கற்க கசடற விற்க அதற்குத் தக

கற்க கசடற விற்க அதற்குத் தக, பாரதி தம்பி,  விகடன் பிரசுரம், சென்னை, விலை 120ரூ. கற்க கசடற… கற்றபின் நிற்க அதற்குத் தக என்பது வள்ளுவர் காலம். கற்க கசடற கற்றபின் விற்க அதற்குத் தக என்பது கொள்ளையர் காலம். காலத்தை வெறும் கணக்காக மட்டுமல்லாமல், வளர்ச்சிக்குரியதாக மாற்றியது கல்வியும் அதனால் விளைந்த அறிவும்தான். அந்தக் கல்வியும் அறிவும் விலைபோன இந்தக் காலம்தான் மிகமிக மோசமானது. நாட்டின் குடிமகனுக்குக் கல்வியையும் சுகாதாரத்தையும் தருவதில் இருந்து ஓர் அரசாங்கம் என்று தவறியதோ, அன்றே மக்களைப் […]

Read more

அர்த்த சாஸ்திர அறிவுரைகள்

அர்த்த சாஸ்திர அறிவுரைகள், நல்லி குப்புசாமி செட்டியார், பிரெய்ன் பேங்க் வெளியீடு, சென்னை, விலை 150ரூ. மன்னனின் பூந்தோட்டம் ஐ.சி.எஸ். அதிகாரியாக இருந்த ஏ.எஸ்.பி. அய்யர் ஆங்கிலத்தில் எழுதி த.நா. சேனாபதியின் தமிழாக்கத்தில் வெளிவந்தது சாணக்கியரும் சந்திரகுப்தனும் என்ற அரிய நூல். முதல் பதிப்பு வெளியாகி முப்பத்தோரு ஆண்டுகளுக்குப் பிறகு 1991 இல்தான் அந்த நூல் இரண்டாம் பதிப்பைக் கண்டிருக்கிறது. ஆங்கில மூலத்தையும் தமிழாக்கத்தையும் பலமுறை படித்து அதில் மனம்தோய்ந்த பட்டுத்தொழில் அதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் நூலின் மீதான […]

Read more

முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே

முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே, நா. முத்துநிலவன், அகரம் வெளியீடு, தஞ்சாவூர், பக். 156, விலை 120ரூ. விடுதலைபெற்று 68 ஆண்டுகள் ஆனபின்னும் சுயசிந்தனைக்கான கல்வி இன்னும் எமது மக்களுக்குக் கிடைக்கவில்லை என்பதை என் 34 ஆண்டுக்காலக் கற்பித்தல் அனுபவத்தில் கண்டேன் என்கிற சுயவிமர்சனத்தோடு இந்த ஆழமான சிந்தனைகளுக்குரிய நூலை வெளியிட்டிருக்கிறார் நா. முத்துநிலவன். நடுத்தர வர்க்கத்தின் ஆடம்பரத்தில் கல்வுயும் அகப்பட்டுத் தவிக்கிறதே? என்கிற ஆதங்கத்தொடு பழுத்த அனுபவமுள்ள ஒரு ஆசிரியரே கேள்வியெழுப்புவது வேதனைக்குரியதுதான். மறுவாசிப்புக்கு உட்படுத்திச் சொல்லித் தரப்படவேண்டிய பல நூறு […]

Read more

வரலாற்றுச் சுவடுகள்

வரலாற்றுச் சுவடுகள் (நான்காம் பதிப்பு), தினத்தந்தி பதிப்பகம், விலை 650ரூ. தமிழக மக்களின் அமோக வரவேற்பைப் பெற்ற வரலாற்றுச் சுவடுகள் நூலின் நான்காம் பதிப்பு இப்போது வெளிவந்துள்ளது. முதல் பதிப்பில் 50 ஆயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டு, உடனடியாக விற்பனையாகி, பதிப்புத்துறையில் மவுனப் புரட்சியை நடத்திக்காட்டியது வரலாற்றுச் சுவடுகள். இப்புத்தகத்தை வாங்க, வாசகர்கள் நீண்ட ‘கியூ’வரிசையில் நின்ற காட்சியை, முதல் முதலாகப் புத்தகக் கண்காட்சியில் மக்கள் கண்டு வியந்தனர். இப்போது நான்காம் பதிப்பில், 2013, 2014 ஆண்டுகளில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளும், 2015ல் இதுவரை நடந்துள்ள […]

Read more

தேம்பாவணி

தேம்பாவணி, வீரமாமுனிவர், உயிர் எழுத்து பதிப்பகம், திருச்சி, விலை 2000ரூ. இத்தாலியைச் சேர்ந்தவரான ஜோசப் பெஸ்கி, 1680ம் ஆண்டு பிறந்தவர். கிறிஸ்தவ தொண்டராக, 1710ல் இந்தியாவுக்கு வந்தார். தமிழின் சிறப்பில் மனதைப் பறிகொடுத்த அவர், தமது 30வது வயதில் தமிழ் கற்கத் தொடங்கினார். தமிழ் இலக்கண இலக்கியங்களைப் படித்துத் தேர்ந்து, சிறந்த கவிஞராக உருவானார். தமது பெயரையும் “வீரமாமுனிவர்” என்று மாற்றிக்கொண்டார். தமிழ் எழுத்துக்களுக்கு அழகிய வடிவம் கொடுத்ததில் அவருக்குப் பெரும் பங்கு உண்டு. அவர் எழுதிய தமிழ்க்காவியம் தேம்பாவணி. மிகப்பெரிய நூல் அது. […]

