மாணவனே மாணவியே சாதிக்க ஆசைப்படு

மாணவனே மாணவியே சாதிக்க ஆசைப்படு, டாக்டர் செ. சைலேந்திரப்பாபு ஐ.பி.எஸ்., தமிழில். முனைவர் அ.கோவிந்தராஜு பி.எச்.டி., சுரா பதிப்பகம், சென்னை – 600040,  பக்கம்: 226, விலை: ரூ. 150. நூலாசிரியர், ஒரு புகழ் பெற்ற உயர் போலிஸ் அதிகாரி என்பதோடு, மாணவர்கள் பால் மிகுந்த அக்கறை உள்ளவர். மாணவ, மாணவியருக்கு வழிக்காட்டும் விதத்தில், அவர் ஆங்கிலத்தில் எழுதிய ‘Boys & Girls be ambitious’ என்ற நூலின் தமிழாக்கமே இந்த நூல். வாழ்க்கையில் முன்னேற என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது, பாடங்களை […]

Read more

ஒரு கொத்து அகம்

ஒரு கொத்து அகம், நீலமணி, திலகம் பதிப்பகம், 17இ, பி1, குமரன் குடியிருப்பு, கே.கே. பொன்னுரங்கம் சாலை, ஓம் சக்தி நகர், வளசரவாக்கம், சென்னை 87, பக்கங்கள் 222, விலை 110ரூ. சங்க இலக்கிய நூல்களில் புறம் போரின் வீரக்கதைகளை விவரிக்கும் என்பதும், அகம் தமிழரின் காதல் வாழ்வை கவிநயம் சொட்டச் சொட்ட விவரிக்கும் என்பதும் அனைவரும் அறிந்ததே. பாண்டியன் உக்கிரப் பெருவழுதியின் ஆதரவுடன் உப்பூரி குடிகிழார் மகனார் உருத்திரசன்மர் தொகுத்த அகநானூறு நூலில் இருநூறு பாடல்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, ஒரு புது முயற்சியாக […]

Read more

தமிழக வரலாற்றுத் தடயங்கள்

தமிழக வரலாற்றுத் தடயங்கள், நடன. காசிநாதன், அருள் பதிப்பகம், சென்னை, பக்கங்கள் 100, விலை 125ரூ. சோழர் செப்பேடுகள், நடன. காசிநாதன், சேகர் பதிப்பகம், சென்னை, பக்கங்கள் 144,விலை 300ரூ. இந்நூல்களில் ஆசிரியர் நடன. காசிநாதன் மேனாள் தொல்லியல் துறை இயக்குனர். ஆகையால் இந்நூல்களில் காணப்படும் விவரங்கள் முழுமையான அதிகார பூர்வமானவை. முதல் நூலில் ஆசிரியர், அண்மைக் காலங்களில் கிடைத்த சில புதிய முக்கியச் சான்றுகளை, பழைய சான்றுகளுடன் தொகுத்து அளித்துள்ளார். இவற்றில் முக்கியமாகக் கருதப்படும், பெரம்பலுர் சான்றுகளின் விவரங்கள் ஆய்வாளர்களுக்குப் பயனுள்ளதானவையாக இருக்கும். […]

Read more

பாம்பன் சுவாமிகள் மனித மேம்பாட்டுச் சிந்தனைகள்

பாம்பன் சுவாமிகள் மனித மேம்பாட்டுச் சிந்தனைகள், முனைவர் கோமதி சூரிய மூர்த்தி, திருவேரகம், 117, 86வது தெரு, முதல் அவென்யூ, (வடக்கு) அசோக் நகர், சென்னை 600083, பக்கங்கள் 134. முருகனையே முழுதும் வாழ்வில் பற்றாக்கொண்டு 6666 பாடல்கள் பாடி அருளியவர் பாம்பன் சுவாமிகள். இவரது அருட்பாடல்களில், மனிதனை வாழ்வில் உயர்த்தும் பல்வேறு சிந்தனைகள் பரவிக் கிடக்கின்றன. குருவி, நெல்மணிகளை தேடித்திரட்டுவதுபோல் இந்நூல், ஆசிரியர் சிந்தனை முத்துக்களைத் தேடித் தொகுத்துள்ளார். திருக்குறள், திருமந்திரம், தேவாரம், திருப்புகழ், தாயுமானவர் பாடல்களோடு பாம்பனார் பாடல்களை இணைத்து நவமணி […]

Read more

மாலிக் காபூர்

மாலிக் காபூர், செ. திவான், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 70ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-020-8.html டெல்லியை ஆண்ட அலாவுதீன் கில்ஜியின் அடிமை அரசன்தான் மாலிக் காபூர். கொடூரனாக, தென்னாட்டைக் கொள்ளையடித்தவனாக வரலாற்று ஆசிரியர்கள் பலர் எழுதியுள்ளனர். மாலிக்காபூரை மாறுபட்ட கோணத்தில் படம் பிடித்துக் காட்டுகிறார் வரலாற்று ஆராய்ச்சியாளர் செ. திவான். மாலிக்காபூரின் போர் திறனையும் ஆட்சித் திறனையும், பல்வேறு அரசியல் சதிகளில் இருந்து மீண்டு வந்ததையும், பல்வேறு ஆதாரங்களைச் சுட்டிக்காட்டி விவரிக்கிறார். தன்னுடைய […]

