இஸ்லாமிய சட்ட கருவூலம்

இஸ்லாமிய சட்ட கருவூலம், அஷ்ஷெய்க் ஸெய்யத் சாபிக், இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், விலை 250ரூ. திருக்குர்ஆன் மற்றும் நபிமொழி அடிப்படையில் இஸ்லாமிய சட்டங்கள் குறித்து அஷ்ஷெய்க் ஸெய்யத் சாபிக் எழுதிய ‘பிக்ஹுஸ் சுன்னா’ (இஸ்லாமிய சட்ட கருவூலம்) என்ற நூலை மவுலவி நூஹ் மஹ்ழரி தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இதுவரை 5 பாகங்கள் வெளியாகி உள்ளன. இது 6 வது பாகம். இதில் முழுக்க முழுக்க ‘திருமணம்’ குறித்து விளக்கப்பட்டுள்ளது. திருமண வாழ்வின் முக்கியத்துவம், திருமணம் செய்யும் முறை, மணக்கொடை, பலதாரமணம் போன்ற பல்வேறு தலைப்புகளில் […]

Read more

அதே வினாடி

அதே வினாடி, நாகூர் ரூமி, சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், விலை 150ரூ. முதல் பொக்கிஷம், மூச்சின் ரகசியங்கள், மூச்சின் வகைகள், அந்த இரண்டு விநாடிகள், உடலாகிய சத்குரு, அசச்ம் என்பது, புள்ளிகள் கொண்ட ஆடுகுள், எல்லாமே விதி, நீங்கள்தான் அதுபோன்ற பல கட்டுரைகளின் தொகுப்பு நூல். தற்செயல்களைப் புரிந்துகொள்வது, நாம் விரும்புவதை அடைவதற்கான முதல்படி என்பதால் தற்செயல் எனும் அற்புத மாளிகைக்குள் கட்டாயம் பிரவேசித்து அங்கு என்னதான் நடக்கிறது என்பதை நாம் கட்டாயம் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கான வழிமுறைகளை எளிதாக புரிந்து கொள்ளும்வகையில் விளக்கியிருக்கிறார் நூலாசிரியர் […]

Read more

காதல் வாழ்க்கை

காதல் வாழ்க்கை, வி. கந்தவனம், காந்தளகம், விலை 600ரூ. இலங்கையைச் சேர்ந்த தமிழறிஞர் வி. கந்தவனம் எழுதிய நூல் இது. சங்க காலத்து மாந்தர்களின் காதல் வாழ்க்கை பற்றிய கட்டுரைகள் இதில் அடங்கியுள்ளன. சங்க காலத் தமிழர்களின் வாழ்க்கை முறையையும், அக்கால பழக்க, வழக்கங்களையும் அறிய இந்நூல் பெரிதும் பயன்படும். புத்தகம் முழுவதும் ஆர்ட் காகிதத்தில் அச்சிடப்பட்டுள்ளது. கண்கவரும் வண்ணப்படங்கள் அழகுக்கு அழகு சேர்க்கின்றன. நன்றி: தினத்தந்தி, 30/12/2015.   —- ஆவியின் டைரி, பேரா. க. மணி, அபயம் பப்ளிஷர்ஸ், விலை 120ரூ. […]

Read more

மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்

மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பூம்புகார் பதிப்பகம், விலை 250ரூ. எழுத்தாளர், பேச்சாளர், இதழ் ஆசிரியர், தொழிலாளர்களின் தோழர் என்பன போன்ற பன்முகம் கொண்டவர், திரு.வி.க. என்று அழைக்கப்பட்ட திரு.வி. கல்யாணசுந்தரனார். காந்தியடிகள் மீதும், அவரது கொள்கைகள் மீதும் அளப்பரிய அன்பும், பிடிப்பும் கொண்டவர். அவர் எழுதிய, மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் என்ற நூல் மிகவும் பிரசித்தி பெற்று நூலாகும். அது இப்போது புதிய கட்டமைப்புடன் வெளிவந்துள்ளது. மனிதன் எத்தகைய வாழ்க்கையை நடத்த வேண்டும் என்பதையும், மனித வாழ்வுக்குப் பேரிலக்கியமாக வாழ்ந்த காந்தியடிகளின் வாழ்க்கை முறையையும் […]

Read more

புதுச்சேரி கோயில்கள்

புதுச்சேரி கோயில்கள், சங்கர் பதிப்பகம், விலை முதல்பாகம் 550ரூ, இரண்டாம் பாகம் 400ரூ. புதுச்சேரி, இந்திய பிரெஞ்சு கலாச்சாரத்தின் வியத்தகு வரலாற்றுப் பெட்டகம். சித்தர்கள், கவிஞர்கள், தேசாபிமானிகள் நிறைந்த ஊர். புதுச்சேரி சிறிய மாநிலம் என்றாலும் இங்கு கோயில் இல்லாத ஒரு தெருவைக்கூட காண முடியாது. அத்தகைய கோயில்களின் தலவரலாறு, தலபுராணச் செய்தி, ஆலயத்தின் தனிச் சிறப்புகள், திருவிழாக்கள், கோவில்களுக்குரிய பாடல்களை டாக்டர் சி.எஸ். முருகேசன் தொகுத்து வழங்கியுள்ளார். இதில் விநாயகர் கோயில்கள், முருகன் கோயில்கள், சிவன் கோயில்கள், பெருமாள் கோயில்கள், அய்யனார் கோயில்கள், […]

Read more

வரலாற்றில் எம்.ஜி.ஆர்.