Read more

மருத்துவ அகராதி

மருத்துவ அகராதி, முனைவர் மு. பொன்வைக்கோ, தமிழ்ப்பேராயம், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம், காஞ்சிபுரம், விலை 800ரூ. சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பாக, தமிழறிஞர் த.வி. சாம்பசிவம் பிள்ளை மருத்துவ அகராதி ஒன்றை எழுதி வெளியிட்டார். மருத்துவம் பற்றிய சொற்களுக்கு தமிழிலும், ஆங்கிலத்திலும் விளக்கம் அளிக்கும் அகராதி அது. நீண்ட காலம் பாடுபட்டு உருவாக்கிய இது, அக்காலத்திலேயே மிகுந்த பாராட்டு பெற்றது. தமிழுக்குப் பெருமை சேர்க்கும் அந்த நூலை, நவீன வடிமைப்புடன், மிக பிரமாண்டமானதாக எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் ஒரு உறுப்பாக விளங்கும் “தமிழ்ப் பேராயம்” வெளியிட்டுள்ளது. மிகப்பெரிய […]

Read more

எழுச்சி பெறு யுவனே

எழுச்சி பெறு யுவனே, சுவாமி விமூர்த்தானந்தர், ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியீடு, சென்னை, பக். 334, விலை 125ரூ. ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தமிழ் இதழான, ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தில் வெளியாகி, வாசகர்களின் பெரும் பாராட்டைப் பெற்ற, 58 கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். இளைஞர் சக்திக்கு வலுவூட்ட, நம்மிடையே சாதித்த, சாதித்துக் கொண்டிருக்கும் வெற்றியாளர்களின் அனுபவங்களே, இந்த நூல். முதல் கட்டுரையிலேயே, டாக்டர் அப்துல் கலாம் இந்த நாட்டின், 54 கோடி இளைஞர்கள் எழுச்சி பெற, மணியான யோசனைகளை தருகிறார். அனைத்து கட்டுரைகளுமே சாதிக்க துடிக்கும் […]

Read more

முருகு சுந்தரம்

முருகு சுந்தரம், சேலம் கு. கணேசன், சாகித்ய அகாடமி, சென்னை, பக். 128, விலை 50ரூ. பாரதி பரம்பரையில், வந்த சிறந்த படைப்பாளர் முருகு சுந்தரம். பழமையில் பூத்து, புதுமையில் கனிந்த முருகு சுந்தரம், மரபில் துவங்கி, புதுக்கவிதையில் உயர்ந்து நின்றார்.புதிய உத்திகள், படிமங்களுடன் புதுக்கவிதையில் நாடகமாக ஈழப் பிரச்சினையை, எரி நட்சத்திரம் ஆக்கினார். அவர் எழுதிய அருவ ஓவியங்கள், கனிந்த பழம், பொம்மைக் காதல் முதலிய ஆறு புதுக்கவிதை நாடகங்களும், அவருக்கு பெருமை சேர்த்தன. மறத்தகை மகளிர், பாரும்போரும், பாவேந்தர் நினைவுகள், மலரும் […]

Read more

காயப்படும் நியாயங்கள்

காயப்படும் நியாயங்கள், கமலா கந்தசாமி, அருணா பப்ளிகேஷன்ஸ், பக். 240, விலை 70ரூ. முன்னூறு சிறுகதைகள் எழுதி குவித்திருக்கிறார் கமலா கந்தசாமி. இந்தத் தொகுதியில், 30 சிறுகதைகள் அடக்கம். எல்லாமே நல்ல கதைகள். மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் – ஈஸ்வர அல்லா தேரே நாம். நாய் மனிதர்களை விட நன்றியுள்ளது என்பதை சொல்லும் நாய்க்குட்டி, பள்ளி ஆசிரியர்கள் ஏணிகளாகவும்இருக்கின்றனர்; கரை சேர்க்கும் தோணிகளாகவும் இருக்கின்றனர் என்பதை சொல்லும் ஏணிகளும் தோணிகளும்; எல்லாருக்கும் கடிதம் சுமந்து சென்று வினியோகிக்கும் தபால்காரர்; ஆனால் அந்தத் தபால்காரருக்கு வரும் […]

Read more

அன்பு நபியின் அமுத வாக்குகள்

அன்பு நபியின் அமுத வாக்குகள், இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், சென்னை, விலை 240ரூ. ‘திண்ணமாக நற்குணத்தின் மிக உன்னதமான நிலையில் நீர் இருக்கின்றீர்’ என்று திருமறை திருக்குர்ஆன் வசனத்திற்கு ஏற்ப நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நற்பண்புகளின் தாயகமாகத் திகழ்ந்தார்கள். அவர்களின் பொன் மொழிகளை, மொழிகின்ற நூல்கள் ஏராளம். இஸ்லாமிய அறிஞர் மவுலானா முகம்மத் பாரூக் கான், நபி மொழிகளைத் தொகுத்து ‘கலாமெ நுபுவ்வத் என்ற பெயரில் அரபி மொழியில் ஆறு தொகுதிகளாக அளித்துள்ளார். அதில் ‘ஒழுக்கவியல்’ குறித்த பொன்மொழிகள் முதல் தொகுதியாக வெளிவந்துள்ளது. […]

Read more
1 594 595 596 597 598 841