Read more

கிருபானந்த வாரியாரின் ஆன்மிகத் துளிகள்

கிருபானந்த வாரியாரின் ஆன்மிகத் துளிகள், பெ. கு. பொன்னம்பல நாதன், மணிவாசகர் பதிப்பகம், சென்னை – 600 108, பக்கம்: 112, விலை: ரூ. 50. தமிழகத்தில் ஆன்மிகப் பயிர் வளர்த்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், சுவாமிகளின் உரைகள் , பலரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தும்; சிலரை சிந்தித்து திருத்தவும் செய்யும். இந்நூலில் அவர் குறித்து, 16 கட்டுரைகள் உள்ளன. அத்தனையும் தேனாக இனிக்கின்றன. மரபியல் குறித்த செய்திகளும் (பக். 21), செஞ்சொல் உரைக் கோவைத்தேன் எனும் கட்டுரையும் படித்துப் பயனடைய […]

Read more

ஊமைத்துரை வரலாறு

ஊமைத்துரை வரலாறு, வே. மாணிக்கம், மகிழ் பதிப்பகம், 4ஆ, பக்தராய் பணிவார் தெரு, பாளையங்கோட்டை 627002, பக்கங்கள் 102, விலை 70ரூ. இந்திய விடுதலை வரலாற்றில், கயத்தாற்றில் தூக்குத்தண்டனை பெற்ற கட்டபொம்மனின் வரலாறு பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய பகுதி. கட்ட பொம்மனின் இளவல் ஊமைத்துரையின் பங்களிப்பு இந்த வரலாற்றோடு இணைந்ததுதான் என்ற போதிலும், பெரிய அளவில் வெளிச்சத்திற்கு வந்ததாகச் சொல்ல முடியாது. வே. மாணிக்கம் ஊமைத்துரையின் வீரவரலாற்றை, ஆவணங்களின் துணையுடனும் நேரடி தொடர்பு கொண்டு ஆய்வு நோக்கி எழுதியிருக்கிறார். நல்ல பணி, பாராட்டுக்குரியவர். அவசியம் […]

Read more

இனி எனது நாட்களே வரும்

இனி எனது நாட்களே வரும், நிலாந்தன், விடியல் பதிப்பகம், 32 /5 , ஏ.கே.ஜி. நகர், 3 – வது தெரு, உப்பிலிபாளையம் அஞ்சல், கோயம்புத்தூர் – 15, விலை ரூ. 70. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-024-0.html யுத்தம் என்னை ஜனங்களுக்குள் இறக்கியது. எல்லாவற்றுக்கும் சாட்சியாயிருக்கக் கற்றுக்கொடுத்தது. ஜனங்களின் மொழியிலேயே ஜனங்களுக்கு விளங்கும் விதத்திலேயே இதையும் கூறுமாறு எனக்கது விதித்தது. அதனாலது எனது மொழியை இலகுவாக்கிக் கொடுத்தது. இருக்கின்ற எந்த வடிவத்திலும் திருப்தி ஏதோ ஒரு கட்டத்தில் […]

Read more

காஞ்சி ஐரோப்பிய அமெரிக்கத் தமிழியல் அறிஞர்கள்

காஞ்சி ஐரோப்பிய அமெரிக்கத் தமிழியல் அறிஞர்கள், மு.நஜ்மா, மு. கஸ்தூரி, அ.மோகனா, மு.காமாட்சி, பரிசல் புத்தக நிலையம், எண்.96, ஜெ.பிளாக், நல்வரவு தெரு, எம். எம். டி. ஏ. காலனி, அரும்பாக்கம், சென்னை – 106, விலை ரூ. 180. மதத்தைப் பரப்புவதற்காக வந்த கிறிஸ்தவப் பாதிரியார்கள், தமிழ் மொழியில் மயங்கிய வரலாறு இது. இங்குள்ள மக்களை மனமாற்றமோ, மதமாற்றமோ செய்ய வேண்டுமானால் அவர்களது மொழியில் அதை செய்தாக வேண்டும் என்று முடிவெடுத்து தமிழுக்கான எழுத்துருக்களை உருவாக்குவது முதல் புத்தகங்கள் வெளியிடுவது வரை இந்தப் […]

Read more

பயங்கரவாதம்

பயங்கரவாதம், பி. ராமன், தமிழில்-ஜே.கே. ராஜசேகரன்கிழக்கு பதிப்பகம், 57, பி.எம்.ஜி. காம்பளக்ஸ், தெற்கு உஸ்மான் ரோடு, தி. நகர், சென்னை 17, விலை 290ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-704-6.html இன்றைய பயங்கரவாதம் நேற்றைய பயங்கரவாதத்தை விட வேறுபட்டிருக்கிறது. நாளைய பயங்கரவாதம், இன்றைய பயங்கரவாதத்தில் இருந்து மாறுபட்டிருக்கும் என்கிறார், புத்தக ஆசிரியர் பி. ராமன். ஆங்கிலத்தில் வந்த இப்புத்தகத்தை பயங்கரவாதம் நேற்று இன்று நாளை என்ற பெயரில் ஜே.கே. ராஜசேகரன் மொழிபெயர்த்து இருக்கிறார். எது பயங்கரவாதம், யார் பயங்கரவாதிகள், […]

Read more
1 97 98 99 100 101 104