்கு தாங்களே மார்பக பரிசோதனை செய்து கொள்ளும் முறைகள் விளக்கப்பட்டிருக்கின்றன. […]

Read more

சைவ சமயக் கலைக் களஞ்சியம் தொகுதி 3

சைவ சமயக் கலைக் களஞ்சியம் தொகுதி 3, முனைவர் ரா. செல்வக்கணபதி, தெய்வச் சேக்கிழார் மனிதவள மேம்பாட்டு அறக்கட்டளை, விலை 10 தொகுதிகளும் சேர்ந்து 150000ரூ தமிழ்ச் சைவப் பெருமக்களின் வேதங்களாகப் போற்றப் பெறுவன சைவத் திருமுறைகள். அவை 27 ஆசிரியர்களால், பாடப்பெற்ற 18 280 பனுவல்களால் அமைந்த செந்தமிழ்க் கருவூலம். இத்தொகுதிக்கு அருளாசியுரை வழங்கியுள்ள திருப்பனந்தான், காசித் திருமடத்து அதிபர், முனைவர் ஆர். செல்வக் கணபதியின் முயற்சி துணிச்சலானது. இவரின் வெற்றி சாதனையானது எனப் பாராட்டியிருப்பது, நூற்றுக்கு நூறு உண்மை என்பதை இத்தொகுதி […]

Read more

தொல்காப்பியர் வழியில் நாட்டுப்புலவியல்

தொல்காப்பியர் வழியில் நாட்டுப்புலவியல், பேராசிரியர் குரு. சண்முகநாதன், சங்கீதா, சி. 69, ஒன்பதாம் குறுக்குத்தெரு, அரசு அலுவலர் குடியிருப்பு, திருநெல்வேலி-627007, விலை 120ரூ. நாட்டுப்புறப்பாடல் என்ற சொல் சரியானதுதானா என்ற வினாவுடன் தொடங்கி அதற்கு, தொல்காப்பியர் வழியில் விடை காணும் முயற்சியாக, ஒரு ஆய்வு நூலாக வெளியாகி இருக்கிறது. வழக்கில் உள்ள ஏராளமான நாட்டுப்புற பாடல்களையும், அவை எந்த சூழ்நிலையில் உருவானவை, அவற்றின் தன்மை மற்றும் இயல்பு என்ன என்பதையும், புலவர்கள் மட்டும் இன்றி அனைவரும் படித்தறியும் வகையில் தந்து இருப்பது சிறப்பு. நன்றி: […]

Read more
1 7 8 9 10