வரலாற்றில் எம்.ஜி.ஆர்., வே. குமரவேல், முல்லை பதிப்பகம், பக். 784, விலை 500ரூ. புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் பொதுவாழ்கையைப் பற்றி புரிதலை இன்றைய தலைமுறையினருக்கு நுட்பமாக எடுத்துச் சொல்லும் தொகுப்பு நூல் இது. கலைத்துறையிலும், அரசியல் வாழ்விலும் எம்.ஜி.ஆர். ஆற்றிய செயற்கரிய பணியை அவரோடு பழகியவர்கள் எழுத்தில் சொல்வது படிக்கப் படிக்க புதுமை. சிவாஜி, ம.பொ.சி., பழதுநெடுமாறன், கண்ணதாசன், சோ, சோலை, எம்.ஆர். ராதா, டைரக்டர் ஸ்ரீதர், நீதியரசர் இஸ்மாயில், மணியன், வாலி, பானுமதி என்று அவரோடு அன்பாக இருந்தவர்கள் பலரின் அரிய கருத்துக்களை […]

Read more

அம்மா ஓர் உலகளாவிய தலைவி

அம்மா ஓர் உலகளாவிய தலைவி, ஸ்ரீ நித்யா பதிப்பகம், விலை 300ரூ. முதல்-அமைச்சர் ஜெயலலிதா பற்றி, அ.இ.அ.தி.மு.க., தலைமைக் கழகப் பேச்சாளர் வி.ஜி.ஆர்.ராமதாஸ் எழுதிய புத்தகம். அன்னை தெரசா, ஜோன் ஆப் ஆர்க், விக்டோரியா மகாராணி, மார்க்ரெட் தாட்சர், இந்திரா காந்தி ஆகியோருடன் ஒப்பிட்டு ஜெயலலிதா சிறப்புகளை எடுத்துக்கூறுகிறார். தமிழ்நாட்டின் பல்வேறு பிரச்சினைகளை, துணிச்சலுடன், தொலைநோக்குடனும் தீர்த்த அவர் மதிநுட்பத்தை போற்றுகிறார். சுருக்கமாகச் சொன்னால் ஜெயலலிதா பற்றிய சிறந்த புத்தகம், வண்ணப்படங்கள் அழகுக்கு அழகு சேர்க்கின்றன. நன்றி: தினத்தந்தி, 18/11/2015.   —- பெரியாழ்வார், […]

Read more

திராவிடர் இயக்க நூற்றாண்டு வரலாற்றுச் சுவடுகள்

திராவிடர் இயக்க நூற்றாண்டு வரலாற்றுச் சுவடுகள், திராவிடர் கழக (இயக்க) வெளியீடு, விலை 40ரூ. திராவிடர் இயக்க வரலாறு நூற்றாண்டுகளைக் கொண்டது. இதன் வரலாறு குறித்தும், இந்த இயக்கம் செய்த சாதனைகள் பற்றியும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பே இந்த நூல். ஒவ்வொருவரின் இன்றைய இனிய வாழ்க்கைக்கு திராவிடர் இயக்கமே காரணம் என்பதை ஆணித்தரமாக எடுத்துரைக்கிறார். மேலும் பின்னிணைப்பாக, திராவிடர் சங்கம் தோன்றிய வரலாறு, நீதிக்கட்சி காலத்தில் சமூக நீதி ஆணைகள், சமூக சீர்திருத்த ஆணைகள் நூலுக்கு மேலும் […]

Read more

தமிழர்தம் மறுபக்கம்

தமிழர்தம் மறுபக்கம், தமிழ்க்கோட்டம் வெளியீடு, விலை 175ரூ. தமிழர்களின் வரலாற்றைப் பற்றியும், வாழ்க்கை முறை பற்றியும் பல நூல்களை எழுதிப் புகழ் பெற்ற தமிழறிஞர் க.ப. அறவாணன், இந்நூலில் இன்றைய தமிழர்கள் பற்றி பாரபட்சமற்ற விமர்சனத்தை முன்வைக்கிறது. அவர் கூறுகிறார்: வேட்பாளர் தேர்வில் சாதிக்கு முன்னிரிமை கொடுக்கப்படுகிறது. நாம் பெற்ற கல்வியால்கூட, நம்முடைய சாதிப்பற்றை தகர்க்க முடியவில்லை. சாதிய அடித்தளமே இல்லாத மண்ணில் தோன்றிய இஸ்லாம், கிருத்துவம் ஆகிய மதங்கள்கூட, இந்தியாவில் மதம் மாற்றம் பெற்ற கிருத்துவர்களிடையே சாதி அற்ற நிலையை தோற்றுவிப்பதில் தோற்றுப்போய் […]

Read more

ஒரு யாகம் ஒரு தியாகம்

ஒரு யாகம் ஒரு தியாகம், ஆரூர்தாஸ், பூம்புகார் பதிப்பகம், விலை 90ரூ. சினிமா உலகில் ஏறத்தாழ 1000 படங்களுக்கு மேல் கதை, திரைக்கதை, வசனம் எழுதி சாதனை படைத்தவர் ஆரூர்தாஸ். அவர் எழுதிய ஒரு யாகம் ஒரு தியாகம், பரிகாரம், வாத்தியாரய்யா ஆகிய 3 குறுநாவல்கள் அடங்கிய நூல். ஒரு யாகம் ஒரு தியாகம் என்ற கதையில் அமைச்சர் ஆளவந்தாரை அவரால் பாதிக்கப்பட்ட பலரும் பழி வாங்கத் துடிக்கிறார்கள். அந்தச் சம்பவங்களை அவருக்கே உரிய பாணியில் விறுவிறுப்பாக கொண்டு செல்கிறார். மேலும் பரிகாரம், வாத்தியாரய்யா […]

Read more
1 107 108 109 110 111 223